07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 31, 2008

வலைச்சர, படிக்காத, படிக்க வேண்டிய பதிவுகள்

நண்பர்களே !! வலைச்சர கொள்கைப்படி, பதிவர்களால் அதிகம் படிக்காத, ( படித்தும் மறு மொழி இடாத) , பயனுள்ள பதிவுகள் பற்றி கீழே எழுதி இருக்கிறேன்.

நண்பர் பிரபு ராஜ துரை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி யாற்றுகிறார். பலதரப்பட்ட வழக்குகளையும் கையாளுகிறார். அவற்றைப் பற்றி எளிமையாக விளக்குகிறார். இதோ அவரது வலைப் பூவான மணற்கேணியில் வந்த
ஜல்லிக்கட்டு பற்றிய இடுகை. இதில் உச்ச நீதி மன்றத்தில் நடந்த, சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு பற்றி விளக்குகிறார். இன்னுமொரு இடுகை அலங்காநல்லூர் சல்லிக்கட்டு பற்றியதும் இப்பதிவினில் இருக்கிறது. படியுங்களேன்.

பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள கோட்டக்குப்பத்தில் வளர்ந்த நண்பர் இக்பால் தற்போது சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். இவர் இயற்கையோடு கூடி வாழ்ந்தால் இது சுகமே என்ற பதிவினில் பல விதமான பாட்டி வைத்தியம் பற்றிக் கூறுகிறார். பலவித
கீரைகளின் பயன்கள், இஞ்சி மற்றும் தேன், நெய் ஆகியவை எவ்விதம் நம் உடலைப் பாதுகாக்க உதவுகின்றன என்பதை எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறார். சென்று தான் பாருங்களேன்.

மக்கள் சட்டம் என்றொரு வலைப்பூ மக்களுக்கான சட்டங்களை வளர்த்தெடுக்கவும், மக்கள் விரோத சட்டங்களை அடையாளம் காட்டவும் அரிய பணி யாற்றிக் கொண்டிருக்கிறது.
வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகள், அதன் மூலம் பெறப்படும் கடன்கள், அதனால் விளையும் துன்பங்கள் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறது. பயனுள்ள பதிவு. பதிவர்கள் அலசலாமே!!

நண்பர் ஜி.ராகவன் அடுப்படி என்ற வலைப்பூவினில் சுவைக்கச் சுவைக்க சிறந்த சமையல் குறிப்புகளை சுவை படத் தருகிறார்.
முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா செய்வது பற்றி நகைச்சுவையாக குறிப்புகள் தருகிறார். முயற்சி செய்யலாமே.

பதிவர்களே அடுத்த பதிவில் சந்திக்கலாமா ?

9 comments:

  1. சோதனைஇ மறுமொழி

    ReplyDelete
  2. இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் எல்லா பதிவுகளுமே உபயோகமாக தெரிகிறது. ஜல்லிக்கட்டு பதிவு ரொம்ப பெரியதாக இருப்பதால் புக்மார்க் செய்து வைத்துவிட்டேன். நேரம் கிடைக்கும் போது அவசியம் படிக்க வேண்டும். நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிங்க சீனா சார். நன்றி. வலச்சரம் தொடுத்து முடிந்தபின்பு உங்கள் வலைப்பூவிலும் இந்த நல்ல காரியத்தை செய்யுங்கள். எல்லாரயும் விட உங்களுக்கு தான் நல்ல பதிவுகள் அதிகம் தெரியும். :P

    ReplyDelete
  3. நன்றி சஞ்செய் - வலைச்சரப் பொறுப்பு முடிந்த பின்னரும் பணியினைத் தொடர ஆசை தான். ஆனால் விறுவிறுப்பு இல்லாத பதிவுகளாக, மறுமொழிகள் குறைந்த பதிவுகளாக, மக்கள்ஸ் விருப்பமே வேறு மாதிரி அல்லவா இருக்கிறது. பார்க்கலாம்

    ReplyDelete
  4. ஆமாம் மக்கள் விருப்பம் வேறுமாதிரித்தான் இருக்கிறது.சூடான இடுகைகளை பாருங்கள் தெரியும் :(

    ReplyDelete
  5. தொடர்ந்து அருமையான அறிமுகங்களைச் செய்து இந்த வலைச்சரத்துக்கேஒரு புது மகிமை உண்டாக்குகிறீர்கள் ஐயா.

    எவ்வளவு பாராட்டினாலும் போதவில்லையே.

    :))

    ReplyDelete
  6. சீனாவின் பரிந்துரைகள் என்று ஒரு வலைப்பூவே ஆரம்பிக்கலாம் போலிருக்கிறதே சீனா

    மிகுந்த பாராட்டுக்குரிய சேவை இது

    இருக்கும் கொஞ்ச நேரத்தை சரியான பதிவைப்படித்து பலனடையவே பலரும் விரும்புவர்.

    உங்கள் முத்திரை இருந்தால் அவசியம் வாசிக்க வேண்டும் என்று தானே தோன்றிவிடுகிறது

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  7. தமிழன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்ன செய்வது - பார்க்கலாம்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி நண்பர் விஎஸ்கே - பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. பதிவுகளை அறிமுகம் செய்வதை ஒரு கடமையாகத்தான் செய்கிறேன். அதிகம் பாராட்டுகிறீர்கள் நண்பரே. மனம் மகிழ்கிறது

    ReplyDelete
  9. நண்பர் புகாரி, நான் தங்களின் விசிறி. தங்கள் அன்புடன், வெளிச்சக் கவிதைகள் ஆகிய குழுமங்களைப் படித்து, எனது படித்ததில் பிடித்தது என்ற வலைப்பூவில் கருத்து தெரிவித்திருக்கிறேன்.
    பாராட்டுகளுக்கு நன்றிகள்.
    முத்திரை எல்லாம் பதிக்க இன்னும் நிறைய படிக்க வேண்டும். விருப்பத்திற்கு நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது