கவிதைச்சரம் - பூக்களில் உறங்கும் மௌனங்கள்
பொதுவாக வலைப் பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட வட்டம். அதில் பதிவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், இணையத் தொடர்பு இல்லாதவர்களை, வலைப்பூ அறிமுகம் இல்லாதவர்களை, வலைப் பதிவர்களின் கருத்துகள் எட்டுவதில்லை. வலைப்பூவில் உள்ள கட்டற்ற சுதந்திரம் மற்ற ஊடகங்களில் இல்லை. வலைப்பூ என்பது நம்முடைய தனிப்பட்ட நாட்குறிப்பு.
நண்பர் சிறில் அலெக்ஸ் எழுதும் தேன் என்ற வலைப் பூ முதல் முதலாக புத்தகமாக வெளி வந்துள்ளது. வலைப்பூ புத்தகமாக வெளி வருவதின் நோக்கமே ஆசிரியரின் எழுத்துகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல சிந்தனை தான்.
முட்டம் என்ற பெயரில் புத்தகமாக வெளி வந்திருக்கிறது. தன் பிறந்த ஊரைப் பற்றி - மலரும் நினைவுகளாக - இனிமையாகக் கழிந்த இளம் பருவத்தினைப் பற்றி எழுதி உள்ளார். ஆழி பதிப்பகம் 64 பக்கங்களில் 45 ரூபாய் விலையில் வெளியிட்டிருக்கிறது.
சிறில் அலெக்ஸ் ஒரு நச்சென்ற கவிதைப் போட்டி ஒன்று நடத்தி முடிவும் அறிவித்து விட்டார். பூக்களில் உறங்கும் மௌனங்கள் என்ற ஒரு நல்ல தலைப்பினையும் தந்து, மக்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று அறிவதற்காக போட்டி நடத்தினார். மக்களும் பல்வேறு வகைகளில், பல்வேறு கருத்துகளில், மாறுபட்ட சிந்தனைகளோடும், பல்வேறு கருப்பொருளில், கவிதை படைத்தார்கள். அனைத்துக் கவிதைகளையும் பொறுமையாகப் படித்து, ஆராய்ந்து, முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது. போட்டியாளர்களில் பெரும்பாலானவர்கள் கவிதைகள் அதிகம் எழுதியவர்கள் அல்ல. போட்டிக்கென்று, சிந்தித்து, ஒரு சிறு கவிதையை அழகு தமிழில் எழுதி உள்ளனர்.
போட்டிக்கு வந்த கவிதைகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
வலைச்சர பொறுப்பாளர்களில் ஒருவரான சிந்தாநதி அழகாக எழுதி இருக்கிறார். மக்கள், பூங்காக்களில் இறக்கி வைக்கும் மனப் பாரங்களை மௌனமாகச் சுமந்து கொண்டிருக்கும் மலர்களைப் பற்றிய கவிதை.
அடுத்து அருமை நண்பர் வி.எஸ்.கே. ஆத்திகம் பற்றி அதிகம் பேசும் பதிவர். அழகாக அந்தாதி வடிவத்தில் மனித வாழ்க்கையையும், மலர்களையும் ஒப்பு நோக்கி, கனியது புளிப்பு என முடிக்கிறார்.
அடுத்து ட்ரீம்ஸ் எளிமையான சொற்களைக் கொண்டு கவிதை படைத்திருக்கிறார். மனித மனத்தையும் மலர்களின் உறக்கத்தையும் ஒப்பு நோக்குகிறார். அருமையான கவிதை.
அடுத்து குட்டிபிசாசு மலர்களைப் பற்றி - அவற்றின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றி - மலர்களும் ஒரு அழகியல் வெறுமை தான் என முடிக்கிறார்.
அடுத்து செல்வி ஷங்கர் வழக்கம் போல அழகு தமிழில் தனது தமிழறிவை வெளிப்படுத்துகிறார். மனிதனுக்குக் கூறும் அறிவுரைகளாக, பூக்களில் உறங்கும் மௌனம் போதும் என்கிறார்.
அடுத்து ஐயா சுப்பையா . அழகு - எளிமை - கவிதை அற்புதம். எதிர்காலம் என்ன வென்று தெரியாத நாமும் மலர்களும் ஒன்று தான் என்கிறார். உறங்கும் மௌனத்தை அப்படியே எழுப்பாமல் விட்டால் அது தான் நளினம் என்கிறார்.
அடுத்து வேதா சமூக அக்கறையுடன், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி மன வருத்தத்தையும் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மழலைச் செல்வங்களின் பிஞ்சு விழிகளில் உறங்கும் கனவுகளை பூக்களின் மவுனத்திற்கு ஒப்பிடுதல் அருமை அருமை.
அடுத்து பி.கே.எஸ் பேசாப் பொருளைப் பேசும் துணிவுடன் இருளைப் பற்றி எழுதுகிறார். வித்தியாசமான சிந்தனை.
அடுத்து சக்தி கை விடப்பட்ட மழலைச் செல்வங்களைப் பற்றி மிகுந்த மன வருத்தத்துடன், யாரோ செய்த பிழைகளுக்காக இவர்கள் படும் துன்பத்தை, விவரிக்கும் வரிகள் மனத்தை நெகிழச் செய்கின்றன. கண் கொண்டு பார்க்காவிட்டாலும், மனம் கொண்டு நேசிக்காவிட்டாலும், இதழ் கொண்டு தூற்றாதிருக்க வேண்டுகிறார்.
அடுத்து கண்மணி பல கவிதைகள் எழுதி இருப்பினும், இக்கவிதை மழலையின் மயக்கத்தை எண்ணி எண்ணி வருந்தும் மனதின் - உணர்வின் வலிகளை அழகாக, எளிமையான, பொருத்தமான சொற்களைக் கொண்டு எழுதிய விதம் பாராட்டத் தக்கது.
அடுத்து சதீஷ் மனித மனத்தில் தோன்றி மவுனமாக மறைந்து விடும் சொற்கள், கருத்துகள், ஆசைகள் பற்றி அழகாக கவிதையாக வடித்திருக்கிறார்.
அடுத்து அமிர்தன் காதலன் காதலி - இடையே உள்ள காதலைப் பற்றி எழுதி உள்ளார். காதலுக்கு முதல் எதிரி காதலை வெளிப்படுத்தாத மவுனம் தான்.
அடுத்து இப்னு ஹம்துன் மலரைப் பற்றி, வைரமுத்து போல, மகிழ்வுடன் எழுதி இருக்கிறார். மவுனமாக இருந்தாலும் மலர்ந்தே இருக்க அறிவுறுத்துகிறார். மவுனத்தின் அழகை ரசிக்கிறார்.
அடுத்து நிலா ரசிகன் பெண்மையைப் பற்றி, அதன் இயலாமையைப் பற்றி, அது படும் துன்பங்களைப் பற்றி அழகாக, எளிமையாக, வலிமை கொண்ட சொற்களால் வருந்தி இருக்கிறார்.
அடுத்து சகாரா கைவிடப்படும் குழந்தைகளைப் பற்றி, பொருள் பொதிந்த வரிகளுடன், மனித நேயத்துடன் யதார்த்தமாக, மொழி பெயர்க்க இயலாத மவுனத்தை எழுதி இருக்கிறார்.
அடுத்து நாடோடி இலக்கியன் வித்தியாசமான சிந்தனைச் சிதறல்கள்களாக - மௌனமாகப் பிறந்து, மௌனமாக வாழ்ந்து, மௌனமாக மரிக்கும் மலர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்.
அடுத்து பிரேம்குமார் பூக்களின் இயல்பான குணங்கள் - படிப்பினைகளாக நமக்கு - ஆனால் நாம் தான் எதையும் எளிதில் புரிந்து கொள்ள மாட்டோமே என வருந்துகிறார்.
அடுத்து அருமை நண்பர் சேவியர் ஈழத்தமிழர் படும் துன்பங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். பூக்களில் உறங்கும் மவுனங்களையே - எப்படி உறங்கும் எனக் கேட்ட வித்தியாசமான சிந்தனை.
அடுத்து இராகவன் என்ற சரவணன் மு மாந்தர் வெளியிடும் உணர்வுக் கதம்பங்கள் அத்தனையையும் உள் வாங்கியும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற கொள்கையுடன் மௌனமாக உறங்கும் பூக்கள் என்கிறார்.
அடுத்து ஷைலஜா மவுனத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மலர்களைப் பற்றியும், நிரந்தர மவுனத்தில் ஆழ்ந்து போகும் மலர்களின் / மனிதர்களின் பொதுவிதியைப் பற்றியும் அழகாக எழுதி இருக்கிறார்.
அடுத்து நம்பிக்கை பாண்டியன் முதிர் கன்னியரைப் பற்றி எளிமையாக, ஆழ்ந்த வருத்தத்துடன் எழுதி இருக்கிறார்.
அடுத்து அருட்பெருங்கோ புத்தாண்டில், புதுச் சிந்தனையுடன், புது திசையில், ரசிக்கும் படியான கவிதை படைத்திருக்கிறார். போட்டிக் கவிதைகளில் இதுதான் முதல் சோகக் கவிதை என நினைக்கிறேன். மாறுபட்ட சிந்தனை.
அடுத்து நண்பர் மா.கலைஅரசன் மழலைச் செல்வங்களைப் பற்றி மகிழ்ந்து எழுதி இருக்கிறார். அருமையான கவிதை. எளிமையான சொற்கள்.
அடுத்து நண்பர் நவன் பூக்களின் புரிந்து கொள்ள முடியாத மவுனத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்.
இறுதியாக, நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு கவிதை எழுதி போட்டியைத் துவக்கி வைத்தார். காதல், தாயின் அன்பு, மழலையின் தூக்கத்தில் சிரிப்பு, இருண்ட கோபுரத்தின் ஒற்றைத் தீபமென பலவற்றை உவமையாகக் காட்டுகிறார். சிறு கவிதை. அருமை.
இத்தனை கவிதைகளின் உட்பொருள்களையும் ஒருங்கே தருகிறார் செல்வி ஷங்கர் .
பதிவர்களே அனைத்துக் கவிதைகளையும் படியுங்கள். மனம் மகிழுங்கள்.
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteயாரை சோதிச்சீங்க....
ReplyDeleteஎன்ன கிடைச்சது..
சீனா ஐயா,
ReplyDeleteவலைச்சரம் எழுதுவதற்கு மிகவும் தகுதியானவர் தாங்கள் தான். எனக்கு தெரிந்து தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடும் ஒரே பதிவர் தாங்கள் தான். எல்லோருடைய பதிவையும் படித்திருக்கும் உங்களுக்கு தொகுப்பதில் சிரமம் இருக்காது.
******
நீங்கள் தம்பதிகளாக
குசும்பனின் திருமணத்திற்கு நேரடியாக வாழ்த்துவதற்கு திருவாரூர் சொல்கிறீர்களாமே ?
அவர் தான் சாட்டில் சொன்னார்.
:)))
வாங்க வாங்க டிபிசிடி - சோதனை செய்வதெல்லாம் நம் வேலை அல்ல. மறுமொழி வேலை செய்கிறதா எனப் பார்க்கவும், மறுமொழி திரட்டியைத் தொடங்கவும் செய்யப்படும் பின்னூட்டக் கயமைத்தனம் தான் அது.
ReplyDeleteவருகைக்கு நன்றி
நண்பர் கோவியாரே! - அதிகம் புகழ்கிறீர்கள். பொழுது போவதற்காக பதிவுகள் படிக்கிறேன். ரசிக்கிறேன். சும்மா படித்து விட்டு வராமல் ஒரு நாலு வரி பின்னூட்டமும் இட்டு வருகிறேன். அவ்வளவுதான்.
ReplyDeleteஎழுதுவது தொகுப்பது எல்லாம் புதிய செயல்கள். தொடர்வோம்
ஆகா ஆகா ஆகா ஆகா - கோவியாரே - குசும்பர் ஏதாவது கொழுத்திப் போடுவார். நீங்க வேற - திருவாரூர் செல்வோம் - வாழ்த்துவோம் - இன்னும் மூணு மாசம் இருக்கே -
ReplyDeleteஉள்ளேன் அய்யா...
ReplyDeleteமொதல் பின்னூட்டம் நீங்க எப்படி போடலாம், அதுக்கு போட்டி போட தான் நாங்க இருக்கோமே...
ReplyDeleteநீங்கள் தம்பதிகளாக
ReplyDeleteகுசும்பனின் திருமணத்திற்கு நேரடியாக வாழ்த்துவதற்கு திருவாரூர் சொல்கிறீர்களாமே ?
அவர் தான் சாட்டில் சொன்னார்.
:)))
அட சொல்லவே இல்ல, இருக்கட்டும் இந்த வாரம் மொக்கை டே அன்னைக்கு குசும்பு மாமாக்கு ஆப்பு ரெடி
சரி இப்ப பதிவு படிச்சிட்டு வரேன்
ReplyDeleteபவன் - வா வா வா- வந்துட்டீயா - அட்டெடன்ஸ் மார்க்குடு
ReplyDeleteஇனிமேயும் மொதப் பின்னூட்டம் நான் தான் போடுவேன். அது எனது பிறப்புரிமை. சிறப்புரிமை........ நோட் தெ பாயிண்ட் மிஸ்டர் பவன்
ReplyDeleteஎப்பா பவன் - குசும்பு மாமாவெ என்ன வேணும்னாலும் பண்ணிக்க - எனக்கு ஆட்சேபனை இல்ல
ReplyDeleteஇன்னும் பதிவு படிக்கவே ஆரம்பிக்கலியா - அதுக்குள்ளே என்ன பில்டப்பு - அப்பா பவன்
ReplyDelete//
ReplyDeletecheena (சீனா) said...
சோதனை மறுமொழி//
passed. :-P
நல்ல கவிதைகள் தொகுப்பு. படிச்சாச்சு. :-)
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::.
ReplyDeleteவருகைஇகும் பாஸ் போட்டதற்கும் நன்றி
நல்ல கவிதைகள் தொகுப்பு தான் - யார் இல்லன்னு சொன்னது - படிச்சாச்சுன்னா - ஏதாவது எழுதறது படிச்சதப் பத்தி - வந்ததுக்கு நன்றிங்கோ
ReplyDeleteஎனது கவிதையைப் பற்றி குறிப்பு தந்தமைக்கு எனது நன்றி ஐயா! மற்ற கவிதைகளைப் பற்றிய சீரிய குறிப்புகள், நல்லதொரு கவிதைத் தொகுப்பை மீண்டும் படித்தது போன்ற உணர்வைத் தந்தது. கோவியார் சொல்லியிருப்பதுபோல, வலைப் பூக்களைப் பற்றி எழுத முற்றிலும் தகுதியானவர்தாம் தாங்கள்!
ReplyDeleteஉங்கள் அரிய பணி தொடர முருகனருள் முன்னிற்கட்டும்!
இதுபோன்ற ஒரு வரி விமர்சனம் எழுத எனக்கும் எண்ணம் இருந்தது. ஒற்றை வரிக்குள் சொல்ல முடியவில்லை. அத்தனையும் சிறப்பான கவிதைகள்.
ReplyDeleteஇது போன்ற
ReplyDeleteகவிதைத்தொகுப்பு
எழுதுகின்ற
ஒவ்வொருவரையும்
ஊக்கப்படுத்தும்
நண்பரே விஎஸ்கே !! நன்றி வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும். முருகனருள் முன்னிற்க வாழ்த்தியமைக்கு நண்ரீ
ReplyDeleteநண்பர் சிறில் அலெக்ஸ் - எனக்கு இந்த எண்ணம் ஏனோ வந்தது. இங்கும் ஒரு கவிதைச் சரம் தொகுக்க பயன் படுத்திக் கொண்டேன் - நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ் மிளிர்
ReplyDeleteசீனா சார்,
ReplyDeleteகவிதைகள் அனைத்தையும் தொகுத்தது நன்று..படிக்க விடுபட்டுப்போன கவிதைகளைப் படிக்க உதவியது..
ஹய்யோ...எவ்ளோ கவிதைகள் படிச்சி இருக்கிங்க... கவிதை ஆர்வலர்களுக்கு ரொம்ப உபயோகமான பதிவு இது. அறியாத சில கவிஞர்களை அறிந்துக் கொள்ளவும் உதவும் பதிவு இது.
ReplyDeleteநன்றி மலர் - வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteநோக்கமே அதுதானே சஞ்ஜெய் - அறிமுகம் தானே
ReplyDeleteஅன்பின் சீனா,
ReplyDeleteஅத்தனை வலைப்பதிவர்களையும் மொத்தமாய் ஒரே இடத்தில் அறிமுகமும் செய்து விமரிசனம் செய்யும் உங்கள் அக்கறையும் உழைப்பும் உங்களை வெகுவாகப்பாராட்டச்சொல்கிறது.
இணையத்தில் படைப்புகள் இட்டு அது முதன் முதலில் நூல் ஆனது சிறில் அலெக்ஸ் அவர்களின் ஆக்கம் அல்ல.
என் முதல் நூல் 2000 - 2001 லேயே வெளிவந்துவிட்டது. அத்தனையும் இணையத்தில் வெளியான கவிதைகள் மாத்திரமே.
'தினம் ஒரு கவிதை' என்ற நாகா சொக்கனின் யாகூ குழுமத்தை அறிவீர்களா என்று தெரியவில்லை.
அதன் வாயிலாக வெளியான நூல்கள் சிலவற்றை நான் அறிவேன். அதில் என்னுடையதும் ஒன்று.
அன்புடன் புகாரி
சீனா ஐயா,
ReplyDeleteஅத்தனையும் படித்து
மொத்தமாய் ஓரிடத்தில்
மெத்தனம் ஏதுமின்றி
சத்தமாய்ச் சொல்லுவதில் ...
உங்களைத் தவிர நம்ம தமிழ்மணம் வாயிலாக வலைப்பூ வாசிப்போர் யாரும் இருக்க முடியாது.
நீங்க ஒவ்வொரு கவிதையும் பற்றி சொல்லுவீர்கள் என்று இந்த சிறிய மனதிற்கு தோன்றியிருந்தால், அட, நானும் ஒரு கவிதை எழுதியிருப்பேனே ?!!!
சதங்கா, வலைச்சர விதிமுறிகளின் படி, பல வலைப்பதிவர்களை அறிமுகப் படுத்தினேன். அவ்வளவுதான். இப்பொழுது இங்கேயே மறு மொழியாக எழுதுங்கள். படிக்கிறேன். ரசிக்கிறேன். கருத்துச் சொல்கிறேன்.
ReplyDeleteசீனா ஐயா,
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. கவிதை எழுத ஆரம்பித்து அது கட்டுரையாக வந்திருக்கிறது. பின்னூட்டத்தில் போட்டால், பதிவை விட பெரிதாக ஆகிவிடும் :) அதனால் ஒரு தனிப் பதிவாக இங்கே. வாசித்துப் பின்னூட்டமிடுங்கள்.
http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_18.html
புகாரி,
ReplyDeleteஇணையத்தில் வெளிவந்த படைப்புக்களை கொண்டு வந்த முதல் புத்தகம் எனச் சொல்லவில்லை முதன்முதலாய் ஒரு வலைப்பதிவு அப்படியே புத்தகமாக வந்துள்ளது எனத்தான் கூறியிருந்தேன். கிரிக்கெட்டில் பாக்கிஸ்தானுடனான, செவ்வாய் கிழமையில், காலை 9:30க்கு துவங்கிய மேட்ச்களில் சச்சின் முதலில் பேட் செய்ததில் என ஒரு ஸ்டாட்ஸ் வச்சிருப்பாங்க.. அது போலத்தான்.
வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.
சதங்கா - படித்துப் பினூட்டமிட்டு விட்டேனே
ReplyDeleteஅன்பு நண்ப புகாரி, சிறில் அலெக்ஸின் விளக்கத்தை வழி மொழிகிறேன். இவ்விளக்கத்தை நானே, தங்களின் மறு மொழியைப் பார்த்த உடன் அளிக்க நினைத்தேன். பிறகு விட்டு விட்டேன்.
ReplyDeleteமிக்க நன்றி சீனா ஐயா,
ReplyDeleteபதில் பின்னூட்டமும் போட்டாச்சு. பின்னூட்டத்தில் சொல்ல மறந்தது, நீங்க குறிப்பிட்ட 'மன நெகிழ்வு' பற்றி. அருமை அருமை. இது தான் அனுபவம் என்பதோ ?!!!