அச்சு ஊடகத்தில் நுழையும் பதிவர்கள்
இந்தப் பதிவு என் வலையில் ஏற்கனவே பதிவேற்றப்பட்டது. எனக்கு பிடித்த பல பதிவர்களின் சுட்டி இதில் இருப்பதால் இங்கேயும் பதிவிடுகிறேன். **************************************************** ஆனந்த விகடன், குமுதம் போல ஒரு வார இதழை தொகுப்பது போல எளிதான வேலை எதுவுமே இல்லை. நம்ம பதிவர்களின் பதிவுகளை வைத்தே ஒரு இதழ் தயாரிப்பது எப்படி என்று ஒரு அலசல். முதலில் ஒரு இதழுக்கு தேவையானவை எவையென்று பார்ப்போம். 100 பக்கம் கொன்ட ஒரு இதழில் 30 பக்கம் விளம்பரங்கள் போட வேண்டும். 30 பக்கமா என்று வாயைப் பிளப்போர் இந்த வார குமுதத்தை சரிபார்த்துக் கொள்ளவும். பின் 5 பக்கம் நடிகைகளின் படங்களுக்கு ஒதுக்க வேண்டும். நடிகைகள் படத்திற்கு மங்களூர் சிவா அல்லது சஞ்சயின் வீக் எண்ட் ஜொள்ளு படத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பின் ஒரு 5 பக்கத்திற்கு சினிமா பற்றிய செய்திகள் போட வேண்டும். அதில் ரஜினியை பற்றியும் விஜயை பற்றியும் செய்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்றால் "வில்லு படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருப்பதில் விஜய் சந்தோஷமாக இருக்கிறார்" என்ற துணுக்காவது இருக்க வேண்டும். இது போன்ற செய்திகளை அவர்களும் மறுக்க போவதில்லை. முரளிகண்ணனின்பதிவுகளை போட்டால் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். மற்ற செய்திகளுக்கு தமிழ்சினிமா என்ற வலையில் வரும் செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மீதம் இருப்பது 60 பக்கங்களே. சமீபத்தில் வந்த இரண்டு படத்தின் விமர்சனத்திற்கு நான்கு பக்கங்கள். லக்கி மற்றும் அதிஷாவின் விமர்சனத்தை போட்டு விடலாம்.யாராவது ஒருவரின் கேள்வி பதிலுக்கு நான்கு பக்கங்கள். நம்ம டோண்டு அவர்களின் கேள்வி பதில்களை இதற்கு பயன்படுத்திக் கொள்லலாம்.கடைசிப் பக்கத்தை பயோ டேட்டாவிற்கு ஒதுக்க வேண்டும். இருக்கவே இருக்குகோவியாரின்(அவர் எழுதும் என்ற பொருளில்) பயோடேட்டா. ஒரு தலையங்க பக்கம். நர்சிம்மிடம் விட்டால் ஏதாச்சும் செய்வார்.அவசரப்பட்டு உண்மைத்தமிழனிடம் கொடுத்து பக்கத்தை வீணடிக்க கூடாது. ஆக 10 பக்கம். மீதம் இருப்பது 50தான். கார்ட்டூன் கமெண்ட்டுக்கு இரண்டு பக்கங்கள். அதுக்கு யாருடைய பதிவு என்று சொல்லவும் வேண்டுமா? யாராவ்து ஒருவர் இன்னொருவருக்கு எழுதும் பகிரங்க கடிதத்திற்கு 3 பக்கங்கள். இதற்கு பல பதிவுகள் உண்டு. அந்த சூழ்நிலைக்கேற்ப ஒன்றை தேர்வு செய்துக்கொள்ள வேண்டியது. கவிதைகளுக்கு ஐந்து பக்கங்கள். ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சுகுணா என அதுக்கும் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆக பத்து பக்கங்கள் மீதம் இருப்பது 40 தான் சகா. ஆறுப் பக்கங்களை ஒருப் பக்க கதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் ஒதுக்க வேண்டும். வெண்பூ,ச்சின்னப்பையன் என இதுக்கும் ஏகப்பட்ட போட்டியாளர்கள். ஒரு தொடர்கதைக்கு ஐந்து பக்கங்களென இரண்டு தொடர்கதைக்கு பத்துப் பக்கங்கள். இதற்கு செந்தழல் ரவிமற்றும் வெட்டிப்பயல் சரியாக இருப்பார்கள். லூஸுப்பையன், ஜாலிகிளப் என மிமிக்ரி தொடருக்கு நான்கு பக்கங்கள். டீ.ஆரின்இந்தப் பதிவு அதற்கு பொருத்தமாய் இருக்கும். மீதம் இருப்பது வெறும் 20 தான் மக்கா. புதிதாய் வலையில் நுழைந்திருக்கும் ஞானி, அல்லது வெகுநாட்களாய் எழுதி வரும் பாமரன் அல்லது கொஞ்சம் மலிவான பத்திரிக்கை என்றால் சாரு என யாராவது ஒருவரின் ஏ பக்கங்கள், படிச்சதும் தைச்சதும் அல்லது நேரான பக்கங்கள் என நான்கு பக்கங்கள் ஒதுக்க வேண்டும். வலையுலக ஜோசியர்சுப்பையா எழுதும் ராசிபலனுக்கு 3 பக்கங்கள். வீட்டுக்கார அம்மாவின் ஷாப்பிங் லிஸ்ட் அல்லது பட்ஜெட் அல்லது சமையல் ஐடியா என தங்கமணிகள் மேட்டருக்கு 3 பக்கங்கள். இருக்கவே இருக்கிறார் தாமிரா. ஆக 10 பக்கம் ஆச்சா? மீதம் பத்தே பத்துதான். ஜோக்குகள் ஒரு மூன்று பக்காமாவது போட வேண்டாமா? ஒரு சாமியாரின் கட்டுரை நான்கு பக்கங்கள். அதற்கு வலையுலகில் சரியான ஆளில்லாததால் அது நீக்கப்படுகிறது.ஜோசப் பாலராஜ் போன்று அவ்வபோது எழுதும் பதிவர்களின் வேலைக்காவத விடயங்களுக்கு இரண்டு பக்கம். பின்னூட்டம் மட்டுமே இடும் கும்க்கி, விஜய் இன்னபிற வாசகர்களின் கடிதததிற்கு இரண்டு பக்கங்கள். நிச்சயம் இதில் ரிப்பீட்டேய் இடம் பெறக்கூடாது.முதல் பக்கத்தை ராப்பிற்குகொடுக்காவிட்டால் அந்த வலையுலக பத்திரிக்ககை முழுமையடையாது என்பதை சொல்லவும் வேண்டுமா? மீதம் இருப்பது இரண்டே இரண்டு பக்கங்கள்தான். என்னங்க மறந்துட்டிங்களா? சிந்தனை சின்னசாமிஇருக்காரில்ல? அவருக்கு ஒருப் பக்கம். அந்த மீதி ஒரு பக்கம்தான் நம்ம புத்தக்த்தின் USP. நல்ல அழகான, இளைமயான, பிரபலமான ஒருவர் கடந்த வார இதழை கையில் வைத்துக் கொண்டு தனக்கு பிடித்த பகுதிகளை சொல்வது போல் ஒரு படம் வேணுமில்ல? எல்லா பகுதிக்கும் தகுதியானவர்கள் வரிசையில் நிற்க இதற்கு மட்டும் இவரை விட்டால் வேறு ஆள் கிடைக்கவில்லை நம்ம வலையுலகில். நீங்களே க்ளிக்கி பாருங்கள் அவரை. ஆக மொத்தம் 100.இப்போது நம்ம பத்திரிக்கை தயார். அவ்வபோது பக்கம் அதிகமானால் PITல் வென்றபுகைப்படங்கள், அய்யனாரின் உலக சினிமா, வாலுதான் ப்ளீச்சிங் ஆதாரத்துடன் ஸ்பெஷல் ரிப்போர்ட் என எதற்கும் நம் வலையில் சரக்குள்ளது.
|
|
வணக்கம் சகா
ReplyDeleteபயணக்கட்டுரைகளை விட்டுட்டீங்களே....
ReplyDeleteநான் வேணுமுன்னா ஒரு ரெண்டே ரெண்டு பக்கம் எழுதவா?:-)))))
ஸ்ஸ்ஸபா .. முடியலை.. சில பல மிரட்டல்களால் வீக் எண்ட் ஜொள்ளு பதிவுகள் என் வலைப்பூவில் நீக்கப் பட்டுவிட்டது.. :(
ReplyDeleteகடைசி ரிப்போர்ட் தான் இப்போதைக்கு என் வலைப்பூவுக்கு இட்டுனு போவும்.. :)
//துளசி கோபால் said...
ReplyDeleteபயணக்கட்டுரைகளை விட்டுட்டீங்களே....
நான் வேணுமுன்னா ஒரு ரெண்டே ரெண்டு பக்கம் எழுதவா?:-)))))//
அட லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா எதுனாச்சும் எழுத எனக்கும் ஒரு அரை பக்கம் கொடுங்க கார்க்கி.சும்மா எதுனாச்சும் எழுதறேன் தம்பி.அட ஒரு கால் பக்கம் ? ஒரு ரெண்டு காலம் இல்லாட்டி ரோ இப்படி எதுனாச்சும் பார்த்து பிரிச்சி கொடுங்க எனக்கும்!?
ஜூப்பரு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சிரலாம்!
ReplyDeleteஅதுக்கு முன்னாடி ஒரு மேட்டர்!
ஏற்கனவே ஊடக துறையில் புகழடைந்த லதானந்த் அங்கிளை நீங்க மறந்திட்டதால் அவர் இரட்டை குழல் துப்பாக்கியோடு உங்களை தேடிகிட்டு இருக்கார்
பாவாஜி,
ReplyDeleteமேட்டர் ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு, ”வலை மின்னிதழ்” குழு ஒன்னு உருவாக்குங்க. உள்ளடக்கத்தைக் கொடுத்துவிட்டால் வடிவமைப்பும் மின்னிதழாக்கமும் நான் பாத்துக்குறேன்.
உங்கள் ஊர்க்காரன்
விஜய்கோபால்சாமி
ஓவ்வொரு பூக்களாக சரியாக தேர்வு செய்து நல்ல பூங்கொத்தாக அளித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி..
அப்புறம்...ஒரு நல்ல எடிட்டர் உங்களுள் ஒளிந்திருக்கிறார். மின்னிதழ் துவங்கினால் அந்த பதவி நிச்சயம் உங்களுக்கு தான். :-))
அனைவருக்கும் நன்றி.. ஒரு வார காலம் என்னை சகித்துக் கொண்ட வலைச்சர வாசகர் அனைவருக்கும் நன்றி.. என் முதல் பதிவுக்கு பின்னூட்டமிட்டவர் சீனா அய்யா. அவரே அதை மறந்திருப்பார். இப்போது மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி..
ReplyDeleteசூப்பர் ஐடியா கார்க்கி
ReplyDelete