07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 31, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-8




அன்பின் வலைச்சொந்தங்களே!

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியப் பணியை நான் ரசித்தே செய்தேன்.  வழக்கமான பணிச்சுமைகளோடே இன்னமும் சில முக்கிய பொறுப்புகள் இந்த வாரம் சேர்ந்த போதிலும், வலைச்சரத்தின் பதிவுகளையும் அறிமுகங்களையும் இயன்றவரையில் முழு அர்ப்பணிப்போடு செய்து முடித்த திருப்தி இருக்கிறது.

நிறைய புதுப்பதிவர்களின் வரவும் வலையில் அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் என எனக்குத் தோன்றிய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் .

பல முக்கிய பதிவர்களை என்னால் சேர்க்க முடியவில்லை. அதற்கு காரணம் நேரமின்மையே தவிர வேறொன்றில்லை.

வலையை நாம் எதற்கு உபயோகிக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. புது நட்புகளும் சொந்தங்களும் இங்கே கண்டிப்பாய்க் கிட்டும்.. நம் குடும்பத்தின் நீட்சியாக பதிவர்கள் அமைந்து விடுகிறார்கள். இலக்கியம் நுகர ,பொழுது போக்க, சமையல் கலை அறிய, அரட்டைத் தளமாக, தொழில் நுட்பம் அறிய ,இசை பகிர என அத்துணையும் வலையுலகில் இருக்கிறது.

பதிவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். வலை மேய்வதை ஒரு தளையாக  உங்களைச் சுற்றி பின்னிக் கொண்டு,  உங்களைச் சார்ந்தவர்களுடனான உறவை பாதிக்கும் ஒரு தொல்லையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எதற்குமே ஒரு அளவு உண்டல்லவா?. வலையின்பம் நுகர, வாழ்க்கை இன்பம் தொலைக்கப் போமோ? இதை அறிவுரையாய் இல்லாமல் உள்ளார்ந்த அன்பால் நான் சொல்வதாகவே புரிந்து கொள்ளுங்கள்.

வானவில்லுக்கு வருகை தந்து பதிவுகளை படிக்கும் அன்பர்களுக்கும் ,பின்னூட்டங்கள் இட்டும், மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் அன்பு செலுத்தும் நட்பு நெஞ்சங்களுக்கும்,  இந்த ஒரு வாரத்தில் முதன் முறையாய் அறிமுகமான பதிவர்களுக்கும் என் நன்றி கூடிய வணக்கங்கள் .

இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சரத்துக்கும், சகோதரர் சீனா அவர்களுக்கும் என் நன்றியும் அன்பும். திரு. சீனா அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. பதிவுகளுக்கும் படிப்பவர்களுக்கும் இடையே பாலமாய் விளங்கும் 'வலைச்சரம்' பதிவுலகில் ஒரு பள்ளிக் கூடம்.

மீண்டும் சந்திப்போம் சொந்தங்களே.. வானவில்லுக்கும் அடிக்கடி வாருங்கள்..  காத்திருப்பேன் அங்கே...

என்றென்றும் அன்புடன்

மோகன்ஜி
ஹைதராபாத்.
பட உதவி :Google Image




6 comments:

  1. சீர்மிகு பணியை சிறப்பாக செய்தீர்கள் ..... நல்ல அறிவுரை ...நிறைய நட்புகள் ,சொந்தங்கள் , பகிர்வுகள் என ஆக்கமாக பயன்படுத்தும் வரை வலையுலகம் உயர்வானது ...

    ReplyDelete
  2. மிக்க நன்றி பத்மநாபன். மிக அழகாய்ச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  3. அண்ணலே!! அறிவுரையைப் புரிந்து கொண்டோம். ”இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” போன்று சிறப்பாக இருந்தது நீங்கள் வாத்தியாராய் வலைச்சரத்தை அலங்கரித்த வாரம்!!! :-)

    ReplyDelete
  4. சிறப்பான வாரமாய் நிறைந்த அறிமுகங்களோடு நிறைத்திருந்தீர்கள்.வாழ்த்துகள்.
    தொடர்வோம் வானவில்
    மனிதனோடு !

    ReplyDelete
  5. அட ஹைதைக்காரரா!!!

    இன்றுதான் பார்த்தேன். நானும் ஹைதையில் தான் இருக்கிறேன்.

    தாமதமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது