கடவுளிடம் ஒரு வேண்டுகோள் :
சென்னை ரெட் ஹில்ஸில் அந்தோனி முத்து என்ற தெய்வத்தின் குழந்தை ஒன்று உயிர் வாழ்கிறது. அக்குழந்தைக்கு இப்போது வயது 35. அக்குழந்தை 11 வயதாய் இருக்கும் போது ஒடியாடி விளையாடும் போது, தவறிப் போய், ஒரு கிணற்றினுள் விழுந்து விட்டது. அக்கிணற்றில் நீரே இல்லாத காரணத்தால், முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, நெஞ்சுக்குக் கீழ் உணர்ச்சியற்று இருக்கிறது.
இவ்விளைஞரின் தற்போதைய நிலை, இரு கைகளும் மூளையும் செயல் படும் நிலையில், அதிக அசைவுகளின்றி, கணினியே துணையாக பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கிறார். இசை கற்றவர். கணினி கற்றவர்.
கூடப் பிறந்தவர்கள் 8 பேர். ஆறு சகோதரிகள். தந்தை கடந்த ஆண்டு இறைவனடி சேர்ந்து விட்டார். அறுபது வயதைக் கடந்த மூத்த அண்ணனும், அண்ணியும் தான் வளர்த்தவர்கள். தங்கள் குழந்தையைப் போல் கண்ணும் கருத்துமாக போற்றிப் பாதுகாப்பவர்கள். ஒரு சகோதரி இவருடைய அன்றாடத் தேவைகள் அனைத்தும், உடல் உபாதைகள் உட்பட, கவனித்துக் கொள்கிறார்.
இவருக்குத் தேவைப்படும் உடனடிப் பொருட்கள் :
1. வெளி உலகைக் காண, 25 ஆண்டுகளாகக் காணாததைக் காண, ஒரு சக்கர நாற்காலி
2. பெட் சோரைத் தடுக்க, ஒரு ஸ்பாஞ்சு மெத்தை
3. சரி செய்யப்பட இயலாத வலது கண்ணின் குறையினால், மேசைக் கணினியின் பயன்பாடு குறைவதினால், பெரிய திரையுடன் கூடிய ஒரு மடிக்கணினி.
இவைகள் இருந்தால், கணினியின் மூலம் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், தன்னைப் பாதுகாத்து வரும் சகோதர, சகோதரிகளின் பாரத்தைக் குறைக்கவும், பணம் ஈட்டவும் முடியும் என நினைக்கிறார்.
இவருக்கு நல்வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தருவோம்.
இவருக்கு உதவும் நோக்கத்துடன், சக வலைப் பதிவர்கள், நல்ல உள்ளம் படைத்தவர்கள், வலைப் பூவில் இடுகைகள் இட்டிருக்கின்றனர்.
மதுமிதா : தன்னுடைய காற்று வெளி என்ற பதிவில், டிசம்பர்த் திங்கள் 18ம் தேதி, தெய்வக் குழந்தை அந்தோணி முத்து என்று ஒரு இடுகை இட்டிருக்கிறார்.
சுரேஷ் : அழகுக் கவிதை ஆங்கிலத்திலும் தமிழிலும் படைத்திருக்கிறார் இக்குழந்தையைப் பற்றி. யாரிவர் என்ற தலைப்பிலும், Do we have time என்ற தலைப்பிலும்.
என்றென்றும் அன்புடன் பாலா : இவர் நண்பர் அந்தோனி முத்துவிற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சாம் தாத்தா: முதியவர் - வலைப்பூக்களுக்கு புதியவர் - சென்னைத் தமிழும் தெரிந்தவர் - கலக்கல் பதிவுகள் இடுபவர். இவரது பதிவிலும் அந்தோனிமுத்து பற்றி ஒரு பதிவு இருக்கிறது.
அந்தோனி முத்துவும் ஒரு சக பதிவராக இருக்கிறார்.
நண்பர்களே, தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்ற நல்ல செயல்களை சில நல்ல உள்ளங்கள், இறைவனின் கருணையைத் துணை கொண்டு செயல் படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு நல் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக.
நான் இரு கரம் கூப்பி, இங்கு வருகை தந்த நண்பர்களை, நல்லவர்களை, சுட்டியைச் சுட்டி, மேலே கண்ட இடுகைகளையும் படிக்குமாறு, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து - குறள்
நன்றி வணக்கம்.
|
|
சோதனை மறு மொழி
ReplyDeleteவந்துட்டோம்ல... இனி கலக்கல் தான்
ReplyDeleteபதிவு ஒரு தரம் பாத்துட்டு வரேன்
ReplyDeleteஅந்தோனி முத்து அண்ணாவுக்கு நல்வாழ்த்துகள், பிரார்த்தனைகள்
ReplyDeleteவாடா பவன் - காணோமேன்னு நெனைச்சேன் - எல்லாப் புள்ளேகளையும் ஒழுங்காக் கூட்டி வந்து எல்லாப் பதிவுகளயும் படிச்சு அறிவெ வளர்த்துக்கணும் - தெரிஞ்சுதா
ReplyDeleteபவன், குழந்தைகளின் பிரார்த்தனைக்கு நல்ல பலனுண்டு. வாழ்க
ReplyDeleteஅந்தோணி முத்து அவர்களுக்கு நல் வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்..
ReplyDeleteஒருவருக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவி, அவருக்கு உதவி தேவை என்பதை சில நல்ல உள்ளங்களுக்கு தெரிய படுத்துவது தான். நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் சீனா சார். பதிவுக்கு ஏற்ற சரியான குறள். தொடர்க உங்கள் அரும்பணி.
சஞ்செய் - நல்ல உள்ளங்கள் நிறைய இருக்கின்றன. செய்திகள் அவர்களை எட்ட வேண்டும்
ReplyDeleteஅன்புள்ள சீனா அவர்களுக்கு
ReplyDeleteஉங்களின் கருணையும் அன்பும் நிறைந்த இந்த பதிவை பாராட்டுகிறேன்.
இறைவனின் கிருபை உங்களோடு என்றும் இருக்க பிரார்த்திக்கிறேன்.
இதயம் நிறைந்த பாசமுடன்
என் சுரேஷ்
சுரேஷ், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்
ReplyDeleteசீனா சார் ,
ReplyDeleteஉங்கள் அன்பும் கணிவும் நிறைந்த இதயத்துக்கு தலைவணங்குகிறேன்.
அந்தோனிமுத்துவிற்கு என் பிரார்த்தனைகள்!!
சீனா,
ReplyDeleteமிக்க நன்றி, இந்தப் பதிவுக்கும், தங்கள் அன்பு ஆதரவுக்கும்.
எ.அ.பாலா
திவ்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteபாலா - வருகைக்கு நன்றி பாலா
ReplyDeleteநன்றி நண்பர் சீனா.
ReplyDeleteஅவன் (அந்தோணி முத்து) மீதான உங்களின் அன்புக்குத் தலை தாழ்த்தி மண்டியிட்டு வணங்குகிறேன்.
நன்மைகள் நிகழட்டும்.
எழுதியதோடு... மட்டுமல்ல.
நீங்கள் செயல் வடிவத்திலும் செய்து காட்டியிருக்கிறீர்கள்.
அதுபற்றி வெளிக்காட்டாமலும் அமைதி காக்கிறீர்கள்.
நீங்கள் அவனைப் பற்றி எழுதும் முன்பே (சில வாரம்...) அவனுக்கு உங்களின் பேருதவியை அளித்து விட்டீர்கள் என்பது இப்போதுதான் ஒரு நண்பர் மூலம் தெரிய வந்தது.
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
வலது கரம் உதவுவதை இடது கரத்திற்கு தெரியக்கூடாதெனும் உங்கள் கொள்கை போற்றுதலுக்குரியது.
(அதை மீறி நான் இங்கே வெளிப்படுத்தியதற்கு, என்னை மன்னித்து விடுங்கள்)
நான் அதை இங்கே வெளிப்படுத்தியதற்கு மிக முக்கிய காரணம்.
இதைப் படிக்கும் எத்தனையோ பேருக்கு, தாங்களும் (அந்தோணி முத்துவைப் போன்ற நிலையில் உள்ள பலருக்கு) உதவ வேண்டும் எங்கிற உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதால்தான்.
இதை வெளியிட வேண்டாம்.
ReplyDeleteநீங்கள் எனது இதற்கு முந்தைய பின்னூட்டத்தை உங்களின் கொள்கை முன்னிட்டு வெளியிடாமல் நிறுத்தலாம் நண்பரே.
ஆனால் அதற்கப்புறம் நான் உங்களைப் பற்றியும், உங்களின் உதவும் மனம் பற்றியும் எனது வலைப்பூவில் எழுதப் போவதைத் தடுக்க முடியாது.
ஒழுங்கா இப்பவே போட்டுடுங்க-ன்னு அன்பா மிரட்டிக் கேட்டுக்கறேன்.
உங்களை மிரட்டும் உரிமை எனக்கு உண்டென நினைக்கிறேன்.
சரியா...?
சாம் தாத்தா said...
ReplyDeleteஇதை வெளியிட வேண்டாம்.
நீங்கள் எனது இதற்கு முந்தைய பின்னூட்டத்தை உங்களின் கொள்கை முன்னிட்டு வெளியிடாமல் நிறுத்தலாம் நண்பரே.
ஆனால் அதற்கப்புறம் நான் உங்களைப் பற்றியும், உங்களின் உதவும் மனம் பற்றியும் எனது வலைப்பூவில் எழுதப் போவதைத் தடுக்க முடியாது.
ஒழுங்கா இப்பவே போட்டுடுங்க-ன்னு அன்பா மிரட்டிக் கேட்டுக்கறேன்.
உங்களை மிரட்டும் உரிமை எனக்கு உண்டென நினைக்கிறேன்.
சரியா...?
என்னது இது சின்னபுள்ளதனமா, நம்ம சீனா தாத்தாவ நாம மிரட்டாம வேற யாரு செய்யரது...
சீனா தாத்தா உங்க அன்புக்கு நன்றிகள் கோடி ... வலது கரம் உதவுவதை இடது கரத்திற்கு தெரியக்கூடாதெனும் உங்கள் கொள்கை பொற்றுதலுக்குரியது.
சாம் தாத்தா உங்களுக்கும் நன்றி
அன்பு நண்பர் சாம் - மறு மொழிகளை மட்டுறுத்தும் உரிமை என்னிடம் இல்லை. எனவே வெளி வந்து விட்டது. தங்களின் மிரட்டலுக்குப் பணிந்தல்ல. நன்றி - பெரிய சொற்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துகளுக்கு நன்றி. இது போதாதா - மற்ற சொற்கள், வரிகள் - பெரியவரான உங்களிடம் இருந்து வரலாமா - சிறியவர்களை வாழ்த்துங்கள் - ஆசீர்வதியுங்கள் - வணங்காதீர்கள். தலை தாழ்த்தாதீர்கள்.
ReplyDeleteநன்றி
மிரட்டும் உரிமை சாமிற்கும், பவனுக்கும் எப்போதும் உண்டு = நன்றி
ReplyDeleteஇனிய நண்பர் சீனா,
ReplyDeleteஆம்..
சிறிது உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.
நம் பிள்ளைதானே என்ற உரிமையில்...
'அந்தோணி' -யையும்...
"அவன்" என்று பேசிவிட்டேன்.
(உங்களையும் மிரட்டும் தொனியில்)
நீங்கள் குறிப்பிட்ட அனைத்திற்கும்
வருந்துகிறேன்.
நீங்களும் அந்தோணியும் பொறுத்தருளவும். (இந்த வரிக்கும் சேர்த்து...)
"பவனின்" ஆதரவிற்கு நன்றிகள்.
(சில நாளாய் உடல் நலமில்லை.)
அருமை நண்பர் சாம்,
ReplyDeleteகவலைப் பட வேண்டாம். நட்பில் உணர்ச்சி வசப் படுவது சாதாரணமே!
உடல் நலன் பேணுங்கள். மருத்துவரை அணுகுங்கள். நலம் பெற இறைவன் கருணை புரிவான். பிரார்த்தனைகள்.
அந்தோணி, நீங்கள் இந்தப் பதிவிட்டதாகத் தெரிவித்தார். தங்கள் நல்லுள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி சீனா.
ReplyDelete