நானும் இவங்க ஜாதி …
இவங்க ஜாதிதான் நானும்ன்னு சொல்லிகிறதுல சந்தோஷம்ங்க
வலையில உலா வரும் போது நான் அதிகம் கவிதைகளையும், சில கதைகளையும், கொஞ்சமா கட்டுரைகளையும் பார்ப்பதுண்டு.
கிழே இருக்கும் இவர்களின் தளங்களையும் பாருங்கள். இனையத்தில் அதிகம் இருக்கக்கூடியவர்களுக்கு மிகவும் உதவும் விதமாக, இவர்கள் வழி முறைகளை சொல்கின்றனர். மென்பொருளுக்கும், வன்பொருளுக்கும் பல உதாரணங்கள் கொண்டு இவர்கள் விளக்குகிறார்கள். இந்த வரிசையில் முதன் முதலாக நான் (மட்டுமல்ல பலர்) அறிந்த ஆசான் பி.கே.பி.
-------------------------------------------------------------------------இன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------
தமிழ்நெஞ்சம், இவரின் SQL பற்றிய தொடர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மிக எளிமையாக சொல்லித்தருகிறார்.
300 வகையான மென்பொருள்களின் சுட்டிகளை தொகுத்துள்ளார் இவர், பெயர் தெரியவில்லை.(தெரிந்தவர்கள் பின்னூட்டி சொல்லவும்). அழகிய முறையில் வகை(ப்)படுத்தி தந்துள்ளார். எல்லாமே இலவசம்.
ஸ்ரீ, இவர் தமிழ் மின் புத்தகங்கள் பலவற்றை தரவிறக்கம் செய்யும் வகையில் தந்துள்ளார்.
பாடும் குயில் - குழந்தைகளின் குதூகலத்தை பதிவு செய்ய... இங்கே சென்று பாருங்கள்
விஜய் பாலாஜி – இது ஒரு ஆங்கில வழி தகவல் தளம் XML பற்றிய இவரது கேள்வி பதில்கள்.
TamilhackX இவர் ஒரு வித்தியாசமான ஒரு புரோகிராம் ~ Unchrome அறிமுகம் செய்கிறார்.
தேன் தமிழ் இவர் கம்பியூட்டர் வைரஸ் : தடுப்பது எப்படி...? என்றும் சொல்லித்தருகிறார்.
Kricons – இங்கே சென்று பார்த்தால் மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில் எப்படி என்று அறியலாம்
வேலன்:-கம்யூட்டர் அகராதி பற்றி இங்கு பாருங்கள்.
சந்தோஷ் - இவர் மாணவர்களுக்காக Microsoft சுட்டியை Visual Studio 2008, SQL Server 2005,windows 2003 இலவசமாக வேண்டுமா? கொடுத்துள்ளார்.
இன்னும் பலர் இருக்கின்றனர். மேலே உள்ளவர்களும் பற்பல விடயங்களை பகிர்ந்துள்ளனர். சென்று பார்த்து பயன் பெறுவோம், அவர்களை மென்மேலும் உற்சாகப்படுத்துவோம்.
1) ஓட்டு,
2) பின்னூட்டம்,
3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு
நன்றியுடனும் நட்புடனும்.
--- இன்னும் விரியும்.
|
|
me the first
ReplyDelete//நானும் இவங்க ஜாதி …//
ReplyDeleteநானுந்தானுங்கோ...
வழக்கம போல நல்ல அறிமுகங்கள் நன்றி ஜமால்
ReplyDeleteபோட்டாச்சா...
ReplyDeleteஉள்ளேன் ஐயா மட்டும் சொல்லிக்கிறேன்.
Kricons – வலைப்பூ அறிமுகமானது தான் மற்றவை புதிது...
ReplyDeleteஇன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteஓ..எல்லாமே டெக்கிகள் அறிமுகமா ??
ReplyDelete//இந்த வரிசையில் முதன் முதலாக நான் (மட்டுமல்ல பலர்) அறிந்த ஆசான் பி.கே.பி.//
ReplyDeleteஇத நானும் கண்டிப்ப சொல்லியே ஆகணும்...
புதிய வலைப் பதிவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் அறிமுகங்கள்..
ReplyDelete//1) ஓட்டு,//
ReplyDeleteபோட்டாச்சு...
//2) பின்னூட்டம்,//
ReplyDeleteபோய்கிட்டு இருக்கு...
//3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு//
ReplyDeleteசந்திக்கிறோம்...
//நன்றியுடனும் நட்புடனும்.//
ReplyDeleteஇத நானும் சொல்லிகிறேன்...
பிகேபி யைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை..
ReplyDeleteஇவருடைய 'தேடிப்பிடித்தவை' முழுதும் பயனளிக்கக் கூடிய டெக்னிக்கல் தகவல்கள்.
முழுக்க முழுக்க தமிழில்..
// ஸ்ரீ, இவர் தமிழ் மின் புத்தகங்கள் பலவற்றை தரவிறக்கம் செய்யும் வகையில் தந்துள்ளார் //
ReplyDeleteஆஹா..இப்படி ஒரு வசதியா..எளிய முறையில் தமிழ் படைப்புகள் தரவிறக்கம்..
//ஒரு குழந்தை பிறந்து, தத்தித் தவழ்ந்து, நடக்கத் தொடங்கி, பள்ளிக்கு சென்று படித்து, வேலைக்கு செல்லும் வரை என அனைத்து பருவங்களையும் பதிவு செய்ய உதவும் இணையதளம் இது.
ReplyDeleteஇந்த இணையதளத்தில் இலவச உறுப்பினர் ஆவதன் மூலம் பல வசதிகளை பெறலாம். குழந்தைகளுக்கென தனிப்பட்ட டைரி ஒன்றை ஆன்லைனில் உருவாக்கலாம். அதில் பெற்றோர்கள் தங்களது குழந்தை பிறந்தது முதல் செய்த குறும்புகள், சேட்டைகள் பற்றி எழுதி வைக்கலாம். குழந்தைகளின் புகைப்படங்களை சேமித்து வைக்கும் `ஆன்லைன் ஆல்பம்' வசதியையும் பெறலாம். அதில் குழந்தைகளின் புகைப்படத்துடன் பெற்றோர்கள் தங்களது கருத்துகளையும் பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி தங்களது குழந்தையின் அருமை பெருமைகளை, நண்பர்கள் மற்றும் உறவினர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுடன் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
//
நான் சொல்லவில்லை..பாடும் குயில் சொல்கிறார்..எல்லாமே ஃபீரியாங்க....???
நோட் பண்ணிக்கிறேன்..பின்னாளில் உதவும்.
//இன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.//
ReplyDeleteஇது கிட்டத்தட்ட.. டெவலப்பர்கள், ஆஃப் லைனில் தாங்கள் டெவலப் செய்த கோடிங் கோப்புகளை (artifacts) CLEARCASE SNAPSHOT VIEW மூலமாக தங்கள் மடிக்கணினிக்கு தரவிறக்கம் செய்து கொண்டு,
வீட்டில் போய் ஆணி பிடுங்கும் கான்செப்ட்..மாதிரி...
ஜிமெயில் இது ஒரு நல்ல பரிசோதனை..முயற்சி செய்து பார்க்க வேண்டும்..
பயனுள்ள தகவல்..
என்ன இது
ReplyDeleteartifacts) CLEARCASE SNAPSHOT VIEW
ஒரு பதிவிட்டு கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்
இங்கே அந்த பதிவின் சுட்டியையும் போடுங்கள்
//விஜய் பாலாஜி – இது ஒரு ஆங்கில வழி தகவல் தளம் XML பற்றிய இவரது கேள்வி பதில்கள்.//
ReplyDeleteஇவருடைய "A BLOG FOR TECHNOLOGY" வலைதளம் மென்பொருளாலர்களுக்கு உதவும் வகையில் ஜாவா முதல் டாட்னெட் வரை..இவர் பதிவு போடாத டொமைனே கிடையாது என்பதுபோல் உள்ளது.
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஎன்ன இது
artifacts) CLEARCASE SNAPSHOT VIEW
ஒரு பதிவிட்டு கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்
இங்கே அந்த பதிவின் சுட்டியையும் போடுங்கள் //
இது கொஞ்சம் பெரிய கான்செப்ட்...
பின்னூட்டத்தில் சொல்வது கடினம்..கண்டிப்பாக ஒரு தனி பதிவு போடுகிறேன்.
நல்ல அறிமுகங்களுக்கு நன்றி ஜமால்!!
ReplyDeleteஓட்டுப் போட்டாச்சு!
//கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர் தற்போதைக்கு இயங்கும் பிரவுசர்களில் மிகவும் வேக மாக இயங்கும் பிரவுசர் தான். பல புதிய வசதிகளையும் இது தந்துள்ளது என்பதுவும் உண்மையே. ஆனால் இந்த பிரவுசர் நம்மைப் பற்றி பல பெர்சனல் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது. இதனை கூகுள் பாதுகாப்பாக பயன்படுத்துமா என்று சந்தேகம் வந்ததாலேயே இந்த புரோ கிராம் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.//
ReplyDeleteகூகிள் குரோம் பிரவுசர்களை உபயோகிப்பவர்களுக்கு TamilhackX விடுக்கும் ஒரு சிறு எச்சரிக்கை..
நல்ல அறிமுகங்கள். நன்றி
ReplyDeleteதளங்களுக்கு சென்று பார்கிறேன் :-)
ReplyDeleteபுதிய வலைப் பதிவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் அறிமுகங்கள்..
ReplyDeleteஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.///
ReplyDeleteஅப்படியா நல்ல செய்தி!!முயற்சி செய்யலாம்..
நம்மைப் பற்றி பல பெர்சனல் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது. இதனை கூகுள் பாதுகாப்பாக பயன்படுத்துமா என்று சந்தேகம் வந்ததாலேயே இந்த புரோ கிராம் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.//
ReplyDeleteகூகிள் குரோம் பிரவுசர்களை உபயோகிப்பவர்களுக்கு TamilhackX விடுக்கும் ஒரு சிறு எச்சரிக்கை..
January 29, 2009 11:19:00 AM IST//
உண்மையா?
Firefox தானே நிறைய சேகரிப்பதுபோல் தெரியுது.
//thevanmayam said...
ReplyDeleteஉண்மையா?
Firefox தானே நிறைய சேகரிப்பதுபோல் தெரியுது. //
குரோமும் இல்லை...FireFOX-ம் இல்லை..
நாம் எப்போதும் IE தான்.மற்ற பிரவுசர்களைப் பற்றி கவலைப் படுவதேயில்லை..
நாம் எப்போதும் IE தான்.மற்ற பிரவுசர்களைப் பற்றி கவலைப் படுவதேயில்லை..//
ReplyDeleteஎன்னிடம் IE கணினியை
நிப்பாட்டி போட்டுப்பாக்குது!!
//கம்பியூட்டர் வைரஸ் : தடுப்பது எப்படி...? // தேன்தமிழ்
ReplyDeleteஅதுமட்டுமின்றி ஆண்டிவைரஸ் இயங்கும் முறை குறித்தும் தேன்தமிழ் சொல்லித் தருகிறார்.
கணிணி வைரஸ்களைப் பற்றியதொரு தெளிவான பதிவு...
நானும் வந்தாச்சு
ReplyDeleteபி.கே.பி. நானும் அறிந்திருக்கிறேன்
நாவலுக்கு ஒரு PKP போல் வலைத்தளதிற்கு ஒரு பி.கே.பி நு சொல்லலாம் இவரை..
இவருடைய வலைக்கு சென்றுவிட்டு பின்னூட்டமிருகிரேன்
போலந்து நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை இணையத்தள அரட்டைப்பகுதியொன்றில் நேரடி ஒளிபரப்புச் செய்தமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது///
ReplyDeleteபடித்தீர்களா?
//போலந்து நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை இணையத்தள அரட்டைப்பகுதியொன்றில் நேரடி ஒளிபரப்புச் செய்தமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது///
ReplyDeleteபடித்தீர்களா?//
உரலைச் சொல்லுங்கள்..பார்ப்போம்..
அருமையான அறிமுகங்கள்!
ReplyDeleteமிகவும் பயனுள்ளவை
மிக்க நன்றி
போலந்து நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை இணையத்தள அரட்டைப்பகுதியொன்றில் நேரடி ஒளிபரப்புச் செய்தமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ReplyDeleteகடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் இணைந்து தனது 27 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய அந்நபர், தான் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் Interia.p1 இணையத்தளத்துடன் தொடர்பை ஏற்படுத்திய மேற்படி இளைஞன், இணையத்தள புகைப்படக் கருவியை செயற்படுத்தி விட்டு அதன் முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்படி இணையத்தளத்தில் தற்கொலைக் காட்சியைப் பார்த்த ஒருவர், பொலிஸாருக்கு அறிவிக்கவும், அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர்.
அறையிலிருந்த குழாய் இணைப்பில் கயிற்றைக் கட்டி தூக்கிட்ட நிலையில் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.///
எனக்கு தபாலில் வந்தது..
பொறுமையாய் சென்று பார்க்கிறேன்
ReplyDeleteபி.கே.பியை தவிர மற்ற ப்லாக் அறிமுகம் அவ்வளவாய் இல்லை.
அறிமுகத்திற்கு நன்றி
super..
ReplyDeleteநன்றி ஜமால். நிறைய யூஸ்ஃபுல்லான அறிமுகங்கள்.
ReplyDelete:))
//(மூன்று அறிமுகங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது ...)//
ReplyDeleteஇதுக்கு பதில் இன்னும் சொல்லவே இல்லையே அண்ணா.. :((
நல்ல அறிமுகங்கள் :)
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
ReplyDeleteநன்றிகள் ஜமால்,
ReplyDeleteமற்றும் அனத்து வலைப்பூ நண்பர்களுக்கும் வணக்கங்களோடு வாழ்த்துக்கள்
நம்ம வர்றதுக்குள்ள இன்னொன்றை ஆரம்பித்து விட்டீங்க அதனால திரும்பவும் ஒருதடவை
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
புது அறிமுகங்கள் எல்லாம் நல்லா இருக்குங்க.
ReplyDeleteஅறிமுகம் ஆனவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நானும் உள்ளேன் ஐயா!
ReplyDeleteவந்தேன்..கவனிக்கிறேன் :-)
ReplyDeleteஜமால் தினம் தினம் ஒரு புது அறிமுகமா ??
ReplyDeleteம்ம்ம் இன்னும் உங்கள் பக்கத்தில்
எத்தனை அறிமுகம் ?
யாராவது ஒளிஞ்சி இருக்கீங்களா
ReplyDeleteவெளியே வாங்கப்பா
தமிழ்நெஞ்சம் அவர்களின் ஸீக்வெல் சென்றவாரம் தமிழ்மண முகப்பில் பார்க்க நேர்ந்தது. பாகம் அஞ்சு வரைக்கும் வந்திருச்சா என புக்மார்க்கும் செய்துவைத்திருக்கிறேன். (ஹி.ஹி. படிப்போம்ல :)))
ReplyDeleteமற்றவர்களின் அறிமுகமும் மிக்க நன்று. வழக்கம் போல் மற்ற பதிவுகளிலும் கலக்க வாழ்த்துக்கள்.
அனைத்தும் உபயோகமான பதிவுகளின் வலைப்பூக்கள்.
ReplyDeleteநன்றி
அன்புடன் அருணா
நல்ல தகவல்
ReplyDeleteநானும் வந்தாச்சு ஜமால்.சுகம்தானே!
ReplyDelete5 நாளுக்குள்ளே எத்தனை மாற்றங்கள் இணையத்தில்!அப்பாடி!
ஜமால்,புதிய விஷயங்களை இன்னும் அறிமுகப்படுத்துங்கள்.முடிந்த அளவுக்குப் புரிந்துகொள்கிறேன்.நன்றி.
ReplyDeleteஇன்னும் புதிய பதிவு காணலியே!!!
ReplyDeleteஅ.மு.செய்யது said...
ReplyDelete//ஒரு குழந்தை பிறந்து, தத்தித் தவழ்ந்து, நடக்கத் தொடங்கி, பள்ளிக்கு சென்று படித்து, வேலைக்கு செல்லும் வரை என அனைத்து பருவங்களையும் பதிவு செய்ய உதவும் இணையதளம் இது.
இந்த இணையதளத்தில் இலவச உறுப்பினர் ஆவதன் மூலம் பல வசதிகளை பெறலாம். குழந்தைகளுக்கென தனிப்பட்ட டைரி ஒன்றை ஆன்லைனில் உருவாக்கலாம். அதில் பெற்றோர்கள் தங்களது குழந்தை பிறந்தது முதல் செய்த குறும்புகள், சேட்டைகள் பற்றி எழுதி வைக்கலாம். குழந்தைகளின் புகைப்படங்களை சேமித்து வைக்கும் `ஆன்லைன் ஆல்பம்' வசதியையும் பெறலாம். அதில் குழந்தைகளின் புகைப்படத்துடன் பெற்றோர்கள் தங்களது கருத்துகளையும் பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி தங்களது குழந்தையின் அருமை பெருமைகளை, நண்பர்கள் மற்றும் உறவினர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுடன் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
//
நான் சொல்லவில்லை..பாடும் குயில் சொல்கிறார்..எல்லாமே ஃபீரியாங்க....???
repeattu
அடடா...எத்தனை எத்தனை புதுப் புது அறிமுகங்கள்.வலைச்சர ஆசிரியராக பல புதிய (என்னையும் தான்)பதிவர்களை எண்ணிக்கை விகிதாச்சார நம்பிக்கைகளில் எல்லாம் பட்டுக் கொள்ளாமல் சலிக்காமல் பலரையும் பயனுள்ள குறிப்புகள் தந்து அறிமுகம் செய்த விதம் மிக அருமை ஜமால்.எல்லாப் பதிவர்களின் சார்பாகவும் நன்றிகள் பல.
ReplyDeleteஇம்முறை தமிழ் கணிணி வலைப்பதிவுகளா?
ReplyDeleteஇன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது சாத்தியமில்லாதது..
எனது ஓட்டு,
உங்களுக்கே////