இவங்க ரொம்ப 'நல்லவங்கனு' தாமிரா சொல்வாரு
நான் வலையுலகத்துக்கு வந்த போது அவ்வளவாக பெண் பதிவர்கள் என் கண்ணில்படவில்லை. ஆனால் இப்போது நான் படிப்பவர்கள் பட்டியலே பெரியதாக இருக்கிறது. வேலை செய்யும் பெண்கள் மட்டுமல்லாமல் வீட்டுராணிகளும் களத்தில் பலருண்டு. கடந்த சில வாரத்தில் வலைச்சரத்தில் பல பெண்பதிவர்களை அறிமுகப்படுத்தியிருப்பதால் அவர்கள் சொல்லாமல் விட்டவர்களில் நான் படிக்கும் சிலரைப் பற்றி காணலாம்.
தாரணிபிரியா: ஊஞ்சல் என எழுதும் இவர் கடந்த ஏப்ரல் முதல் எழுதி வருகிறார். பதிவுலகம் வளர இவர் செய்த தொண்டை இங்கே பாருங்கள்
பூர்ணிமா : கோவையை சேர்ந்தவர்.வசிப்பது சென்னையில்.கவிதை மற்றும் கும்மியில் கைதேர்ந்தவர். நான் சமீபத்தில் ரசித்த இவரின் கவிதைகள்.
ரம்யா: நகைச்சுவையில் கலக்குபவர். வைகைப்புயல் வடிவேலுவின் தீவிர ரசிகை. வைகைப்புயலின் சினிமா அனுபவத்தை இப்படி சொல்கிறார்
அருணா: இவர் இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவர் வலைப்பூவின் அழகான டெம்ப்ளேட் எனக்கு பிடிக்கும். இவங்க வீட்டுக்குள்ள ஒருநாள் முதலை வந்துடுச்சாங்க. அட நிஜமாத்தான். படிச்சு பாருங்க.
அமிர்தவர்ஷினி அம்மா: இவரும் கவிதைகள் எழுதுபவர்.ஆனால் மொக்கையிலும் சூரப்புலி. சில்லி சிக்கன் செய்ய சொல்லித் தருகிறார் பாருங்கள்.
ஸ்ரீமதி: உயிரோசை வரை இவரின் கவிதை ஓசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. கவிதைகள் மட்டுமல்லாது மொக்கையிலும் ஆண்களுக்கு சவால் விடுபவர். தாமிராவின் டாப்10 மொக்கையில் மூன்றாம் இடம் வென்றது இவரது பதிவு.லேட்டஸ்ட் மொக்கையை பாருங்க.
வித்யா: கடைசியா சொல்றேன்னா காரணம் இருக்கு. எங்க தல ஜே.கே.ஆரின் ரசிகை. மன்றத்தில் போராடி கொள்கை பரப்பு செயலாளர் பதவியைப் பெற்றவர். அவருக்கு அந்தப் பதவியை தேடித் தந்தது இந்த பதிவுதாங்க
அட என்னங்க இது. பட்டியல் நீண்டுக்கிட்டே போது. அடுத்தப் பதிவும் பெண் பதிவர்களுக்கு சொன்னா நீங்க வேணாம்ன்னா சொல்லப் போறீங்க. ..நெக்ஸ்ட்... ரெஸ்ட். அப்புறம் வரேன்.
|
|
'மகளிர் சரம்' அருமை:))
ReplyDeleteபல புது தளங்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது, நன்றி கார்க்கி!!
தொடர்ந்து பல வலைதளங்களை சரம் கோர்க்க என் வாழ்த்துக்கள்!!
என்ன இது விதி வீடியோ காம் விளையாடுதுன்னா பார்க்க வந்தேன்.
ReplyDeleteநன்றி கார்க்கி :).
என்னையும் இப்ப எல்லாம் நிறைய பேர் பதிவரா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு நினைச்சா சந்தோசமா இருக்கே. அதனால திரும்ப உங்களுக்கு பெரிய ஒரு நன்றி.
இவங்க ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பாணில கலக்கறவங்க. நல்ல அறிமுகம். (தாமிரா வயத்தெரிச்சல கொட்டிக்கிறீங்களே :))
ReplyDeleteஅனைத்தும் பட்டாசு!
ReplyDelete//Divya said...
ReplyDelete'மகளிர் சரம்' அருமை:))
பல புது தளங்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது, நன்றி கார்க்கி!!//
நன்றி திவ்யா
******************88
// Karthik said...
:))//
நன்றி கார்த்திக்
***********************8
//என்னையும் இப்ப எல்லாம் நிறைய பேர் பதிவரா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு நினைச்சா சந்தோசமா இருக்கே. அதனால திரும்ப உங்களுக்கு பெரிய ஒரு நன்றி.//
நீங்கபெரியாள்ய்தான் தா.பி
//சின்ன அம்மிணி said...
ReplyDeleteஇவங்க ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பாணில கலக்கறவங்க. நல்ல அறிமுகம். //
நன்றி அம்மிணி
*************8
//வால்பையன் said...
அனைத்தும் பட்டாசு!//
:)))))
ராசா என்னன்னவோ எழுதியிருக்கு, இப்போ என்னப் பத்தியும் எழுதியிருக்கு, ஏன் ராசா உங்களுக்கு சில்லி சிக்கன்னா அம்புட்டு உசிரா, ஏழுமலைக்கு சைட் டிஷ் இதுதானா.
ReplyDeleteநன்றி மேலும் பல வலைச்சரங்களை மாலையாக்க வாழ்த்துக்கள்.
//இவர் வலைப்பூவின் அழகான டெம்ப்ளேட் எனக்கு பிடிக்கும்//
ReplyDeleteஅச்சச்சோ.... எவ்வ்ளோ கஷ்டப் பட்டு எழுதறோம்...கடைசியிலெ டெம்ப்ளேட் பிடிக்கும்னு சொல்லிட்டீங்களேப்பா.....ம்ம்ம்...
வலைப்பூவுலகில் இதெல்லாம் சகஜமப்பா!!!! நன்றி கார்க்கி..
அன்புடன் அருணா
//இவர் வலைப்பூவின் அழகான டெம்ப்ளேட் எனக்கு பிடிக்கும்//
ReplyDeleteஅச்சச்சோ.... எவ்வ்ளோ கஷ்டப் பட்டு எழுதறோம்...கடைசியிலெ டெம்ப்ளேட் பிடிக்கும்னு சொல்லிட்டீங்களேப்பா.....ம்ம்ம்...
வலைப்பூவுலகில் இதெல்லாம் சகஜமப்பா!!!! நன்றி கார்க்கி..
அன்புடன் அருணா
//அமிர்தவர்ஷினி அம்மா said...
ReplyDeleteராசா என்னன்னவோ எழுதியிருக்கு, இப்போ என்னப் பத்தியும் எழுதியிருக்கு, ஏன் ராசா உங்களுக்கு சில்லி சிக்கன்னா அம்புட்டு உசிரா, ஏழுமலைக்கு சைட் டிஷ் இதுதானா.//
ஏழுமலைக்கு ஊறுகாய்தான் உசுரு
***********************
//அச்சச்சோ.... எவ்வ்ளோ கஷ்டப் பட்டு எழுதறோம்...கடைசியிலெ டெம்ப்ளேட் பிடிக்கும்னு சொல்லிட்டீங்களேப்பா.....ம்ம்ம்...
வலைப்பூவுலகில் இதெல்லாம் சகஜமப்பா!!!! நன்றி கார்க்கி..
அன்புடன் அருணா//
அட அதுவும் புடிக்குங்க.. :)))
கார்கி மிக்க நன்றி !!
ReplyDeleteஎன்னை நினைவு வைத்திருந்து
வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியத்திற்கு
மிக்க நன்றி,
நீவிர் வாழ்க வளர்க உன் தொண்டு
நன்றி நன்றி நன்றி நன்றி