அனுபவச்சரம்
அனுபவங்கள் சொல்லி கொடுக்குற பாடத்துக்கு இணையாக எந்த கல்லூரியிலும் எந்த புத்தகத்திலும் சொல்லி தருவதில்லை. அப்படி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதிய பதிவுகளையும் பதிவர்களையும் தான் இன்னிக்கு நான் தொடுத்திருக்கேன்.
இளவஞ்சி
இவரை பத்தி சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரல....அவரோட பதிவுகளில் நான் படிச்ச முதல் பதிவு என்ஃபீல்ட் புல்லட் இது தான் அப்படியே கன்னத்துல ஒங்கி ஒரு அறைவிட்ட மாதிரி இருந்திச்சி. (ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்காதீங்க) சமையல் செய்யும் போது ஏற்பட்ட அனுபவத்தை நல்ல நகைச்சுவையுடன் சொல்லியிருப்பாரு முட்டைய பிச்சு பரோட்டா இது மட்டும் தான்னு நினைக்காதிங்க. புகைப்பட கலையிலும் பின்னிபெடலேடுத்துயிருப்பாரு கோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி
இவரோட பதிவுல இருந்து ஒரு போனஸ் பதிவு. இந்த பதிவை படிக்கிறதுக்கு உங்களால முடியுமான்னு தெரியல. ஆனால் பின்னூட்டத்தில் பாருங்க அவரோட கவிதை வண்ணத்தை கலக்கியிருப்பாரு ஸ்பெசல்
கானா பிரபா
இவரோட அனுபவங்களை படிக்கும் போது கூடவே நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிடு போயிடுவாரு. அப்படி ஒரு எழுத்து நடை. அதுவும் அவரோட ஈழத்து தமிழில் படிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும். நாமளும் தான் சினிமா பார்த்திருக்கோம். ஆனா இவர் பார்த்த மாதிரி வருமா! மண்ணெண்ணையில் பார்த்த படங்கள், நானும் விளையாடுவேன்னு ஒரு வீர விளையாட்டு விளையாடி பரிசு வாங்கின அனுபவத்தை பாருங்க. ஆனா ஒண்ணு சிரிக்க கூடாது. விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும் சமீபத்தில் அவர் எழுதிய தீபாவளி அனுபவங்கள் தீவாளி வருஷங்கள்....!
கீதா சாம்பசிவம்
"I want to be the same, what I am now. " எந்த மாற்றமும் இல்லாமல் இன்றுவரை அதே கிண்டல், பகிர்தலோட இருக்கும் எங்கள் தலைவி இவங்க. இவரின் பதிவுகளை படிக்கும் போது நேரடியாக பேசிக்கொள்வது போல இருக்கும். கிண்டலில் இவரை அடிச்சிக்க ஆளே இல்ல. பின்னூட்டங்களில் இவர் கொடுக்கும் பதிலும் அருமையாக இருக்கும். அதே போல பதிவுகளில் யாருக்கும் வராத பிரச்சனை எல்லாம் இவருக்கு வரும். ஆன்மீகமாகட்டும்,வரலாறு ஆகட்டும்.. அவங்களுக்கு தெரிந்த விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் தலைவிக்கு நிகர் தலைவி தான். இவங்களுக்கு நேதாஜியும், பாரதியும் இவரின் இரு கண்கள் என்று சொல்லாம்.
திரு. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்சை பற்றி இவர் எழுதிய வரலாற்று பதிவுகளில் ஒன்று. அதேபோல் ஆன்மீகத்தில் சமீபத்தில் இவர் எழுதிய ஜயப்பன் பதிவுகளில் பல புதிய விஷயங்கள், பல வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிந்துக்கொள்ள முடிந்தது.
அருண்
இவர் பதிவை படிக்கும் போது எல்லாம் இவர் நம்ம ஆளுடா மச்சின்னு தோணும். ஆனா பாருங்க இப்ப எல்லாம் அந்த அளவுக்கு எழுதுறது இல்லை. இவரோட வீர விளையாட்டை கொஞ்சம் பாருங்க இங்க வீர விளையாட்டு
அருண் என்ற அவரோட பெயரை ஒரு வெள்ளைக்காரன் எப்படி எல்லாம் கொலைவெறியோடு தாக்கியிருக்கான் பாருங்க துரத்து...
ஜி
இவரை பத்தி சொல்லனுமுன்னா ஒரு பதிவே போடணும்..அதுவும் அவருக்கு இருக்கும் அடைமொழி எல்லாம் சேர்ந்தா ரெண்டு பதிவு போடலாம். அம்புட்டு பெரிய ஆளு. இவரோட கதை கவிதை எல்லோரும் படிச்சிருப்பிங்க. ஆனா இவர் கல்லூரி நாட்களில் நடந்த அனுபவங்களை படிக்கும் போது நாமும் இந்த மாதிரி எல்லாம் செய்திருக்கலாமேன்னு ஒரு நினைப்பு வருபதை தவிர்க்க முடியல
புது வருசமா? புது வசந்தமா?
கல்லறை தீபம்...
சிக்காகோவில் குத்தாட்டம்...
தம்பி
தன்னோட அனுபவங்களை எழுதுறது ஒரு வகை. மற்றவங்களோட அனுபவங்கள் எழுதுறது இன்னொரு வகை. அந்த இன்னொரு வகையில தம்பியை அடிச்சிக்க ஆளே இல்ல. மற்றவங்களோட அனுபவங்கள் தனக்குள் எற்படுத்திய பாதிப்போட எழுதுவதில் வல்லவன். அப்படி அவர் எழுதி பதிவுகள் இங்கே
குண்டு வெடிக்கலன்னா போர் அடிக்கும்!
உழைக்க வரவில்லை, உயிர்பிழைக்க வந்தேன்
சிவிஆர் - CVR
காதல்ன்னு நினைச்சாலே போதும் நம்ம சிவிஆர் ஞாபகத்துல வந்துடுவாரு. அப்படி காதலை எல்லாம் பிரிச்சி மேய்ஞ்சி பல பாகங்களாக பதிவாக போட்ட ஆராய்ச்சி புலி இவரு. ஆனா இவர் இந்தியாவில் இருந்து அமெரிக்க வந்த அனுபவத்தை ரொம்ப அழகாக எழுதியிருப்பாரு.
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
துர்கா
வளர்ந்து வரும் கவிதாயினின்னு சொல்லாம். கவிதையில ஒண்ணு இயந்திர வாழ்க்கை. காமெடியிலும் கலக்குறாங்க. இவுங்க வகுப்பறையில் தூங்குவதை பத்தி இவுங்க தான் சொந்த அனுபவத்தை வச்சி எழுதியிருக்காங்க. வகுப்பில் உறங்குவது எப்படி?(A Guide for Dummies)
கனவுலக கார்த்திக்
வலைப்பதிவர் மத்தியில் மு.க.ன்னு அழைப்போம். எங்க கட்சி தலைவர், அனுபவத்தை உவமைகளோட எழுவதில் இவரை அடிச்சிக்க முடியாது. எப்படித்தான் எழுதுவாரோ இவரோட அனுபவத்த பதிவுகள் நிறைய சொல்லாம். அதில் ஒண்ணுதான் இவரோட கிராமத்து அனுபவம் அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 1
சின்ன அம்மணி
இவுங்க என்னைப்போல மாசத்துக்கு ஒரு பதிவு இல்லன்னா ரெண்டு. இவுங்க சைக்கிள் ஒட்டிய பதிவை படிச்சிட்டு என்னோட சைக்கிள் நினைவுகளை கிளறிவிட்டவங்க. இந்தாங்க அவுங்களோட சைக்கிள் அனுபவம் கொஞ்சம் சொல்லுங்க.
நாளை சந்திப்போம்....
|
|
Thala,
ReplyDeleteNamma padivukku OC velambaram kuduthadhukku romba nandri hai :)
Wish everyone a very happy,joyous and prosperous New Year 2008 :)))
தல
ReplyDeleteநல்ல தொகுப்பு, பெரியவங்க மத்தியில் நானும் இருப்பது குறித்து மகிழ்ச்சி
தம்பி கோபி நீ மாசத்துக்கு ஒரு பதிவு போடுவியாமே இப்ப டெய்லி போடறியா 'டயர்டா' இல்ல??
ReplyDeleteவாழ்த்துக்கள்!
மங்களூர் சிவா
//துர்கா
ReplyDeleteவளர்ந்து வரும் கவிதாயினின்னு சொல்லாம். கவிதையில ஒண்ணு இயந்திர வாழ்க்கை. காமெடியிலும் கலக்குறாங்க. ///
இது நறுக்குன்னு ரெண்டு திட்டு திட்டி இருக்கலாம்:) எப்படி தாங்கிக்க போறாங்களோ துர்கா இதை!!!
*********************
தம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எழுத தெரியும் நீ இந்த திறமையை எல்லாம் எங்கு ஒளியவெச்சு இருந்த!!!!
***************************
கோபிநாத்,
ReplyDeleteஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி!
// அவரோட கவிதை வண்ணத்தை கலக்கியிருப்பாரு // கவுஜையை கவிதை எனச்சொல்லி ஆசீப்பு அண்ணாச்சிகிட்ட எனைப் போட்டுக்கொடுக்கும் செயலை மட்டும் வன்மையாக கண்டிக்கிறேன்! ஹிஹி...
கோபி,
ReplyDeleteஇப்படி அடுத்தவங்கள பத்தி பதிவு எழுதியே கல்லாகட்டிடுரே!! எப்படியோ அமாவசைக்கு ஒன்னு வந்தா சரி!! நல்லா இருங்க!!
கோபி,
ReplyDeleteசில பதிவுகள் படித்தவை. பல, படிக்காதவை. தொடுத்தமைக்கு நன்றி.
அனுபவச்சிட்டு சொல்றேன் ;)
@ அருண்
ReplyDelete\\Thala,
Namma padivukku OC velambaram kuduthadhukku romba nandri hai :)\\
இந்த வருஷம் கண்டிப்பாக தொடர்ச்சியாக எழுதுங்க ;)
\\Wish everyone a very happy,joyous and prosperous New Year 2008 :)))\\
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)
@ கானா பிரபா
\\தல
நல்ல தொகுப்பு, பெரியவங்க மத்தியில் நானும் இருப்பது குறித்து மகிழ்ச்சி\\
எனக்கும் மிக்க மகிழ்ச்சி தல ;)
@ மங்களூர் சிவா
ReplyDelete\\தம்பி கோபி நீ மாசத்துக்கு ஒரு பதிவு போடுவியாமே இப்ப டெய்லி போடறியா 'டயர்டா' இல்ல??\\
இந்த வாரம் மட்டும் தான்ணே அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல ;)
வாழ்த்துக்கள்!
மங்களூர் சிவா\\
நன்றி அண்ணே ;)
@ குசும்பன்
\\*********************
தம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எழுத தெரியும் நீ இந்த திறமையை எல்லாம் எங்கு ஒளியவெச்சு இருந்த!!!!
***************************\\
அண்ணே நீங்க எதுவும் உள்குத்து வச்சி பேசலியே! ;))
@ இளவஞ்சி
ReplyDelete\\கோபிநாத்,
ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி!\\
குருவே உங்கள் வருகைக்கு நன்றி..நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி ;)
@ குட்டிபிசாசு
\\கோபி,
இப்படி அடுத்தவங்கள பத்தி பதிவு எழுதியே கல்லாகட்டிடுரே!! எப்படியோ அமாவசைக்கு ஒன்னு வந்தா சரி!! நல்லா இருங்க!!\\
அது தானே வலைச்சர ஆசிரியாரின் வேலை...நம்ம இடத்திலும் ஒரு பதிவு இருக்கு ராசா ;)
@ அருட்பெருங்கோ
ReplyDelete\\கோபி,
சில பதிவுகள் படித்தவை. பல, படிக்காதவை. தொடுத்தமைக்கு நன்றி.
அனுபவச்சிட்டு சொல்றேன் ;)\\
கண்டிப்பாக அனுபவியுங்கள் கவிஞ்சரே ;)
அட,
ReplyDelete"வலைச்சரத்திலே" நம்ம பேரை எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சதிலே இருந்து ரொம்பப் பெரிய ஆளாயிட்டேனோன்னு "டவுட்" வந்திடுச்சுங்கோவ்! :P
வாழ்த்துக்கள் கோபி!, இந்த வாரம் உங்கள் அருமையான தொகுப்புக்களுடன் வலைச்சரம் மெருகேறும் என்பதில் சந்தேகமே இல்லை!
ஹிஹிஹி, மங்களூர் சிவா சொன்னது ரிப்பீஈஈஈஈஈட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ!!
ReplyDelete//இவரை பத்தி சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரல....//
ReplyDeleteஉன் ஹெயிட் என்னடா மச்சி? :))
//கானா பிரபா
ReplyDeleteஇவரோட அனுபவங்களை படிக்கும் போது கூடவே நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிடு போயிடுவாரு. அப்படி ஒரு எழுத்து நடை. அதுவும் அவரோட ஈழத்து தமிழில் படிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும். நாமளும் தான் சினிமா பார்த்திருக்கோம். ஆனா இவர் பார்த்த மாதிரி வருமா!//
எனக்கு மிகவும் பிடித்த மற்றுமொரு பதிவரைப் பற்றிய பதிவுகளின் குறிப்புகள்.. ம்ம்
கோபி கலக்குறே போ.. :)
//மங்களூர் சிவா said...
ReplyDeleteதம்பி கோபி நீ மாசத்துக்கு ஒரு பதிவு போடுவியாமே இப்ப டெய்லி போடறியா 'டயர்டா' இல்ல??
வாழ்த்துக்கள்!//
யாரோ சொன்னாங்க சேர்க்கை சரியில்லன்னு... :))
//குசும்பன் said...
ReplyDeleteதம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எழுத தெரியும் நீ இந்த திறமையை எல்லாம் எங்கு ஒளியவெச்சு இருந்த!!!!/
குசும்பா... இதுக்கு நீ கோபிய குப்புற படுக்க வச்சு நச்சுன்னு ரெண்டு மிதிமிதிச்சுருக்கலாம்.. :))
கேட்டுப்பார்த்தேன்.. எங்கடா ஒளிச்சு வச்சுருந்தேன்னு.. இன்னும் அதத்தான் தேடுறானாம். இன்னும் சரியா ஆரம்பிக்காதப்பவே இப்படி.. :))
@ கீதா சாம்பசிவம்
ReplyDelete\\அட,
"வலைச்சரத்திலே" நம்ம பேரை எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சதிலே இருந்து ரொம்பப் பெரிய ஆளாயிட்டேனோன்னு "டவுட்" வந்திடுச்சுங்கோவ்! :P\\
நோ டவுட் தலைவி நீங்க பெரிய ஆளுதான் ;))
\\\வாழ்த்துக்கள் கோபி!, இந்த வாரம் உங்கள் அருமையான தொகுப்புக்களுடன் வலைச்சரம் மெருகேறும் என்பதில் சந்தேகமே இல்லை!\\
நன்றி தலைவி ;)
@ சென்ஷி
ReplyDelete\\\ சென்ஷி said...
//குசும்பன் said...
தம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எழுத தெரியும் நீ இந்த திறமையை எல்லாம் எங்கு ஒளியவெச்சு இருந்த!!!!/
குசும்பா... இதுக்கு நீ கோபிய குப்புற படுக்க வச்சு நச்சுன்னு ரெண்டு மிதிமிதிச்சுருக்கலாம்.. :))
கேட்டுப்பார்த்தேன்.. எங்கடா ஒளிச்சு வச்சுருந்தேன்னு.. இன்னும் அதத்தான் தேடுறானாம். இன்னும் சரியா ஆரம்பிக்காதப்பவே இப்படி.. :))\\
மாப்பி நாம இதை தனியாக டீல் பண்ணிப்போம் சரியா ;))
நமக்கும் கதைக்கும் நெம்ப தூரமப்பா... ஜகா வாங்கிக்கிறேன்.
ReplyDeleteநல்லா தொகுத்திருக்கீங்க.. உங்க சரங்கள் மூலமா... இன்னும் புதிய படைப்பாளிகளின் பதிவுகளை பார்த்தேன்...நன்றிங்க!
ReplyDelete@ காட்டாறு
ReplyDelete\\நமக்கும் கதைக்கும் நெம்ப தூரமப்பா... ஜகா வாங்கிக்கிறேன்.\\
ஆகா...யக்கோவ் இந்த மாதிரி எல்லாம் சொல்லிட்டா எப்படி படிச்சி பாருங்க ;)
\\நல்லா தொகுத்திருக்கீங்க.. உங்க சரங்கள் மூலமா... இன்னும் புதிய படைப்பாளிகளின் பதிவுகளை பார்த்தேன்...நன்றிங்க!\\
ம்...மகிழ்ச்சி..;))
எல்லாம் நான் படிச்சு ரசித்த பதிவுகள்.. எல்லாமே சூப்பரா இருக்கும்.. எங்கண்ணன் அழகா தொடுத்துருக்காரு..
ReplyDeleteஇப்பதான் தெரியுது அண்ணன் நல்லா சரம் தொடுப்பாருன்னு. :-)))
@ மை ஃபிரண்ட்
ReplyDelete\\எல்லாம் நான் படிச்சு ரசித்த பதிவுகள்.. எல்லாமே சூப்பரா இருக்கும்.. எங்கண்ணன் அழகா தொடுத்துருக்காரு..\\
எல்லாம் தங்கச்சி தொடுத்ததை பார்த்து தான் ;))
\\இப்பதான் தெரியுது அண்ணன் நல்லா சரம் தொடுப்பாருன்னு. :-)))\\
நன்றி ;)