07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 14, 2014

செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா? வலைச்சரம் நாள் ஒன்று




வணக்கம்  அன்பு நண்பர்களே, அன்பின் சீனா அய்யா என்னையும் ஒரு ஆளா நினைச்சு இந்த வாரம்  வலைச்சரம்பொறுப்பை கொடுத்திருக்கார்.(இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது) எனவே நான்  இந்த பொறுப்பை வெற்றிகரமா நடத்த நீங்க தான் ஆதரவு தரும் நண்பர்களே!



ரெண்டு வருசத்துக்கு முன்னாடி (2012)ஒரு  பிளாஷ்பேக். என்ன மேல பாக்குறீங்க. இங்க பாருங்க. என் கணவர் கஸ்தூரி ரெங்கன் பத்து நாளுக்கு ஒருமுறை என்னிடம் கவிதைகளை  வாங்கிக்கொண்டு போய் ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் அஞ்சு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி சில தபால்களை அனுப்புவார். அப்புறம் வாராவாரம் தொடர்ந்து அந்த பத்திரிக்கைகளை வாங்கி எதிலயாவது அந்த கவிதைகள் வந்திருக்கான்னு பார்த்தபடி இருப்போம். வெறுத்துப்போய் அந்த கவிதைகளை தலைமொழுக்கும் நாளின் இறுதியில் ஏதாவது ஒரு புத்தகம் நம்ம கவிதையை வெளியிட்டு காம்ப்ளிமென்டரி காப்பி அனுப்பும். (தொடக்கத்தில் நான் கஸ்தூரி என்ற புனைபேரிலும், அவர் மது என்று என் பேரிலும் எழுதுவோம், இப்பவும் அவர் அதே பேரில் தான் எழுதுறார்) நொந்து போன கஸ்தூரி இறுதியில் இதுல எழுதும்மா என இந்த மகிழ்நிறை என்கிற இந்த வலைப்பூவை தொடங்கித்தந்தார்.

 இது தான் என் முதல் பதிவு  ஒன்னு தெரியுமா? இதை ரசித்த கவிதை பகுதயில் ஜீவன் சுப்பு சகோ வெளியிட்டிருந்தார்.

சும்மா டைரி மாதிரி எழுதி நானே தான் படிக்கிறேனோ என குழம்பிய வேளையில் நிலவன் அண்ணா முதல் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தியது இந்த பதிவில் தான்

இரண்டு முறை வலைச்சரத்தில் தேர்வு செய்யப்பட்ட பதிவு இது.  அறிமுகம் செய்தவர்கள் தோழி ஆதிவெங்கட் மற்றும் துரை ராஜ் அய்யா.

நான் வளர்ந்த சூழல்  பற்றிய இந்த பதிவு நான் எழுதக் கற்றுக்கொண்டதற்கு பொருள்தந்ததாக உணர்கிறேன்.

செல்ல தந்தைக்கு ஒரு சமர்ப்பணமாய் இந்த பதிவு.

என் ஆசிரியர்க்கு அர்ப்பணித்த பதிவு.

கஸ்தூரியின் உற்சாகமூட்டலால் தொடராகியிருக்கிறது இந்த கொஞ்சம் இங்கிலீஷ்

T.N.முரளி அண்ணா பாராட்டிய தன் தளத்தில் பகிர்ந்த என் கவிதை.

தோழி தேன்மதுர தமிழ் courtesy கொடுத்த பதிவு.

இது தமிழன் சகோ கலாய்ச்சு பதில் பதிவு போடவைத்த  அறிவியல் பதிவு.

இது தில்லையகத்து துளசி சகோ ஜாலிய கலாய்ச்ச பதிவு.

யோசி இதழில் வெளியான கவிதை.


இப்பவே கண்ணை கட்டுதேன்னு அங்க ஒரு மைன்ட் வாய்ஸ் கேட்குது(என்ன பல வாய்ஸ் ஆ) சரி நான் அபீட் ஆகிக்கிறேன். நாளைக்கு பார்ப்போம். வழக்கம் போல நீங்க கமென்ட் பகுதியில் ஸ்டார்ட் த மியூசிக்:)) அப்புறம் ஒரு சின்ன விஷயம் இன்று குட்டி  மகிமாவிற்கு நான்காவது பிறந்தநாள்:)


128 comments:

  1. நல்ல தொடக்கம்.......

    ஆரம்ப கால பதிவுகளை படித்த நினைவில்லை. நேரம் எடுத்து படிக்கிறேன்...

    வலைச்சர ஆசிரியர் பணியில் சிறப்பாக பணியாற்ற மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் அண்ணா! நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள்:)

      Delete
    2. மகிமாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

      Delete
  2. வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள். "நன்னா எழுதுறேள்! தொடர்ந்து எழுதுங்கோ, மேடம்!" :)))

    அப்புறம் உங்களுக்கு எழுத்தில் "காமெடி" நல்லா வருது. யாரு மனதையும் புண் படுத்தாமல் காமெடியா எழுதுறது ரொம்பக் கஷ்டம். உங்களுக்கு அது எளிதாக இருக்கிறது. இதுக்கு மேலே எல்லாம் நான் யாரையும் புகழ்வதில்லை. நான் அத்தனை கஞ்சமாக்கும்- புகழ்வதில்!

    தொடர்ந்து எழுதுங்கள். எழுத்துச்சேவை ஒண்ணுதான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் செய்யும் பெருந்தொண்டு.

    அப்புறம் " திரு துரை ராஜ்" கோவிச்சுக்கப் போறாரு. திரு கஸ்தூரி ரெங்கனை "ப்ரூஃப் ரீடிங்" பண்ணச் சொன்னால் என்னவாம்? உங்கள் எழுத்துக்கு "ப்ரூஃப் ரீடிங்" பண்ணாமல் என்ன செய்றாரு அந்த மனுஷன்?. அதான் உலகக்கோப்பை கால்பந்தெல்லாம் முடிஞ்சிருச்சே :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை விளம்பி வருண் அவர்களுக்கு நன்றி ,நன்றி , நன்றி .
      நான் நன்றி சொல்வதில் எல்லாம் கஞ்சத்தனம் பார்க்கிறது இல்ல.
      //உங்கள் எழுத்துக்கு "ப்ரூஃப் ரீடிங்" பண்ணாமல் என்ன செய்றாரு அந்த மனுஷன்?.//
      ஹலோ அவரு ஹெட் மாஸ்டர் ங்க :)))
      திருத்திட்டேன் சகா!

      Delete
    2. வசிஷ்டர் வாயால் பாராட்டு பெறுவது எளிதல்ல.. வலையுலக 'வசிஷ்டர் வருண்' அவர்களிடமே பாராட்டை பெற்று இருக்கின்றீர்கள் என்றால் நீங்க பெரிய அப்பாடக்கர்தான்.

      Delete
    3. பாருங்க சகா! நானும் இதையே தான் நினைத்தேன்:) CHEERS !!

      Delete
    4. என்ன நீங்க பெரிய அப்பாடக்கர் என்று நினைத்தீர்களா?ஹீ.ஹீ

      Delete
  3. தங்களது பதிவுகளை அவ்வப்போது படித்துவருகிறேன். தாங்கள் தற்போது வலைச்சரம் பொறுப்பேற்றதறிந்து மகிழ்ச்சி. தங்களின் வலைச்சர ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள். நாளைய பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா!
      தங்கள் வருகைக்கும் ,தொடர்வருகைக்கும்!!

      Delete
  4. மைன்ட் வாய்ஸ் கேட்டு விட்டதா...? ஹிஹி...

    அனைவரையும் குறிப்பிட்டது சிறப்பு...

    செல்லத்திற்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களை உங்க மருமகள்கிட்ட சொல்லிட்டேன்.
      மிக்க நன்றி அண்ணா !!

      Delete
  5. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி தொடர்ந்து ஆதரவு தருக!!

      Delete
  6. அருமை சரியான வாய்ப்பு.நகைசுவை நிறைந்த உங்கள் பதிவு மிகவும் ரசிக்கும் படி இருக்கும்.மகிழ்வாய் உள்ளது .வாழ்த்துகள்மா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா! தங்கள் தொடர்வருகையை ஆவலோடு எதிர்பார்கிறேன்.

      Delete
  7. தொடர் வண்டியில் உங்கள் கவிதையுடன் நானும் பயணித்து மகிழ்ந்தேன் ...செல்லக் குட்டியின் பிறந்த நாளில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ..இருவருக்கும் ஒரே வரியில் என் வாழ்த்துக்கள் !
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. பாஸ் வந்துடீங்களா!! ரொம்ப நன்றி !! தொடர்ந்து வாங்க:)

      Delete
  8. வருக! வணக்கம்! வாழ்த்துக்கள்! இங்கு குறிப்பிட்டுள்ள பதிவுகளை இன்றைய பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து விடலாம் என்று எண்ணியுள்ளேன்! மீண்டும் வருவேன்!
    த.ம.6


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா! தங்கள் போன்றோர் வருகை என்னை போல் வளரும் பதிவருக்கு தரும் ஊட்டச்சத்தல்லவா !! மிக்க நன்றி அய்யா!

      Delete
  9. அன்பின் சின்ன குட்டி மகிமாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா, தங்கள் வாழ்த்தை அவளுக்கு தெரிவித்தேன்.

      Delete
  10. அன்பின் மைதிலி கஸ்தூரி ரெங்கன் - முதல் பதிவு அருமை - தமிழ் மண வாக்கு ஏழாவது போட்டு விட்டேன் - இனி அறிமுகங்களை ஒவ்வொன்றாகச் சுட்டி - சென்று - பார்த்து - படித்து - மகிழ்ந்து - மறுமொழிகள் இடுவது தான் இன்றைஅய பணி. செய்கிறேன். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா!
      தாங்கள் வாசித்துவருவதே எனக்கு மகிழ்ச்சி தான்.
      தங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்!!

      Delete
  11. உங்களின் சுய அறிமுகம் அருமை. இன்றைக்கு இணையம் எந்த அளவிற்கு நம்முடைய படைப்புகளை கௌரவிக்கிறது பார்த்தீர்களா!!!!

    தங்களின் பழைய பதிவுகளை சென்று பார்க்கிறேன்.
    வாழ்த்துக்கள். அசத்துங்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ! இந்த ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது:)
      பார்த்துவாருங்கள் சகோ! உங்களை போன்றோர் துணை இருக்க அசத்த வேண்டியது தான்.

      Delete
  12. ஆரம்பம் நல்லா இருக்கு சகோதரி...
    தொடருங்கள்... தொடர்கிறோம்...
    குட்டி மகிமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க...

    ReplyDelete
    Replies
    1. குமாரண்ணா வாழ்த்திற்கு மிக்க நன்றி !
      தொடர்கிறோம் என்றதற்கு மிக மிக நன்றி !!
      மகியிடம் தெரிவிக்கிறேன்:)

      Delete
  13. ரெண்டு வாழ்த்தையும் ஒரேஇடத்தில் சொல்லி கஞ்சனாக விருப்பமில்லை.
    எனவே -
    ஒரு வாழ்த்து இங்கே -
    செல்ல வெல்லக்கட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழத்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, அண்ணா தான்.
      உங்கள் மருமகளிடம் தெரிவிக்கிறேன்:)

      Delete
  14. அசத்தலான அறிமுகம்- என் பின்னூட்டம் எனக்கே மறந்துவிட்டது. நினைவு வைத்துப் பதிவிட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சிம்மா...
    வகுப்பாசிரியர்-வலைச்சர ஆசிரியரானதால்
    அண்ணன் மாணவனாகி மகிழ்கிறேன்.
    கற்றுக்கொள்ளக் கண்திறந்து காத்திருக்கிறேன். கலக்குப்பா. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அதுதானே சான்றோர் குணம்.( தான் செய்தவற்றை மறத்தல்)
      நான் மறப்பேனா?? //அண்ணன் மாணவனாகி மகிழ்கிறேன். //பெரிய வார்த்தை அண்ணா! அதற்கு சற்றேனும் பொருள் சேர்க்கவேண்டும். நன்றி அண்ணா!

      Delete
  15. தங்களது ஆசிரியர் பொருப்பை பொறுமையுடன் செய்து வெற்றிகரமாக முடிக்க எமது வாழ்த்துக்களும்... சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி அண்ணா ! தங்கள் தொடர்வருகை வேண்டும் சகோதரி!!

      Delete
  16. சுய அறிமுகமே கலக்கல், அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சகோ! ஆகா! அப்போ நாளைக்கும் படிக்கபோறீங்க :)
      அட்வான்ஸ் தேங்க்ஸ்ங்கோ!!

      Delete
  17. Replies
    1. கிரேஸ் செல்லத்தை சிஸ்டம் ரொம்ப சோதிக்குதோ :))
      நன்றி தோழி!

      Delete
  18. வலைச்சரப்பணிக்கும்
    மகிமாவின் பிறந்தநாளுக்கும்
    இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. அவளுக்கு தெரிவிக்கிறேன் .
      மிக்க நன்றி தோழி!

      Delete
  19. உங்கள் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறீர்கள். நல்ல குணம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நம்பி சார்! வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லவா:)

      Delete
  20. அன்பின் மைதிலி - சுட்டிகளைச் சுட்டி, சென்று, பார்த்து, மகிழ்ந்து , மறுமொழிகளூம் இட்டு வந்தேனே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் அய்யா! தங்கள் போன்றோர் வழிகாட்டலும், வாழ்த்துக்களுக்கும் ஆசிகள் அல்லவா!! மிக்க நன்றி!

      Delete
  21. ஆரம்பமே அசத்தல் ! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் ஆசிரியைத் தோழியே
    தொடர்ந்தும் உற்சாகமாக தங்கள் கடமையை ஆற்றுங்கள் (ஆமா இங்கின அம்பாளடியாளைக் காணவில்லை என்றால் கோவிச்சுக்கக் கூடாது பாவம்
    அவ அவசர காரியம் ஒன்றில் ஈடுபட்டுள்ளாள் :)) )

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தோழி நேரம் கிடைக்கும் போதுவாருங்கள்! உங்க வருகை எப்பவும் ஸ்பெஷல் தான்:))

      Delete
  22. அழகுமிக அறிமுகம் அசத்தலாக இருக்கிறது.
    உங்கள் ஆரம்பகாலப் பதிவுகள் படித்ததில்லை..
    பார்க்கின்றேன் நேரம் கிட்டும்போது....

    உங்கள் செல்லக்குட்டிக்கும் உங்களுக்கும்
    உளமார்ந்த என் வாழ்த்துக்கள்!

    தொடருங்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. ஒ! தோழி தங்கள் வாழ்த்தை அவளுக்கு தெரிவித்தேன்:)
      நேரம் கிட்டும் போது படித்துபார்த்து சொல்லுங்கள்:)
      மிக்க நன்றி தோழி!

      Delete
  23. சிறந்த அறிமுகங்கள்
    பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள். உங்களுக்கும்,பிறந்த நாள் கொண்டாடும் பிள்ளைக்கும்.

    ReplyDelete
  25. இனிய அழகான - அறிமுகம்!.. சிறப்பாக பணி தொடரட்டும்.,
    நான்காவது பிறந்தநாள் காணும் மகிமா நலம் பல பெற்று சீரும் சிறப்புடனும் என்றும் வளமுடன் வாழ அன்னை அபிராமவல்லி அருள்புரிவாளாக!.. நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அய்யா மன்னிக்க வேண்டும் ! எப்படி தங்களுக்கு நான் சொன்ன நன்றி மாயமானதென்றே தெரியவில்லை. மிக்க நன்றி ! குழந்தைக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்தேன். மீண்டும் மீண்டும் நன்றிகள் அய்யா!

      Delete
    2. என்னம்மா.. பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லிக் கொண்டு!..
      அன்பு - என்றும் எதையும் எதிர்பார்ப்பதே இல்லை!..
      ஒன்று தெரியுமா!.. என்னுடைய பிறந்த நாளும் இன்றுதான்!..
      வாழ்க நலம்.. வாழ்க பல்லாண்டு!..

      Delete
    3. அய்யா பிறந்தநாள் வாழ்த்துகள்! இந்தநாளில் மகி பிறந்ததற்காக பெருமை படுகிறேன்.

      Delete
  26. அழகான சுய அறிமுகம்.
    வாழ்த்துக்கள்
    தங்கள் பதிவுகளை இனி தான்படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! பொழுது கிடைக்கும்போது படித்துபாருங்கள்!

      Delete
  27. வலைச்சரத்தின் இந்தவார ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. அட நம்ப அம்மு ! முதல்ல மகிம்மாவுக்கு தான் என் வாழ்த்துக்கள் அப்புறம் தான் அம்மாவுக்கு. கல்வி கலை சிறப்புறக் கற்று என்றும் இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன்....!

    ReplyDelete
    Replies
    1. வாங்க செல்லம்! உங்க வாழ்த்தை தெரிவித்துவிட்டேன்!

      Delete
  29. hey அம்முக்குட்டி! ஆரம்பமே அசத்தல் தான் கலக்குடா கலக்கு!
    வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்மா!
    பதிவுகளை வேலைக்கு போய் வந்து படிக்கிறேன் சரியா.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ செல்லம் ! நீங்க சொன்னா சரிதான்.
      நீங்க எல்லாம் இருக்குறீங்கங்கிற துணிச்சல் தான்,
      நன்றி தோழி! பொறுமையா படிங்கடா:))

      Delete
  30. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்! பதிவுகள் அனைத்தும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ் சார்! தொடர்வருகைக்கு வேண்டுகிறேன்.

      Delete
  31. மகி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !குட்டியிடம் தெரிகிக்கிறேன்!!

      Delete
  32. உங்க பதிவுகளில் மிஸ் பண்ணிட்ட பதிவுகளாஇ படிச்சுட்டு வரேன். வலைச்சரத்தில் தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ராஜியக்காவின் வருகைக்கு மிக்க நன்றி:))

      Delete

  33. டீச்சரம்மா பதிவுகளை காணவில்லையே என்று நினைத்து இருந்தேன் இப்பதான் தெரியுது சீனா ஐயா அவர்கள் டீச்சரம்மாவிற்கு ஹோம் வொர்க்க கொடுத்திருக்காங்க என்று

    ReplyDelete
    Replies
    1. ஹா!!! ஹா...ஹா...
      ஹோம் வொர்க் பண்ணறது எவ்ளோ கஷ்டமா இருக்கு:))

      Delete
  34. //என் கணவர் கஸ்தூரி ரெங்கன் பத்து நாளுக்கு ஒருமுறை என்னிடம் கவிதைகளை வாங்கிக்கொண்டு போய் ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் அஞ்சு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி சில தபால்களை அனுப்புவார்.//

    எப்படியெல்லாம் அப்பாவி கணவரை மிரட்டி வைச்சுருக்காங்கப்பா. அமெரிக்காவான்னாலும் சரி இந்தியாவானாலும் சரி எல்லா இடமும் ஒன்றுதான் போல...

    ReplyDelete
    Replies
    1. போஸ்ட் பண்ண போகும்போது ""அப்பாடி ,நாலுநாள் நல்ல சாப்பாடு கிடைக்கும்" அப்டின்னு சொல்லீட்டுதான் போவார்:))))

      Delete
  35. மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கைதுணையாக மதுவை உடன் வைத்து கொண்டு இந்த 'மது'ரைகார தமிழனை நக்கல் செய்வது தப்பும்மா

    ReplyDelete
    Replies
    1. ஒன்னு தெரியுமா என் pet name தான் மது.
      என் பள்ளி நண்பர்கள் "மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடுன்னு "" என்னை கலாய்ப்பாங்க:))
      அப்புறம் தமிழன் சகாவை நான் கலாய்ப்பதா ? அதுவும் இந்த விசயத்திலா?? வதந்திகளை நம்பாதீர்கள் சகா:))))

      Delete
    2. ///ஒன்னு தெரியுமா என் pet name தான் மது.//
      இப்ப தெரியுது என்னடா இங்க இத்தனை கூட்டம் என்று..

      Delete
    3. நான் வெளிப்படையாகவே சொல்லுகிறேன் எனக்கு மதுவை பிடிக்கும் என்று. ஆனால் பிடிக்காது என்று சொல்லுபவர்கள் எல்லாம் இனிப்பை சுற்றி ஈ இருப்பது போல இந்த மது வை சுற்றி வருகிறார்கள்

      Delete
    4. ஹலோ இவங்க அன்பால சேர்ந்த கூட்டம்ங்க !!
      தங்கள் நட்புக்கு பல நூறு நன்றிகள் சகா!

      Delete
    5. மதுரைத் தமிழா!

      "I love you with all my heart! Because I KNOW you love me more than anything in this world"

      பிரியமுடன்,
      CH3CH2OH

      Delete
    6. இங்கே CH3CH2OH = எத்தில் அல்கஹால் = மது பானம் அப்படினு மதுரைத்தமிழன் புரிஞ்சுக்கிட்டாலும் புரியாதமாரி இருந்துட்டாருனு எல்லாருக்கும் புரிஞ்சதானு எனக்கு எப்படித் தெரியும்? :)

      Take it easy, MT! I did not mean to hurt you or anything.It is also true that you are not alone! You are just being extremely HONEST, that's all :)

      Delete

  36. உங்கள் கணவர் "மது' எனக்கு ரொம்பபிடிக்கும்.. அவர் சிரியஸான ஆளா அல்லது நகைச்சுவையாளார என்று சொல்லுங்க...அவர் பதிவுகளை படிப்பேன். ஆனா கிண்டல் பண்ணலாமா என்று சந்தேகம் இருந்தது.உங்க கணவர் என்று தெரிந்த பிறகு சும்மா அப்படியே போவது தவறுங்க

    ReplyDelete
    Replies
    1. அவர் செமைய மத்தவங்களை கலாய்ப்பார் , ஆனால் அவர கலாய்ச்சா டென்சன் ஆகிடுவார் அவரது நெருங்கிய நண்பர் கார்த்தி அண்ணா சொல்வார்கள் ;)
      நான் ஒன்னும் சொல்லலப்பா:) but I PROUD TO SAY KASTURI IS LIVING AS A TEACHER ON EVERY SINGLE MINUTE AND A TRUE ENVY AND COMPETITOR ON MY PROFESSION:))

      Delete
    2. பாருங்க அவர் நண்பர் சொல்லிதான் அவரின் பெருமைகள் உங்களுக்கு தெரியுது..சரி சரி இதுக்காது அவருக்கு ஒரு நல்ல சமையலா சமைச்சு அதாவது யாரு நல்லா சமைப்பாங்க என்று அவ்ரிடம் கேட்டு வாங்கி கொடுங்கள்...(நீங்க சமைக்க வேண்டாம்)

      Delete
  37. வசிஷ்டர் வாயால் பாராட்டு பெறுவது எளிதல்ல.. வலையுலக 'வசிஷ்டர் வருண்' அவர்களிடமே பாராட்டை பெற்று இருக்கின்றீர்கள் என்றால் நீங்க பெரிய அப்பாடக்கர்தான்.

    உண்மைதான். தமிழ்மணம் மகுடம் வேறு. வாழ்த்துகள் மைதிலி

    ReplyDelete
    Replies
    1. அண்ணா ,
      மிக்க நன்றி அண்ணா, உண்மையில் இதெல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாது.
      உங்களை மாதிரி ரோல் மாடல்ஸ் இருகிறதால எதோ தெரிந்ததை செய்றேன்,.

      Delete
    2. வசிஷ்டரும் சரி இந்த ஜோதிஜியும் சரி இவர்கள் இருவரும் யாரையாவது பாராட்டினால் அவர்கள் பெரிய அப்பாடக்கர்தான்

      Delete
    3. ஜோதிஜி எழுத்துலக சித்தர்

      Delete
  38. காலையிலேயே பதிவைப் படித்தேன் நேரமின்மையால் கமெண்ட் போடாமல் சென்று விட்டேன் இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள். குழந்தைக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ ,காலைல உங்க கமென்ட் என் ப்ளோகில் பார்த்தேனே:))
      ரொம்ப நன்றி சகோ, உங்க அளவு பெரியார் பாதை தான் என் முயற்சி. அந்த விசயத்தில் நீங்க தான் லீட்:)) நன்றி சகோ!!

      Delete
  39. அன்பு அக்காவிற்கு வாழ்த்துகள். இந்த வாரம் வலைச்சரம் என் அக்காவின் எழுத்துகளால் ஜொலிக்கப்போகிறது.. சிறப்பான தொடக்கம் அக்கா. மகி குட்டிக்கு என் மருமகளுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். பாப்பா கிட்ட சொல்லிடுங்கள் அவசியம் என் அன்பளிப்பு நம் இல்லம் வரும்! வாழ்த்துகள் அக்கா. கலக்குங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. புதுமாப்பிள்ளை வாங்க வாங்க எனது அடுத்த பதிவு உங்களை கலாய்த்துதான்

      Delete
    2. சகோ!!!! WHAT A GREAT SURPRISE BRIDEGROOM:))
      நீங்க இந்த கம்மெண்டை கொடுத்ததைவிடவா பெரிய பரிசு!!
      தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சும்மாவா சொன்னாங்க:))
      மருமகள்கிட்ட சொல்லீட்டேன்!!

      Delete
    3. //தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சும்மாவா சொன்னாங்க:)//
      எந்த படை உடம்பு தோலில் வருவதா?

      Delete
  40. ஸாரி மன்னிச்சுங்க.....உங்களை கலாய்த்த போது நன்றி சொல்ல மறந்துட்டேன். எனது தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு.... நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பா ? தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு:)))
      ( நிலவன் அண்ணா சொன்னார், மன்னிப்பு தமிழ் வார்த்தையே இல்லையாம்:))))
      விடுங்க சகா, என்ன பார்மாலிட்டி:)

      Delete
    2. திருத்திய கமெண்ட் : என் தளத்தை அல்ல என்னை(மதுரைத்தமிழனை) உங்கள் பதிவில் இணைத்தற்கு நன்றி

      Delete
    3. ///மன்னிப்பா ? தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை///
      வளைத்தளத்தில் இங்கிலீஷ் கற்று தரும் டீச்சர் அல்லவா... அதனால்தான் மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காமல் sorry என்ற வார்த்தை மீது மோகம் வந்ததோ

      Delete
  41. வணக்கம்

    தங்களைப்பற்றிய அறிமுகம் முதல் நாளில் அட்டகாசமாக உள்ளது. இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! உங்கள் தொடர்வருகையும், ஆதரவையும் வேண்டுகிறேன்:)

      Delete
  42. வாழ்த்துக்கள்!!! Mam As like ppl said u r really having special talent in conveying thoughts...I didn't read all ur posts.. Recently I visited ur blog and started following... Thevathaigal valarpavanin (title is something like tat) is the post I admired lot...Jamal solra mathiri engalkum nenAchi parkrappo eluthanum appdinu thonuthu aana antha eluthu thaan vara maatinguthu....and some of ur post very funny and some r social too... So plz keep post more... And mam plz convey my birthday to ur kids :) :) plz ignore spell mistakes...

    ReplyDelete
    Replies
    1. யார்ப்பா இது தமிழ பசங்க விளையாடுற இடத்தில் இங்கிலீஷ்ல பேசுறது...
      மொழி பெயர்ப்பு தேவை இல்லைன்னா உங்க வீட்டு முன்னால விஜயகாந்தை கூட்டி வந்து போராட்டம் நடத்துவோம். ஆமாம் சொல்லிப்புட்டேன்

      Delete
    2. வாழ்த்துக்கள்! மழை போன்ற என மம் என்றார் உர் உண்மையில் எண்ணங்கள் பரிமாறுவதற்கு சிறப்பு திறமை கொண்ட ... நான் என் பதிவுகள் படிக்க முடியவில்லை .. சமீபத்தில் நான் என் கவிதை விஜயம் பின்வரும் தொடங்கியது ... Thevathaigal valarpavanin (தலைப்பு பழிக்கு போல இருக்கிறது) Post நான் இருக்கிறேன் பாராட்டப்படும் நிறைய ... ஜமால் solra mathiri engalkum nenAchi parkrappo eluthanum appdinu thonuthu aana antha eluthu thaan யதிேர maatinguthu .... மற்றும் உர் பிந்தைய சில மிகவும் வேடிக்கையான மற்றும் சில எனவே plz plz பிந்தைய மேலும் வைத்து ... மேலும் மம் ... மிக, சமூக r குழந்தைகள் இது என் என் பிறந்த நாள் தெரிவிப்பதற்கு :) :) Plz தவறுகளை கூற புறக்கணிக்க ...





      கூகுலில் மொழிபெயர்த்து படித்து பார்த்தேன் கண்ணை காட்டில் கட்டி விட்டார் போல இருக்கிறது. அதனால் வலையுலக இங்கிலீஷ் பீட்டர் மைதிலி டீச்சர் அவர்களை அன்போட இதை மொழி பெயர்க்க வேண்டுகிறேன்

      Delete
    3. அட வேலை செய்யவிடுங்க சகா! சிரிச்சு சிரிச்சி கன்னமெல்லாம் வலிக்குது:)))
      மேடம் உங்க மாதிரி சிறப்பு தகுதி உள்ள ஒரு சிலரால் தான் மனதில் இருப்பதை வெளிபடுத்த முடியும்...நான் உங்கள் எல்லாப்பதிவுகளையும் படித்தத்தில்லை...சமீபமா தான் உங்கள் தளத்தை பார்த்து, தொடரத்தொடங்கினேன்...தேவதை வளர்பவனின்(என்பது போல ஒரு தலைப்பு) அதுதான் நான் மிகவும் வியந்த பதிவு. ஜமால்(இது கமல் னு வரணுமோ ரகு) சொல்ற மாதிரி எங்களுக்கும் நினைச்சு பார்க்கிறப்போ எழுதனும்னு தோணுது . ஆனா அந்த எழுத்து தான் வரமாடேங்குது. அப்புறம் உங்களோட சில பதிவுகள் நகைச்சுவையா இருக்கு, சில சமூக சிந்தனையோட இருக்கு.எனவே தொடர்ந்து நிறைய பதிவிடுங்கள்....அப்புறம் மேடம் உங்க குழந்தைகள்கிட்ட தயவுசெய்து என் வாழ்த்தை தெரிவித்துவிடுங்கள் :) :) எழுத்துப்பிழை இருந்தால் மன்னியுங்கள்.
      தமிழன் சகா போதுமா:) பாவம் புது பையன் போராட்டம் அது இதுன்னு டரியல் ஆக்கிடாதிங்க:) நம்ம சகோ இல்லையா!!!!

      Delete
    4. bro!!! gr8 welcome yaar:))
      itz happy to meet u here!
      Tamilan bro is juz kiddin :))
      ill convey ur wishes 2 ma lil kid. keep on visiting:)

      Delete
    5. ***ஜமால்(இது கமல் னு வரணுமோ ரகு)***

      நான் சத்தியமா ஜமாலை கமல்னு புரிஞ்சி இருக்க மாட்டேன்!!! ::))

      எப்படிங்க இதெல்லாம்!!! :)

      Now it makes more sense- it does not matter what Raghu meant! lol

      Delete
  43. 100 வது கமெண்ட் போட்டுடேன்

    ReplyDelete
    Replies
    1. MT: Check out my comment above too, please! Thanks :)

      Delete
    2. ஒ!!!! thanks a lot! சென்ற பிறந்தநாளில் என் தம்பி (சரத்) நள்ளிரவு வரை புதுகை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து, கேக்கில் மெழுவர்த்திகள் ஏற்றி பன்னிரெண்டு மணிக்கு எங்கள் கதவை தட்டி வாழ்த்திய அந்த நொடி துல்லியமாய் நினைவுக்கு வருகிறது . thanks again and again:)) u made my day( உங்களால் இந்த நாள் சிறப்பானது:))

      Delete
    3. MT = madhurai thamizhan :)

      --------------

      எனிவே, ஆசிரியை அம்மா!

      உங்க செல்ல மகிமாக்குட்டிக்கு ஊர் பேர், முகம் தெரியாத இந்த வருணின் வாழ்த்தையும் சொல்லீட்டீங்கனா உங்களுக்குக் கோடி நன்மைகள் விளையும்! :)

      Delete
    4. MT நான் புரிஞ்சு கிட்டேன். அலைவரிசை செட்டானால் நல்ல நண்பர்கள் ஆகமுடியும் அல்லவா!!
      செம டச்சிங் வாழ்த்து:)) கண்டிப்பா சொல்லிவிடுகிறேன்:)

      Delete
  44. வாழ்த்துக்கள் தோழி.

    குட்டி பாப்பாவிற்கும் என் வாழ்த்தைத் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  45. குட்டி மகிமாவிற்குப் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. தொடக்க அறிமுகம் ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து பாராட்டிய விதம் அருமை. தொடர்ந்து பதிவுகளை படிக்கிறேன். குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. I too tried to post comments in Tamil but didn't know Tamil keywords (keyboard letter for Tamil words).. Sorry sorry... Ya its kamal only...thanks mam for saving me :) and wat ever u said is absolutely right...

    ReplyDelete
    Replies
    1. Yeah, Mythily madam is your "savior" today! But you see, she can not save you all the time as she will be busy with her life! You need to save yourself by working hard- learning how to install and type in Tamil!

      ரங்கநாதன் ஐயா! அதான் ஆங்கிலம் ஓரளவுக்கு வருதே. அதையே பிடிச்சு தொங்க வேண்டியதுதானே? "தப்புத்தப்பா, இந்துவை இஸ்லாமியாரா ஆக்கி ஏன் இப்படி ஆங்கிலத்தில் தமிழோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கீங்க"னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் வேற யாரையும் அப்படிச் சொல்லக்கூடாதுனு நான் சொல்ல முடியாது பாருங்க! :)))

      Delete
    2. ரகு GOOGLE INPUT DEVICE என GOGGLE ல டைப் பண்ணினா தமிழ் KEYBOARD தரவிறக்கி , இன்ஸ்டால் செய்துக்க முயற்சியுங்கள்:))
      ALL THE BEST:))

      Delete
  48. டீச்சர்: அவரு "ரங்கு"! ரகு இல்லை! நீங்க யாருக்கோ சொல்றீங்கனு நெனச்சுக்கப் போறாரு, பாவம்! :)

    ReplyDelete
    Replies
    1. ரங்கு தான்! ஆனா 'ங்' எடுத்துட்டு ரகு னு சொல்ல இன்னும் கன்வீநியண்டா இருக்கு வருண்:)) இப்போ அவருக்கும்(ரங்கநாதன்) புரிஞ்சிருக்கும் இல்ல:)) இதை சொல்ல வாய்ப்பளித்த வருண் நன்றி:))

      Delete
    2. பெயர் நான்றாக உள்ளது :) :) நன்றி :)

      Delete
  49. சகோதரி! தாங்கள்தான் வலைச்சர ஆசிரியர் என்பது தாமதமாகத்தான் தெரிந்தது! மன்னித்து விடுங்கள்! எங்கள் ப்ளாகரில் பல தளங்கள் புதியவை வரவே இல்லை....மட்டுமல்ல தளப் பிரச்சினைகள்....but no excuses.....

    ஆரம்பமே அசத்தலாக எழுதிருக்கீங்க....நான இன்றைய பதிவையும் படிச்சுட்டுத்தாஅனே வர்ரோம்....ஸோ ரொம்பவே நல்லா, அழகா கொண்டு போயிட்டுருக்கீங்க உங்க பொறுப்ப.......

    தங்கள் எழுத்து நடையை ரசிப்பவர்கள் நாங்கள்! அது போன்று மதுவின் (கஸ்தூரி?) தளத்தையும் ரசிப்போம்! மது தங்கள் கணவராக இருக்குமோ என்ற சந்தேகம் பல நாட்களாய் இருந்தது....அதுவும் நண்பரின் பாண்டியன் அவர்களின் ஒரு பதிவில் அது தெரிந்தது என்றாலும் சற்றுக் குழப்பமாக இருந்தது! கேட்கவும் தயக்கம்......கேட்டால் தவறாகிவிட்டால்?!!!! அப்படின்னு....இப்ப இந்த பதிவுல நீங்க சொல்லியிருக்கறதுல இருந்து தெரிஞ்சுகிட்டோம்.....அப்ப நாங்க நினைச்சது சரிதான் அப்படின்னு....(ஹப்பா ஒரு பெரிய மண்டை குழம்பி,வெடிப்புலருந்து தப்பிச்சோம்) சூப்பருங்க......எங்களுக்கு இப்படி அறிவு ஜீவிகள் எல்லாம் நண்பர்களாகக் கிடைத்து....பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் அப்படின்றது போல.......

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  50. செல்லப் பாப்பாவுக்கு எங்கள் மனமார்ந்த, இதயம் கனிந்த (தாமதமான) பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லா நாளும் நாம் புதிதாகப் பிறப்பதால், புதிதாய் கற்பதால் எல்லா நாளும் பிறந்த நாள் என்ற நம்பிக்கையில்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது