எழுதி மேற்ச்செல்லும் இலக்கியம்
இலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கும் சமுதாயமே முன்னேறும் என்பதும்,
எழுத்து விதைகள்
இதயங்களில்
தூவப்படும் பொழுது
செழித்து வளர்வது
ஒரு
தனி மனிதனல்ல
சமுதாயம்
என்ற மேத்தாவின் கவிதை வரிகளும் என்னுள் ஆழப் பதிந்தவை.
இலக்கிய உலகில் ஏற்கனவே புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வலைப் பக்கமும் தங்கள் கை வரிசையைக் காட்டுவது ஆரோக்கியமான ஒன்று. அவ்வகையில் பெயர் பெற்றவர்கள் : எஸ்.ரா, ஜெயமோகன், சாரு.
எஸ்.ராமகிருஷ்ணன்
இவரைத் துணையெழுத்து மூலம் தான் அறிந்து கொண்டேன். விகடனில் வெளியான கட்டுரை அது. பத்தி எழுத்துக்கள் எப்பொழுதும் ஒரு தட்டையான மொழியிலேயே வாசகனை அருகில் வரவிடாத ஒரு மேதாவித்தனத்துடன் எழுதப்பட்டிருக்கும். பத்தி எழுத்துக்களைத் தொடர்ந்து சுவராசியத்துடன் வாசிக்கச் செய்ததில் சுஜாதா, எஸ்.ரா மற்றும் ஜெயமோகனுக்கு முக்கியபங்கு இருக்கிறது.
இவரது எழுத்துக்களில் இயல்வாழ்வில் காணும் விஷயம் ஒரு புதிய பரிமானத்தில் வெளிப்படும். அதிகம் கையாளும் உவமைகளும் வித்தியாசமாக இருக்கும்.
இவரது சிறுகதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று
2008-ன் முக்கிய படங்கள், நூல்கள் மற்றும் வலைப்பூக்கள் பற்றிய இவரது தேர்வுகள்
ஜெயமோகன்
தமிழ் இலக்கிய உலகில் இவருக்கென்று ஒரு இடமிருக்கிறது. தன்னுடைய பல்தரப்பட்ட எழுத்துக்களாலும் விமர்சனங்களாலும் ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். சிறுகதை, குறுநாவல், நாவல், இலக்கிய விமர்சனம் என எல்லாத் துறையிலும் பிரகாசிப்பவர்.
ஒரு ஹிப்பி பேருந்தில் அமர்ந்திருந்தான். காலில் ஒற்றைச் செருப்புடன்.
அருகே வந்து அமர்ந்த முதியவர் கேட்டார் ”ஒரு செருப்பு தொலைந்துவிட்டதோ?”’
”இல்லை. ஒன்று கிடைத்தது”
இந்த நகைச்சுவைக்கும் சிறுகதை எழுதுவது எப்படி என்பதற்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கட்டுரையப் படிச்சுப் பாருங்க, சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
நமது தேர்வு முறையைப் பற்ரி இவர் எழுதிய இந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தேர்வு
சமீபத்தில் எழுதிய இந்தக் குறுநாவல் என்னை மிகவும் பாதித்தது மத்தகம் [குறுநாவல்]
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா ஒரு கலகக்காரனாக அடையாளங் காணப்படுவது நமக்கு மாற்றுக் கருத்தை எதிர்கொள்ளும் பக்குவமில்லை என்பதைக் காட்டுகிறது. அவர் எழுதியதில் பிடிக்காததை விட்டுவிட்டு பிடித்ததைப் படிக்கலாம். மொத்தமாக ஒதுக்குவது சரியல்ல.
உயிர்மை மற்றும் தமிழினி ஆகிய பத்திரிக்கைகளில் வெளியாகும் அவரது எழுத்துக்கள் சில விமர்சனங்களை முன் வைப்பதுடன் பதில் தேடும் சில கேள்விகளையும் எழுப்புவன.
கமலஹாசனைப் பற்றிய சமீபத்திய ஒரு கட்டுரை இந்தியா டுடேயில் வந்தது அவ்வாறான கேள்விகளை எழுப்புகிறது.
இவர் எழுதிய திரைப்பட விமர்சனங்களுள் என்னைக் கவர்ந்த ஒன்று சுப்பிரமணியபுரம்.
அய்யனார்
துபாயிலிருந்து பதிவெழுதும் அய்யனார் 30 வயதே ஆன இளைஞர். தீவிர வாசகர். நல்ல புத்தகங்களையும் திரைப்படங்களையும் அறிமுகப்படுத்துகிறார். இவரது புத்தக விமர்சனங்கள் தனி வகையிலமைந்து நம்மை படிக்கத் தூண்டுகின்றன.
பெரும்பாலும் புறக்கனிக்கப்பட்ட எழுத்தாளரான கோபி கிருஷணன் பற்றிய இவரது பதிவுகள் முக்கியமானவை
இவரது கவிதைகளும் கவிதைகள் பற்றிய விமர்சனங்களும் இங்கே.
வா.மணிகண்டன்
ஹைதராபாத்தில் வசிக்கும் வா மணிகண்டனுக்கு 28 வயதிருக்கலாம். இவரது கவிதைகளை நான் ஏற்கனவே உயிர்மை,காலச்சுவடு,புதிய பார்வை போன்ற சிற்றிதழ்களில் வாசித்திருக்கிறேன். அவை ஒரு தொகுப்பாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
ஜ்யோவ்ராம் சுந்தர்.
முதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்- எனச் சொல்லும் சுந்தர், நன்றாக எழுதுகிறார் ஆனால் கொஞ்சமாக எழுதுகிறார்.
இவரது மொழி விளையாட்டு கவிதைகளில் துள்ளுகிறது. கவிதைக்கு(80) அடுத்தபடியாகக் காமம்தான்(30) இவருக்குப் பிடித்த விஷயம் போல.
முகுந்த் நாகராஜன்
பெங்களூருவில் இருக்கும் முகுந்த் நாகராஜன், வீனாப்போனவன்(!?) என்ற பெயரில் ஆகஸ்ட் 2004 முதல் எழுதி வருகிறார். வாழ்க்கை மீதான கூர்ந்த கவனிப்பும் அதை கவிதையாக்குதலும் இவரது பலம்.
இவரது கவிதைகளில் அதிகம் தென்படுவது குழந்தைகளும், ரயில் பிரயானங்களும். அனுபவங்களைக் கோர்த்தும் அதன் பின் ஏதும் சொல்லாமலே சொல்லிச் செல்வதும் இவரது சிறப்பு. பால்யத்தை ஞாபகப்படுத்தும் ஒரு கவிதை என் பங்கு சூரியன்
உணவகங்களில் கை கழுவுமிடத்தில் உள்ள கண்ணாடியில் நமதழகை நாமே பார்த்துப் பூரித்துத்தான் பழக்கம். ஆனால் இவர் அங்கிருந்த உயரம் குறைவான வாஷ் பேசினைப் பார்த்து வடித்த கவிதை நீர் தெளித்து விளையாடுதல்
அலுப்பூட்டும் ரயில் பயணங்களில் ஏதாவது ஒரு குழந்தை நம்மை ஈர்ப்பதுடன் அந்தப் பிரயானத்தை சுவையுள்ளதாக்கி விடும். அதைப் போன்ற குழந்தை ஒன்றைப் பற்றிய கவிதை முன்பல் விழுந்த ரயில் பெட்டி
சுயமிழந்த பெண்ணொருத்தியின் வலியுணர்த்தும் கவிதை ஒன்று உடனே வரவும்
விட்டால் இந்தப் பதிவு முழுவதும் இவ்ரது கவிதைகளைச் சொல்லலாமென்றாலும் இன்னுமொரு கவிதைமட்டும், - அறிவிக்கப்பட்ட மின்வெட்டு
ச.முத்துவேல்
நானொரு புதிய வாசகன். கொஞ்சம் படிக்கிறவன்.அவ்வப்போது கொஞ்சமே கொஞ்சம் எழுதவும் தொடங்கியிருப்பவன் எனச் சொல்லும் முத்துவேல் நல்ல கவிதைகள் எழுதுகிறார். நவீன விருட்சம், உயிரோசை போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகின்றன.
இவரது வி(ளை)லை நிலம் கவிதை எனக்குப் பிடித்த ஒன்று அதன் படிமம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்ற கவிதைககளை இங்கே வாசிக்கலாம்.
- மாதவராஜ்
- உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடேமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதன்தான் மாதவராஜ். பாண்டியன் கிராம வங்கியில் அதிகாரியாக, விருதுநகர் மாவட்டத்திலிருக்கிறார்.
நம் நண்பனென்று நண்பனைப் போல் தோற்றமளிக்கும் வேறொவரை இம்சிக்கும் இடமாறு தோற்றப்பிழைக்கு எல்லோரும் ஆட்பட்டிருப்போம். அவ்வனுபவம் குறித்த இவரது கவிதை நானும் உங்கள் நண்பன்தான்
வாழ்க்கையின்தீராத விளையாட்டுக்களிலொன்று, பால்யத்தின் தோழர்களை இடமாற்றிப் போட்டு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, அதனூடாக நடத்திச் செல்லும் நாடகம். ஆமாம் சார் என்று சொல்லும் கெண்டைக்கால் திமிர் கண்களில் வரவழைப்பது கண்ணிரல்ல குருதி.
காமராஜ்
தனியே உட்கார்ந்து எழுதலாம், தனியாக உட்கார்ந்து பேசமுடியாது. தனியாளுக்கு எதுவும் லவிக்காது. பேசிபேசித் தீர்ந்தபின்னர்தான் நட்பு தழைக்கும், எழுத்து முளைக்கும். வலைகளின் வழியே நட்பின் எல்லைகளை பரவலாக்க வரும் காமராஜுக்கு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர்ப்பக்கம் நடுச்சூரங்குடி தான் பிறந்த ஊர். கிராமவங்கிப் பணி, தொழிற்சங்க அறிமுகத்தினூடாக உலகைக் காதலித்த நண்பர்களின் வட்டம் மூலம் கதை, கவிதை, நல்ல சினிமாக்கள் அறிமுககம். வங்கிப்பேரேடுகளில் பற்றும் வரவும் எழுதிக்கொண்டிருந்தவரின் பேனாவில் கதைகள் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்தது அவரது நண்பர்கள்தான்.
இவரது கவிதை இன்னும் காயாத ஈரத்தை ஸ்பரிசிக்கிறது இங்கே மணலுக்கடியில் இன்னமும் காயாத ஈரம்.
சென்றவார ஆனந்த விகடனில் வந்த மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதை விவாதத்திற்குள்ளாக்கும் விஷயத்தை இங்கே இவர் கேள்வியாக எழுப்புகிறார்; விடைதேடி. கிடைக்குமாவென்ற இக்கேள்விக்கான விடையிலிருக்கிறது மதநல்லிணக்கம்; மத்தியதரக் குரங்குகளும், சுக்ரீவ அடயாளங்களும்
|
|
மிக அருமையான பதிவர்களை அறிமுகம்(?) செய்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஇந்த காலை வேளையில் பல்சுவை விருந்து சாப்பிட்ட நிறைவு.
நன்றிகள் பல.
சாமீ... நீங்க பெரிய ஆளு சாமி. இவ்வளவு பதிவுகள் வாசிக்கிறீங்களா? வெயிலான், உங்களுக்கெல்லாம் எப்பிடித்தான் இவ்வளவு நேரம் கிடைக்குதோ? நேர மேலாண்மை பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.
ReplyDeleteGood introduction post!
ReplyDeleteவடகரை வேலன்,
ReplyDeleteமுகுந்த் நாகராஜன் கவிதைகள் ஒரு
சர் ரியலிஸ்டிக் ரகம்.