07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 15, 2009

டூ யூ நோ கார்க்கி?

"இறுக்கமான உங்களிலிருந்து கடைசிப் புன்னகையை எப்போதுதிர்த்தீர்கள்?கடந்தும், நடந்தும், விரட்டியும், கூச்சலிட்டும் போகும் சிறார்களை எப்போதிலிருந்து சலனங்களில்லாது பார்க்கத் துவங்கினீர்கள்? நீளமான வெள்ளை நிற இறக்கைகளைக் கொண்ட தூரதேசப் பறவைகளை ஏனிப்போதெல்லாம் நின்று கவனித்துப் பார்ப்பதில்லை? இந்தப் பனிக்குப் பிறகு தொடர்ச்சியாய் அவைகளை உன்னால் பார்க்கவும் இயலாது என்பது உங்களுக்கு தெரியும்தானே? அட! இந்த கார்க்கியின் பதிவுகளை ஏன் உங்களுக்கு பிடித்துத் தொலைப்பதில்லை?"

சரி..சரி.. இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி? முன்னாடி நான் எழுதிய பத்தி பின்நவீனம் மாதிரி இருக்குனு பின்னாடி பெரிய ஆளா வரப்போகிற கண்ணாடி போட்ட பதிவர் முன்னாடி ஒரு நாள் என்னிடம் சொன்னார். பின்னாடி நடக்கப் போகும் விஷ்யங்களுக்கு எல்லாம் முன்னாடியே முக்கியத்துவம் நான் கொடுப்பதில்லை என அவர் சொன்னதுக்கு பின்னாடி அந்த கண்ணாடி பதிவரிடம் சொன்னேன். மறுபடியும் டென்ஷனா? சரி வேண்டாம்.

இந்த சோமாரி நமக்கு இன்னாத்துக்கு இத்தயெல்லாம் உடறானுதான யோசிச்சிகினுக்கீரிங்கோ.. அது ஒன்னுமில்ல நைனா. நானும் கடய தொறந்து ஒரு மாசம் என்னென்ன‌வோ வித்தேம்ப்பா. ஒன்னியும் யாவாரம் ஆவல. காண்டாயி, மவனே எதையாச்சும் பண்ணி மாமா பேரு சூடாகானும்னு இத்த போட்டேம்ப்பா. மொத வாட்டி தமில்மணத்துல நம்ம சரக்கும் சூடான லிஸ்ட்ல வந்துச்சு. அப்பாலிக்காத்தான் என்ன செஞ்சா யாவாரம் ஆகும்னு தெர்ஞ்சுது. இப்போ என்னாத்துக்கு காண்டாவுற நீ?

சரி, விஷயத்துக்கு வருவோம். நான் ப்ளாக் எழுத தொடங்கிய போது எனக்கு இருந்த ஒரே ஆசை,இவன் இப்படித்தான் எழுதுவான் என்ற எந்த ஒரு முத்திரையும் என மேல விழக்கூடாது என்பதே. ஒழுங்கா எழுத மாட்டான்னு சொன்னாலும் பரவாயில்லை ஒரே மாதிரி எழுதுவான்னு சொல்லக்கூடாதுனு ஆசை. அதனாலே தொடர்கதை, சிறுகதை, கவிதை, மொக்கை, டீ.ஆர். கவுஜ, காக்டெய்ல், காதல், கார்ட்டுண் கமென்ட்கள், நகைச்சுவை என எல்லாத் தலைப்பிலும் எழுதினேன். இதில் பதிவர்களை கலாய்த்தவை, காதல் போன்ற லேபிளில் எழுதியவைக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. சமீபகாலமாக என் புட்டிக்கதைகள் நல்ல ஹிட்டாகியிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நகைச்சுவைதான் எனக்கு சுமாரா வருதோன்னு நினைக்கத் தோன்றுகிறது.

21 comments:

  1. //இவன் இப்படித்தான் எழுதுவான் என்ற எந்த ஒரு முத்திரையும் என மேல விழக்கூடாது என்பதே.//

    ஓ...இப்படியெல்லாம் ஒரு ஆசை இருக்குதா??

    //ஒழுங்கா எழுத மாட்டான்னு சொன்னாலும் பரவாயில்லை//

    அட இன்னும் யாரும் சொல்லையா... நானே நாலஞ்சு தடவ அனானியா வந்து சொன்னேனே தல கவணிக்கலையா :)

    ReplyDelete
  2. //நகைச்சுவைதான் எனக்கு சுமாரா வருதோன்னு நினைக்கத் தோன்றுகிறது.//

    எனக்கும் உங்களோட இந்த நகைச்சுவை உணர்வு தான் ரொம்ப பிடிச்சிருக்கு ;)

    ReplyDelete
  3. ஓ, இப்பதான் ஹீரோ இன்ட்ரடக் ஷனா??

    எங்கப்பா ஓப்பனிங் ஸாங்கு?

    ஆடுங்கடா என்ன சுத்தி...

    நானே நிறைய போஸ்ட் படிக்காம இருக்கேன். படிச்சிட்டு வர்றேன்.
    :)

    ReplyDelete
  4. அண்ணே... இம்புட்டு நாளு உங்க கடைப்பக்கம் வராம மிஸ் பண்ணிட்டனே...

    நௌ ஐ நோ கார்க்கி !!

    பரிசல் மகிழ்வுந்து சாவின்னு உங்களை எனக்கு அறிமுகம் பண்ணபோதே வந்துருக்கணும்.

    ReplyDelete
  5. // Bleachingpowder said...
    //நகைச்சுவைதான் எனக்கு சுமாரா வருதோன்னு நினைக்கத் தோன்றுகிறது.//

    எனக்கும் உங்களோட இந்த நகைச்சுவை உணர்வு தான் ரொம்ப பிடிச்சிருக்கு //

    நன்றி சகா

    *****************

    // Karthik said...
    ஓ, இப்பதான் ஹீரோ இன்ட்ரடக் ஷனா??

    எங்கப்பா ஓப்பனிங் ஸாங்கு//

    ஹிஹிஹி.. தல இருக்கும்போது வால் ஆடக்கூடாதுப்பா

    ************************

    // Mahesh said...
    அண்ணே... இம்புட்டு நாளு உங்க கடைப்பக்கம் வராம மிஸ் பண்ணிட்டனே...

    நௌ ஐ நோ கார்க்கி !!

    பரிசல் மகிழ்வுந்து சாவின்னு உங்களை எனக்கு அறிமுகம் பண்ணபோதே வந்துருக்கணு//

    அதே பரிசல் மூலமாத்தான் உங்க கடைக்கு வந்தேன்.. நன்றி

    ReplyDelete
  6. கலக்குங்க..கலக்குங்க.. சென்னை வந்தும் பார்க்காமலே போய்ட்டீங்களே கார்க்கி... (என்னை)

    வலைச்சரத்திற்கு வாழ்த்துகள்.. வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. // narsim said...
    வலைச்சரத்திற்கு வாழ்த்துகள்.. வாழ்த்துக்கள்..!//

    Repeatuuuuuuuuuu.... :)))

    ReplyDelete
  8. //கூட்டிக் கழித்துப் பார்த்தால் நகைச்சுவைதான் எனக்கு சுமாரா வருதோன்னு நினைக்கத் தோன்றுகிறது.//


    எதை கூட்டி எதை கழித்து,

    (உங்கள் பதிவுகளில் முதல் பின்னூட்டம் இடும் உங்களது நண்பர் அருண் தான் ப்ளீச்சிங்பவுடர் என்று இந்த பக்கம் ஒருத்தர் சொல்றார். இல்லை அது வால்பையன் தான்னு திரும்பவும் ஒரு பதிவு உங்க ப்ளாக்குல போடுங்க தல, அத ஏன் இங்கே சொல்றேன்னா முதல் பின்னூட்டமா ப்ளீச்சிங் பவுடர பார்த்ததும் ஞாபகம் வந்துருச்சு)

    ReplyDelete
  9. ஹைய்யா ஜாலி...நான் ரெடி...இந்த வாட்டி திரியை கொளித்தி போட போறது யாரு

    ReplyDelete
  10. // narsim said...
    கலக்குங்க..கலக்குங்க.. சென்னை வந்தும் பார்க்காமலே போய்ட்டீங்களே கார்க்கி... (என்னை)//

    :(((((... நன்றி தல‌

    *****************
    // ஸ்ரீமதி said...
    // narsim said...
    வலைச்சரத்திற்கு வாழ்த்துகள்.. வாழ்த்துக்கள்..!//

    Repeatuuuuuuuuuu.... :)))//

    நன்றியும் ரிப்பீட்டேஎய்ய்

    **********************

    // வால்பையன் said...
    //கூட்டிக் கழித்துப் பார்த்தால் நகைச்சுவைதான் எனக்கு சுமாரா வருதோன்னு நினைக்கத் தோன்றுகிறது.//


    எதை கூட்டி எதை கழித்து//

    உங்களுக்கு எது தெரியுமோ அதை

    *****************

    // Bleachingpowder said...
    ஹைய்யா ஜாலி...நான் ரெடி...இந்த வாட்டி திரியை கொளித்தி போட போறது யா//

    அதான் வாலு போட்டாரே

    ReplyDelete
  11. ஓ உங்க அறிமுகப் பதிவா???
    நல்லாருக்கு...நல்லாருக்கு.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  12. ஹி...ஹி....பின் ந வீணம் எதுன்னு உணர வைத்ததற்க்கு நரி கார்க்கி...சே...நன்றி கார்க்கி.

    ReplyDelete
  13. (உங்கள் பதிவுகளில் முதல் பின்னூட்டம் இடும் உங்களது நண்பர் அருண் தான் ப்ளீச்சிங்பவுடர் என்று இந்த பக்கம் ஒருத்தர் சொல்றார். இல்லை அது வால்பையன் தான்னு திரும்பவும் ஒரு பதிவு உங்க ப்ளாக்குல போடுங்க தல, அத ஏன் இங்கே சொல்றேன்னா முதல் பின்னூட்டமா ப்ளீச்சிங் பவுடர பார்த்ததும் ஞாபகம் வந்துருச்சு)

    “தல”பாட்டு ஒன்னு கியாபகத்துக்கு வருது...அப்புறமா காதை கொண்டாங்க ஜொள்ளிர்ரேன்.

    ReplyDelete
  14. அறிமுகம்...கலக்கலா வந்திருக்கு...ஜமாய்ங்க.

    ReplyDelete
  15. ப்ளீச்சிங்கும்...வாலும் பின்னே ஞானும் இங்ஙன வந்துட்டு..பின்னே ஒரு கை குறையுதல்லோ....

    ReplyDelete
  16. பாதி படம் முடிஞ்சப்புறம்தான் பாக்கியராஜ் படங்கள்லே ‘கதை வசனம் டைரக்‌ஷன்' ஸ்லைட் போடுவாங்க.

    அந்த மாதிரி இப்போ தாமதமா வந்திருக்கிற அறிமுகப்பதிவு... :-))

    சூப்பர்.

    ReplyDelete
  17. ஒஹோ இப்போ சார் தான் ஹீரோவா?? வாழ்த்துக்கள் நண்பா:)

    ReplyDelete
  18. //நகைச்சுவைதான் எனக்கு சுமாரா வருதோன்னு நினைக்கத் தோன்றுகிறது.//

    ஆமாம் சகா. எங்களுக்கும் அது தான் பிடிச்சிருக்கு.....

    ReplyDelete
  19. /ஓ உங்க அறிமுகப் பதிவா???
    நல்லாருக்கு...நல்லாருக்கு.
    அன்புடன் அருணா//

    நன்றி மேட்ட்ட்ட்டம்

    ******************

    //கும்க்கி said...
    அறிமுகம்...கலக்கலா வந்திருக்கு...ஜமாய்ங்//

    நிஜமாவா தல?

    *****************

    /ச்சின்னப் பையன் said...
    பாதி படம் முடிஞ்சப்புறம்தான் பாக்கியராஜ் படங்கள்லே ‘கதை வசனம் டைரக்‌ஷன்' ஸ்லைட் போடுவாங்க.

    அந்த மாதிரி இப்போ தாமதமா வந்திருக்கிற அறிமுகப்பதிவு... :-))

    சூப்பர்//

    நன்றி சகா

    *************************

    //வித்யா said...
    ஒஹோ இப்போ சார் தான் ஹீரோவா?? வாழ்த்துக்கள் நண்பா//

    நம்மள கலாய்க்கறதுல அனைவருக்கும் குதூகலம் போல‌

    **********************

    /Kathir said...
    //நகைச்சுவைதான் எனக்கு சுமாரா வருதோன்னு நினைக்கத் தோன்றுகிறது.//

    ஆமாம் சகா. எங்களுக்கும் அது தான் பிடிச்சிருக்கு//

    நன்றி சகா...

    ReplyDelete
  20. வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துகள் கார்க்கி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது