07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 28, 2008

வலைச்சர ஆசிரியர் - ஒரு சுய அறிமுகம்

அன்புள்ள சகபதிவர்களே,


அனைவருக்கும் வணக்கம்.


முதற்கண் என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்த வலைச்சர நிர்வாகத்தின் சிந்தாநதி, சகோதரிகள் முத்துலட்சுமி, பொன்ஸ் ஆகிய அனைவருக்கும், என மனங்கனிந்த வாழ்த்துகளுடன் கூடிய நன்றி.


நான் 2007 ஆகஸ்டுத் திங்கள் கடைசியில் தான் வலைப்பூ தொடங்கினேன். 5 மாத காலத்தில் 25 பதிவுகள் தான் இட்டிருக்கிறேன். ஆனால் மற்ற பதிவுகளைப் படித்து நான் இட்ட மறு மொழிகள் கணக்கிலடங்காது.


புத்தாண்டுச் சபதமாக, மறுமொழிகளைக் குறைத்து, பதிவுகளை அதிகம் இட எண்ணினேன். தொடங்குகிறேன்.


அசைபோடுவது என்ற வலைப்பூவில் என்னுடைய மலரும் நினைவுகளாக இளமைக்கால இன்பங்களை பதிவிடுகிறேன். படித்ததில் பிடித்தது என்ற வலைப்பூவில் எனக்குப் பிடித்த மற்றவர்களின் எழுத்துகளைப் பதிவிடுகிறேன்.


தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்


ஆதரவுக் கரத்தினை மறு மொழிகளின் மூலம் நீட்டுக.


நன்றி

41 comments:

  1. வாங்க..வாங்க...!!

    ReplyDelete
  2. கலக்குங்க தாத்தா

    ReplyDelete
  3. இந்த வாரம் நீங்கள் ஆசிரியரா,

    வாழ்த்துக்கள் சீனா சார்.

    ReplyDelete
  4. //ஆனால் மற்ற பதிவுகளைப் படித்து நான் இட்ட மறு மொழிகள் கணக்கிலடங்காது.//

    அதென்னமோ நமக்கெல்லாம் அப்படித்தான்.. மறுமொழியைட்டிஸ் என்ற வியாதி :-)

    வாழ்த்துக்கள் - மறுமொழியைட்டிஸ்க்கு அல்ல, வலைச்சர ஆசிரியரானதுக்கு :-)

    ReplyDelete
  5. கலக்குங்க சீனா

    ReplyDelete
  6. தலைவர் சீனாவுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சீனா அவர்களே...

    கலக்குங்கோவ்....

    ReplyDelete
  8. இந்த வாரம் கலக்கப்போகும் சீனா தாத்தாவுக்கு ஓ போடுங்கப்பா.. :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  10. சீனா வாரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
    அன்புடன் அருணா

    ReplyDelete
  11. நன்றி நண்பரே டிபிசிடி - வரவேற்பு பலமா இருக்கு - மொத மறு மொழி வேற - நன்றி

    ReplyDelete
  12. நிலாக் குட்டி - கலக்கிடுவோம்ல - நன்றி

    ReplyDelete
  13. மலர், வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி மலர்

    ReplyDelete
  14. திகழ் மிளிர் - வரவேர்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. தருமி அண்ணே !! நன்றி வருகைக்கும் வரவேற்புக்கும்

    ReplyDelete
  16. நன்றி புதுகைத் தென்றல் - வருகைக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  17. சேதுக்கரசி, வருகைக்கும், வரவேற்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. நன்றி தேவ் - கலக்கிடுவோம் - ஆதரவு கொடுங்க

    ReplyDelete
  19. நன்றி மௌளி, வருகைக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  20. நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் இரண்டாம் சொக்கன் அவர்களே - கலக்கிடுவோம்ல

    ReplyDelete
  21. சொல்லவே இல்ல , சரி எல்லாரும் தாத்தாவுக்கு ஒரு 'ஒ' போடுங்க

    ReplyDelete
  22. .:: மை ஃபிரண்ட் ::. - என்னாது தாத்தாவா - யாருக்கு - உனக்கா - எப்படி - ம்ம்ம் - வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. .:: மை ஃபிரண்ட் ::. - ம்ம்ம் - வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  24. அருணா - வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி அருணா

    ReplyDelete
  25. பவன் பையா - வந்துட்டியா - காணோமேன்னு தவிச்சுப் போய்ட்டேன். நன்னி வந்ததுக்கும் ஆதரவு தெரட்டறதுக்கும்

    ReplyDelete
  26. //நான் 2007 ஆகஸ்டுத் திங்கள் கடைசியில் தான் வலைப்பூ தொடங்கினேன். 5 மாத காலத்தில் 25 பதிவுகள் தான் இட்டிருக்கிறேன். ஆனால் மற்ற பதிவுகளைப் படித்து நான் இட்ட மறு மொழிகள் கணக்கிலடங்காது.//

    சீன ஐயா,

    'நான்' 'நான்' என்ற அகந்தையை அழித்துவிட்டு வலைச்சரத்தில் பட்டையை கிளப்புங்க.
    :)))))))))

    ReplyDelete
  27. நண்பரே - கோவி கண்ணரே !! - வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி -
    நான் என்ற அகந்தை ஒழிய வேண்டும் - இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. உடன்படுகிறேன். அழித்து விடுகிறேன் நண்பரெ !!

    ReplyDelete
  28. நண்பர் கோவி,

    //சீன ஐயா,//

    நான் சீனா !! - சீனத்தில் இருந்து வந்தவனில்லை.

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் சீனா சார் ;)

    ReplyDelete
  30. வாங்க சீனா சார் :))) கலக்குங்க...

    ReplyDelete
  31. நன்றி கோபிநாத் - வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  32. வாங்க ஜொள்ளுப் பாண்டி - வருகைக்கு நன்றி

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் சீனா ஐயா,

    //புத்தாண்டுச் சபதமாக, மறுமொழிகளைக் குறைத்து,//

    மறுமொழி இடவில்லையென்றாலும் பரவாயில்லை, பதிவுகளை வாசிக்கவாவது வருவீர்கள் தானே ? ;-)

    ReplyDelete
  34. சதங்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - மறு மொழிகள் இடுவதைக் குறைக்கிறேன் என்று சொன்னேனே தவிர நிறுத்தப் போவதில்ல்லை. எல்லாப் பதிவுகளையும் குறிப்பாக தங்கள் பதிவுகளை நிச்சயமாக படிப்பேன்.

    ReplyDelete
  35. //ஆதரவுக் கரத்தினை மறு மொழிகளின் மூலம் நீட்டுக.
    //

    வாழ்த்துக்கள் சாமியோவ் :P

    ReplyDelete
  36. வாழ்த்துக்கு நன்றி சஞ்ஜெய்

    ReplyDelete
  37. வலைச்சரம் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் சீனாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. நன்றி நண்பரே - சுப்பையா அவர்களே - மற்ற பதிவுகளையும் படிக்கலாமே

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது