07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 7, 2009

எஞ்சோட்டுப் பதிவர்கள்

ஆரம்பத்துலயே ஒரு விஷயத்தத் தெளிவுபடுத்துகிறேன். இந்த மாதிரி அறிமுகப்பதிவு எழுதுவதுல இருக்க சிரமம் ஒன்னுதான்; சில பதிவர்கள் விடுபட்டுப் போவது.

நம்ம வீட்டு விஷேசத்துக்கு அழைக்கும்போது சிலர் விடுபட்டுப் போகலாம், அது வேணும்னே இல்லை சுழ்நிலை சந்தர்ப்பம் அவ்வாறு அமைந்து விடும் அது போலத்தான் இதுவும்.

அதே போல இன்னொரு சிரமம் ஒரே ஆளுக்குபொன்ணு வீட்டுலருந்தும் மாப்பிள்ளை வீட்டுல இருந்தும் அழைப்பு வருவதுதான். அது மாதிரி ஏற்கனவே அறிமுகமான பதிவர்களை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு ஆகிவிடுகிறது.

நான் பதிவெழுத வந்த மே மாதம் இவர்களும் பதிவெழுத வந்தார்கள் எனவே ஒரே செட்டு நாங்க எல்லாம்; தாமிரா, வெண்பூ, நர்சிம், புதுகை அப்துல்லா, அனுஜன்யா, அதிஷா.


தாமிராங்கிற பேரே சொல்லும் தாமிரபரணிக்காரார்னு. தற்பொழுது உத்தியோகம் சென்னையில் அடிக்கடி பறப்பது ஹைதராபாத்துக்கு.

இவரு எழுதுனதுல எனக்கு ரெம்பப் பிடிசது ஒரு பெண் கருவுற்றுப் பிரசவித்து குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் காலம் பற்றிய இந்தப் பதிவு பப்புவும் சந்தனமுல்லையும்

ரயில் பயனங்களில் அடிக்கடி தென்படும் ஒரு காட்சிய இவரு ஒரு நல்ல பதிவாக்கியிருக்கார் பாருங்க. ரயில் நிலையத்தில் ஒரு பிரிவு

நம்ம பரிசல் மாஞ்சு மாஞ்சு அவர் தங்கமணிக்கு எழுதுன கடிதத்த எப்படி காமெடியாக்கியிருகாரு பாருங்க. என் ரமாவுக்கு..

எந்திரவியல் பின்புலத்தவராதலால் சிக்ஸ் சிக்மா பற்றிய எளிய ஆனால் தரமான பதிவு இது சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்


வெண்பூ
, சென்னையில் உத்தியோகத்தில் இருக்கிறார். வலை பாஷையில் பொட்டிதட்டும் வேலைதான்.

தங்கமணி அன்பா வாங்கிக் கொடுத்த கண்ணாடிய ஸ்டைலாப் போட்டுட்டு ஆபீஸ் போறவரோட நிலையப் பாருங்க சென்னையில் ஒரு மழைநாளில்.... (சிறுகதை)

சுய அனுபவம் வகையில் இவர் எழுதுன இந்த சைக்கிள் ரேஸ் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் பின் இருக்கும் மன நிலை ஆச்சர்யமிக்கது.என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்

தன் மகனின் திருவிளையாடல்கள் குறித்த இவரது கவிதை முயற்சி இங்கே. நல்ல நகைச்சுவை என் அன்பு மகனே...


நர்சிம்
, ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் நபர். எனினும் அது குறித்த கர்வமோ பந்தாவோ இல்லாதிருப்பவர்.

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் புத்தகம் மிக முக்கியமானது சங்க இலக்கியம் பற்றிய ஒரு எளிய ஆனால் தரமான அறிமுகம் கிட்டும். நடைமுறை வாழ்க்கைச் சம்பவம் ஒன்றைச் சொல்லி அதனுடன் பொருந்தும் சங்க இலக்கியப் பாடல் ஒன்றைச் சொல்லி அதன் எளிய புதுக்கவிதை வடிவத்தையும் தந்திருப்பார்.

நர்சிமும் அதே போல் சில முயற்சித்திருக்கிறார்;அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
பிரபல பதிவர் முரளி கண்ணனுக்காக...
மாவாப் பொரி(ழி)யும் பேனா..கம்பர்
மனம்..மாற்றம்..கம்ப ராமாயணம்
குறுந்தொகை... செம்புலம்.. ஆம்..அந்த ஃபேமஸ் பாட்டுத்தான்
குறுந்தொகை -அவசரமாய்...

நமக்கெல்லாம் ஆதர்ச எழுத்தாளர், ஆசான், குரு, தோழர் எல்லாம் சுஜாதாதான். அவரு இருந்திருந்தா இந்த வருடக் கடைசியில் இப்படித்தான் எழுதியிருப்பார்னு ஒரு பதிவு போட்டிருக்கார். மாற்றுக் கருத்தே இல்லை. இப்படித்தான் எழுதியிருப்பார்.
2009 புத்தாண்டு.. சுஜாதா இருந்திருந்தால் என்ன எழுதி இருப்பார்??


புதுகை அப்துல்லா
ஒரு வித்தியாசமான பதிவர். ஒரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அண்ணே என்று அழைப்பார். ஒரு ஸ்டீல் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோதிலும் எளிமைதான் அவரது சிறப்புத் தகுதி.

அதிகமும் மொக்கை போடுபவர் எனினும் அவர் எழுதியதில் பாடகர் மனோ பற்றிய இந்தப் பதிவுதான் அவர் பக்கம் என் கவனத்தைத் திருப்பிய பதிவு. அவர் பைபிளில் இருந்து கோட் பண்ணியிருப்பது ஆச்சர்யமான ஒன்று. மனோ எனும் மனிதன்

பிறவற்றைக் காட்டிலும் இவரது கவிதைகள் எனக்குப் பிடித்தவை
கடவுள்கள் மன்னிக்கட்டும்
தொடர்வினை
முதல் வகுப்பு

அதிகமும் தரமான கவிதைகள் எழுதிய இவர் மொக்கைப் பதிவராக வலம் வருகிறார். ஒரு வேளை அவருக்கதுதான் பிடித்திருக்கிறதோ?


அனுஜன்யா என்ற பெயரில் எழுதிவருமிவர் ஒரு பன்னாட்டு வங்கியின் உயர் அதிகாரி. எளியவராகவும் எல்லோராலும் அனுகமுடிந்தவராக இருப்பதும் அவரது இயல்பெனினும், அதுதானவரது சிறப்பு. வசிப்பது மும்பை. சுவாசிப்பது தமிழை.

அதிகமும் கவிதைகள் எழுதுகிறார். இவரது கவிதைகள் உயிரோசையில் வெளிவரும் தரத்தது.

ஹைக்கூ என்பது எதோ மூன்று வரிகளை மடக்கிப் போட்டால் எழுதலாமென்பது பெரும்பாலோரின் எண்ணம். நல்ல ஹைக்கூ 3 வரிகளைக் கொண்டிருக்கும் முதல் இரண்டு வரிகள் சம்பந்தமில்லாத வரிகளையும், மூன்றாம் வரி அவைகளை இணைத்து ஒரு காட்சிப் பிம்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

A fallen flower
Returning to the branch
it was a butterfly
என்பது அராகிடா மோரிடேக்கின் ஹைக்கூ.

உதிர்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறதா

வண்ணத்துப்பூச்சி
என்று சுமாராகத் தமிழ்ப் படுத்தலாம். இதை அடிபடையாகக் கொண்டுதான் தமிழில் இன்னும் ஹைக்கூ முயற்சிக்கப் படுகிறது.

அந்த வகையில் இவரது ஹைக்கூக்கள் பொய்க்கூ அல்லாமல் மெய்க்கூக்களே
ஹைகூக்கள், இன்னும் சில ஹைக்கூக்கள்

அண்மையில் எஸ்ரா, சிரியா நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர் அவர்களின் சிறுகதையை யாராவது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் சந்தோஷம் கொள்வேன் என்று எழுதியிருந்தார். அதைப்படித்த அனுஜன்யாவின் மொழிபெயர்ப்பு துயிலும் பெண்

கவிதையில் நல்ல வீச்சு உள்ளவர் இவரதுகவிதைகளில் மாதிரிக்கு ஒன்று.

விற்கப்பட்ட இருபதில்
சொள்ளமாடனுக்கு மூணு,
பக்ரீதுக்கு மூணு என்று
ஆறு ஆடுகள் மட்டும்
புண்ணியம் செய்திருந்தன

மிச்சத்தைச் அவரது வலைப்பூவில் படியுங்கள்; என் கருத்தும் உங்கள் கருத்தும் ஒன்றாகவே இருக்கும்.


கோவைக்காரரான வினோத் சென்னையில் உத்தியோக நிமித்தம் வசிக்கிறார். பிப் - 2008 முதல் எழுதுகிறார். அதிஷா என்பதவர் வலைப்பூ. அதிஷா என்பது ஒரு புத்தமத துறவியின் பெயர். மேலதிக விபரங்களுக்கு என்னைப் பற்றி - ஒரு சிறு குறிப்பு

எல்லாவற்றைப் பற்றிப் பதிவிட்டாலும், சினிமா விமர்சனம் இவரது ஸ்பெசலிட்டி. அழகானது நம் வாழ்க்கை...- LIFE IS BEAUTIFUL
சொர்க்கத்தின் குழந்தைகள் - CHILDREN OF HEAVEN

ஆனால் எனக்கு இவரிடம் பிடித்தது அவர் எழுதும் கடிதங்களும், சிறுகதைகளும்.
ரஜினிகோந்துவிற்கு தற்குறிதமிழனின் கடிதம் !! , மன்மோகன்சிங் ஐயாவுக்கு ஒரு பாராட்டு கடிதம் :தந்தி இல்லைங்கோ...

இவர் எழுதியதில் எனக்குப் பிடித்த சிறுகதை கிழிஞ்ச டவுசரும் கிழியாத மனசும்....


நாளை இலக்கியப் பதிவர்களப் சிலரைப் பார்க்கலம். அதன்பிறகு திரைகடலோடிய பதிவர்களையும், அதற்கடுத்த நாள் வலைப்பூவையரையும் பார்க்கலாம்.

16 comments:

  1. \\ஒரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அண்ணே என்று அழைப்பார்\\

    என்றென்றும் இளமை ...

    ReplyDelete
  2. 'அண்ண'னை அண்ணாச்சி அறிமுகப்படுத்தியது சிறப்பு

    ReplyDelete
  3. அண்ணே.. எப்படிண்ணே இப்பிடி? என் பதிவப்பத்தி எங்கிட்ட கேட்டா கூட இவ்ளோ அழகா சொல்வேனான்னு தெர்லண்ணே.. சீனியர்னா சீனியர்தான். பிரமாதம் வேலன்.. நன்றி.! பதிவு மட்டுமில்லாமல் லைட்டா பர்சனல் டச்சோட ஆரம்பிச்சீங்க பாருங்க அங்கதான் நிக்கிறீங்க நீங்க.! எங்க செட்டுன்னு என்னை, அதிஷாவையெல்லாம் (அனுஜன்யா, நர்சிம் உங்க பெர்சுங்க.. செட்டுதான் ஒத்துக்குறேன்)சொன்ன உங்கள் நுண்ணரசியலை ரசித்தேன். நம்ம செட்டுக்காரவுக எல்லாத்துக்கும் வாழ்த்துகள்.

    (மொத்தத்துல இந்த நாலுதான் உருப்படிங்கிறீங்க.. வெச்சுக்கிடுதேன் உங்களை.!)

    (நாளை இலக்கியப் பதிவர்களப் சிலரைப் பார்க்கலம்.// அப்போ நானெல்லாம் 'எளக்கிய' பதிவர் இல்லையா? அவ்வ்..)

    ReplyDelete
  4. //ஒரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அண்ணே என்று அழைப்பார்//

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  5. //ரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அண்ணே என்று அழைப்பார்//

    இதெல்லாம் ஓவரு

    ReplyDelete
  6. நாங்களும் மேமாதம் தான்!

    பொறந்ததும், வலைப்பூ ஆரம்பிச்சதும். நெனப்புல வெச்சிருந்தும், விட்டுப்புட்டீங்களே!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  7. அன்பின் வேலன்,

    அருமையான பதிவு - எத்தனை எத்தனை பதிவர்களின் எத்தனை எத்தனை பதிவுகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன ! அத்தனை அத்தனையையும் படிக்க வேண்டுமே -ம்ம்ம்ம்ம் - படிப்போம்

    நன்று நன்று நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. ஹி...ஹி..வருங்கால பதிவர்கள பத்தி எதேனும் அறிமுகம் உள்ளதா..?

    ReplyDelete
  9. நீங்க எம்புட்டு எலுதனாலும்..அம்புட்டையும் படிச்சி பார்த்து ரொம்ப ரோசிச்சி ஒரு நொள்ள நொட்ட சொல்லனுமிங்கறது எம்புட்டு கஸ்டம் தெரியுங்களா...ஹக்காங்.

    ReplyDelete
  10. நன்றின்ணே நன்றி...நம்பளையும் ஞாபகம் வச்சு இருக்கதுக்கு :)


    //அதிகமும் தரமான கவிதைகள் எழுதிய இவர் மொக்கைப் பதிவராக வலம் வருகிறார். ஒரு வேளை அவருக்கதுதான் பிடித்திருக்கிறதோ?
    //


    ஹி....ஹி...ஹி......
    வேற என்னத்த சொல்ல...

    ReplyDelete
  11. நல்ல அறி(ந்த)முகங்கள்!!!

    ReplyDelete
  12. மே 2008 ஒரு பெரிய பட்டாளமே வலைப்பூ துவங்கியிருக்கிறது! பரிசலும் மே 2008 என்று மனம் நம்ப மறுக்கிறது. எழுத்தையும், பிரபலத்தையும் வைத்துப் பார்த்தால், மே 2004 என்று இருக்க வேண்டும்.

    நன்றி - என்னைப் பற்றிய இனிய வார்த்தைகளுக்கு. அனைவரும் அறிமுகமான நண்பர்கள் என்பது நிச்சயம் கூடுதல் மகிழ்ச்சி.

    அனுஜன்யா

    ReplyDelete
  13. மே 2008 ஒரு பெரிய பட்டாளமே வலைப்பூ துவங்கியிருக்கிறது
    //

    ஆமா அனுஜன்யா அண்ணே. நம்ப கிரி,மோகன் கந்தசாமி,ராப்,வழிப்போக்கன் என்று இன்னும் ஏகப்பட்ட ஆளூங்க இருக்கு.

    ReplyDelete
  14. அப்துல்லா,

    அப்படியா, நான் கவனிக்கவில்லை இதுவரை. கிரியை 'சின்ன ரஜினி' என்று தெரியும். மோகன் கந்தசாமியை அவரது அசத்தல் பேட்டிகளிலிருந்து தெரியும். பிரபலமானவர்தான்.

    வழிப்போக்கன் - இனிமேல்தான் படிக்கவேண்டும். அறிமுகத்துக்கு நன்றி. தமிழ்மணம் பதிவுகளில் பெயர் அடிக்கடி பார்த்த ஞாபகம்.

    ராப்? - மே 2008? ஆச்சரியம். இவ்வளவு சிறிய காலத்தில் ஒரு bubbly legend! நாம எல்லாருமே மே 2008 batch! ரொம்ப பெருமையா சொல்லிக்கலாம்.

    அனுஜன்யா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது