வயதுக்கு வருதலும் 'காதலுடன்' போராட்டமும்.
இந்த தலைப்பு ஏன்னு தமிழ்மணம் படிக்கிறவங்களுக்கு ஏன்னு புரிஞ்சிருக்கும். சினேகிதியின் வயதுக்கு வருதலும் வலியை சுமத்தலும் பதிவுக்கு இது எதிர் பதிவல்ல. ‘அறிந்தோ அறியாமலோ’ தெரிந்தோ தெரியாமலோ ஒரு பையன் பதினாலு பதினைந்து வயதில் வயசுக்கு வந்திடறான். அவனுக்கு ‘அறிவு’ சொல்வதெல்லாம் ‘சரோஜா தேவிகளும்’ இன்ன பிற புத்தகங்களும் வயதை ஒத்த நட்பு வட்டமும்தான். இதை பற்றி பேசுவதையே எதோ பெரும் குற்றமாக எண்ணும் சமூகம் நம் சமூகம். இப்போதுதான் ‘ஆ.வி’யில் ‘அறிந்தும் அறியாமலும்’ அப்படின்னு ஒரு தொடர் அதற்கு எவ்வளவு எதிர்ப்பு ஞானி என்ன டாக்டரா இதை எழுதுவதற்கு என, வலைப்பூ படிப்பவற்களுக்கு தெரிந்திருக்கும்.
பக்கத்துல உக்காந்துருக்க புள்ளைய பாத்தா ஜில்லுனு ஒரு ஃபீலிங்.... பீலிங்.... அதுக்குபேரு காதலா, கண்றாவியா, இன்பாக்சுவேஷனா என்ன எளவோ ஆனா ஃபீலிங்ஸ் ஆப் இண்டியாதான்.
நம்ம தமிழ் சினிமாவும் அதால எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு இந்த காதலுக்கு புது புது விளக்கங்கள் குடுத்து நல்லா இருக்கறவனையும் ‘கேணை’யாக்குகிறது. பாத்த காதல், பாக்காத காதல், பேசின காதல், பேசாத காதல் எச்சட்ரா எச்சட்ரா........ ஒரு படத்துல சொல்லுவான் காதல் அப்படிங்கிறது வாழ்க்கைல ஒருதடவை தான் பூக்கும் அப்பிடின்னு. இன்னொன்னுல அது பாட்டுக்கு திரும்ப திரும்ப பூத்துகிட்டே இருக்கும். அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும் இங்க காதல் செய்யுதாம். காதலுக்காக முட்டாள்தனமா உயிர விடறவனுங்களும் இருக்காங்க என்பது வேதனை.
டீன் ஏஜில் ஹார்மோன்கள் காதல் வாழ்த்து ஆரம்பிக்க ஒரு சுபயோகதினத்தில் பஸ் ஸ்டாப்பில், கல்லூரியில், கடைவீதியில், கோடை விடுமுறையில், பணியிடத்தில், நண்பனின் வீட்டில், வசிக்கின்ற தெருவில் எதிர்வீட்டில், அதுவரை கண்ணுக்குத் தெரியாத இந்தக் காதல் இம்சை ஏதாவது ஒரு சப்பை சம்பவத்தால் "டிரிக்கர்" ஆகி அடையாளம் காணப்பட்டு, வெளிப்பட்டு அதன் பின் வேப்பிலை அடிக்காத மண்டைக்குள் மோகினியாய் ஆட்டம் போட்டு அப்பப்பா... இந்தக் காதல் எனும் விஷயம் எத்தனை எழுத்துகொண்டு எழுதினாலும் புரியாது... அனுபவித்தால் மட்டுமே அது என்னவெல்லாம் செய்யும்னு தெரியும் அப்டிங்கிறார் காதல் போயின் நோ சாதல் பதிவில்.
ராஜேந்தரின் ஒருதலைராகம், கிளிஞ்சல்கள், இரயில் பயணங்களில், வாழ்வே மாயம், பயணங்கள் முடிவதில்லை, என வெள்ளிவிழாக் காதல் படங்களில் வந்த ஹீரோக்கள் எல்லாம் காதலில் தோற்று, தாடி வளர்த்து வித விதமான கேன்சர் நோய் தாக்கி, இரத்த வாந்தி எடுத்து க்ளைமாக்ஸில் செத்தார்கள்!. காதல் என்றால் அது அழுக்கு தாடி + கேன்சரைக் கேரியரில் ஏற்றிக்கொண்டு காதல் வயப்பட்டவரை ரத்தம் கக்க வைக்கும் காட்டேறி ரேஞ்சில் இவரை சிந்திக்க வைத்ததாம்!.
90களின் ஆரம்பத்தில் கோடம்பாக்கதில் கேன்சர் காதல் கதைகளுக்குக் கேன்சர் வந்து இரத்தவாந்தி எடுத்து ஹீரோ கட்டாயமாகச் சாகும் காதல் தோல்விப்படங்கள் காணாமல் போயின! இதயம் மாதிரி படங்கள் உதயம் தியேட்டரில் பார்த்ததால் மூலையில் வீசப்பட்டிருந்த ஹார்மோன் ஹார்மோனியம் இருபதுகளின் ஆரம்பத்தில் இசைக்க ஆரம்பித்ததாம்! காதல் போயின் நோ சாதல் -2
உங்க மனசுக்குள்ளே அமுக்கமா இருக்கும் காதல் பண்புக்கு "ஸ்டார்ட் மீஜிக்" சொல்லிட்டீங்கன்னு வச்சுக்குங்க..உடனே உடையைக் கிழித்துக்கொண்டு பைத்தியக்காரனாய் கீழ்ப்பாக்கம் போகாவிட்டாலும் ...கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உள்ளத்தைக் கிளர்ந்தெழும் காதல் எண்ணங்களால் கிழித்துக்கொண்டு காதல் பைத்தியமாய் சத்தியமாய் திரிவது திகட்டாது!
இல்லாத அனுபவமான, ஒரே ஒரு நபர் குறித்த அடர்த்தியான எண்ணங்களே மனதில் 24மணிநேரமும் மேலோங்கும். காலையில் பல் துலக்கும்போது எதிரே கண்ணாடியில் பிம்பமாய்... அறிவியலைப் பொய்யாக்கி எங்கோ இருக்கும் காதல் பண்பின் டார்கெட் நபர் பிம்பமாய்த் தெரிய ஒரு அசட்டுத்தனமான / கண்றாவியான சிரிப்புடன் அன்றைய பொழுதைத் துவங்கித் துவைத்தெடுக்குமாம் காதல் போயின் நோ சாதல் -3
நாலு பொண்ணுங்கசந்தோசப்படறாங்கன்னா'சைட் ' அடிக்கறதிலேதப்பே இல்ல !". என்ன ஒரு தத்துவம் சொல்லறது அண்ணன் ஜொள்ளுபாண்டி அவர் வலைப்பூ ஜொள்ளு பேட்டை. இங்க கோச்சிங்கும் உண்டு ஜொள்ளறதுக்கு.
|
|
///பக்கத்துல உக்காந்துருக்க புள்ளைய பாத்தா ஜில்லுனு ஒரு ஃபீலிங்.... பீலிங்.... அதுக்குபேரு காதலா, கண்றாவியா, இன்பாக்சுவேஷனா என்ன எளவோ ஆனா ஃபீலிங்ஸ் ஆப் இண்டியாதான்.///
ReplyDeleteஅந்த ஃபீலிங் இன்னுமும் தொடர்வது எம்புட்டு கொடுமைன்னு அவுங்களுக்கு என்னா தெரியும்!!!
///அறிவு’ சொல்வதெல்லாம் ‘சரோஜா தேவிகளும்’ இன்ன பிற புத்தகங்களும் வயதை ஒத்த நட்பு வட்டமும்தான்.///
ReplyDeleteலோக்கல் ஆசிரியர்கள் என்றால்
மருதம்
தென்றல்
லில்லி
எஜிக்கேட்டட் ஆசிரியர்கள் என்றால்
வாஸ்த்யாணன்
கொக்கோக முனிவர்
ஆங்கில ஆசிரியர்கள் என்றால்
ஜான்சன்
நான்சி பிரைடே
//காதலுக்காக முட்டாள்தனமா உயிர விடறவனுங்களும் இருக்காங்க என்பது வேதனை.//
ReplyDeleteஇதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்!!! முட்டை உடுற கோழிக்குதான் ............ எரிச்சல் தெரியும் என்று சொல்வார்கள்:)))
///நாலு பொண்ணுங்கசந்தோசப்படறாங்கன்னா'சைட் ' அடிக்கறதிலேதப்பே இல்ல !". //
ReplyDeleteஆனா நாலு பேர் பார்கிறானுங்க என்பதற்காக அவுங்க கொடுக்கும் அலப்பறை இருக்கே!!!
அதை பார்த்தா கோவி.கண்ணன் சாரே டென்சன் ஆகிடுவார்:)))
///பக்கத்துல உக்காந்துருக்க புள்ளைய பாத்தா ஜில்லுனு ஒரு ஃபீலிங்.... பீலிங்....///
ReplyDeleteபக்கத்துல மீன்ஸ் ஒரு அரைகிலோ மீட்டர் தூரம் அல்லது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்தாலும் ஓக்கேதான்!!!!
//
ReplyDeleteகுசும்பன் said...
அந்த ஃபீலிங் இன்னுமும் தொடர்வது எம்புட்டு கொடுமைன்னு அவுங்களுக்கு என்னா தெரியும்!!!
//
சேம் பிளட்டா???
இருக்கட்டும்
ஹலோ யாருப்பா அது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சவுண்டு கொடுப்பது, ஏதோ எங்களுக்கு அதுதான் ஒரே ஆறுதல்:(((
ReplyDeleteookkkooo - வாரக் கடேசி யா - ஓக்க்கே ஓக்கே - பதிவு நல்லாத்தான் இருக்கு - இருக்கட்டும் - குசும்பன் வேற என்னொவோ சொல்றாரு - நெரெய புத்தக ஆசிரியர்கள் பேரு எல்லாம் - எல்லாப் பொத்தகத்தெயும் படிச்சி அறிவெ வளத்துக்கிட்டாராமா ? வாழ்க - நல்வாழ்த்துகள்:
ReplyDelete//குசும்பன் said...
ReplyDeleteஆனா நாலு பேர் பார்கிறானுங்க என்பதற்காக அவுங்க கொடுக்கும் அலப்பறை இருக்கே!!!
அதை பார்த்தா கோவி.கண்ணன் சாரே டென்சன் ஆகிடுவார்:)))
//
:)))
suuppareyyyyyyy
ReplyDeletemaamss nellaa sollunga ..nerayaparukku puriyave maatenguthu..
avvvvv
ithellaam natural.thappillai nnu supera sooliyerukinga.atleast week endula oru batuler post ..hihi.keepit up this savei
ReplyDelete///cheena (சீனா) said...
ReplyDeleteகுசும்பன் வேற என்னொவோ சொல்றாரு - நெரெய புத்தக ஆசிரியர்கள் பேரு எல்லாம் - எல்லாப் பொத்தகத்தெயும் படிச்சி அறிவெ வளத்துக்கிட்டாராமா ? வாழ்க - நல்வாழ்த்துகள்:///
ஆக அந்த புத்தக பேரு எல்லாம் உங்களுக்கு ஒன்னுமே தெரியாது? இதை நாங்க நம்பனும்,,, நம்பிட்டோம்:)
//ஆக அந்த புத்தக பேரு எல்லாம் உங்களுக்கு ஒன்னுமே தெரியாது? இதை நாங்க நம்பனும்,,, நம்பிட்டோம்:)//
ReplyDeleteகுசும்பா - சின்னப் பசங்க வெவரம் தெரியாத பசங்க படிக்கற புத்தகப் பேரெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும் - நம்புங்கடா பாவிகளா
//
ReplyDeleteகுசும்பன் said...
ஹலோ யாருப்பா அது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சவுண்டு கொடுப்பது, ஏதோ எங்களுக்கு அதுதான் ஒரே ஆறுதல்:(((
//
அப்ப அந்த சிடி டிவிடி எச்சட்ரா.... எச்சட்ரா....
//
ReplyDeletecheena (சீனா) said...
ookkkooo - வாரக் கடேசி யா - ஓக்க்கே ஓக்கே - பதிவு நல்லாத்தான் இருக்கு - இருக்கட்டும் -
//
வாங்க சீனா சார் நன்றி
//
குசும்பன் வேற என்னொவோ சொல்றாரு - நெரெய புத்தக ஆசிரியர்கள் பேரு எல்லாம் - எல்லாப் பொத்தகத்தெயும் படிச்சி அறிவெ வளத்துக்கிட்டாராமா ? வாழ்க - நல்வாழ்த்துகள்:
//
எதோ இதோட நல்ல பசங்களா இருக்கோமே பாராட்டுங்க சார்.
//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
:)))
//
வாங்க கோவி.கண்ணன் சார் நன்றி
//
ReplyDeleteரசிகன் said...
suuppareyyyyyyy
maamss nellaa sollunga ..nerayaparukku puriyave maatenguthu..
avvvvv
//
வாப்பா தம்பி!!!
//
ReplyDeleteரசிகன் said...
ithellaam natural.thappillai nnu supera sooliyerukinga.atleast week endula oru batuler post ..hihi.keepit up this savei
//
:-)))))
//
ReplyDeleteகுசும்பன் said...
///cheena (சீனா) said...
குசும்பன் வேற என்னொவோ சொல்றாரு - நெரெய புத்தக ஆசிரியர்கள் பேரு எல்லாம் - எல்லாப் பொத்தகத்தெயும் படிச்சி அறிவெ வளத்துக்கிட்டாராமா ? வாழ்க - நல்வாழ்த்துகள்:///
ஆக அந்த புத்தக பேரு எல்லாம் உங்களுக்கு ஒன்னுமே தெரியாது? இதை நாங்க நம்பனும்,,, நம்பிட்டோம்:)
//
மறந்திட்டிருப்பார்பா !!
சரி விடு! விடு !!
//
ReplyDeletecheena (சீனா) said...
குசும்பா - சின்னப் பசங்க வெவரம் தெரியாத பசங்க படிக்கற புத்தகப் பேரெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும் - நம்புங்கடா பாவிகளா
//
அவ்வ்வ்வ்
என்னென்னமோ பேசிக்கறீங்க எனக்கு ஒண்ணும் புரியல :(
ReplyDeleteவெவரந்தெரியாத புள்ளயாவே வளர்ந்துட்டேன் போல :((
//
ReplyDeleteநந்து f/o நிலா said...
என்னென்னமோ பேசிக்கறீங்க எனக்கு ஒண்ணும் புரியல :(
வெவரந்தெரியாத புள்ளயாவே வளர்ந்துட்டேன் போல :((
//
இதெல்லாம் டூ மச், த்ரீ மச் இல்ல டூ ஹண்ட்ரெட் மச்.
குசும்பா இது நூலகத்தில் கிடைக்கும்மா..?
ReplyDeleteபடிக்காதவர்களுக்காகத் தான்..
***********
நான் படிச்ச மருதம் நீ படிச்சியிருக்கே
நீ படிச்ச நான்ஸி ஃப்ரைடடே நான் படிச்சியிருக்கேன்...
;)
***********
///குசும்பன் said...
///அறிவு’ சொல்வதெல்லாம் ‘சரோஜா தேவிகளும்’ இன்ன பிற புத்தகங்களும் வயதை ஒத்த நட்பு வட்டமும்தான்.///
லோக்கல் ஆசிரியர்கள் என்றால்
மருதம்
தென்றல்
லில்லி
எஜிக்கேட்டட் ஆசிரியர்கள் என்றால்
வாஸ்த்யாணன்
கொக்கோக முனிவர்
ஆங்கில ஆசிரியர்கள் என்றால்
ஜான்சன்
நான்சி பிரைடே///
//
ReplyDeleteTBCD said...
குசும்பா இது நூலகத்தில் கிடைக்கும்மா..?
படிக்காதவர்களுக்காகத் தான்..
***********
நான் படிச்ச மருதம் நீ படிச்சியிருக்கே
நீ படிச்ச நான்ஸி ஃப்ரைடடே நான் படிச்சியிருக்கேன்...
;)
//
அதெல்லாம் குசும்பன் பொக்கிஷமாக பாதுகாத்து வருவது யாருக்கும் ஓசி கொடுப்பதற்கில்லை!
/// TBCD said...
ReplyDeleteகுசும்பா இது நூலகத்தில் கிடைக்கும்மா..?
படிக்காதவர்களுக்காகத் தான்..
***********
நான் படிச்ச மருதம் நீ படிச்சியிருக்கே
நீ படிச்ச நான்ஸி ஃப்ரைடடே நான் படிச்சியிருக்கேன்...
;)
///
நினைச்சேன் மருதம் நடுபக்கம் கிழிக்க பட்டு இருக்கும் பொழுதே நினைச்சேன் இது நீங்க படிச்ச புத்தகம் என்று!!!
// TBCD said...
ReplyDeleteகுசும்பா இது நூலகத்தில் கிடைக்கும்மா..?
படிக்காதவர்களுக்காகத் தான்..///
சென்னை ரோட்டர கடையில் தாராளமாக கிடைக்கும் வாங்கிக்கலாம், ஆமா நாங்கதான் ஏதோ சின்ன பிள்ளைங்க அப்படின்னா நீங்களுமா?
//நந்து f/o நிலா said...
ReplyDeleteஎன்னென்னமோ பேசிக்கறீங்க எனக்கு ஒண்ணும் புரியல :(
வெவரந்தெரியாத புள்ளயாவே வளர்ந்துட்டேன் போல :((///
ஆமா சிவா சைனிஸ்ல எழுதி இருக்கிறார், நான் பார்சியில் ரிப்ளே எழுதி இருக்கேன் இவருக்கு ஒன்னும் புரியலை! பெட்டுக்கு கீழே வரிசையா ஒளிய வெச்சுக்கிட்டு பேசுற பேச்ச பாரு!!