07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 3, 2008

கவிதைச்சரம்

கவிதை - இந்த வகையை பற்றி அதிகம் தெரியாது. கவிதைக்குன்னு நிறைய முறைகள் வச்சிருக்காங்க மற்றும் நிறைய வகைகள் வச்சிருக்காங்க. என்னை பொறுத்த வரைக்கும் எழுதியிருக்குற விஷயம் படிக்கிறவனுக்கு புரிஞ்சா போதும். ரசிகனுக்கு வேற என்னாங்க வேணும். அப்படி ரசிச்ச, உணர்ந்த கவிதை பதிவுகள் சில

காட்டாறு

பேரே சும்மா அதிருதுல்ல...இவுங்க கவிதைகள் கூட அப்படி தான் இருக்கும், நிறைய விஷயம் தெரிஞ்சவுங்க, ஒவ்வொரு கவிதைக்கும் இவுங்க எடுத்துக்கிட்ட நேரம் சில நிமிஷங்கள்ன்னு சொல்லும் போது ஆச்சிரியமாக இருக்கும். கவிஞர்கள் எல்லாம் இப்படி தான் போல!இவுங்க‌கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை இந்த அத்தையின் மருமகன்
சமீபத்தில் எழுதிய இயற்கை சிற்பி நீ யாரோ வழக்கமான கவிதை கருவில் இருந்து வித்தியாசமாக இருந்தது.

இவுங்க போட்ட போஸ்ட்டுல ஒரு ஸ்பெசல் போஸ்ட்டு இது தாயுமானவள்

அருட்பெருங்கோ

அருட்பெருங்கோஇந்த காதல்முரசுவை தெரியாதவுங்க இந்த தமிழ்மணத்துல யாருமே இல்லைன்னு சொல்லாம். அம்புட்டு பெரிய ஆளு. இவரோட பெரும்பாலான கவிதைகள் காதல், காதல், காதல் தான். பிப்ரவரி மாதம் முழுக்க காதல் கவிதையாக எழுதி தள்ளிய காதல் அரசன். இவரோட காதல் கூடம் ரொம்ப பிடிக்கும். அதில் வார்த்தைகளில் விளையாடியிருப்பாரு. வாழ்க காதல் முரசு.

மணிபிரகாஷ்

பாரத விலாஸ் மாதிரி மணிவிலாஸ் தான் இவரோட பதிவோட பேரு. இவருக்கு பதிவர்கள் சேர்ந்து வச்சபேரு காலெண்டர் கவிஞர். காலெண்டரை வச்சே கவிதை எழுதி தள்ளியிருக்காரு. இதே உங்கள் பார்வைக்கு.

எனது நேற்றைய கிழமை...

இன்னுமோர் காலண்டர் கவிதை


வேதா

கவிஞர் வேதாவின் சில கவிதைகளில் ஒரு மெல்லிய சோகம் இருக்கும். ஆனால் வேதான்னு சொன்ன டக்குன்னு ஞாபகத்துக்கு வந்த கவிதை இதுதான் சகிப்பு.. பின்னியிருப்பாங்க.
அதே போல இந்த என்றும் நட்புடன்.. , என்றும் நேசமுடன் இவுங்க எழுதிய கதை போல உள்ள இந்த கவிதையும் மிகவும் பிடிச்ச ஒண்ணு. மிகத்தெளிவாக அழுத்தமான வரிகளில் எழுதியிருப்பாங்க.

பிரேம்குமார்

அருட்பெருங்கோவுக்கு காதல்ன்னா மாப்பி பிரேமுக்கு நட்பு. இவரோட நட்பு கவிதைகளின் அழகே தனி நட்புன்னு ஒரு தொகுப்பே வச்சிருக்காரு. பாருங்கள் நட்பு


சென்ஷி

இவரு பெரிய ஆளு, கவிதையாகட்டும், கதையாகட்டும் எதுக்கும் ரெடி ஆனா என்ன எல்லாத்தையும் கடைசியில காமெடியாக்கிடுவாரு. இவரோட சின்ன சின்ன கவிதை தொகுப்புல‌ எனக்கு பிடித்த ஒண்ணு குப்பைத்தொட்டி மனசு.

திவ்யா

இவுங்க ஒரு தொடர்கதை நாயகி, மாமியார், மருமகள், கணவன், மனைவி இவுங்களுக்கு எல்லாம் நிறைய ஐடியா கொடுக்குற ஒரு ஐடியா குடவுன். அதெல்லாம் விட எனக்கு முதல் பின்னூட்டம் போட்டவாங்க மகராசி. இந்த இடத்துல ஒரு நன்றியை சொல்லிக்கிறேன் ;) இவுங்க பதிவுல அதிகமாக கதைகள் தான் இருக்கும் ஆனா இவுங்க எழுதிய ஒரு கவிதை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணு அதை படிச்சிட்டு எல்லோரும் இவுங்களுக்கு தான் அந்த மாதிரி நடத்திருக்கு போலன்னு நினைச்சிட்டாங்க. அந்த அளவுக்கு மனசை தொட்ட கவிதை அது இப்போது உங்கள் மனசை தொட அம்மம்மா பிள்ளைக்கனி, அங்கம்தான் தங்கக்கனி!!!

J.K ஞானசேகர்

ஒரு தாயின் வலியை உணர்ந்து எழுதியிருப்பார் தலைப்பே அந்த வலியை உணர்த்தும்
சுயப்பிரசவம்



போனஸ் கவிதை



விழியனின் பதிவில் எனக்கு பிடிச்ச கவிதை இது தேவதையின் தோசை


நாளை சந்திப்போம்.....

21 comments:

  1. கதைச்சரத்தில இருக்க கதைகள் இன்னும் படிச்சு முடிக்கல. அதுக்குள்ள கவிதைச்சரம் போட்டுட்டீங்க. சீக்கிரம் படிச்சுமுடிக்க முயற்சி பண்ணறேன்

    ReplyDelete
  2. நம்ம அழுகாச்சி கவிதாயினியை சேர்க்காதாதால் ஈரோடு கவிதை கொலவெறி சங்கம் போராட்டத்துக்கு புரப்பட்டதா நியூஸ் வந்துச்சே! இது உண்மையா? ;-)

    ReplyDelete
  3. சில பேருடையதை படிச்சது இல்லை படிக்கிறேன்.

    அப்புறம் மை பிரண்ட் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்

    ReplyDelete
  4. மாப்பி, நல்ல தொகுப்பு :)

    என்னையும் மதிச்சு பட்டியல்ல சேத்ததற்கு நன்றிகள். உன்னை நினைச்சா பெருமையா இருக்குய்யா... ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ;-)

    ReplyDelete
  5. நிறைய புது லிங்கா இருக்கு. இருங்க போய் படிச்சிட்டு வர்றேன் :)

    //அப்புறம் மை பிரண்ட் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  6. தல

    உண்மையிலேயே மீண்டும் சொல்றேன், அந்தந்தத் துறையில் வல்லோரை அவர்களின் படைப்புக்களைக் கொண்டே காட்டிச் சரம் அமைத்தது உண்மையிலேயே சிறப்பாக இருக்கின்றது.

    ReplyDelete
  7. சபாஷ் கோபி கவிதையாலே அறிமுக மானவங்களையே திரும்பத் திரும்ப எழுதாமல் புதுசா முயற்சிக்கிறவங்களைப் பத்தி எழுதுவது பாராட்டுக்குரியது.
    இதை மற்ற எல்லாத் தலைப்புக்கும் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  8. நன்றி அன்பரே.

    நல்ல முயற்சி.

    ReplyDelete
  9. மாப்பி,

    தகுதியவிட ரொம்ப அதிகமாவே சொல்லிட்டனு நெனைக்கிறேன்…எல்லாரும் இப்படி உசுப்பேத்தியே நம்மளயும் கவுஜனாக்கிட்டாங்க :)
    ம்ம்ம்…கொடுத்திருக்கிற மத்த தொகுப்பையும் படிக்கனும்!!!
    நன்றி.

    ReplyDelete
  10. //கானா பிரபா said...
    தல

    உண்மையிலேயே மீண்டும் சொல்றேன், அந்தந்தத் துறையில் வல்லோரை அவர்களின் படைப்புக்களைக் கொண்டே காட்டிச் சரம் அமைத்தது உண்மையிலேயே சிறப்பாக இருக்கின்றது.//

    இது ஓவருங்க... :))


    ஏதோ அறியா புள்ள லிஸ்ட்ல என் பேரயும் சேர்த்திருக்குன்னா அதுல நீங்களுமா சேந்துக்கிட்டு இப்படி வாருறது :)

    என்ன கொடும இது கானா... :))

    ReplyDelete
  11. //கண்மணி said...
    சபாஷ் கோபி கவிதையாலே அறிமுக மானவங்களையே திரும்பத் திரும்ப எழுதாமல் புதுசா முயற்சிக்கிறவங்களைப் பத்தி எழுதுவது பாராட்டுக்குரியது.
    இதை மற்ற எல்லாத் தலைப்புக்கும் செய்ய வேண்டும்.//


    டீச்சர்...... அருட்பெருங்கோ, வேதா, விழியன், பிரேம் இவங்கள்லாம் உங்களுக்கு புதியவர்களா.. நீங்க எப்படி சமீபத்தில்தான் தமிழ்மணத்துல ஜாயின் செஞ்சீங்களா.. :))

    ஏதோ சின்னப்பையன் என்னைப்பத்தி சொன்னாக்கா சரி... திமிங்கலத்து கூட கோபி தான் நீந்த விட்டுருக்கான்னா நீங்க அது மேல கல்லையே கட்டிட்டீங்களே :))

    ReplyDelete
  12. ஹா ஹா ஹா... ஆத்தாடி.. நம்மளையும் ஒருத்தர் மதிச்சி, நம்ம கவுஜைகளை ரசிச்சி எழுதியிருக்காருப்பா... நன்றியை முதல்ல சொல்லிக்கிறேன்.

    // கண்மணி said...
    சபாஷ் கோபி கவிதையாலே அறிமுக மானவங்களையே திரும்பத் திரும்ப எழுதாமல் புதுசா முயற்சிக்கிறவங்களைப் பத்தி எழுதுவது பாராட்டுக்குரியது.
    //
    யக்கோவ்.. உள்குத்து ஒன்னுமில்லையே.

    ReplyDelete
  13. @ சின்ன அம்மிணி

    \\கதைச்சரத்தில இருக்க கதைகள் இன்னும் படிச்சு முடிக்கல. அதுக்குள்ள கவிதைச்சரம் போட்டுட்டீங்க. சீக்கிரம் படிச்சுமுடிக்க முயற்சி பண்ணறேன்\\

    தினமும் ஒரு பதிவு...எல்லாத்தையும் பொறுமையாக படியுங்கள் நன்றாக இருக்கும்..;)

    வருகைக்கு நன்றி ;)

    @ மை ஃபிரண்ட்

    \நம்ம அழுகாச்சி கவிதாயினியை சேர்க்காதாதால் ஈரோடு கவிதை கொலவெறி சங்கம் போராட்டத்துக்கு புரப்பட்டதா நியூஸ் வந்துச்சே! இது உண்மையா? ;-)\\

    எத்தனையே போராட்டத்தை பார்த்துட்டோம் இதெல்லாம் சகஜம்...ஆனா ஒன்னு கவிதாயினியின் மறுபக்கத்தை பாருங்கள் ;))

    ReplyDelete
  14. @ குசும்பன்

    \\சில பேருடையதை படிச்சது இல்லை படிக்கிறேன்.\\

    அனைத்தையும் படியுங்கள் அண்ணே ;)

    \\அப்புறம் மை பிரண்ட் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்\\

    மை ஃபிரண்ட்க்கு பதில் சொல்லிட்டேன் அதில் பாருங்கள் ;))


    @ பிரேம்குமார்

    \\மாப்பி, நல்ல தொகுப்பு :)\\

    நன்றி மாப்பி ;)

    \\என்னையும் மதிச்சு பட்டியல்ல சேத்ததற்கு நன்றிகள். உன்னை நினைச்சா பெருமையா இருக்குய்யா... ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ;-)\\

    இதுக்கு எதுக்குய்யா அழுவுற...எல்லாத்தையும் அக்கவுண்ட்க்கு அனுப்பிச்சிடு சரியா ;))

    ReplyDelete
  15. @ ஜி3

    \\நிறைய புது லிங்கா இருக்கு. இருங்க போய் படிச்சிட்டு வர்றேன் :)\\

    கண்டிப்பாக படிச்சிட்டு வாங்க ;))

    //அப்புறம் மை பிரண்ட் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்\\

    நாளைக்கு பாருங்கள்..;)))

    @ வேதா

    \\அட என் பெயருமா? :) நன்றி :)
    மணிப்ரகாஷ் மட்டும் தான் நான் படிச்சுருக்கேன் அவரையும் ரொம்ப நாளா காணோம்.\\

    வருகைக்கு நன்றி வேதா...

    நானும் விரைவில் வருவார்ன்னு எதிர்பார்க்கிறேன்..;)

    ReplyDelete
  16. @ கானா பிரபா

    \\தல

    உண்மையிலேயே மீண்டும் சொல்றேன், அந்தந்தத் துறையில் வல்லோரை அவர்களின் படைப்புக்களைக் கொண்டே காட்டிச் சரம் அமைத்தது உண்மையிலேயே சிறப்பாக இருக்கின்றது.\\

    தல நானும் உண்மையில் சொல்றேன்..உங்களின் உற்சாகமான பின்னூட்டத்திற்க்கு நன்றின்னு ஒரு வார்த்தை மட்டும் போதாது. ;)


    @ கண்மணி

    \\சபாஷ் கோபி கவிதையாலே அறிமுக மானவங்களையே திரும்பத் திரும்ப எழுதாமல் புதுசா முயற்சிக்கிறவங்களைப் பத்தி எழுதுவது பாராட்டுக்குரியது.\\

    அக்காவிடம் சபாஷ் வாங்கியதே மிக்க மகிழ்ச்சி..வருகைக்கு நன்றி ;))

    \\இதை மற்ற எல்லாத் தலைப்புக்கும் செய்ய வேண்டும்.\\

    முயற்சிக்கிறேன் அக்கா ..;)

    ReplyDelete
  17. @ விழியன்

    \\நன்றி அன்பரே.

    நல்ல முயற்சி.\\

    நன்றி விழியன் ;)

    @ அருட்பெருங்கோ

    \\மாப்பி,

    தகுதியவிட ரொம்ப அதிகமாவே சொல்லிட்டனு நெனைக்கிறேன்…எல்லாரும் இப்படி உசுப்பேத்தியே நம்மளயும் கவுஜனாக்கிட்டாங்க :)\\


    அனாலும் இவ்வளவு தன்னாடக்கம் கூடாது மாப்பி...அவ்வ்வ்வ்

    \\ம்ம்ம்…கொடுத்திருக்கிற மத்த தொகுப்பையும் படிக்கனும்!!!
    நன்றி.\\

    கண்டிப்பாக படி மாப்பி..வருகைக்கு நன்றி ;)

    ReplyDelete
  18. @ சென்ஷி

    கடமை தவறா என் தோழனே..வாழ்க நீ வளர்க உன் புகழ் ;)

    \\ஏதோ சின்னப்பையன் என்னைப்பத்தி சொன்னாக்கா சரி... திமிங்கலத்து கூட கோபி தான் நீந்த விட்டுருக்கான்னா நீங்க அது மேல கல்லையே கட்டிட்டீங்களே :))\\

    மாப்பி...உன் பலம் உனக்கு தெரியாது..அவ்வ்வ்வ்வ்

    @ காட்டாறு

    \\ஹா ஹா ஹா... ஆத்தாடி.. நம்மளையும் ஒருத்தர் மதிச்சி, நம்ம கவுஜைகளை ரசிச்சி எழுதியிருக்காருப்பா... நன்றியை முதல்ல சொல்லிக்கிறேன். \\

    வருகைக்கு நன்றி ;)

    // கண்மணி said...
    சபாஷ் கோபி கவிதையாலே அறிமுக மானவங்களையே திரும்பத் திரும்ப எழுதாமல் புதுசா முயற்சிக்கிறவங்களைப் பத்தி எழுதுவது பாராட்டுக்குரியது.
    //
    யக்கோவ்.. உள்குத்து ஒன்னுமில்லையே.\\

    எனக்கு என்னமே இருக்குன்னு தான் தோணுது..;))

    ReplyDelete
  19. 'தொடர் கதை நாயகின்னு பட்டம் எல்லாம் கொடுத்து அசத்திப்புட்டீங்க, ரொம்ப நன்றி கோபி!

    என்னோட முதல் கவிதை முயற்சி அந்த கவிதை......அதை நீங்க ரசிச்சிருக்கிறீங்கன்னு தெரியறப்போ ரொம்ப சந்தோஷமாயிருந்தது.

    [நான் உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டதிற்க்கு நன்றிகடன் தீர்த்திட்டீங்க!!!]

    ReplyDelete
  20. //[நான் உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டதிற்க்கு நன்றிகடன் தீர்த்திட்டீங்க!!!]//

    அடேங்கப்பா... இது உலக மகா ஆட்டம்டா சாமி :))

    ReplyDelete
  21. @ திவ்யா

    \\தொடர் கதை நாயகின்னு பட்டம் எல்லாம் கொடுத்து அசத்திப்புட்டீங்க, ரொம்ப நன்றி கோபி!\\

    உண்மையை தானே சொன்னோன்..நன்றிக்கு ஒரு நன்றி;)

    \\என்னோட முதல் கவிதை முயற்சி அந்த கவிதை......அதை நீங்க ரசிச்சிருக்கிறீங்கன்னு தெரியறப்போ ரொம்ப சந்தோஷமாயிருந்தது.\\

    அழகான கவிதை அது...;)

    \\[நான் உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டதிற்க்கு நன்றிகடன் தீர்த்திட்டீங்க!!!]\\

    ஆகா...அவ்வளவு சீக்கிரத்தில் தீர்க்க முடியாத கடனில் நன்றிகடனும் ஒன்று ;))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது