பாசக்காரச்சரம்
இந்த மக்களெல்லாம் எப்படி, எப்போ சேர்ந்தோம்ன்னு எல்லாம் தெரியாது. ஆனா எல்லோரும் ஒரே குடும்பாக இருக்கிறோம். இந்த குடும்பத்தில் இணைந்ததில் சந்தோஷமே..! தமிழ்மணத்தின் பாசக்கார குடும்பத்தினை பற்றியது இன்றைய தொகுப்பு.
அபி அப்பா
குடும்பத்தோட மூத்த உறுப்பினரில் தலயும் ஒருவர். தமிழ்மணத்துல இவரை தெரியாதவங்க இருக்கவே முடியாது! சீரீயஸ்ன்னு இவரு பதிவு போட்டா கூட சிரிச்சிக்கிட்டே தான் படிப்பேன். நல்ல மனுஷன், பாசக்கார அண்ணன். இவரோட நகைச்சுவை பதிவுகளில் எனக்கு பிடிச்சது பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சினை?
கண்மணி
பல சங்கங்களில் உறுப்பினர். எங்க கும்மி குடும்பத்தை நடத்துறவங்க. இதை எல்லாம் கடந்து இவங்க ஒரு பொறுப்பான ஆசிரியர். கலாய்க்கிறதுல இவங்களை அடிச்சிக்கவே முடியாது. அஆஇஈஉஊஎஏ.........ய்...........[டோன்ட் மிஸ் இட்] நகைச்சுவையிலும் சரி, கவிதையிலும் சரி, கதைகளிலும் சரி பின்னிடுவாங்க..! சமீபத்தில் எழுதிய இந்த கவிதை எனக்கு பிடித்த ஒன்று தேடலின் முடிவில்... இவங்க தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்கும்போது போட்ட பதிவு இது. எனக்கு பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று மனிதரில் இத்தனை நிறங்களா?
மை ஃபிரண்ட்
எங்க குடும்பத்தோட கடைக்குட்டி, தமிழ்மணத்தில் மை ஃபிரண்ட்டோட பின்னூட்டம் வாங்காதவங்க யாருமே இருக்க முடியாது. அம்புட்டு பெரிய ஆளு இவுங்க. அவுங்க profileலே அதுக்கு ஒரு பெரிய உதாரணம். சகலகலாவல்லின்னு சொல்லாம். இவை எல்லாத்தையும்விட என்னோட பாசக்கார தங்கச்சி. இவுங்களுக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை நகைச்சுவையோடு சொல்லியிருப்பாங்க இந்த பதிவில் சீனப் பெருநாளில் நான் வாங்கிக்கிட்ட ஆப்பு!! .
சமீபத்தில் இவங்க எழுதிய குமரனுடன் சில நிமிடங்கள் பதிவு மனசை பாதித்த பதிவுகளில் ஒன்று. சாதனை புரிந்த பெண்களை பற்றியும் விட்டுவைத்ததில்லை எந்த பெண்ணும் விண்வெளியாளராய் ஆகலாம்
குசும்பன்
தமிழ்மணத்தில் எங்க அண்ணாத்த குசும்பு பண்ணாத ஆளுங்க இல்லவே இல்லை.
அந்த அளவுக்கு குசும்பு பண்ணும் எங்க அண்ணாத்த. ஆனா பாருங்க! இவரு எழுதிய ஒரு கதைதான் இப்போ இங்க கொடுக்க போறேன் யார் திருந்தவேண்டும்? . எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. கலாய்க்கிறதுல மட்டும் இல்லை கற்று கொடுக்கவும் தெரியும் எங்கள் அண்ணனுக்கு அவர் சமீபத்தில் பதிவர்களுக்கு PHOTOSHOP பற்றி கற்று கொடுத்துக் கொண்டு இருக்கிறார் இங்கே பாருங்கள் படிக்கலாம் வாங்க
இம்சை அரசி
பேருக்கு தகுந்த மாதிரி ஆளு அப்படி இல்லை (நான் பார்த்த வரைக்கும்).
பெரிய எழுத்தளார், கவிதை, கதை அதுவும் காதல் தொடர்கதைகள் எழுவதில் பெரிய ஆளு இவுங்க. கதைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு பிடித்தது இவுங்க எழுதிய அழகுகள் ஆறு பதிவு தான் அழகென்ற சொல்லுக்கு.......
குட்டி பிசாசு
அடிக்கடி காணாமல் போகும் பதிவர்களில் இவரும் ஒருவர். தற்போது சினிமா சார்ந்த பதிவுகள் போட்டு பின்னிக்கிட்டு இருக்காரு. கவிதைகள் கூட எழுத ஆரம்பிச்சிருக்காரு, அப்படி சமீபத்தில் இவரு எழுதிய ஒரு கவிதையில் எனக்கு பிடித்த கவிதை கலையட்டும் மௌனம் அதேபோல அவர் எழுதிய இந்த சிறுகதை நான் ரசித்த ஒன்று நஞ்சாவது பிஞ்சாவது.
டாக்டர் டெல்பின்
அம்மாவை பற்றி நான் செல்வதை விட நம்ம பதிவர் திரு. ராகவன் அவர்கள் சொல்லியிருப்பாதை பாருங்கள் - (சின்ன சின்ன எட்டுகள்..... பதிவில் இருந்து எடுத்தேன். )
திரு. ராகவன்
ஒரு பாட்டு உண்டு. அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேன்னு. 25000 ஈன்ற அன்னைன்னு பட்டம் கொடுக்கலாம். இதுல என்ன சாதனைன்னா....25000 முறை இரண்டு உயிர்களைக் காப்பாற்றீருகீங்க. அதாவது குறைந்த பட்சம் 50000 பேர் உயிர்வாழ நீங்களுமொரு காரணமாயிருக்கீங்க. பாராட்டுகள்.
இதை விட இவரை பற்றி நான் எப்படி சொல்ல முடியும். எங்க பாசக்கார குடும்பத்துக்கு அம்மா இவுங்க. இவர் கூறும் மருத்துவ குறிப்புகள் அனைவருக்கும் பயனுள்ள பெட்டகங்கள். மருத்துவ காப்பீட்டைப் பத்தி, இளைய சமுதாயம் போகும் வேகத்தைப்பத்தி இவங்க அக்கறையோட எழுதியிருக்கற இந்த பதிவு - Need your Brains
அப்புகுட்டனும் நானும்... , சோர்ந்து போன தருணம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..அம்புட்டு இருக்கு.
மங்கை
தமிழ்மணத்துல எழுதுற மிகச்சிறந்த பதிவர்கள்ல ரொம்ப முக்கியமானவர். பல பட்டங்கள் கிடைத்தாலும் அதை எல்லாம் தலையில் ஏற்றி கொள்ளாமல் இவர் அளிக்கும் பதில் வியக்க வைக்குது. இவர்களோடுகூட நானும் இருக்கேன்னு நினைக்கும் போது பெருமையாக இருக்கு. சத்தமே இல்லமால் பல சாதனைகள் செய்திருக்காங்க அதுக்கு சின்ன உதாரணம் இங்கே வாருங்கள் வாழ்த்துவோம் மங்கையை! இவர் ஒரு இயக்குனர் அவர் எடுத்த படத்தை பற்றி இங்கே பாருங்கள் பரீக்ஷித் - குறும்படம் தனியான ஒரு பதிவ எடுத்துக்கொடுக்கறதுங்கறது ரொம்ப சிரமம். அதனால அப்படியே இவங்க லிங்க்க எடுத்துக்கொடுத்துட்டேன் படிச்சு ஜமாயுங்க... மங்கை
வித்யா கலைவாணி
சமீபத்தில் தமிழ்மணத்தில் இணைத்து கலக்கு கலக்குன்னு கலக்குனாங்க. எல்லா விஷயத்திலும் இவங்களுக்கு கருத்துக்கள் உண்டு. இவங்களோட பொது அறிவை வியந்து பார்த்த பதிவர்களில் நானும் ஒருவன்.
இவங்களோட இந்திய பொருளாதார வளர்ச்சியும், வளைகுடா இந்தியர்களும் வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பொருளாதார பிரச்சனையை அலசி காயப்போட்டு இருப்பாங்க. அதே போல் ஜப்பானில் நடந்த அணுகுண்டு சம்பவத்தை எல்லோரும் படித்திருப்போம். அதே சம்பவத்தை இவுங்க எப்படி சொல்லியிருக்காங்ன்னு பாருங்கள் வரலாற்று நிகழ்வுகளுடன் ஒரு விடுகதை - விடை நாளை
நாளை சந்திப்போம்....
|
|
தம்பி ஜுரம் எப்படி இருக்குப்பா!!! மெயில் போட்டே எனக்கும் ஜுரத்தை ஏத்தி விட்டுட்டியே:-)))
ReplyDeleteகோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ReplyDeleteஎன்ன நம்ம சின்ன அக்கா முத்துலஷ்மியையும்,தங்கச்சி கோழிக்கால் காயத்ரியையும் ,சென்ஷியையும் விட்டுட்டே.
வலைப் பதிவர்களிடையேயும் ஒரு ஆரோக்யமான குடும்ப/நட்பு சூழ்நிலை இருக்க முடியும் என்பதற்கு நம் பாச குடும்பம் ஒரு எடுத்துக் காட்டு.நன்றி
முகியமான விசயதை மறதுடியே மப்பி :))
ReplyDeleteடீச்சர் நானும் இதையே கேட்டுட்டேன்!!!!மெயில் வழியா!!!!
ReplyDelete//சென்ஷி said...
ReplyDeleteமுகியமான விசயதை மறதுடியே மப்பி :))//
அதாவது நட்டு நைநாவப் பத்தி :))
//கண்மணி
ReplyDeleteபல சங்கங்களில் உறுப்பினர். எங்க கும்மி குடும்பத்தை நடத்துறவங்க. இதை எல்லாம் கடந்து இவங்க ஒரு பொறுப்பான ஆசிரியர். கலாய்க்கிறதுல இவங்களை அடிச்சிக்கவே முடியாது. //
ஆமா, உடனே திருப்பி அடிச்சுடுவாங்க :))
//மை ஃபிரண்ட்
ReplyDeleteஎங்க குடும்பத்தோட கடைக்குட்டி, தமிழ்மணத்தில் மை ஃபிரண்ட்டோட பின்னூட்டம் வாங்காதவங்க யாருமே இருக்க முடியாது.//
ரிப்பீட்டே :))
//குசும்பன்
ReplyDeleteதமிழ்மணத்தில் எங்க அண்ணாத்த குசும்பு பண்ணாத ஆளுங்க இல்லவே இல்லை.//
ஆனாலும் நான் அனுபவிச்ச வேதனைய யாரும் பட்டுடக்கூடாதுப்பா.. :))இதுக்காகவே அவரு வூட்டுப்பக்கம் போகாம இருக்கறேன்னா பாத்துக்கயேன். ஸ்டிரெய்டா அல்குயிஸ் தான் :))
//இம்சை அரசி//
ReplyDeleteபெயர் ஒன்றே போதும்... தரம் எளிதில் விளங்கும் :))
//குட்டி பிசாசு
ReplyDeleteஅடிக்கடி காணாமல் போகும் பதிவர்களில் இவரும் ஒருவர். //
குட்டி பிசாசுன்னு பேர வச்சிக்கிட்டு காணாம போகாம இருந்தாத்தான் ஆச்சரியம் :))
//ஒரு பாட்டு உண்டு. அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேன்னு. 25000 ஈன்ற அன்னைன்னு பட்டம் கொடுக்கலாம். இதுல என்ன சாதனைன்னா....25000 முறை இரண்டு உயிர்களைக் காப்பாற்றீருகீங்க. அதாவது குறைந்த பட்சம் 50000 பேர் உயிர்வாழ நீங்களுமொரு காரணமாயிருக்கீங்க. பாராட்டுகள்.//
ReplyDeleteரொம்ப பெருமைக்குரிய விஷயம் :))
//மங்கை
ReplyDeleteதமிழ்மணத்துல எழுதுற மிகச்சிறந்த பதிவர்கள்ல ரொம்ப முக்கியமானவர்.//
இது... இது... இதத்தான் எதிர்பார்த்தேன் :)))
//பல பட்டங்கள் கிடைத்தாலும் அதை எல்லாம் தலையில் ஏற்றி கொள்ளாமல் இவர் அளிக்கும் பதில் வியக்க வைக்குது.//
பட்டம் வாங்குனா தலையிலதான் வச்சுக்கணுமா... ஏன் மாஞ்சா போட்டு பறக்கவுடுறது :))
//வித்யா கலைவாணி
ReplyDeleteஇவங்களோட இந்திய பொருளாதார வளர்ச்சியும், வளைகுடா இந்தியர்களும் வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பொருளாதார பிரச்சனையை அலசி காயப்போட்டு இருப்பாங்க.//
யப்பா.. அவங்க அதை அயர்ன் செஞ்சு மடிச்சு எடுத்து வச்சிட்டாங்கடா :))
//நாளை சந்திப்போம்....//
ReplyDeleteஓகேடா மாப்பி :))
//அபி அப்பா said...
ReplyDeleteதம்பி ஜுரம் எப்படி இருக்குப்பா!!! மெயில் போட்டே எனக்கும் ஜுரத்தை ஏத்தி விட்டுட்டியே:-)))//
அது வைரஸ் மெயில் நட்டு நைநா... அதான் உங்களுக்கும் ஜூரம் வந்துடுச்சு :))
//கண்மணி said...
ReplyDeleteகோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ//
தப்பா டைப் அடிச்சுட்டீங்க.. அவனோட ஸ்பெஷல் ஈ இல்ல.. பொறி :))
பொறி கோபின்னா சட்டுன்னு புடிபடும் :))
//என்ன நம்ம சின்ன அக்கா முத்துலஷ்மியையும்,தங்கச்சி கோழிக்கால் காயத்ரியையும் ,சென்ஷியையும் விட்டுட்டே.//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... என்னை நீங்க மறக்காம கேட்டத பார்க்குறப்போ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... :((
//வலைப் பதிவர்களிடையேயும் ஒரு ஆரோக்யமான குடும்ப/நட்பு சூழ்நிலை இருக்க முடியும் என்பதற்கு நம் பாச குடும்பம் ஒரு எடுத்துக் காட்டு.நன்றி//
ReplyDeleteஅதுக்காக இத்தனை கும்மியா யாரும் கேட்டுட கூடாது :))
இது என்ன வேலையா... கடமை.. நம்ம ஒவ்வொருத்தங்களுக்கும் இருக்கற கடமை. இன்னிக்கு கோபிக்காக நான் கும்மி அடிக்கறேன். நாளைக்கு என் பதிவுல யாராச்சும் கும்மி அடிப்பாங்க. நாளை மறுநாள் அவங்க பதிவுல யாராச்சும் கும்மி அடிப்பாங்க. ஆனா கும்மி நம்ம குடும்ப சொத்து... பதிவுல கூட பேர ஏத்தியாச்சுல்ல.. :))
//இந்த மக்களெல்லாம் எப்படி, எப்போ சேர்ந்தோம்ன்னு எல்லாம் தெரியாது.//
ReplyDeleteஅடப்பாவி! அதுக்குள்ள மறந்துட்டியா... :(
முதல்ல தமிழ்மணத்துல நாம எல்லோரும் சேர்ந்து நட்டு நைநா பதிவு, டீச்சர் பதிவுன்னு கும்மி அடிச்சோம்.. அப்புறமா எல்லோரும் ஒரு நாள் நட்டு நைநா வூட்ட அதகளம் செஞ்சோம். இதெல்லாம் எப்படிடா மறந்து போச்சு உனக்கு :))
ஆனாலும் அது ஒரு அழகிய நிலா காலம்.. (அன்னிக்கு அமாவாசைன்னு யாரும் சொல்லிடாதீங்கப்பூ :))) )
மறுபடி எப்ப அந்த மாதிரி எல்லோரும் ஒண்ணா சேருவோம்ன்னுதான் தெரியல :((
(இதை டைப்புறப்ப நான் ரொம்ப சோகமாயிருக்கேன்னு எல்லோரும் தெரிஞ்சுக்குங்க )
//தமிழ்மணத்தின் பாசக்கார குடும்பத்தினை பற்றியது இன்றைய தொகுப்பு.//
ReplyDeleteஆனாலும் ரொம்ப உழைச்சிருக்கேடா நீ.. இத்தனை பேரப்பத்தி டைப்பு பண்ணனும்னா உண்மையிலேயே நீ ரொம்ப நல்லவன்டா :))
தனியா 100 அடிக்க நான் ரெடி!.. பொறுமையா எல்லாத்தையும் படிக்க நீ ரெடியா :))
ReplyDeleteகமெண்டு லேட்டா வர்றதுக்கு நான் காரணமில்ல கண்ணா.. என் சிஸ்டம் அப்படி.. :(
ReplyDeleteகோபி நீ டைப்பியிருக்கற எந்த பதிவ பத்தியும் நான் சொல்லலையேன்னு பார்க்காதே.. அது அப்புறம்... இப்ப பர்ஸ்ட்டு இங்க கும்மிதான் :))
ReplyDeleteஇதத்தான் தனி ஆவர்த்தனம்ன்னு சொல்லுவாங்களோ :))
ReplyDeleteவலைச்சர ஆசிரியர், நிர்வாகி, பொறுப்பாசிரியர் யாரும் கோச்சுக்கப்படாது... :))
ReplyDeleteமுன்னாடியே சொன்னதுதான்..
இது என்ன வேலையா...
கடமை..
நம்ம ஒவ்வொருத்தங்களுக்கும் இருக்கற கடமை.
இன்னிக்கு கோபிக்காக நான் கும்மி அடிக்கறேன்.
நாளைக்கு என் பதிவுல யாராச்சும் கும்மி அடிப்பாங்க.
நாளை மறுநாள் அவங்க பதிவுல யாராச்சும் கும்மி அடிப்பாங்க.
ஆனா கும்மி எங்க குடும்ப சொத்து... :)))
அபி அப்பா said...
ReplyDeleteடீச்சர் நானும் இதையே கேட்டுட்டேன்!!!!மெயில் வழியா!!!!
எனக்குத்தெரிஞ்சு மெயில பார்க்க முடியும்.. படிக்க முடியும்.. கேக்கக்கூட முடியுமா.. என்ன கொடும இது நட்டு நைநா :))
என்னக்கொடுமடா இது.. இன்னிக்குன்னு பார்த்து யாருமே இங்க இல்லியா :((
ReplyDeleteஆயில்யன், டீச்சர், மைபிரண்டு, காயத்ரி பாட்டி எல்லோரும் எங்கப்பா போனீங்க :(
சரி... தனியாவே சமாளிக்கறேன்.. எவ்வளவோ செஞ்சாச்சு.. இத செய்ய மாட்டோமா:))
என் நண்பன் போட்ட பதிவு..
ReplyDeleteகும்மி அடிப்பேன் பாரு.
தனியா 100 அடிச்சுட்டுதான் போவேனே :))
//இவரோட நகைச்சுவை பதிவுகளில் எனக்கு பிடிச்சது பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சினை?//
ReplyDeleteஹா.. ஹா.. அது சூப்பர் பதிவுப்பூ.. படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சதுல டெல்லியில என் கம்ப்யூட்டரே அழுதுடுச்சுன்னா பாத்துக்கயேன்.. :))
//சீரீயஸ்ன்னு இவரு பதிவு போட்டா கூட சிரிச்சிக்கிட்டே தான் படிப்பேன்.//
ReplyDeleteஅவரோட சீரியஸ் பதிவுல நாம அடிச்ச கும்மி...
ம் ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே :))
//இவங்க தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்கும்போது போட்ட பதிவு இது. எனக்கு பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று மனிதரில் இத்தனை நிறங்களா?//
ReplyDeleteஇதுவும் எனக்கு ரொம்ம்ப்ப பிடிச்ச பதிவு :))
//@ குசும்பன்
ReplyDeleteகலாய்க்கிறதுல மட்டும் இல்லை கற்று கொடுக்கவும் தெரியும் எங்கள் அண்ணனுக்கு//
ஆமா.. லேட்டஸ்ட்டா ந.ஒ.க. வுல போட்ட கதை ஒரு பருக்கை :))
//இம்சை அரசி
ReplyDeleteபேருக்கு தகுந்த மாதிரி ஆளு அப்படி இல்லை (நான் பார்த்த வரைக்கும்).
பெரிய எழுத்தளார், கவிதை, கதை அதுவும் காதல் தொடர்கதைகள் எழுவதில் பெரிய ஆளு இவுங்க.//
பாட்டு கூட எழுதியிருக்காங்களாம்பா :))
//அம்மாவை பற்றி நான் செல்வதை விட நம்ம பதிவர் திரு. ராகவன் அவர்கள் சொல்லியிருப்-பா-தை பாருங்கள்//
ReplyDeleteஇது இதுதான் கோபிங்கறது.. பவ கூட எவ்ளோ அழகா இழுத்திருக்க... பான்னு.. :))
சென்ஷி போதும் நிப்பாட்டு!
ReplyDeleteகும்மியடிக்கிற இடம் இது இல்லை
பெரிய பெரிய ஆளுங்க எழுதற இடம்
அப்பால பொறுப்பாசிரியர் [முத்தக்கா]கோச்சுப்பார்.
இது கோபிக்காக கவுஜயா ஒரு வாழ்த்து..
ReplyDeleteவா
ழ்
த்
து
க்
க
ள்
!
!!
ருடிதிஷ்
ReplyDeleteருடிதிஷ்
ReplyDeleteடிஷ்திரு
ருதிடிஷ்
திடிஷ்ரு
ருஷ்திடி
திஷ்ருடி
ஷ்திடிரு
போன பின்னூட்டத்தப்பாத்து பயந்துடாதேடா :))
ReplyDeleteநம்ம குடும்பத்த பார்த்து யாரும் கண்ணு பட்டுட கூடாது பாரு.. அதான் திருஷ்டி சுத்தி சுத்திப் போட்டிருக்கேன் :))
இது 40
ReplyDelete//கண்மணி said...
ReplyDeleteசென்ஷி போதும் நிப்பாட்டு!
கும்மியடிக்கிற இடம் இது இல்லை
பெரிய பெரிய ஆளுங்க எழுதற இடம்
அப்பால பொறுப்பாசிரியர் [முத்தக்கா]கோச்சுப்பார்.//
ஆஹா.. ரொம்ப லேட்டா வந்துட்டீங்க டீச்சர்.. சரி நீங்க சொன்னதால நான் இப்ப அப்பீட்டு... அப்புறமா யாரும் கூப்பிட்டாக்கா ரிப்பீட்டு :))
//கண்மணி said...
ReplyDeleteசென்ஷி போதும் நிப்பாட்டு!
கும்மியடிக்கிற இடம் இது இல்லை
பெரிய பெரிய ஆளுங்க எழுதற இடம்
அப்பால பொறுப்பாசிரியர் [முத்தக்கா]கோச்சுப்பார்.//
டீச்சர்!
இதுல நீங்க ஸ்மைலி போட மறந்துட்டீங்க.. அதான் ஞாபகப்படுத்தலாமேன்னு... :))
சரி.. சரி.. நான் கெளம்பிட்டேன்.. கோபி போன் செய்டா :))
//சென்ஷி said...
ReplyDeleteஎன்னக்கொடுமடா இது.. இன்னிக்குன்னு பார்த்து யாருமே இங்க இல்லியா
ஆயில்யன், டீச்சர், மைபிரண்டு, காயத்ரி பாட்டி எல்லோரும் எங்கப்பா போனீங்க
//
பிரதர் நீங்க பெரிய ஆளுதான் :)))
இங்கனயே வந்து கும்மிட்டீங்களா!
சாரி பிரதர் ஊருக்கு போறேன் சொன்னோன்னா உடனே வேலையை கொடுத்து ஆணி அடிச்சு உட்கார வைச்சுட்டாங்க :-(
//கண்மணி said...
ReplyDeleteசென்ஷி போதும் நிப்பாட்டு!
கும்மியடிக்கிற இடம் இது இல்லை
பெரிய பெரிய ஆளுங்க எழுதற இடம்
அப்பால பொறுப்பாசிரியர் [முத்தக்கா]கோச்சுப்பார்.
//
டீச்சர்! எங்க ஊருக்காரங்களுக்கு அவ்ளோ சீக்கிரத்துல கோவம் வரதாது...!
வந்துச்சுன்னா....!
கோவம் வந்துடும் :))))
//சென்ஷி said...
ReplyDeleteமுகியமான விசயதை மறதுடியே மப்பி :))
//
க்
த்
ந்
ஸ்பெல்லிகங்க மிஸ் பண்ணுனாலும் அதுலயும் ஒரு ரிதமிங்காத்தான் மிஸ் பண்றீங்க பிரதர் :)
இதுவரைக்கும் யாரும் இந்தமாதிரி அழகாக வலைச்சரம் தொடுத்ததில்லைன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள் கோபி. அது சரி, சென்ஷியைத்தவிர யாரும் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு, சென்ஷி முடிவு பண்ணிட்டார் போல இருக்கு.
ReplyDeleteபொறாமையும், குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையும் இல்லாமல் கண்மணி அக்கா சொன்னமாதிரி வலைப்பதிவர்களிடையே, ஆரோக்யமான குடும்ப/நட்பு சூழ்நிலை இருக்க முடியும் என்பதை பாசக்கார குடும்பம் நிரூபிக்கிறது. கண்மணி அக்கா, பாசக்காரகுடும்பத்துக்கு திருஷ்டியும் அப்படியே சுத்தி போட்டுருங்க.
ReplyDelete@ அபி அப்பா
ReplyDelete\\தம்பி ஜுரம் எப்படி இருக்குப்பா!!! மெயில் போட்டே எனக்கும் ஜுரத்தை ஏத்தி விட்டுட்டியே:-)))\\\
ஒன்னும் புரியல...வருகைக்கு நன்றி :)
@ கண்மணி
\\என்ன நம்ம சின்ன அக்கா முத்துலஷ்மியையும்,தங்கச்சி கோழிக்கால் காயத்ரியையும் ,சென்ஷியையும் விட்டுட்டே.\\
எல்லோரும் ஒவ்வொரு சரத்தில் வந்துட்டாங்களே..! ;)
\\வலைப் பதிவர்களிடையேயும் ஒரு ஆரோக்யமான குடும்ப/நட்பு சூழ்நிலை இருக்க முடியும் என்பதற்கு நம் பாச குடும்பம் ஒரு எடுத்துக் காட்டு.நன்றி\\\
அதை சொல்லதானே இந்த சரத்தை தொடுத்தேன்..;)) நன்றி அக்கா ;))
@ சென்ஷி
ReplyDelete\\என் நண்பன் போட்ட பதிவு..
கும்மி அடிப்பேன் பாரு.
தனியா 100 அடிச்சுட்டுதான் போவேனே :))\\\
மாப்பி...எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..நீ ரொம்ப நல்லவன், வல்லவன், போதுமா...அவ்வ்வ்வ்வ்வ்..;)))
@ ஆயில்யன்
ReplyDelete\\பிரதர் நீங்க பெரிய ஆளுதான் :)))
இங்கனயே வந்து கும்மிட்டீங்களா!
சாரி பிரதர் ஊருக்கு போறேன் சொன்னோன்னா உடனே வேலையை கொடுத்து ஆணி அடிச்சு உட்கார வைச்சுட்டாங்க :-(\\
பிரதர் நீங்க பதிவை படிச்சிங்களா!;))
@ சின்ன அம்மிணி
ReplyDelete\\இதுவரைக்கும் யாரும் இந்தமாதிரி அழகாக வலைச்சரம் தொடுத்ததில்லைன்னு நினைக்கிறேன்.\\\
ஆகா...அப்படி எல்லாம் இல்லை, எல்லா வலைச்சரமும் அழகு தான் அதில் என்னோட வலைச்சரமும் ஒன்று அவ்வளவு தான்..:)
\\வாழ்த்துக்கள் கோபி. \\
உங்கள் உற்சாகமான வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா.
\\அது சரி, சென்ஷியைத்தவிர யாரும் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு, சென்ஷி முடிவு பண்ணிட்டார் போல இருக்கு.\\\
மாப்பிக்கு பாசம் கொஞ்சம் அதிகமாகிடுச்சி அம்புட்டு தான்...;))
\\பொறாமையும், குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையும் இல்லாமல் கண்மணி அக்கா சொன்னமாதிரி வலைப்பதிவர்களிடையே, ஆரோக்யமான குடும்ப/நட்பு சூழ்நிலை இருக்க முடியும் என்பதை பாசக்கார குடும்பம் நிரூபிக்கிறது. \\
என்ன நிருபிக்கிறது...நிருபித்திருக்கிறோம் என்று சொல்லுங்க...நீங்களும் பாசக்கார குடும்பத்தில் உண்டு ;))
\\கண்மணி அக்கா, பாசக்காரகுடும்பத்துக்கு திருஷ்டியும் அப்படியே சுத்தி போட்டுருங்க.\\
கண்மணி அக்கா நோட் பண்ணிக்கோங்க...;))
//மை ஃபிரண்ட்
ReplyDeleteஎங்க குடும்பத்தோட கடைக்குட்டி, தமிழ்மணத்தில் மை ஃபிரண்ட்டோட பின்னூட்டம் வாங்காதவங்க யாருமே இருக்க முடியாது.//
ஹல்லோ எங்க வூட்டுப்பக்கமும் வரது - வாங்களேன்
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....
ReplyDeleteஅண்ணே பதிவுல சென்ஷி கும்மியிருக்காரு.. ஆனா 100 வரலையே... என்ன கொடுமை அய்யனார் இது!!!! :-P
ReplyDeleteசரி சரி.. வந்துட்டோம்ல..
ReplyDeleteயாரும் துணைக்கு வர்றதுன்னா வரலாம்.. இல்லன்னா ஒத்த ஆளா சாதம்.... சாரி சதம் அடிக்க தயார். :-))
ReplyDeleteரெடி ஸ்டார்ட் மியூஜிக்...
ReplyDelete//இந்த மக்களெல்லாம் எப்படி, எப்போ சேர்ந்தோம்ன்னு எல்லாம் தெரியாது. //
ReplyDeleteஅட.. இத்தனை நால் கழிச்சு இப்படி கவுத்துப்புட்டீங்களே...
எனகு ஓரளவு மங்களா ஞாபகம் இருக்கு..
அது ஒரு அழகிய சூரியன் காலம்.. (சென்ஷிண்ணே, அப்போ சம்மர் காலமாச்சே.. அதுவும் நாம கும்மியடிச்சது நட்ட நடு பகல்தான்னே? ):-)
ReplyDeleteநட்சத்திரம் சொலிச்சிட்டு இருந்துச்சு...
ReplyDeleteபகல்ல எப்படி நட்சத்திரம்ன்னு அபி அப்பா கேட்குறாரு..
ReplyDeleteஅது வானத்துல மின்னுற நடசத்திரம் லேது.. தமிழ்மண நட்சத்(தீ)ரம்
நம்ம டீச்சர் போட்டா எல்லா பதிவுக்கும் பாராபட்சம் பார்க்காமல் கும்மியடிச்சோமே!
ReplyDeleteஅதுல இன்னை வரைக்கும்ஞாபகம் இருக்கும் பின்னூட்டம்:
ReplyDeleteநானும் சென்ஷி அண்ணனும் பாட்டுக்கு பாட்டு நிகழ்சி நடட்த்தினோமே! (as usual பின்னூட்டத்துலதான்!)
ப்போ நட்சத்திரம் முடிவு பண்ணாங்க.. இந்த பழங்களுக்கு கும்மியடிக்க எந்த இடமும் கெடைக்காமத்தான் அவங்க பின்னூட்ட பேஜ்லேயே தவம் கெடக்க்க்றாங்கன்னு..
ReplyDeleteதீடீர்ன்னு பார்த்தா கும்மி ப்ளாக் ஸ்டார்ர்ட் மியூஜிக்.. ;-))))
இப்படித்தான் ஆரம்பிச்சது பாசக்கார குடும்பத்தினரின் சரித்திரம்..
ReplyDeleteரைக்ட்டா குருவே?
இப்படித்தான் ஆரம்பிச்சது பாசக்கார குடும்பத்தினரின் சரித்திரம்..
ReplyDeleteரைக்ட்டா குருவே?
//தமிழ்மணத்தின் பாசக்கார குடும்பத்தினை பற்றியது இன்றைய தொகுப்பு.//
ReplyDeleteநேற்றைய தொகுப்பு... நான் இன்னைக்குதானே படிக்கிறேன். ;-)
//குடும்பத்தோட மூத்த உறுப்பினரில் தலயும் ஒருவர்.///
ReplyDeleteஇவரு தான் இளமையா இருக்கேன்னு மெயிண்டேயின் பண்ணிட்டு இருக்காரு.. இப்படி டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்களே.. :-))))))
பட் அதுதான் உண்மை.. வயசானவரு.. கொஞ்சம் உடம்பை பார்துக்கோங்கன்னா கேட்கூறாரா? :-P
ReplyDelete//எங்க கும்மி குடும்பத்தை நடத்துறவங்க. //
ReplyDeleteஆமா.. இவங்க இல்லன்னா நம்ம திக்கு தெரியாமல் அழைவோம்..
அதுவும் இவங்க அப்பப்போ கும்மி பதிவு போடுறதுனாலத்தான் நாம கும்மி அடிக்க முடியுது. ;-)
ReplyDelete//மை ஃபிரண்ட்//
ReplyDeleteஅவ்வ்வ்..... ஓவர் பில்-அட்ப்-ஆ இருக்கே! ;-)
நன்றி நன்றி..
///தமிழ்மணத்தில் எங்க அண்ணாத்த குசும்பு பண்ணாத ஆளுங்க இல்லவே இல்லை.//
ReplyDeleteயாராவது தப்பிச்சிருந்தாங்கன்னா அதுதான் ஆச்சார்யம்..
அண்ணாத்தேயுடைய இந்த வருட கொள்கை:
ReplyDeleteபோன வருடம் மிஸ் ஆனவங்க (மிஸ்ஸஸ் ஆனவங்க எல்லாம் இல்ல), இந்த வருடம் புதுசா வர்றவங்க எல்லாரையும் குசும்பு பண்றது. :-))
75 போட்டாச்சு..
ReplyDeleteநெக்ஸ்ட்...
//அண்ணனுக்கு அவர் சமீபத்தில் பதிவர்களுக்கு PHOTOSHOP பற்றி கற்று கொடுத்துக் கொண்டு இருக்கிறார் இங்கே பாருங்கள் படிக்கலாம் வாங்க ///
ReplyDeleteஆமா.. நானும் அந்த் க்ளாஸுல இருக்கேன் குருவே!
//பெரிய எழுத்தளார், கவிதை, கதை அதுவும் காதல் தொடர்கதைகள் எழுவதில் பெரிய ஆளு இவுங்க. //
ReplyDeleteஆமா ஆம்மா.. எனக்கும் இவங்களோட அழகு பதிவு ரொம்ப பிடிக்கும்.. :-)
//குட்டி பிசாசு
ReplyDeleteஅடிக்கடி காணாமல் போகும் பதிவர்களில் இவரும் ஒருவர். //
திரும்ப வந்து சீரியஸா பதிவு போட ஆரம்பிச்சிட்டார். :-)
//டாக்டர் டெல்பின்//
ReplyDeleteசரியான விமர்சனம். :-)
//பல பட்டங்கள் கிடைத்தாலும் அதை எல்லாம் தலையில் ஏற்றி கொள்ளாமல் இவர் அளிக்கும் பதில் வியக்க வைக்குது. //
ReplyDeleteஇவங்க ரொம்ப தன்னடக்கவாதி.. சூப்பரா எழுதினாலும் கொஞ்சம் கூட பந்தா இல்ல. :-)
வித்யா கலைவாணி.. சூப்பரா பதிவு போட்டாங்க.. எல்லா ஃபீல்டுலேயும் புகுந்து விளையாடுனாங்க.. ட்திடீர்ன்னு காணாமல் போயிட்டாங்க.. திர்ரும்ப வருவாங்க என்று திர்ப்பார்போம். :-)
ReplyDeleteஇப்போ 82.
ReplyDeleteஇனி ஃபுல்லா கும்மி..
ReplyDeleteஜஸ்ட்டு கும்மி
ReplyDelete//கோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///
ReplyDeleteஅண்ணாத்தே ஈ ஓட்டுறாங்க பாருங்க. :-))
//சென்ஷி said...
ReplyDeleteமுகியமான விசயதை மறதுடியே மப்பி :))
//
என்னது?
உங்க பாசத்தை பார்த்து எனக்கு அழுகை அழுகையா வருது...அவ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete//சென்ஷி said...
ReplyDelete//கண்மணி
பல சங்கங்களில் உறுப்பினர். எங்க கும்மி குடும்பத்தை நடத்துறவங்க. இதை எல்லாம் கடந்து இவங்க ஒரு பொறுப்பான ஆசிரியர். கலாய்க்கிறதுல இவங்களை அடிச்சிக்கவே முடியாது. //
ஆமா, உடனே திருப்பி அடிச்சுடுவாங்க :))
//
ரிப்பீட்டே.. ஹிஹிஹீ
//ஆயில்யன், டீச்சர், மைபிரண்டு, காயத்ரி பாட்டி எல்லோரும் எங்கப்பா போனீங்க :(//
ReplyDeleteவந்துட்டேன் வந்துட்டேன்.. ஆட்டத்தை பாருங்க. ;-)
//சென்ஷி said...
ReplyDeleteஎன் நண்பன் போட்ட பதிவு..
கும்மி அடிப்பேன் பாரு.
தனியா 100 அடிச்சுட்டுதான் போவேனே :))
//
100 அடிக்கிறேன்னுட்டு 50லேயே காணாமல் போயிட்ட்ங்க?
//கண்மணி said...
ReplyDeleteசென்ஷி போதும் நிப்பாட்டு!
கும்மியடிக்கிற இடம் இது இல்லை
பெரிய பெரிய ஆளுங்க எழுதற இடம்
அப்பால பொறுப்பாசிரியர் [முத்தக்கா]கோச்சுப்பார்.
//
நல்ல வேளை.. என்ன சொல்லலை. அப்போ நான் கும்மியடிக்கலாம். :-)))
//சென்ஷி said...
ReplyDeleteபோன பின்னூட்டத்தப்பாத்து பயந்துடாதேடா :))
நம்ம குடும்பத்த பார்த்து யாரும் கண்ணு பட்டுட கூடாது பாரு.. அதான் திருஷ்டி சுத்தி சுத்திப் போட்டிருக்கேன் :))
//
அண்ணே.. 100 போட போற எனக்கு திருஷ்டி கழிங்க பாஅர்ப்போம். ;-)
//சாரி பிரதர் ஊருக்கு போறேன் சொன்னோன்னா உடனே வேலையை கொடுத்து ஆணி அடிச்சு உட்கார வைச்சுட்டாங்க :-(//
ReplyDeleteஆயில்யன், போயிட்டு வாங்க.. இன்னொரு கூம்மி போட்ரலாம். ;-)
\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDelete//சென்ஷி said...
போன பின்னூட்டத்தப்பாத்து பயந்துடாதேடா :))
நம்ம குடும்பத்த பார்த்து யாரும் கண்ணு பட்டுட கூடாது பாரு.. அதான் திருஷ்டி சுத்தி சுத்திப் போட்டிருக்கேன் :))
//
அண்ணே.. 100 போட போற எனக்கு திருஷ்டி கழிங்க பாஅர்ப்போம். ;-)
\\\
திருஷ்டி -------- கழிச்சிட்டேன் ;))
//\பொறாமையும், குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையும் இல்லாமல் கண்மணி அக்கா சொன்னமாதிரி வலைப்பதிவர்களிடையே, ஆரோக்யமான குடும்ப/நட்பு சூழ்நிலை இருக்க முடியும் என்பதை பாசக்கார குடும்பம் நிரூபிக்கிறது. \\
ReplyDeleteஎன்ன நிருபிக்கிறது...நிருபித்திருக்கிறோம் என்று சொல்லுங்க...நீங்களும் பாசக்கார குடும்பத்தில் உண்டு ;))
//
அண்ணன் சொன்னதுக்கு மறூபேச்சு இல்ல.. செயற்குழு மீட்டிங்ல முடிவு பண்ணிடுவோம்.. ;-)
//cheena (சீனா) said...
ReplyDelete//மை ஃபிரண்ட்
எங்க குடும்பத்தோட கடைக்குட்டி, தமிழ்மணத்தில் மை ஃபிரண்ட்டோட பின்னூட்டம் வாங்காதவங்க யாருமே இருக்க முடியாது.//
ஹல்லோ எங்க வூட்டுப்பக்கமும் வரது - வாங்களேன்
//
சீனா தாத்தா.. கவலையை விடுங்க.. கண்டிப்பா அடுத்த விசிட் உங்க வலைப்பூதான்.. :-)))))
எங்க கும்மிக்கு ஒரு போஸ்ட் போட்றுங்க. :-)
3
ReplyDelete2
ReplyDeleteஇந்த பதிவுக்கு 100 எடுத்த பொறி புகழ், ஷார்ஜா ராஜா, அண்ணன் கோபிக்க்கு ச்பெஷல் வாழ்த்து...
ReplyDeleteவர்ட்டா... :))))
:)))))
ReplyDeleteஎன்ன சொல்றதுன்னே தெரியல..
ReplyDeleteநா தழுதழுக்குது....
நன்றி மக்களே..;))
மை பிரெண்ட் கலக்கிட்டீங்க போங்க!
ReplyDelete(கண்டிப்பா முத்தக்காவோட "அன்பான" வாழ்த்துக்களை பெற்ப்போகும் சென்ஷி & மை பிரெண்ட்க்கு வாழ்த்துக்கள்)
//கோபிநாத் said...
ReplyDeleteஎன்ன சொல்றதுன்னே தெரியல..
நா தழுதழுக்குது....
நன்றி மக்களே..;))
//
தம்பி உன் கண்ணுல ஆனந்தகண்ணீர்தானே..???
:))
அன்புக்கு நன்றி கோபி..
ReplyDelete//
ReplyDeleteசென்ஷி said...
ருடிதிஷ்
டிஷ்திரு
ருதிடிஷ்
திடிஷ்ரு
ருஷ்திடி
திஷ்ருடி
ஷ்திடிரு
//
//
சென்ஷி said...
போன பின்னூட்டத்தப்பாத்து பயந்துடாதேடா :))
நம்ம குடும்பத்த பார்த்து யாரும் கண்ணு பட்டுட கூடாது பாரு.. அதான் திருஷ்டி சுத்தி சுத்திப் போட்டிருக்கேன் :))
//
சென்ஷி ஓவரா சுத்தீட்டீங்க நீங்க விழுந்திரா போறிங்க பாத்து
:-))))))
//
ReplyDeleteகண்மணி said...
சென்ஷி போதும் நிப்பாட்டு!
கும்மியடிக்கிற இடம் இது இல்லை
பெரிய பெரிய ஆளுங்க எழுதற இடம்
//
ஆமா நானும் சொல்லிட்டேன் அடுத்தது எங்க பெருந்தலை மலேசியால இருந்து எழுத போறார் இங்க வந்து கும்மிகிட்டு!!
//
ReplyDeleteகண்மணி said...
சென்ஷி போதும் நிப்பாட்டு!
கும்மியடிக்கிற இடம் இது இல்லை
பெரிய பெரிய ஆளுங்க எழுதற இடம்
//
ஆமா நானும் சொல்லிட்டேன் அடுத்தது எங்க பெருந்தலை மலேசியால இருந்து எழுத போறார்
அதுக்கடுத்த வாரம் இன்னொரு விஐபி எழுதப்போறார்
இங்க வந்து கும்மிகிட்டு!!
என்ன இது சின்னப்புள்ள தனமா!!!
தல
ReplyDeleteபாசக்காரக் குடும்பம் பற்றி நல்ல விளக்கம், நன்றி
நூறு பின்னூட்டம் கண்ட கோமகன் கோபி வாழ்க ;-)
உண்மையிலேயே கோபமாக சொல்கிறேன்.
ReplyDeleteவலைச் சரம் பலரும் படிக்கக் கூடிய சரம்.புதியவர்களுக்கு ஒரு கையேடு மாதிரி.அதுல இப்படி கும்மினா 'பாசக்கார குடும்பத்தைப் பற்றிய தப்பான அபிப்பிராயம் தான் மிஞ்சும்.
ஏஎற்கனவே வெறும் வாயை மெல்கிறவர்களுக்கு அவல் கிடைச்ச மாதிரி செஞ்சிட்டீங்க.
இத்தோட நிப்பாட்டுங்க ப்ளீஸ்!
@ மங்கை
ReplyDelete\\அன்புக்கு நன்றி கோபி..\\
வருகைக்கு என்னோட நன்றிகள் ;)
@ மங்களூர் சிவா
\\சென்ஷி ஓவரா சுத்தீட்டீங்க நீங்க விழுந்திரா போறிங்க பாத்து
:-))))))\\
அண்ணே அவன் அவ்வளவு சீக்கிரத்தில் விழ மாட்டான்...;))
@ கானா பிரபா
\\தல
பாசக்காரக் குடும்பம் பற்றி நல்ல விளக்கம், நன்றி\\
நன்றி தல ;)
\\நூறு பின்னூட்டம் கண்ட கோமகன் கோபி வாழ்க ;-)\\
தொண்டனை வாழ்த்தும் தலயும் வாழ்க ;))
இந்த வாரம் முழுவதும் அருமையாக சரம் தொடுத்த கோபி தம்பிக்கு பாராட்டுக்கள்
ReplyDelete