07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 4, 2009

ரிஷானுக்கு நன்றியும் - வேலனுக்கு வரவேற்பும்

அருமை நண்பர் எம்.ரிஷான் ஷெரீப் ஒரு வார காலம் ஆசிரியராகப் பொறுப்பேற்று அரிய முறையில் பணியினை முடித்து நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் புதிய முறையில் பல பதிவர்களை, ஏறத்தாழ எண்பது பதிவர்களை சிறிய அறிமுக வரிகளுடன் துறை வாரியாக, அறிமுகப் படுத்தி சற்றேரக்குறைய இருநூறுக்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றிருக்கிறார். சுய அறிமுகம், கவிஞர்கள், கதாசிரியர்கள், மருத்துவர்கள், ஆங்கில மொழி விற்பன்னர்கள், தொழில் நுட்பத்துறையினர், கணினித்துறையினர், சமையல் வல்லுனர்கள், வலைஅரசிகள், இலங்கையைச் சார்ந்த பதிவர்கள்,மற்றும் பலதுறைகளில் சிறந்து விளங்கும் பதிவர்கள் என பல பதிவர்களை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்தி விட்டார். இவரது கடும் உழைப்பு பாராட்டத்தக்கது. அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி அன்புடன், நட்புடன் விடை அளிக்கிறோம்.

--------------------------------------------

அடுத்து சனவரி 5ம் நாள் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் வடகரை வேலன். இவர் கோவையில் அச்சுத்துறையில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். நல்ல வாசிப்பு அனுபவம் உடையவர். சிறு வயதிலிருந்தே வாசிப்பதில் ஆர்வமுடையவர்.வலைப்பூவினில் பல்வேறு முகம் காட்டுபவர். அவரை வருக வருக - பதிவுகளைத் தருக தருக என அன்புடன் அழைக்கிறோம்.

நட்புடன் .... சீனா ......

3 comments:

  1. வாங்க வேலன் அண்ணாச்சி... கதம்பம் கட்டி கலக்குங்க....

    நண்பர் ரிஷானுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்....

    ReplyDelete
  2. நன்றி நண்பர் மஹேஷ் :)

    வேலனை அன்புடன் வரவேற்கிறேன் :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது