07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 6, 2009

எங்கூரு பதிவருக

என்னப் போலவே மே மாசம்தான் கிருஷ்ணாவும் பதிவெழுத வந்தாப்ல. வந்ததும் அம்புட்டுப் பேரயும் வசமாக்கியாச்சுல்லா. இன்னைக்கும் அவுகளுக்குத்தான் அதிகமான பாலோவருன்னாப் பாத்துக்கிடுங்களேன். எனக்கு அதுல ரெம்பச் சந்தோசம். ஏம்னாக்கா அவரும் நானும் ஒரே ஊரு உடுமலைப் பேட்டை. எப்படின்னு கேக்கியளா அதுதான் நான் வாக்கப்பட்ட ஊரு (அட மாமனார் ஊருங்க)

வலைக்கு வருமுன்னே புள்ளி பெரிய ஆளாத்தாம் இருந்திருக்காக. குமுதத்துல கதை எழுதியிருக்காக, பட்டுக்கோட்டைப் பிரபாகர் சார் கைப்பட கடிதம் எழுதி ஊக்குவிச்சிருக்காக. அப்பப்ப எழுதுனதெல்லாம் ஒரு நோட்டுலயோ இல்லன்னா டயரியிலோயோ எழுதி வச்சிருக்காக. அத எடுத்துப் பதிவாப் போட்டு அனியம் பேரு மனசுல இடம் பிடிச்சாக.

அந்த மாதிரி ஒரு டயரியக் காணாமப் பட்ட பாட்டப் பாருங்களேன் காணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்.

இவரு எழுதுனதில எனக்குப் பிடிச்ச ரெண்டு பதிவுகல ஒன்னு இந்தக்கடிதம் தந்தை எனக்கெழுதிய கடிதம்!. இதப் போல ஒரு கடிதம் நாம் எல்லோரும் நம்ம அப்பாவுக்கு எழுதனும்னு நெனைச்சிருப்போம், ஆனா என்ன காரனத்தாலோ அது தள்ளி தள்ளிப் போயிடுதுல்லா.

அதே மாதிரித்தான் நம்ம வீட்டம்மாவ(தங்கமணிய)ச் சரியாக் கவனிக்காம அலட்சியப் படுத்துறோம். அது எப்படியெல்லாம்னு விலாவாரியாச் சொல்லியிருக்காரு.உமாவுக்கு... படிச்சதும் நம்மளப் பத்தின இருமாப்பு கொஞ்சம் கொறையத்தான் செய்யுது.

ஒரு தொழில் நல்லா நடக்கப்பவே அதுல சரிவு வந்தாச் சமாளிக்க வழி வகைகளச் செஞ்சுக்கிடனும்ங்கது முக்கியம்ங்க. விளம்பரப் போர்டு வரையுதது, பேர்ப் பலகை எழுதுததுன்னு ஒரு தொழில் ரெம்ப நசிஞ்சிருச்சி.இப்பல்லாம் எல்ல்லொரும் பிளக்ஸ் போர்டுதான் வைக்காவ. அது எத்தனபேரு வயித்துல அடிக்கிதுன்னு யாருக்கும் தெரியல. அது மாதிரி ஒரு ஓவியக் கலைஞர் பத்தின இந்தப் பதிவப் படிச்சதும் மனசே சரியில்ல.கனலி கலை(ந்த)கூடம்

சில பிரபலங்க அவகளோட வீட்டுல எப்படிப் பேசுவாகன்னு கற்பனை பண்ணியிருக்காரு பாருங்க. படிச்சு நான் நல்லாச் சிரிச்சேன். நீங்களும் படிங்க, முடிஞ்சாச் சிரிங்க. இவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்


வெயிலான்ங்கிற பேருல எழுதுற ரமேசு நம்ம பக்கந்தேன்னு நமக்கு ஒரு கூடுதல் அட்டாச்சுமெண்டுல்லா. விருதுநகர் காரவுக; திருப்பூர்ல இருக்காக; நிறையப் படிப்பாக; கொஞ்சமா எழுதுவாக.

திருப்பதிக்குப் போறமுன்னா மத்தவுக என்ன சொலுவாக எனக்கு ரெண்டுலட்டு வாங்கியான்னுதானே? அதேமாதிரி பழனிக்குப் போறம்னா எனக்குப் பஞ்சாமிர்தம் வாங்கியான்னுவாக. திருப்பூர்ல வேல பாக்கவங்கிட்ட வேற என்ன கேக்க முடியும்? ரெண்ட்டு டி சர்ட்டுதானேன்னு சாதாரணமா நெனைக்கோம், ஆனா அது எம்புட்டுத் தூரம் மனசப் புண்ணாக்கும்னு பார்த்தியளா? திருப்பூரும், எதிர்பார்ப்பும்

சுப்பிரமணியபுரம்னு ஒரு படம் வந்து பட்டயக் கிளப்புச்சுல்லா? அந்தப் படத்தப் பத்துன விமர்சனத்துலயே எனக்கு ரெம்ப்பபிடிச்ச விமர்சனம் இதுதான். நிறைகுறைகளை சரி சமமா அலசியிருக்காரு பாருங்களேன்.மதுரை 1980

எல்லாரும் அவுகவுக மொதோ அனுபவத்தப் பத்தி பத்வு எழுதுனதுல நம்ம வெயிலான் எதப்பத்தி எழுதியிருக்காக பாருங்க. இருந்தாலும் அத நல்ல நக்கல் நையாண்டியோட சொல்லியிருக்காகல்லா? மொத அனுபவம்

நமக்கும் இவுகளுக்கும் ஒரு நல்ல அலைவரிசை செட்டாயிட்டதுனால, படிச்ச நல்ல பதிவுகளப் பகிர்ந்துக்குவோம். அனேகம் வலைப் பதிவுகள இவுகதான் எனக்கு அறிமுகம் செஞ்சாங்க.

கோயமுத்தூருன்னால அதோட பேச்சு வழக்குத்தாங்க சொகமான விஷயம். வந்துபோட்டு சாப்டுபோட்டு இருந்துபோட்டு போங்க மாதிரியான பேச்சுங்க. சில வார்த்தைககளக் கேக்கவே ரெம்பச் சொகமா இருக்கும். அந்த பேச்சு வழக்குல பட்டயக் கெளப்புறதுல கில்லாடிங்க நம்ம லதானந்த் சார்வாள். ஆள் பாக்குறதுக்கு பெரிய மீசையோட கம்பீரமா இருந்தாலும் உள்ளுக்குள்ள ரெம்ப சாப்டான ஆசாமிங்க இவரு. ஆனா ரெம்பக் குசும்பு புடிச்சவருங்க இவுக.

ஜெயமோகனும் இவரும் பேசிக்கிற இந்தப் பதிவப் படிங்க. ஒ ஹென்றி எழுத்துக்கள்ல கடைசி வரில ஒருபன்ச் வச்சி எழுவாருல்லா அது மாதிரி எழுதியிருக்காக. ஜெயமோகனுடனான கார் சவாரியும் சடன் பிரேக்கும்

இவரு காட்டாபீசரா (காட்டிலாகா அதிகாரி) இருக்கதால அங்கனக்குள்ள இருக்க செடிகள்ல வித்தியாசமான செடிகளப் பத்தியும் எழுதியிருக்காக பாருங்க.
அசைவம் சாப்பிடும் தாவரம் -நெபந்தஸ்

பதிவு எழுதுததுல சந்தி பிழைம்பாங்களே அத வராம எழுத என்ன செய்யனும்னு இங்கன சொல்லியிருக்காக பாருங்க “சொல்லிப் பார்” – டாக்டர் மு.வ. அவர்களின் எளிய ஆலோசனை


உடுமலை அந்தியூரில் பிறந்து, அமெரிக்காவில் பொட்டி தட்டும் பழமைபேசி நல்ல விஷயங்களப் பத்தின பதிவுகளும் எழுதுதாக. தம்பதிகளப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வுவாழ்கன்னு வாழ்த்துவோம். ஆனா 16 செல்வங்கள் என்னங்கிறதப் பத்தின பதிவு இது.பதினாறும் பெற்று பெருவாழ்வு-1, பதினாறும் பெற்று பெருவாழ்வு-2

காளமேகப் புலவர் சிலேடைப் பாடலத்தாம் பாடுவாருன்னு நெனைச்சா தானா தீனா தோனா தூனா பாட்டு ஒன்னு எழுதி்யிருக்காரு அத அர்த்தத்தோட பதிஞ்சிருக்காரு கவி காளமேகப் புலவரின் பாடல் ஒன்று

"கடுதாசி"ன்னா என்ன?
"சத்தக்கூலி"ன்னா என்ன?
"ஒறம்பு"ன்னா என்ன?
"ஆவுரோஞ்சிக் கல்"லுன்னா என்ன?
"இம்மி"ன்னா என்ன?
"மாமாங்கம்"னா என்ன?
"முக்கோடி", "யுகம்"ன்னா என்ன?

இந்தத் தலைப்புகள்ல இவரு எழுதுன பதிவுகளும் நல்லா இருக்குங்க. சாம்பிளுக்கு ஒன்னு ரெண்டுதான் சொல்லியிருக்கேங்க. மத்ததுகளையும் தேடிப் படிங்க.

நாள மத்த பதிவர்களப் பார்போம்.

12 comments:

  1. அவ்வ்வ்வ்... நானு உடுமலைதேன்.... என்னிய உட்டுப்புட்டீங்களே ???? நான் உங்க பேச்சு கா.....

    ReplyDelete
  2. \\"எங்கூரு பதிவருக"\\

    நல்ல ஆரம்பம் ...

    ReplyDelete
  3. அறிமுகம் அருமை,

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. இந்த மாதிரி உள்ளூர்க்காரர்களைத் தூக்கி விடும் குறுகிய கண்ணோட்டம் கண்டிக்கப் படவேண்டும் :)

    லதானந்த் மற்றும் பழமைபேசி அறிமுகமான, சமீபத்திய 'நட்சத்திரப் பதிவர்கள்'. அவ்வளவாக அறியப் படாத 'வெயிலான்' மற்றும் இது வரை கேள்விப்பட்டிராத ..ம்ம். பெயர் என்ன .. ம்ம். 'பரிசல்காரன்' என்ற வலைபூக்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. எங்கூருன்னு சொல்லிட்டு வாக்கப்பட்ட ஊர‌ பத்தி சொல்லி ஏமாத்திப்புட்டீங்களேண்ணே... அவ்வ்வ்.. (எல்லாரும் ஏற்கனவே பேமஸ்ங்கறதால் அல்லாத்தியும் ஏற்கனவே படிச்சாச்சு)

    ReplyDelete
  6. ஒவ்வோரு பதிவும் அவர்களுடய மாஸ்டர் பீஸ்

    கலக்கிபுட்டிங்க!

    ReplyDelete
  7. ///வால்பையன் said...
    ஒவ்வோரு பதிவும் அவர்களுடய மாஸ்டர் பீஸ்

    கலக்கிபுட்டிங்க!///

    repeateyyyyyyyyyy

    ReplyDelete
  8. //எங்கூருன்னு சொல்லிட்டு வாக்கப்பட்ட ஊர‌ பத்தி சொல்லி ஏமாத்திப்புட்டீங்களேண்ணே... அவ்வ்வ்..//

    அவ்வ்வ்வ்வ்வ்...
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. நம்ம கடைப்பக்கம் ஏகப்பட்ட ஆளுக தென்படுதே? என்னடானு பாக்க வந்தேன்.

    இதானா சமாச்சாரம்.

    ReplyDelete
  10. ஊருக்காறங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்தா, நாங்க என்ன பண்றது... தஞ்சாவூர்காரங்க என்னை மனசில வைச்சுக்குங்க.

    ReplyDelete
  11. நன்றி மகேஷ். நீங்க இல்லாமலா?
    நன்றி ஜமால்
    நன்றி தென்றல்
    நன்றி அனுஜன்யா. உங்க கோபம் புரியுது ஆனா ஒன்னு ரெண்டு பதிவு அதையும் போடனுமில்ல.
    தாமிரா நாளை பதிவுல நீங்கதான் முதல்ல. நேத்தே அடிச்சி டிராப்ட்ல இருக்கு.
    நன்றி வால்
    நன்றி TVRK சார்
    நன்றி அத்திரி
    நன்றி வெயிலான்
    நன்றி அன்புமணி. உங்க அப்பா பேரு ராமதாசு இல்லியே?

    ReplyDelete
  12. ஆஹா! வேலன் நம்ம ஊரா! நடத்துங்க

    நம்ம ஊர் பதிவர்கள் நீங்கள், கே கே, வெயிலான் லதானந்த் சார் என்று பலர் பிரபலமாக இருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது