தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா!
94 ம் ஆண்டுக்குப்பிறகு ஒவ்வொருநாளும் தாயகப்பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் இல்லாது போய்விட்டது.முந்தியென்றால் பள்ளிக்கூடத்திலயும் சரி வீட்டயும் சரி எந்தநேரமும் ஏதாவதொரு தாயகப்பாடல் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கும்.அப்பவும் இந்த ipod மாதிரி ஏதாவதிருந்திருந்தால் எல்லாத் தாயகப்பாடல்களையும் பாடமாக்கியிருக்கலாம்.அப்பிடியிருந்தும் 90 களில் வந்த கரும்புலிப்பாடல்கள் முதல் எல்லாப்படாட்டுகளையும் பாடமாக்கி மாவீரர் தினத்துக்கு ஊரில போட்டிருக்கிற பந்தல்வழிய பாடிக்கொண்டு திரியுறது. கிட்டண்ணா நினைவுவெளியீடாக வந்த ஒரு புத்தகத்தில் இப்படியான பாடல்வரிகள் எல்லாம் இருந்ததால் பாட்டைப்பாடமாக்கிறது பெரிய விசயமில்லை.அந்தக்காலத்தில பள்ளிக்கூடங்களிடையே நடைபெறும் நடனப்போட்டிகளிலும் தாயகப்பாடல்களுக்கு ஆடுவது ஒரு ரெண்டாக இருந்தது அதுவும் முக்கியமாக "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் " , "பொங்கிடும் கடற்கரையோரத்திலே " போன்ற பாடல்வரிகளும் நடனமும் எங்களுக்கத்துப்படி.தவிர இப்ப நாங்கள் இங்க சினிமாப்பாட்டுகளை வைத்துப் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சி செய்வது போல ஊரில் கோயில் வாசலில் இருந்துகொண்டு பெரியவர்கள் சின்னவர்கள் எல்லாரும் கூடியிருந்து தாயகப்பாடல்களைப் பாடுவது மறக்கமுடியாதவொன்று.
90களில் அல்லது அதற்கு முதல் வெளிவந்த எனக்குப்பிடித்த பாடல்கள் பலவுண்டு.முக்கியமாக "இந்தமண் எங்களின் சொந்த மண் இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்" ,"எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்" ,தென்னங்கீற்றுத்தென்றல் வந்து மோதும் " "ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று ", "கடலதை நாங்கள் வெல்லுவோம் " ," ,எம்மை நினைத்து யாரும் கலங்கக்ககூடாது " இப்பிடி இன்னும் பலபாடல்கள்.தாயகத்திரைப்படப்பாடல்கள் அவ்வளவாக நினைவிலில்லை ஆனால் "பிஞ்சு மனம் " படத்தில் இடம்பெற்ற " பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது" பிடித்த பாடல்.
இப்போது தாயகப்பாடல்கள் அடிக்கடி கேட்பதில்லை.அப்பிடி எப்போதாவது கேட்டவற்றில் "ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி " என்ற குட்டிக்கண்ணன் பாடிய பாடலும் "முட்டி முட்டிப்பால் குடிக்கும் கன்னுக்குட்டி போல" "மேகம் வந்து கீழிறங்கி முத்தம்கொடுக்கும்" "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லைப்போராடுமா" போன்ற பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
இனி தாயக கீதங்கள் பாடும் வலைப்பதிவுகளும் தளங்களும்.
வன்னியனின் ஈழப்பாடல்கள்
பாடல், பாடல்வரி, மற்றும் பாடலைப்பற்றிய குறிப்புகளுமுண்டிங்கு.
சந்திரவதனாவின் தாயககீதங்கள்
யாழ்களத்தில் தாயகப்பாடல்பவரிகள்
தூயா ஆரம்பித்து வைத்துப் பலரும் தங்களுக்குப்பிடித்த தாயகப்பாடல்களின் பாடல்வரிகளை இணைத்துள்ளார்கள்.
தாயகப்பாடல்களில் அநேகமானவற்றை இங்கே கேட்கலாம்.
தமிழீழ விடுலை கானங்கள்
தமிழர் இணைப்பகம்
youtube ல் கிடைத்த சில தாயக கீதங்கள்
போரம்மா உனையன்றி யாரம்மா
அழகே அழகே தமிழழகே
பொய்யாகிப் போகாதோ இந்தச்சேதி
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மண்ணில் புதையும் விதையே
கட்டுமரமேறிப் போற மச்சான்
கண்ணீரில் பூக்குதே
வெண்ணிலவும் சாய்ந்து ஊர்தூங்கும் வேளை
* இவை தவிர இன்னும் சில பாடல்களை youtube லிருந்து எடுத்து வைத்திருந்தேன் ஆனால் அவற்றில் 3 பாடல்கள் youtubeலிருந்து அழிக்கப்பட்டுவிட்டனவாம்.ஒரு நாளைக்கு 3பாட்டென்ணடால் இவையம் விரைவில் அழிக்கப்படலாம்!
|
|
சினேகிதி
ReplyDeleteநீங்கள் கொடுத்த இணைப்பு வேலை செய்யவில்லை.
சரியானதை இங்கு தருகிறேன்
http://enathublogs.blogspot.com/
http://thayagageetham.blogspot.com/
ஓ..நன்றி மாத்திட்டன்!
ReplyDeleteம்... அப்புகாமி பெற்றேடுத்த........
ReplyDeleteநன்றி
athne antha paadai epidi maranthen ..oorerandu perukulle urangum unmaikalum nalla paadu!
ReplyDelete