விடை பெறுகிறேன் நண்பர்களே..!
இந்த ஏழு நாட்களும் காலம் இழுத்துவந்து என்னை உங்களுடன் பேசவிட்டது. நான் இணையப் பெருங்கடலில் சந்தித்த மனிதர்களை, என்னைச் சிந்திக்க வைத்தவர்களை எனப்பலரைப்பற்றியும் ஒரு பழங்காலப் பாட்டியைப் போல உங்களையும் இருத்திவைத்துக் கதைத்துக் கொண்டிருந்த அற்புதமான வாய்ப்பைத் தந்த நண்பர் சீனாவுக்கு மீண்டும் நன்றி.
முன்பே சொன்னது போல இணையப்பெருங்கடலில் வலைப்பூ எனும் பெரியதொரு கப்பலில் கூடப்பயணிக்கும் சகபதிவர்களை சுற்றிவர இருக்கும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்த முயன்றிருக்கிறேன். எனக்கருகில் நெருக்கமாக இருக்கும் மற்றும் எனது கைகளை நீட்டினால் தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் அன்பு நெஞ்சங்களையெல்லாம் என்னாலியன்றவரை அறிமுகப்படுத்திவிட்டதாக ஒரு சிறு ஆசுவாசம் மனதை நிறைக்கிறது எனினும் என்னால் இங்கு குறிப்பிடப்படாத மற்றும் சுட்டிக்காட்டப்படாத இன்னும் பல சிறந்த பதிவர்கள் வெளியில் உலவுகின்றனர்.
அவர்கள் எனது நண்பர்களாகவோ, நான் விரும்பிப் பார்க்கும் பதிவுகளின் சொந்தக்காரர்களாகவோ இருக்கும் பட்சத்திலும் இங்கு வலைச்சரப் பதிவுகளில் சுட்டிக்காட்டப்படாவிட்டால் அதற்குக் காரணம் நேரமின்மையும், இணையமும்தான். இப்பொழுது இதை எழுதும் கணத்தில் கூட வழமையாகப் பாவிக்கும் கணனியில் இணையம் செயலிழந்து 'இண்டர்நெட் கபே'யை நாடச் செய்திருக்கிறது.
வலைச்சரப் பதிவுகள் ஒவ்வொன்றுக்குமாக இப்படி நாடிய பொழுதில், வழமையாகப் பாவிக்கும் கணனியில் சேமித்துவைத்திருக்கும் சுட்டிகளை மறந்து மற்றும் இழந்து புதுக்கணனியில் சுட்டிகளை யோசிக்கவேண்டியிருந்தது. எனக்குப் பின்னால் காத்திருக்கும் நீண்ட வரிசை யோசிக்கவும் அனுமதியளிக்க மறுத்து ஒரு சலிப்போடு நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கையில் அவசரம் அவசரமாக ஒவ்வொரு பதிவையும் எழுத வேண்டியிருந்தது. எனவே விடுபட்ட நண்பர்கள் புரிதல்கொண்டு என்னை மன்னியுங்கள்.
பதிவுகளைப் பார்த்து, படித்து பின்னூட்டமிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..!
தொடர்ந்தும் உங்களுடன் பயணிக்கும் ஆவலெனக்குண்டெனினும் இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால், உங்களுடனான பயணத்தினிடையில் எனக்கு இறங்க வேண்டியும் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள் !
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
|
|
ரிஷான்,
ReplyDeleteஅருமையான பதிவுகள்..... கலக்கலான வாரமாக இருந்தது..மீண்டும் வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கள்..
கொடுத்த வேலையை இவ்வளவு சிறப்பாச் செஞ்சதுக்கு முதலில் என் பாராட்டுகள்.
ReplyDeleteநம்மளையும் கண்டுக்கிட்டதுக்கு இதுகூடச் சொல்லலைன்னா எப்படி?:-))))
ச்சும்மா.......
அருமையான வாரமாவும் அழகான சரமாவும் தொடுத்துட்டீங்க ரிஷான்.
இனிய வாழ்த்து(க்)கள்.
நன்றி நண்பரே...
ReplyDeleteநல்லதொரு ஆசிரியர் பாடசாலையை விட்டு சடுதியாக விலகிச்செல்லும்போது மனசில் தேங்கி நிற்கும் சொல்லொணா துயர்கள் போல...உங்கள் இந்த விடைபெறுதல் சற்று கவலையை தருகிறது...
இந்த வாரம் முழுக்க உங்கள் படைப்புக்களை ரசித்திருந்தோம்..இனியும் ரசிப்போம்..
உங்கள் இலக்கியப்பயண வெற்றிகளுக்காய் விரார்த்திக்கிறேன்..வாழ்த்துகிறேன்..
நன்றிகள் நண்பரே
வலைச்சரத்தில் சிரத்தையோடு ஈடுபட்டவர்களில் நீங்களும் ஒருவர், அருமையான தொகுப்புக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDeleteஇத்தனை கால உங்கள் இணைய வாசிப்பில் நீங்கள் ரசித்தவர்களை நல்ல படைப்புகளைத் தந்தவர்களை மிக மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் தனிப் பதிவுகளுக்கான சுட்டியாகத் தராமல் மொத்தமாக அவர்தம் வலைப் பூக்களையே முன்னிறுத்தியிருப்பதும் வித்தியாசமான நல்ல பாணி. மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான்.
சமயம் வாய்ந்தால் இன்னும் பலரை அறிமுகப் படுத்துவதாகவும் கூறியிருக்கிறீர்கள். அதுவும் சீக்கிரமே நிறைவேற வாழ்த்துக்கள்:)!
மிகத்தாமதமான வாழ்த்துக்கள் ரிஷான். கலக்கியிருப்பீங்க தெரியும். இனிமேதான் படிக்கணும். படிச்சிடறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteரிஷான் சிறப்பாக உங்கள் பணியை நிறைவேற்றி இருக்கிறீர்கள்..
ReplyDeleteஅருமையான தொகுப்புக்கள்..
வாழ்த்துக்கள் நண்பரே..
அனைத்து பதிவுகளுக்கே அருமையாக இருந்தன... உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள் நண்பா !
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் ... வாசிக்க ,ரசிக்க நாமிருக்கிறோம்..
சொல்லப்போனால் உங்கள் பின்னூட்டங்களை காண்பதிலும் உங்கள் வாசிப்பனுபவத்தை காண முடிந்தது இந் வாரத்தில் இத்தனை வேகமாகஇத்தனை சுட்டிகள் அதுவும் சகல தளங்களிலும் இருந்து ..
ReplyDeleteமிகப்பயனுள்ள சுட்டிகள் ரிஷான்...புதியவர்களுக்கு பார்த்தே இராத சுட்டிகளை எல்லாம் கொடுத்திருந்தீர்கள் அதுவும் பாராட்டத்தக்க விசயம்...
கலக்கலான வாரம் வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் ரிஷான்.
ReplyDeleteஇத்தனை வலைப்பதிவுகளையும் போய் படித்திருக்கிறீர்களே என்று நினைக்க பிரமிப்பாகத் தான் இருக்கிறது. உங்கள் தேடலும் வாசிப்பனுபவமும் உங்கள் எழுத்தை மேலும் செறிவாக்க உதவுகிறது என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. அருமையாக தொகுத்தளித்தற்கு நன்றி.
அன்புள்ள ரிஷான்
ReplyDeleteஇணையம் இல்லாத இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் சிறப்பாக உங்கள் பதிவுகளை இட்டிருந்தீர்கள்.
இது வரை நான் பார்த்திராத பல வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தியிருந்தீர்கள். ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் அருமையாகத் தொகுத்திருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்.
"இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால்"
உங்கள் வருகையை முன்னிட்டு வீட்டில் ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடக்கவிருப்பதால்..................
"மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள்"
இல்லை இல்லை.
நீங்கள் தான் எல்லோரையும் மறந்துவிடப்போகிறீர்கள்.
:)
நன்றி ரிஷான் .கண்டிப்பாக நாங்கள் உங்களையும் நீங்கள் எங்களையும் மறக்கப் போவதில்லை ..உறுதியாக மீண்டும் கை கோர்ப்போம் .......
ReplyDeleteவாழ்த்துக்கள் ரிஷான்.
ReplyDelete//இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால், உங்களுடனான பயணத்தினிடையில் எனக்கு இறங்க வேண்டியும் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள் !
//
இலங்கைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். வாருங்கள். இங்கு உங்களை நிறைய பேருக்கு அறிமுகம் செய்துவைக்கவுள்ளேன்.
அன்பு ரிஷான்
ReplyDeleteநினைவு கூர்ந்தமைக்கு நன்றி
பிச்சுமணி
அன்பின் தூயா,
ReplyDelete//ரிஷான்,
அருமையான பதிவுகள்..... கலக்கலான வாரமாக இருந்தது..மீண்டும் வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கள்..//
தொடர் வருகைக்கும் தந்த ஊக்கத்துக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரி :)
வாங்க துளசி டீச்சர் :)
ReplyDeleteஉங்க லீவுலயும் இந்த வீட்டுப்பக்கம் வந்து பார்த்து பின்னூட்டம் தந்துட்டுப் போனதற்கு நன்றி டீச்சர் :)
அன்பின் ஷிப்லி,
ReplyDelete//நன்றி நண்பரே...
நல்லதொரு ஆசிரியர் பாடசாலையை விட்டு சடுதியாக விலகிச்செல்லும்போது மனசில் தேங்கி நிற்கும் சொல்லொணா துயர்கள் போல...உங்கள் இந்த விடைபெறுதல் சற்று கவலையை தருகிறது...
இந்த வாரம் முழுக்க உங்கள் படைப்புக்களை ரசித்திருந்தோம்..இனியும் ரசிப்போம்..
உங்கள் இலக்கியப்பயண வெற்றிகளுக்காய் விரார்த்திக்கிறேன்..வாழ்த்துகிறேன்..
நன்றிகள் நண்பரே//
அழகான பின்னூட்டம்.. :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கானாபிரபா,
ReplyDelete//வலைச்சரத்தில் சிரத்தையோடு ஈடுபட்டவர்களில் நீங்களும் ஒருவர், அருமையான தொகுப்புக்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
ReplyDelete//இத்தனை கால உங்கள் இணைய வாசிப்பில் நீங்கள் ரசித்தவர்களை நல்ல படைப்புகளைத் தந்தவர்களை மிக மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் தனிப் பதிவுகளுக்கான சுட்டியாகத் தராமல் மொத்தமாக அவர்தம் வலைப் பூக்களையே முன்னிறுத்தியிருப்பதும் வித்தியாசமான நல்ல பாணி. மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான். //
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி..:)
நீங்கள் பொறுப்பேற்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் !
வாங்க மங்களூர் சிவா :)
ReplyDelete//மிகத்தாமதமான வாழ்த்துக்கள் ரிஷான். கலக்கியிருப்பீங்க தெரியும். இனிமேதான் படிக்கணும். படிச்சிடறேன். //
தாமதான்னாலும் வந்தீங்களே :)
பிறந்தநாள் விழா எல்லாம் எப்படி ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் மாயா,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் தங்கராசா ஜீவராஜ்,
ReplyDelete//ரிஷான் சிறப்பாக உங்கள் பணியை நிறைவேற்றி இருக்கிறீர்கள்..
அருமையான தொகுப்புக்கள்..
வாழ்த்துக்கள் நண்பரே..//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சக்தி,
ReplyDelete//அனைத்து பதிவுகளுக்கே அருமையாக இருந்தன... உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள் நண்பா !
தொடர்ந்து எழுதுங்கள் ... வாசிக்க ,ரசிக்க நாமிருக்கிறோம்..//
தொடர் வருகைக்கும் தந்த ஊக்கத்துக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சினேகிதி :)
அன்பின் தமிழன்,
ReplyDelete//சொல்லப்போனால் உங்கள் பின்னூட்டங்களை காண்பதிலும் உங்கள் வாசிப்பனுபவத்தை காண முடிந்தது இந் வாரத்தில் இத்தனை வேகமாகஇத்தனை சுட்டிகள் அதுவும் சகல தளங்களிலும் இருந்து ..
மிகப்பயனுள்ள சுட்டிகள் ரிஷான்...புதியவர்களுக்கு பார்த்தே இராத சுட்டிகளை எல்லாம் கொடுத்திருந்தீர்கள் அதுவும் பாராட்டத்தக்க விசயம்...
கலக்கலான வாரம் வாழ்த்துக்கள்...//
உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஸ்வாதி,
ReplyDelete//வாழ்த்துகள் ரிஷான்.
இத்தனை வலைப்பதிவுகளையும் போய் படித்திருக்கிறீர்களே என்று நினைக்க பிரமிப்பாகத் தான் இருக்கிறது. உங்கள் தேடலும் வாசிப்பனுபவமும் உங்கள் எழுத்தை மேலும் செறிவாக்க உதவுகிறது என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. அருமையாக தொகுத்தளித்தற்கு நன்றி.//
நிச்சயமாக இந்தத் தேடல்தான் எனது எழுத்துக்களை மேம்படுத்த உதவுகிறது சகோதரி ..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
ReplyDelete//அன்புள்ள ரிஷான்
இணையம் இல்லாத இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் சிறப்பாக உங்கள் பதிவுகளை இட்டிருந்தீர்கள்.
இது வரை நான் பார்த்திராத பல வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தியிருந்தீர்கள். ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் அருமையாகத் தொகுத்திருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
//"இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால்"
உங்கள் வருகையை முன்னிட்டு வீட்டில் ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடக்கவிருப்பதால்..................//
அது சரி..அது என்ன ஏற்பாடு? தனிமடலில் விபரமாகச் சொல்லவும் :P
//"மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள்"
இல்லை இல்லை.
நீங்கள் தான் எல்லோரையும் மறந்துவிடப்போகிறீர்கள்.
:)//
அவ்வ்வ்வ்..
நான் அப்படி மறக்கமாட்டேன்.நீங்கள் எல்லோரும்தான் என்னை மறவாமல் இருக்கவேண்டும் .. :)
அன்பின் பூங்குழலி,
ReplyDelete//நன்றி ரிஷான் .கண்டிப்பாக நாங்கள் உங்களையும் நீங்கள் எங்களையும் மறக்கப் போவதில்லை ..உறுதியாக மீண்டும் கை கோர்ப்போம் .......//
உங்கள் பின்னூட்டம் என்னை மகிழ்விக்கிறது.. வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் நிர்ஷா,
ReplyDelete//
இலங்கைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். வாருங்கள். இங்கு உங்களை நிறைய பேருக்கு அறிமுகம் செய்துவைக்கவுள்ளேன்.//
உங்களையும் மற்ற அனைவரையும் சந்திக்க நானும் மிக மிக ஆவலாக உள்ளேன்..விரைவில் சந்திப்போம் :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)
அன்பின் பிச்சுமணி,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
முன்பு வவா சங்கத்துல நீங்க எழுதுன கடைசி பதிவை படிக்கும் போதும் இதே மனநிலைதான்.
ReplyDelete// எனக்கு இறங்க வேண்டியும் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள் !//
என்ன இது சின்னப்புள்ளத்தனமா.
அப்படியே ஊருக்கு போனாக்கூட மாசம் ஒருதடவையாவது வருவீங்க இல்லனா ஆர்குட் உலகம் என்னாவது :-))
வாங்க கார்த்திக் :)
ReplyDelete//முன்பு வவா சங்கத்துல நீங்க எழுதுன கடைசி பதிவை படிக்கும் போதும் இதே மனநிலைதான்.//
அதை இன்னுமா நினைவு வச்சிருக்கீங்க ? :O
//அப்படியே ஊருக்கு போனாக்கூட மாசம் ஒருதடவையாவது வருவீங்க இல்லனா ஆர்குட் உலகம் என்னாவது :-))//
பார்க்கலாம்..அங்கு எப்படி வாய்க்குமென்று சொல்ல இயலாதுதானே ? :)
ஆர்குட்டா? அப்படின்னா..? :P
நான் ஊர்ல இல்லாத நாளில் ரிஷு இப்படி வலைச்சரம் பின்னலாமா?:) இனிதான் எல்லாம் படிக்கணும் விடைபெறுகிறேனுக்கு டாட்டா பைபை! நிதானமா படிச்சி கருத்து சொல்றேன் என்ன?!
ReplyDeleteவாங்க ஷைலஜா அக்கா :)
ReplyDelete//நான் ஊர்ல இல்லாத நாளில் ரிஷு இப்படி வலைச்சரம் பின்னலாமா?:) இனிதான் எல்லாம் படிக்கணும் விடைபெறுகிறேனுக்கு டாட்டா பைபை! நிதானமா படிச்சி கருத்து சொல்றேன் என்ன?! //
என்ன பண்றது அக்கா? நான் வலைச்சரம் பின்னுற நாட்களாப் பார்த்து நீங்க எஸ்கேப் ஆகிட்டீங்க :)
சரி..ஒவ்வொரு பதிவா வாங்க அக்கா :)