07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 28, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - I

My Photo My Photo My Photo

காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் ...


என் நெஞ்சில் மட்டுமா, இது இல்லாதவர் யார் தான் உளர் இவ்வுலகத்தில்.

உள்ளே இருக்கும் காதல் சிலருக்கு வார்த்தை தூறல்களாக வந்து

நம்மையும் கொஞ்சம் நினைய(ச்) செய்கிறது.

குடையில்லாம வாருங்கள் அனைவரும் நினைவோம்.


இவங்கள பத்தி நான் வேற முன்னுரை கொடுக்கணுமா என்ன ...

புதியவன் – வானமே வசப்படும் அப்படின்னு சத்தம் போட்டு சொல்லுவார், நீங்களே போய் பாருங்களேன். ஒரு மழைத்துளியின் போராட்டம் இன்னும் ஒலிக்கிறது எல்லாம் நியூட்டனின் காதல் விதிகள் தான். கொஞ்சூண்டு வெட்கங்களும் சில முத்தங்களும்...

ஸ்ரீமதி கரையோரமா கனவு காணுபவர் வலையுலகின் செல்லத்தங்கை, சின்ன தங்கை.துளி காதல்-ளோடு தாய்மை பற்றி சொல்லியிருக்கார்.கரையோர கனவு இப்போ கரை காதல்-ஆயிடுச்சு. அழகான ஊடல்களும் காதலே...!!

சரவணக் குமார் குறிப்புகளை திணிப்பார். அதிகம் சோக கீதம் தான் இருப்பினும் சூடான தேநீரும் உன் முத்தமும்... யாருக்கு கொடுத்தார் தெரியுமா கொடிய ராட்ஷசி... அவர் குடுத்த தேநீர்ல செத்தொழிந்தது. கடைசியா குட் நைட்... (உயிரோசை கவிதை) சொல்லிட்டார்.


அறிமுக(ப்) படலம் ... I
அறிமுக(ப்) படலம் - II
கதை கேளு கதை கேளு ...

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

(மூன்று அறிமுகங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது ...)

--- இன்னும் விரியும்.

66 comments:

  1. ஒஹ்ஹ்ஹ்..நம்ம புதியவன்...

    சரவணக்குமாரும் பரிச்சயம் தான்..

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள் ஜமால்!!

    ReplyDelete
  3. புதியவன் எனக்கு நல்ல நண்பர்
    நல்லா எழுதுவார் கவித்துவம்
    அதிகம் இவருக்கு உண்டு
    வாழ்த்துக்கள் புதியவன்

    ReplyDelete
  4. ஸ்ரீமதியின் கரையோர கனவுகள் பக்கம் போயிருக்கேன்..

    இன்னும் முழுசா அவங்க எழுத்துக்களைப் படிச்சதில்ல...

    இனிமே படிப்போம்..நன்றி ஜமால் இவர்கள் அறிமுகத்திற்கு..

    ReplyDelete
  5. //உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. பழைய நினைவுகளில் மனநீராடி நிகழ்வுலகிற்கு வருகிறேன். இங்கே இப்போது அன்பாய் அழகாய் என் மனைவி.
    தத்தித்தாவி என் மடியில் கட்டிப்புரண்டு தன் வெள்ளைச் சிரிப்பில் என்னை சிறை வைக்கும் குட்டி தேவதையாய் என் செல்ல மகள். இப்போது இவர்கள் தான் என்னுலகம்.//


    காதலாய் புதியவனின் டைரியில் எழுதிய சில பக்கங்களை மறக்க முடியாது...

    ReplyDelete
  6. தாமிரா அவர்களின் கவிதை ஜாலம் என்ற பதிவில் தான் தோழர் சரவணக்குமாரின் அறிமுகம் கிடைத்தது...

    அவர் சரவணக்குமாரின் "அன்பை தொலைத்தலும், ஒரு நிகழ்வும்..." கவிதைப் பற்றி வெகுவாக புகழ்ந்து சொல்லியிருந்தார்.

    அந்த கணத்திலிருந்து சரவணக்குமாரின் வலையைப் பின் தொடருகிறேன்.அவ்வப் பொழுது பின்னூட்டங்களும் இடுவதுண்டு..ஆனால் அவர் கவிதைக்கு கருத்து சொல்லுமளவுக்கு நமக்கு மண்டையில் மசாலா இல்லை என்பதால் சற்றே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு.

    ReplyDelete
  7. ஸ்ரீமதியின் துளிகாதல் கவிதையில் எந்த வரியைப் பற்றி பேசுவது
    என்றே தெரியவில்லை.

    அடைம‌ழை ..காத‌ல்...

    எல்லா வ‌ரிக‌ளிலும் காத‌ல் த‌தும்பி வ‌ழிகிற‌து...பாருங்க‌ளேன்..

    ReplyDelete
  8. புதியவன், சரவணன் நல்ல அறிமுகங்கள் அண்ணா.. :))என்னையும் அவர்களோடு சேர்த்ததற்கு நன்றி அண்ணா.. :))

    ReplyDelete
  9. //அ.மு.செய்யது said...
    ஸ்ரீமதியின் துளிகாதல் கவிதையில் எந்த வரியைப் பற்றி பேசுவது
    என்றே தெரியவில்லை.

    அடைம‌ழை ..காத‌ல்...

    எல்லா வ‌ரிக‌ளிலும் காத‌ல் த‌தும்பி வ‌ழிகிற‌து...பாருங்க‌ளேன்..//

    நன்றி செய்யது அண்ணா.. :)))

    ReplyDelete
  10. //ஒரு குடையில்
    என்னோடு
    நீ சேர்ந்து
    நடந்த நாளில் தான்
    ஆரம்பித்தன
    என் வாழ்வின்
    மழைக்காலம்...
    //

    //மழையில் நனைந்தும்
    தலைத் துவட்டுவதில்லை
    எப்படியும்
    உன் அணைப்பின்
    சூட்டில்
    காயத்தான் போகிறது...//

    ஸ்ரீமதியின் துளி காதலில், சில துளிகள்...சாம்பிளுக்கு..

    ReplyDelete
  11. நன்றி ஸ்ரீமதி.......

    ஆனால் உங்கள் வலைதளத்தையும் தொடர்ந்தாச்சு..

    ReplyDelete
  12. //(மூன்று அறிமுகங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது ...)//

    என்னது அண்ணா?? :))

    ReplyDelete
  13. மூவரின் எழுத்துக்களுமே அசத்தல்தான்

    உங்களின் அறிமுகங்கள் எல்லாமே பாரதிராஜாவின் அறிமுகம் போல

    அழகும் அர்த்தங்களும் வாய்ந்த எழுத்துச்செறிவுகள்.

    ReplyDelete
  14. இந்த மூவரின் கவிதைகளைப் படிக்க,

    "ஆள் அரவம் இல்லா
    தனிமையுடன் கூடிய
    ஒரு நிசப்த இரவு
    வேண்டும்..."

    ( அவங்களவுக்கு வர முடியாட்டாலும்.. அவங்க‌‌ ஸ்டைல்ல‌யே ஒரு பின்னூட்டம் ட்ரை பண்ணேன்..வேற ஒன்னுமில்ல‌ )

    ReplyDelete
  15. \\ ஸ்ரீமதி said...

    //(மூன்று அறிமுகங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது ...)//

    என்னது அண்ணா?? :))\\

    கண்டு பிடிங்க.

    ReplyDelete
  16. ஆஹா மற்றுமொரு கவிஞர்களை கவித்துவமான அறிமுகம்...

    ReplyDelete
  17. புதியவனைப்பற்றி நிறைய சொல்லலாம்...சொல்வதைவிட அவரோட கவிதை வரிகளில் தடுக்கி விழுந்தேன் என்று சொல்லலாம்..

    ReplyDelete
  18. எனக்கு தெரிஞ்சி இவுங்க மூணு பேர்த்துக்குள்ள ஒற்றுமை.
    மூணு பேருமே காதல் கவிதை எழுதுறவங்க! சரியா?

    ReplyDelete
  19. \\வால்பையன் said...

    எனக்கு தெரிஞ்சி இவுங்க மூணு பேர்த்துக்குள்ள ஒற்றுமை.
    மூணு பேருமே காதல் கவிதை எழுதுறவங்க! சரியா?\\

    அது தான் தெரிந்த விடயம் ஆயிற்றே நண்பா.

    வேறு ...

    ReplyDelete
  20. //ஆனால் அவர் கவிதைக்கு கருத்து சொல்லுமளவுக்கு நமக்கு மண்டையில் மசாலா இல்லை என்பதால் சற்றே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு.
    //

    அதேதான் செய்யது. நானும் கூட சரவணகுமாரின் தொடர் வாசகன். இவ்வளவு நல்ல பதிவில் நம்மைப்போன்ற ஒரு கும்மிப் பதிவர் பின்னூட்டம் இட்டு அசிங்கப்படுத்த வேண்டாமே என்று பின்னூட்டம் இடுவதில்லை.ஆனால் தனி மடல் அனுப்புவேன் அவருக்கு :))

    ReplyDelete
  21. //தாமிரா அவர்களின் கவிதை ஜாலம் என்ற பதிவில் தான் தோழர் சரவணக்குமாரின் அறிமுகம் கிடைத்தது...//

    அந்தக் கவிதையை அவர் பதிவிட்ட அன்று நானும் தாமிராவும் சவேரா ஹோட்டலில் வெகுநேரம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம்.உண்மையில் எந்தப் பெரிய கவிஞனின் கவிதைக்கும் சற்றும் குறைந்ததல்ல, சளைத்ததல்ல அந்த கவிதை.

    ReplyDelete
  22. //எம்.எம்.அப்துல்லா said...
    //ஆனால் அவர் கவிதைக்கு கருத்து சொல்லுமளவுக்கு நமக்கு மண்டையில் மசாலா இல்லை என்பதால் சற்றே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு.
    //

    அதேதான் செய்யது. நானும் கூட சரவணகுமாரின் தொடர் வாசகன். இவ்வளவு நல்ல பதிவில் நம்மைப்போன்ற ஒரு கும்மிப் பதிவர் பின்னூட்டம் இட்டு அசிங்கப்படுத்த வேண்டாமே என்று பின்னூட்டம் இடுவதில்லை.ஆனால் தனி மடல் அனுப்புவேன் அவருக்கு :))//

    என்னக் கொடுமை அண்ணா இது?? கும்மிப் பதிவர்ங்கறது என்ன கொலைக்குத்தமா?? நீங்க இப்படி எல்லாம் பீல் பண்ணவே கூடாது.. சரவணன் இதப் பார்த்தா இப்படி தான் கவலைப்படுவார்.. நானும்தான்.. நீங்க எங்க பதிவுக்கெல்லாம் வரதே எங்களுக்கு பெரிய விஷயம்... அதுவும் பின்னூட்டம் போட்டா அது எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?? அத ஏன் அண்ணா மறைச்சு செய்யணும்?? தயவு செய்து இனி அப்படி சொல்லாதீங்க அண்ணா... :((

    ReplyDelete
  23. //எம்.எம்.அப்துல்லா said... //

    நல்ல பதிவில் நம்மைப்போன்ற ஒரு கும்மிப் பதிவர் பின்னூட்டம் இட்டு அசிங்கப்படுத்த வேண்டாமே என்று பின்னூட்டம் இடுவதில்லை.ஆனால் தனி மடல் அனுப்புவேன் அவருக்கு :))


    மடல் அனுப்புவதும் நல்ல ஐடியா தான்...இது எனக்கு தோணவேயில்லையே !!!
    என்ன இருந்தாலும் பெரியவுக பெரியவுக தான்...

    ReplyDelete
  24. @அப்துல்லாஹ்

    மாப்ள - நாம யாருங்கறது முக்கியமேயில்லை.

    நாம இரசிச்சமா - அத அங்கணேயே சொல்லிட்டு போனா.

    நமக்கும் நிறைவு - அவர்களுக்கும் சந்தோஷம்.

    (நோ செண்டிமென்ஸ்)

    இப்படியெல்லாம் நான் நினைச்சா யாருக்கு பின்னூட்டவே முடியாது.

