07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 30, 2009

அறிமுக(ப்) படலம் - III

My Photo My Photo My Photo எனது புகைப்படம்
வண்ணத்துப்பூச்சியார் – ”சினிமா உலகம் பற்றிய எனது பார்வைகள்” என்று சொல்கிறார். ரொம்ப சுறுக்கமா சொல்லலாம் இவரை. ஆங்கில படங்களின் தமிழ் விமர்சகர்.

ஹோஷியா - ’நமக்குள் இருக்கட்டும்’ அப்படின்னு சொல்லி துவங்குறாங்க. இவரின் "மை விழி அழகி"ய பாருங்க. இத யாரும் பாத்துடாதீங்க, மீறி பார்த்தீங்க யோசிக்கவச்சுட்டாங்கய்யா...ன்னு சொல்லுவீங்க. இவருக்கு பிடித்த வார்த்தை அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை.

கார்த்திக் – வானவில் வீதி-யில் அமர்ந்து கனா கண்ட காலங்கள் – 1 பற்றி யோசிப்பார். அதுவும் மார்கழி மாசத்துல. இவரோட ‘பச்சை’ அதாங்க க்ரீன் டமிலியன்ஸ் பாருங்க.

கணினிதேசம் – எனது எண்ணங்களின் பதிவுகள் என்று தலைப்பிட்டு பதிகிரார் - எங்கள் சுட்டியின் பிஞ்சு விரல்கள். இவர் சொல்லும் அறிவுரை சேமிப்போம்.

பிரியமுடன் பிரபு, இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லைன்னு சொல்றாரு, காதல் காதல் காதல் அதுவும் இதே நாள், இதே மண்டபத்தில் அடியே கண்ணம்மா-ன்னு இவரு யார கூப்பிடறார்

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

44 comments:

  1. உள்ளேன் போட்டுக்கறேன்

    ReplyDelete
  2. //
    அமிர்தவர்ஷினி அம்மா said...
    மீ த பர்ஸ்ட்டு

    //

    நீங்க தான் எல்லாத்துலேயும் பர்ஸ்ட்டு

    ReplyDelete
  3. எங்கருந்து புடிப்பீங்களோ தினம் தினம் புது புது பதிவரா

    இருவர் இதுவரை அறிமுகமே இல்லை
    ஹோசியா, பிரபு

    அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  4. அறிமுகம் ஆன அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. நிதானமா படிச்சுட்டு பிறகு விளக்கமா பிண்ணுட்டம் போடுகிறேன்.

    அறிமுகங்களுக்கு நன்றி ஜமால்

    ReplyDelete
  6. அறிமுகங்களுக்கு நன்றி ஜமால்

    ReplyDelete
  7. அறிமுகங்களுக்கு நன்றி ஜமால்

    ReplyDelete
  8. எங்களுக்கு புதிய வலைப்பதிவர்களைஅறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  9. உங்கள் அறிமுகம் கண்டிப்பாக சிறந்தது தான், இதுவரை எல்லோரும் பழைய மாவுகளையே திரும்ப திரும்ப அரப்பார்கள்.

    நீங்கள் வித்தியாசமானவர்,
    புதுமுகங்களை அறிமுகம் செய்கிறீர்கள்.

    நீங்கள் தான் வலையுலக பாலசந்தர்

    ReplyDelete
  10. முன்றாவது அறிமுகப் படலமா...?
    படித்து விட்டு வருகிறேன்...

    ReplyDelete
  11. வண்ணத்துப்பூச்சியார்-சூர்யா இவர் எனக்கு அறிமுகமான பதிவர் தான்...இவர் ஒரு நல்ல திரைப்பட விமர்சகர்...

    ReplyDelete
  12. ஹோஷியா-இவரும் எனக்கு அறிமுகமான பதிவர் தான் இவருடைய மை விழி அழகியில் கீழ்க்கண்ட வரிகள் எனக்குப் பிடிக்கும்

    //சூரிய இரவுகளின் சூனிய பொழுதுகளில்
    சிந்துகின்ற தேனென என் அருகில் நீ
    பந்தங்கள் உன்னை என் சொந்தமாக்க
    மீண்டும் உன்னுள் தொலைந்தேனடி..//

    ReplyDelete
  13. கார்த்திக் - இவர் எனக்கு அறிமுக மில்லாத பதிவர் இனி அறிந்து கொள்கிறேன்...

    ReplyDelete
  14. கணினிதேசம்- இவர் அறிமுகமான பதிவர் தான் குழந்தையின் அசைவுகளை இவர் மொழி பெயர்த்ததை கீழ்காணும் வரிகளில் காணலாம்...

    //முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது -
    சந்தோசம், சிணுங்கல், சிரிப்பு, கொஞ்சல்,
    கெஞ்சல், கோபம், அழுகை
    என முகபாவங்களை தெளிவாகக்
    காட்டிப் பேசுகிறான் எங்கள் சுட்டி. //

    ReplyDelete
  15. பிரியமுடன் பிரபு - இவரும் எனக்கு புதிய பதிவர் தான் இவர் எழுத்துக்களையும் படித்துப் பார்க்கிறேன்...

    ReplyDelete
  16. இந்த முறையும் அழகான ஐந்து அறிமுகங்கள்...
    நன்றியும்...வாழ்த்துக்களும் ஜமால்...

    ReplyDelete
  17. //1) ஓட்டு,//

    போட்டாச்சு...

    ReplyDelete
  18. //2) பின்னூட்டம்,//

    அதுவும் போட்டாச்சு...

    ReplyDelete
  19. //3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு//

    சந்திப்போம்...

    ReplyDelete
  20. //நன்றியுடனும் நட்புடனும்.//

    இத நானும் சொல்லிக்கிறேன்...

    ReplyDelete
  21. நான் வந்து பாக்கறதுக்குள்ள 100 பின்னூட்டத்துக்கு மேல தாண்டிடும்.

    அதனால் ஓடிக்கிடு இருந்தேன்.

    அப்பாடி மீ த 22ண்ட் இப்ப.

    ReplyDelete
  22. வண்னத்துப்பூச்சியார் பேரண்ட்ஸ் கிளப்பிலும் அங்கத்தினரா சேர்ந்து கலக்கிகிட்டு இருக்காரு.

    மத்தவங்க அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  23. ஹோஷியா ப்ளாக் ஆரம்பித்து முதல் கருத்துரை நான்தான்!அவரின் முதல் பதிவு ஆங்கிலத்தில்:
    Swimming cat
    cat in China has overcome its fear of water to become the newest member of its local winter swimming club.
    அப்புறம் நம்ம மக்கள் போய் கும்மி தமிழ் பேசும் மல்லிகை யாக மாறி விட்டார்...

    ReplyDelete
  24. ஹோஷியாவின் குரலைwww.shakthifm.com la kekkalam..

    ReplyDelete
  25. ரொம்ப நன்றிங்க ஜமால்.
    :))

    ReplyDelete
  26. அறிமுகம் ஆன அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  27. வண்ணத்திப்பூச்சியார் சூர்யாவின் திரைப்பட விமர்சனங்கள் அபாரம்.வாழ்த்துக்கள் சூர்யா.

    ReplyDelete
  28. அருமையான அறிமுகங்கள்...தொடரட்டும்...

    ReplyDelete
  29. வெற்றிகரமாக வலைச்சரத்தில் ஐந்தாவது நாள்..

    வாழ்த்துக்கள் அண்ணன் ஜமால்...

    ReplyDelete
  30. நல்ல அறிமுகம்

    ReplyDelete
  31. ம்.. நானே வலைப்பூக்கள் பக்கம் புதியவன் தான் என்பதால், எனக்கு பெரும்பாலானோர் புதியவர்களே.

    திகழ்மிளிர், jas இவர்களை அறிவேன்.. மற்றவர்களின் பக்கம் இனி கவனம் செலுத்த உங்களின் அறிமுகங்கள் உதவும்...

    மிகுந்த நன்றிகள் ஜமால் அண்ணா...

    ReplyDelete
  32. வண்ணத்துப்பூச்சியார்,
    ஹோஷியா

    இவ‌ர்க‌ளை அறிமுக‌ம் செய்த‌த‌ற்கு ந‌ன்றிங்க‌...இந்த‌ அறிமுக‌ ப‌ட‌ல‌த்தில்
    இவ‌ர்க‌ள் இருவ‌ரின் ப‌திவுக‌ளை ம‌ட்டும் ப‌டித்த‌தில்லை.

    ReplyDelete
  33. கார்த்திக்கின் வானவில் வீதி படித்திருக்கிறேன்.

    ஆனால் பின்னூட்டயதில்லை..அவருடைய கனா கண்ட காலங்கள் 3 பகுதிகளாக
    எழுதியிருக்கிறார்.அதான் நம்ம பேவரைட்.

    ReplyDelete
  34. //மடியிலிருந்து பாலைத் திருடும்
    பால்காரனிடம் பணிந்து நிற்க்கும்
    பசுவைப் போல
    என்னிடமிருந்து இதயத்தைதிருடும்
    உன்னிடம் நிற்க்கிறேன் நான் !!//


    பிரியமுடன் பிரபு....ஆஹா..அழகான கவிதை........
    அவ‌ர் வ‌லைத‌ள‌த்தின் த‌லைப்பில் இட்ட‌ ப‌ட‌ம்
    கொஞ்ச‌ம் வித்தியாச‌மாக‌ அழ‌காக‌ இருக்கும்.

    ReplyDelete
  35. ஹோஷியா ஆல்பிரெட்..

    இவருடைய மைவிழி அழகி கவிதை...எட்டு வருடங்களுக்கு முன்னால் எழுதியதாம்.

    //மை விழி அழகி

    உன் கள்ளப்பார்வையால்
    கசங்கிபோன என் சின்ன இதயம்
    துடிக்க மறுக்குதடி
    திரும்பி நான் முழுப்பார்வை உன்னை பார்க்க
    நீயோ வெட்கிச் சிரிக்க
    உன் கன்னக்குழியழகில் மரித்துவிட தோணுதடி....

    சூரிய இரவுகளின் சூனிய பொழுதுகளில்
    சிந்துகின்ற தேனென என் அருகில் நீ
    பந்தங்கள் உன்னை என் சொந்தமாக்க
    மீண்டும் உன்னுள் தொலைந்தேனடி..//


    கட்டிப் போட்டு விட்டது...

    ReplyDelete
  36. அட நம்ம கணிணி தேசம்....

    எனக்கு பிடித்த பதிவர்கள் பட்டியலில் கணிணியும் உண்டு.

    புதுமையாகவும்,பயனுள்ளதாகவும் எழுதுவார்.

    அதை விட இவரது பின்னூட்டங்களில் இருக்கும் நக்கல்,நையாண்டிகளை வெகுவாக ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  37. //எங்கருந்து புடிப்பீங்களோ தினம் தினம் புது புது பதிவரா//

    இதுக்கு ஒரு ரிப்பீட்டே..

    ReplyDelete
  38. //நிமிர்ந்த நன் நடையில்
    விருப்பமில்லை
    தெருவெங்கும் கோலங்கள். //

    கார்த்திக்கின் மார்கழி கவிதை..அருமை

    உக்காந்து யோசிப்பவர் தான்.

    ReplyDelete
  39. வண்ணத்துப் பூச்சியார் ...

    ஆங்கில படங்களின் ஒரு பிலிம் நீயூஸ் ஆனந்தன் என்று நினைக்கிறேன்.
    இவ‌ர‌து விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் பார்த்தேன்...அருமை..

    ReplyDelete
  40. //வால்பையன் said...

    நீங்கள் தான் வலையுலக பாலசந்தர் //

    வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  41. வலையுலகிற்கு புதிதாய் வந்ததில் ஆரம்பத்தில் எப்படி தொடங்குவது, தமிழ் டைப்பிங் , HTML அது இது என்று குலம்பியத்தில் என் முதல் பதிவை ஆங்கிலத்தில் இட வேண்டி இருந்தது.... மேலே சுட்டி காட்டப்பட்டதை போல

    அதுக்கப்புறம் வலைப்பூ ரகசியங்களை சக தோழியாய் மதித்து வால் பையன் அவர்கள் சொல்லிதர , ஹோஷியாவின் பயணம் தமிழில் தொடர்கிறது.....

    அதிரை ஜமால் அவர்கள் கொடுத்த அறிமுக படலத்துக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள்...
    இந்த ஊக்கம் எனக்குள் உறுதியை கொடுத்ததை நான் மறுக்காமல் சொல்லியே ஆகணும்...
    நன்றிகள் கோடி உங்களுக்கு.....

    சிநேகமுடன்
    ஹோஷியா

    ReplyDelete
  42. //அதுக்கப்புறம் வலைப்பூ ரகசியங்களை சக தோழியாய் மதித்து வால் பையன் அவர்கள் சொல்லிதர , ஹோஷியாவின் பயணம் தமிழில் தொடர்கிறது.....//

    ஒரு ரகசியமும் கிடையாது தோழி!
    நானும் வந்த புதிதில் ஒன்றுமே தெரியாமல் தான் இருந்தேன்! மக்கள் தான் சொல்லி கொடுத்து வளர்த்தார்கள்!
    அந்த இன்பத்தை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது