வலைச்சரம் ஆன்மீகச்சரம்
அன்பர்களே!
இணையத்தின் வலைப்பூக்களில், ஆன்மீகத்தினை வளர்த்து, அருந் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் அருமை நண்பர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
அருமை நண்பர் குமரன் மதுரையில் பிறந்து அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நன்பர். ஏறத்தாழ முப்பது வலைப்பூக்கள் வரை வைத்துக் கொண்டு கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். அனைத்துமே ஆன்மீகப் பூக்கள் தான். திருநீற்றுப்பதிகம் என்று திருநீற்றின் அருமைகளைப் பற்றி எழுதி வருகிறார். சில குழுப் பதிவுகளிலும் எழுதி வருகிறார். முருகனருள் என்ற வலைப்பூவில், முருகனைப் பற்றிய பல செய்திகளும், பல பக்திப் பாடல்களும், பல படங்களும், கந்த சஷ்டியைப் பற்றிய பல பதிவுகளும் இருக்கின்றன.
அய்யன் வள்ளுவனின் இன்பத்துப் பாலையும் லேசாகத் தொட்டிருக்கிறார்.
இவரது முக்கிய வலைப்பூ கூடல் என்பதே! அனைத்து ஆன்மீக இடுகைகளும், பின்னூட்ட விவாதங்களும் நிறைந்த வலைப்பூ.
இவருக்கு எழுதுவதற்கு எப்படித்தான் நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. தனக்குத் தெரிந்த, தான் அறிந்த அத்தனை யையும் அனைவரும் அறிய வேண்டும் என்ற பேரவாவினால், விளக்கமான, நீண்டதொரு பதிவாக பதிவிடுவார். பின்னூட்டங்களும், விவாதங்களுமே நீண்டு கொண்டே போகும்.
நண்பர் கண்ணபிரான் ரவி ஷங்கர் ஆன்மீகத்தினை வளர்க்க அரும்பாடு படுகிறார். சென்னையிலே பிறந்து நியூயார்க்கிலே வசிப்பவர். மாதவிப் பந்தல் என்ற முக்கியப் பூவினோடு, குழுப்பதிவுகள் உட்பட மற்ற வலைப்பூகளிலும் எழுதி வருகிறார். ஒரு இளமைத் துள்ளல், நகைச்சுவை, நையாண்டி இவற்றினால் ஆன்மீகம் வளர்ப்பவர்.
நண்பர் விஎஸ்கே ஆத்திகம் என்ற முக்கிய வலைப்பூவில், கவிதைகள், கதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், குறள் விளக்கம் எனப் பல பதிவுகள் இடுகிறார். சில குழுப் பதிவுகளிலும் எழுதி வருகிறார். இவருடைய தொடர்கதை ஒன்று “சித்தர் என்ற கனவு மெய்ப்படும்” என்ற தொடர்கதையை அருமையாக எழுதி இருந்தார். சாய்பாபா பக்தரும் கூட.
நண்பர் மதுரையம்பதி ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். மதுரையில் பிறந்து பெங்களூர் வாசம். நல்ல ஆன்மிகப் பதிவுகள் இடுகிறார். நல்ல நண்பர்.
நண்பர் ஜீவா ரமணர், வள்ளலார், விவேகாநந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி எல்லாம் பதிவுகள் இட்டிருக்கிறார்.
நண்பர்களே ! இணையத்தில் உள்ள வலைப் பூக்களில் ஆன்மீகம் வளர்ர்கும் இப்பதிவுகள் எல்லோராலும் படிக்கப் பட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அறிமுகப் படுத்தி உள்ளேன். பயன் பெறுக.
|
|
சோதனை மறு மொழி
ReplyDelete//
ReplyDeletecheena (சீனா) said...
சோதனை மறு மொழி
//
சீனா ஐயா,
ஆன் மீகம் பற்றி தொகுப்பு எழுதி இருக்கிறீர்கள், சோதனையெல்லாம் காணாமல் சென்றுவிடும்.
:)
சீனா ஐயா. இடுகையை முழுவதும் படிக்கவில்லை. வேகமாக யார் யாரைப் பட்டியல் இட்டிருக்கிறீர்கள் என்று பார்த்தேன். என் பெயரை இட்டதற்கு நன்றி. (என் பெயருக்கும் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று இன்னும் படிக்கவில்லை). ஒன்றை உடனே சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். இராகவன் என்றொருவர் இருக்கிறார். அவரும் பற்பல ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அண்மைக்காலமாக தன்னை ஆன்மிகப் பதிவர் என்று சொல்லுவதை விரும்பாதவர் போல் நடந்து கொள்கிறார். :-) ஆன்மிகத்தைத் தவிர்த்து மற்றவற்றைப் பற்றியே எழுதுகிறார். நீங்கள் அவரைப் பட்டியலில் சேர்க்காததைக் கண்டால் அவர் மிகவும் மகிழ்வார். :-)
ReplyDeleteசெல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்கு நன்றி கோவியாரே
ReplyDeleteஎன்னையும் தங்களது அறிமுகப் பட்டியலில் இடம்பெறச் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் சீனா ஐயா!
ReplyDeleteதரமான பின்னூட்டங்கள் மூலம் பதிவைப் பரிமளிக்கச் செய்யும் தாங்கள் போன்றோர் செய்யும் அரிய சேவை பாராட்டத் தக்கது.
This comment has been removed by the author.
ReplyDeleteசொல்லவே இல்ல சீனா, எனக்கு ஆன்மிகத்தில், கடவுள் எல்லாம் அதிகம் ஈடுபாடு இல்லை, கண்டிப்பாக படித்து பார்க்கிறேன் உங்களுக்காக...
ReplyDeleteகுமரன்,vsk,மதுரையம்பதி
ReplyDeleteபின்னூட்டம் இடுவதற்கு முன் பின்னூட்டப் பக்கத்தில் மேற்பகுதியில் இடப்பட்டுள்ள குறிப்புகளை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம் ;)
//பின்னூட்டப் பக்கத்தில் மேற்பகுதியில் இடப்பட்டுள்ள குறிப்புகளை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்//
ReplyDeleteமன்னிக்கவும் சிந்தாநதி. நீங்க சுட்டிக்காட்டிய பின்னரே படித்தேன். சாதாரணமாக இந்த இடத்தில் "வாங்க, கருத்து வையுங்க"ன்னு எதோ இருக்கும். அதனால இத படிக்கவில்லை. :-). இதைக் கூட நீங்க படித்த உடன் டெலிட் பண்ணிடலாம்
மதுரையம்பதி
ReplyDeleteமறுமொழியை ஏன் நீக்கி விட்டீர்கள்... கருத்தைச் சொன்னதை நீக்க அவசியமில்லையே?
நீங்கள் கவனிக்கவில்லை போல தெரிந்ததால் சுட்டிக்காட்டினேன்..அவ்வளவுதான்...
சிந்தாநதி. உண்மையிலேயே அதனைக் கவனிக்கவில்லை. சுட்டியதற்கு நன்றி.
ReplyDeleteசீனா ஐயா. அப்புறமா வர்றேன். :-)
//
ReplyDeleteவணக்கம்.
வலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும். எனினும் "என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி" அல்லது "இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும். நன்றிகூறல் தனிமடலில் இருக்கலாமே ;)//
இதுக்கு நீங்க ஒரு டெம்ப்லேட் வெச்சீங்கனா, அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணிடுவோம்...
வலைச்சரமே நல்ல பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தான். அப்படி இருக்கும் போது வலைச்சரத்தின் ஆசிரியர் படிக்காமல் விட்ட நல்ல பதிவை பின்னூட்டத்துல சொல்றது எப்படி தப்புனு புரியல...
இங்க குமரன் சொல்ற மாதிரி ஜி.ராகவனு ஒருத்தர் ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அருமையான ஆன்மீக பதிவுகளை எழுதியிருந்தார்னு சொல்லி அவரோட பதிவு லிங் கொடுக்கறது தப்பா???
//பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)//
கும்மி அடிக்கலாம்... ஆனா நன்றி சொல்லக்கூடாது... லாஜிக் பட்டையை கிளப்பது :-)
//வலைச்சரமே நல்ல பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தான். அப்படி இருக்கும் போது வலைச்சரத்தின் ஆசிரியர் படிக்காமல் விட்ட நல்ல பதிவை பின்னூட்டத்துல சொல்றது எப்படி தப்புனு புரியல...//
ReplyDeleteவலைச்சரமே நல்ல பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தான். என்பது உண்மையே!..ஆனால் வலைச்சரத்தை தொகுப்பது முழுக்க முழுக்க அந்தந்த ஆசிரியருடைய பார்வையில்!.. ராகவன் பதிவைச் சொன்னது இந்த இடுகையைப் பொறுத்தவரை தவறில்லாமல் இருக்கலாம்... ஆனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒருவர் தனது பார்வையிலான பதிவுகளைத் தொகுக்கிறார்... அந்தப் பட்டியல் பற்றிய மற்றும் அவரது குறிப்புகள் பற்றிய விமர்சனமாக இருந்தால் அது நல்லது...இதைச் சேர்க்கவில்லை...என்று சொன்னால் சில நேரங்களில் அவருக்கு தர்மசங்கடம் நேரலாம்...அந்தந்த ஆசிரியருடைய பார்வை என்பது இராது..விடுபட்டதை இன்னொருவர் தொகுக்க முடியுமே?
இந்த காரணத்தால் கூறப்பட்டதுதான் இது..மற்றபடி மறுமொழிகளில் இயல்பாக உரையாடிக் கொள்ளும் தன்மைக்கு இந்தக் குறிப்பின் காரணமாக தயக்கம் வரக்கூடாது என்பதாலேயே அந்தப் பின்குறிப்பு...:)
வேறு எந்த லாஜிக்கும் இல்லை ;)
//வலைச்சரமே நல்ல பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தான். என்பது உண்மையே!..ஆனால் வலைச்சரத்தை தொகுப்பது முழுக்க முழுக்க அந்தந்த ஆசிரியருடைய பார்வையில்!.. ராகவன் பதிவைச் சொன்னது இந்த இடுகையைப் பொறுத்தவரை தவறில்லாமல் இருக்கலாம்... ஆனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒருவர் தனது பார்வையிலான பதிவுகளைத் தொகுக்கிறார்... அந்தப் பட்டியல் பற்றிய மற்றும் அவரது குறிப்புகள் பற்றிய விமர்சனமாக இருந்தால் அது நல்லது...இதைச் சேர்க்கவில்லை...என்று சொன்னால் சில நேரங்களில் அவருக்கு தர்மசங்கடம் நேரலாம்...அந்தந்த ஆசிரியருடைய பார்வை என்பது இராது..விடுபட்டதை இன்னொருவர் தொகுக்க முடியுமே?//
ReplyDeleteஇன்னொருத்தர் தொடுப்பாருனு நினைச்சி விட்டு போறதா இருந்தா எந்த வேலையுமே செய்ய முடியாதுங்க.
இங்க ஆசிரியர் அவருக்கு தெரிஞ்சதை தொடுக்கறாரு. அவர் விட்டு போனதை பின்னூட்டத்துல சொன்னா எதுவும் தப்பிருக்கறதா தெரியல.
அதே மாதிரி நன்றி சொல்ல தனி மடல் எல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க. யார்னே தெரியாத பதிவர் ஒருத்தர் நம்ம பதிவை படிச்சி நல்லா இருக்குனு சொன்னா அவருக்கு நன்றி சொல்ல அவர் மெயில் ஐடி தேடி கண்டுபிடிச்சி அனுப்ப முடியுமானு தெரியல...
எதுக்கு இவ்வளவு Complicationனு புரியல.... குறை சொல்றேனு நினைக்க வேண்டாம்...
பதிவுக்கு சம்பந்தமே இல்லாத கும்மிக்கு அனுமதி உண்டுனு சொல்றதும், சுட்டி கொடுக்கப்பட்ட பதிவரை தனிமடல் அனுப்பிக்கோங்கனு சொல்றதும் நிஜமாவே காமெடியா தான் இருக்கு...
சீனா ஐயா. வலைப்பதிவுலகத்திற்கு வந்த இந்த குறைந்த காலத்திலேயே பதிவர்கள் எந்த ஊர்; எங்கு வாழ்கிறார்கள் என்பதை எல்லாம் நன்கு அவதானித்து வைத்திருக்கிறீர்கள். எதன் மேல் அக்கறை இருக்கிறதோ அதனைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டு அதனை நினைவிலும் நிறுத்துவோம் என்று சொல்வார்கள். உங்களுக்குப் பதிவர்கள் மேல் இருக்கும் அக்கறை இங்கு நன்கு தெரிகிறது.
ReplyDeleteநான் நிறைய வலைப்பதிவுகள்/வலைப்பூக்கள் வைத்திருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் எழுதுவதில்லை ஐயா. ஒரு காலத்தில் தொடர்ந்து நாலைந்து மாதங்களாக என் முதன்மைப் பதிவான கூடலில் எழுதாமல் இருந்ததும் உண்டு. இப்போது தான் ஏதோ கூடலில் தொடர்ந்து பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது கூடலும் அபிராமி அந்தாதியும் தான் கவனத்தில். அதனால் நேரம் அதிகம் தேவையில்லை.
முன்பு நான் பங்கு கொண்டிருந்த 'சொல் ஒரு சொல்' என்ற பதிவும் உங்களுக்குப் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த குழுப்பதிவில் நான் இப்போது இல்லை என்றாலும் அதில் இட்ட இடுகைகள் எல்லாம் மிகவும் பிடித்தவை. அதன் சுட்டி http://solorusol.blogspot.com/
வெட்டி
ReplyDeleteநன்றி சொல்வது தப்பில்லை...ஆனா என்னோட பதிவை இணைத்ததுக்கு நன்றி என்பதை விட நீங்கள் கொடுத்த பயனுள்ள சுட்டிக்கு நன்றி என்று சொல்லும் நிலை தான் வலைச்சரத்தின் நோக்கத்திற்கு உரம் சேர்க்கும்.
நீங்கள் வாசிக்காத ஒரு சுட்டியையாவது அறிமுகம் செய்திருந்தால் தான் அது போல சொல்ல முடியும்...
இந்த நன்றிகள் அந்த நோக்கத்துக்கு முட்டுக் கட்டையாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
சீனா சார்
ReplyDeleteதாமதமாகத் தான் வர முடிந்தது! மன்னிக்கவும்! முதலில் என்னையும் ஒரு பதிவராக ஏத்துக்கிட்ட உங்க பெரிய மனசுக்கு நன்றி சொல்லிக்கிறேன்! :-)
இரண்டு சரமாகத் தொடுத்து இருக்கீங்க போல! பார்த்தேன், ரசித்தேன்! அனைவரும் அறிந்த பதிவர்கள் தான் என்றாலும், ஒவ்வொருவரைப் பற்றியும் நீங்க கொடுத்த குறிப்புகள் சுவையாகத் தான் இருக்கு!
ஒரு சின்ன யோசனை:
நண்பர்களின் வலைப்பூவுக்குப் பொதுவான சுட்டி கொடுத்திருக்கீங்க! பல தரப்பட்ட இடுகைகள் அதில் வந்து கொண்டு இருக்கலாம்!
புதிதாக அங்கு சென்று படிப்பவர்கள் எதைத் தேர்ந்தெடுப்பது படிப்பது என்று யோசனை செய்யக் கூடும்! அதற்கு மாற்றாக, உங்களை/பலரையும் அண்மைக் காலத்தில் மிகவும் கவர்ந்த இடுகையின் சுட்டியைக் கொடுத்தால், புதிய வாசகர்களின் கவனத்தை உடனே கவரும் வண்ணம் இருக்கும்!
சரங்கள் மலரவும் மணம் வீசவும் என் வாழ்த்துக்கள் சீனா சார்!
சிந்தாநதி அவர்கள் சொன்ன மறுமொழிகள் எல்லாம் படித்த பின்னர், இயல்பான பின்னூட்டம் போடவே ரொம்ப நேரம் யோசிக்க வேண்டி இருந்தது என்னவோ உண்மை தான்! :-)
ReplyDeleteரவி, உண்மை உண்மை - சிந்தா நதியின் மறு மொழிகள் சிந்திக்கத் தக்கவை தான். ஆனால் பொறுப்பாளர்கள் வலைச்சர ஆசிரியருக்கு விதி முறைகளைக் கூறலாம். பத்துப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு தடைகள்/வேலிகள் போட வேண்டாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. வலைச் சரத்தின் நோக்கம் தடம் மாறிச் சென்று விடக்கூடாதெ என்ற ஆதங்கம் புரிகிறது. ம்ம்ம் இருப்பினும் கும்மிகளுக்குத் தடைகள் இல்லை என்ற வசதி தான் என்னையும் ஒரு கும்மிப் பதிவு எழுதத் தூண்டியது - ஏறத்தாழ 130க்கும் மேற்பட்ட மறு மொழிகள். ம்ம்ம்
ReplyDeleteஇறுதியாக, நிர்வாகத்தின் மறு மொழிகளும், மடல்களும் ஒரு குறிப்பிட்ட, திட்ட மிட்ட பாதையில் சென்று கொண்டிருந்தவனை, மறு சிந்தனையுடன், பாதை மாறச் செய்து விட்டன. இருப்பினும் எடுத்த செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதி உண்டு.
ரவி, தங்களின் ஆலோசனைகள் என் மனதிலும் முதலில் இருந்தது. இருப்பினும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவர்களின் இடுகைகளோ ஏராளம் ஏராளம். அவற்றில் படித்ததோ ஒரு சிறு விழுக்காடு மட்டுமே. வலைப்பூவிற்கு அறிமுகமாகியே 5 மாதங்கள் தான் ஆகின்றது. ஆகையினால் தான் இடுகைகளின் சுட்டி கொடுக்க வில்லை. பொதுவாக பதிவின் சுட்டியையே கொடுத்தென், இருப்பினும் மறு படியும் சிந்திக்கிறேன். மிக்க நன்றி
ஆண்மீகம் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு சரியான சுட்டிகளை கொடுத்திருக்கிறீர்கள் போலும். நான் இதிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பவன். ஆனாலும் உங்களுக்கு பின்னூட்டம் போட்டே ஆக வேண்டுமே. :P
ReplyDeleteநன்றி சஞ்செய் - நட்பு வேறு கொள்கை வேறு எனப் புரிதலுக்கு நன்றி
ReplyDeleteவணக்கம் வந்துட்டேன். பிடிச்ச மேட்டர்தான் பொறுமையா படிக்கிறேன் இப்போதைக்கு அட்டெண்டன்ஸ்.
ReplyDelete