    ReplyDelete
  25. //அ.மு.செய்யது said...
    //எம்.எம்.அப்துல்லா said... //

    நல்ல பதிவில் நம்மைப்போன்ற ஒரு கும்மிப் பதிவர் பின்னூட்டம் இட்டு அசிங்கப்படுத்த வேண்டாமே என்று பின்னூட்டம் இடுவதில்லை.ஆனால் தனி மடல் அனுப்புவேன் அவருக்கு :))


    மடல் அனுப்புவதும் நல்ல ஐடியா தான்...இது எனக்கு தோணவேயில்லையே !!!
    என்ன இருந்தாலும் பெரியவுக பெரியவுக தான்...//

    அண்ணா இப்பதான் அப்துல்லா அண்ணாவ அப்படி செய்யாதீங்கன்னு சொல்லிட்டு இருக்கேன்.. நீங்களுமா?? :((

    ReplyDelete
  26. //எம்.எம்.அப்துல்லா said... //

    உண்மையில் எந்தப் பெரிய கவிஞனின் கவிதைக்கும் சற்றும் குறைந்ததல்ல, சளைத்ததல்ல அந்த கவிதை. //

    ஆனால் அவ‌ரை நான் ஒரு பெரிய‌ க‌விஞராக‌வே பார்த்துவிட்ட‌தால், இதெல்லாம் ச‌க‌ஜ‌மப்பா என்று நினைத்து விட்டேன்.

    ஸ்ரீமதியும் புதிய‌வனும் கூட‌ ஒருவ‌ர்க்கொருவ‌ர் ச‌ளைத்த‌வ‌ர்க‌ள‌ல்ல‌..

    ஜ‌மாலின் அறிமுக‌ கலெக்க்ஷ‌னில் இது ஒரு டாப்கிளாஸ் ப‌ட‌ல‌ம்.

    ReplyDelete
  27. \\அ.மு.செய்யது said...

    //எம்.எம்.அப்துல்லா said... //

    நல்ல பதிவில் நம்மைப்போன்ற ஒரு கும்மிப் பதிவர் பின்னூட்டம் இட்டு அசிங்கப்படுத்த வேண்டாமே என்று பின்னூட்டம் இடுவதில்லை.ஆனால் தனி மடல் அனுப்புவேன் அவருக்கு :))


    மடல் அனுப்புவதும் நல்ல ஐடியா தான்...இது எனக்கு தோணவேயில்லையே !!!
    என்ன இருந்தாலும் பெரியவுக பெரியவுக தான்...\\

    மடல் அனுப்புங்க செய்யது.

    தப்பேயில்லை.

    முதலில் பின்னூட்டம் போடுங்கள்.

    ReplyDelete
  28. முதலில் நட்புடன் ஜமாலுக்கு நன்றி...ஸ்ரீமதிக்கும் சரவணனுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. //ஸ்ரீமதி said...

    அண்ணா இப்பதான் அப்துல்லா அண்ணாவ அப்படி செய்யாதீங்கன்னு சொல்லிட்டு இருக்கேன்.. நீங்களுமா?? :(( //

    ப‌ய‌ப்ப‌டாதீங்க‌..க‌ண்டிப்பாக‌ இனிமேல் பின்னூட்ட‌ம் இடுவோம்.

    க‌வுண்ட் கூட‌ கூட‌ கும்மிக‌ளும் தொட‌ரும்..

    ReplyDelete
  30. // நட்புடன் ஜமால் said...

    மடல் அனுப்புங்க செய்யது.

    தப்பேயில்லை.

    முதலில் பின்னூட்டம் போடுங்கள். //

    க‌ண்டிப்பாக செய்வோம்....

    ReplyDelete
  31. // நட்புடன் ஜமால் said...

    மடல் அனுப்புங்க செய்யது.

    தப்பேயில்லை.

    முதலில் பின்னூட்டம் போடுங்கள். //

    க‌ண்டிப்பாக செய்வோம்....

    ReplyDelete
  32. //அ.மு.செய்யது said...

    காதலாய் புதியவனின் டைரியில் எழுதிய சில பக்கங்களை மறக்க முடியாது...//

    அந்த டைரியா நானே மாறந்திட்டேன் நீங்க இன்னும் நினைவு வச்சிருகீங்களே...நன்றி செய்யது...

    ReplyDelete
  33. //RAMYA said...
    புதியவன் எனக்கு நல்ல நண்பர்
    நல்லா எழுதுவார் கவித்துவம்
    அதிகம் இவருக்கு உண்டு
    வாழ்த்துக்கள் புதியவன்//

    மிக்க நன்றி ரம்யா...

    ReplyDelete
  34. ஓட்டு போட்டுட்டேன்! ஸ்ரீமதி,சரவணன் தெரியுமென்றாலும் நல்ல அறிமுகம்..புதியதொரு வலைப்பூவோடு!!

    ReplyDelete
  35. நல்ல அறிமுகம்.....

    தேவா...

    ReplyDelete
  36. //புதியவன் said...
    //அ.மு.செய்யது said...

    காதலாய் புதியவனின் டைரியில் எழுதிய சில பக்கங்களை மறக்க முடியாது...//

    அந்த டைரியா நானே மாறந்திட்டேன் நீங்க இன்னும் நினைவு வச்சிருகீங்களே...நன்றி செய்யது...
    //

    உங்க டிஸ்கி கூட நல்லா இருக்கும்.

    ReplyDelete
  37. ஸ்ரீமதியும் புதிய‌வனும் கூட‌ ஒருவ‌ர்க்கொருவ‌ர் ச‌ளைத்த‌வ‌ர்க‌ள‌ல்ல‌..
    //
    உண்மைதான்
    தேவா..

    ReplyDelete
  38. நல்ல அறிமுகங்கள்..

    ReplyDelete
  39. செய்யது,ஜமால் என் கவிதை படித்து
    கருத்துரை
    தந்ததற்கு
    நன்றி

    ReplyDelete
  40. என் வெட்கத்தைக்
    குத்திக் கிழித்துவிட்ட
    களிப்பு
    அவன் முத்தத்தின்
    முடிவில்....
    //

    ஸ்ரீமதியின்
    கவிதை
    வரி!!

    ReplyDelete
  41. காதல் காற்றை இருவர் இதயத்திலும்
    நிரப்பி பூமிக்கு அனுப்பிவிட்டு...
    இனியொரு முறை இவ்வுலகத்தை
    அழிக்கவேண்டியிருக்காது என்று
    காலத்தைப் படைத்தவன்
    காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
    கையெழுத்திடுகிறான் காதலோடு........///

    புதியவன்
    கவிதை
    கலக்கல்தான்.
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  42. யின் வலைப்பக்கம் இப்போதுதான் வலம் வருகின்றேன்.
    அவகளின் வரிகள் ஒவ்வொன்றும் காவியங்கள்
    இவர்களை அறிமுகப்படுத்டியதிற்கு நன்றி ஜமால்

    ReplyDelete
  43. சரவணக்குமார் எனக்கு இப்போதுதான் அறிமுகம்.. வழ்த்துக்கள் சரவணகுமார்

    ReplyDelete
  44. அஃசர் எப்படியுள்ளீர்கள்!!
    ஜமாலின் ரகளை பார்த்தீர்களா?
    இதுக்கு பெரிய
    பார்ட்டி வேணும்..

    ReplyDelete
  45. அறிமுகமே அசத்தலா இருக்கு. நிறைய புதிய விஷயங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கும் நண்பர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  46. அப்பாடா..ஆஃப் செஞ்சுரி போட்டாச்சு..

    வாங்க தேவா..அப்புறம் எப்படியிருக்கீங்க..

    ReplyDelete
  47. வலை மேய்ந்து கொஓடு இருந்தேன்..

    ReplyDelete
  48. ஒரு புதிய பதிவு.

    போய் பாருங்களேன் ...

    புதியவன்

    ReplyDelete
  49. பார்க்கிறேன்.
    என் பதிவையும் சொல்லுன்களேன்

    ReplyDelete
  50. பார்த்தேன். எல்லா பதிவும்
    நம்ம வழியில்
    போகுதே!!!

    ReplyDelete
  51. நேரமின்மையால் இவர்களின் கவிதைகளை பல முறை படிக்க முடியாமல் போனதுண்டு

    இருந்த பொழுது படித்தவற்றில் பிடித்த வரிகள் என்றால்

    ஸ்ரீமதியின்

    /அடை மழையில்
    குடைப்பிடிக்கத் தெரியாத
    குழந்தையெனத் திணறுகிறேன்
    நீ முத்தம்
    தரத்துவங்கியதும்.... /


    புதியவனின்

    /பேசியே கொல்கின்றன
    உன் விழிகள்
    பேசாமல் கொல்கின்றன
    உன் இதழ்கள்.../

    சரவணக் குமாரின்

    /காதல் எனப்படுவது யாதெனில்...
    இன்றளவும்
    எனக்கு கிடைக்கபெறாத ஒன்று.
    நாளையே கூட நீ வரலாம்../

    என் மனத்தில் பதிந்த வரிகள் என்று கூற முடியும்.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  52. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  53. புதியவன்,ஸ்ரீமதி, சரவணனுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  54. மூவரின் கவிதைகளும் அவ்வளவு அருமையாக இருக்கும்:)

    ReplyDelete
  55. அருமையான கவிஞர்கள்...அவர்களின் பதிவுகளை வார விடுமுறையில் படிக்க முயல்கிறேன்

    நன்றி ஜமால்

    ReplyDelete
  56. தத்தித்தாவி என் மடியில் கட்டிப்புரண்டு தன் வெள்ளைச் சிரிப்பில் என்னை சிறை வைக்கும் குட்டி தேவதையாய் என் செல்ல மகள். இப்போது இவர்கள் தான் என்னுலகம்./

    புதியவன்
    ரசிக்கும்
    வாழ்க்கை
    அழகானது!!

    ReplyDelete
  57. அறிமுகங்கள் அருமை ஜமால் ..தங்கை ஸ்ரீமதி .நண்பர் .சரவணா இருவரும் மிக அதிகம் அறிமுகம் ஆனவர்கள் ..இவர்கள் படைப்புகள் மிக அதிகம் படித்திருக்கிறேன் ..புதிய நண்பர் புதியவன் அவர்கள் அறிமுகம் கிடைத்தது ..உங்களால் ..

    நன்றிகளுடன்
    விஷ்ணு

    ReplyDelete
  58. நண்பரே ஜமால் முதலில் நன்றிகள்..

    மற்றும் மேலே பேசி இருக்கும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்..

    அப்பறம் இன்னொரு விஷயம்..

    //என்னக் கொடுமை அண்ணா இது?? கும்மிப் பதிவர்ங்கறது என்ன கொலைக்குத்தமா?? நீங்க இப்படி எல்லாம் பீல் பண்ணவே கூடாது.. சரவணன் இதப் பார்த்தா இப்படி தான் கவலைப்படுவார்.. நானும்தான்.. நீங்க எங்க பதிவுக்கெல்லாம் வரதே எங்களுக்கு பெரிய விஷயம்... அதுவும் பின்னூட்டம் போட்டா அது எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?? அத ஏன் அண்ணா மறைச்சு செய்யணும்?? தயவு செய்து இனி அப்படி சொல்லாதீங்க அண்ணா... //

    ஸ்ரீமதி, நன்றி தோழி..

    இதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன்.. என் பதிவுகளை படிக்கும் போது என்ன தோணுதோ அதை பின்னூட்டமா எழுதுங்க.. ப்ளீஸ்.

    மிக முக்கிய விஷயம்.. எம்.எம்.அப்துல்லா அண்ணா, உங்க கவிதைகள் நான் படிச்சிருக்கேன்.. நீங்க நல்ல கவிதை பதிவரும் கூட என்று எனக்கு நல்லாவே தெரியும்..

    அடுத்த பதிவிற்கு எல்லோர் பின்னூட்டத்தையும் எதிர்பார்க்கிறேன்..

    உங்கள் எல்லோரின் அன்பை தொடர்ந்து எதிர்நோக்கும் -MSK..

    ReplyDelete
  59. இங்கே புதியவனை மறக்கவே மாட்டேன்.எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கிய அன்புத்தோழர் அவர்.என்றும் தன்னை புதுப்பித்துக்கொண்டிருப்பவர்.காதலின் கவிதைகள் அற்புதம் வரிகளில் காதல் தொங்கித் தவிக்கும்.ஆனால் எல்லாம் சொல்லிவிட்டு 99.99% கற்பனைன்னு நல்ல பிள்ளையாயிடுவார்.அது அவர் கெட்டித்தனம்.வாழ்த்துக்கள்.

    ஸ்ரீமதி,சரவணக் குமார் உங்கள் பக்கங்கள் வருவேன்.

    ReplyDelete
  60. //ஸ்ரீமதி,சரவணக் குமார் உங்கள் பக்கங்கள் வருவேன்.//

    வாங்க வாங்க :)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது