07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 18, 2007

சினேகிதி வந்திருக்கிறேன்

எல்லாருக்கும் வணக்கம்.இந்தவாரம் என்னை வலைச்சரம் கட்டச்சொல்லியிருக்கினம்.எனக்குண்மையா சரம் கட்டத்தெரியவே தெரியாது.

ஊரில கோயில் திருவிழா நேரம் அக்காவும் அக்கான்ர நண்பர்களும் பொன்னொச்சிப்பூ நந்தியவட்ட தேமாப்பூ இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பூவெல்லாம் வச்சு இரண்டு வாழைநாரையும் வச்சு என்ன வடிவான பூமாலை கட்டுவினம்.ஆனால் நான் இரண்டு வாழை நாரை வச்சுக்கொண்டு பூவை வச்சு சுத்தினன் என்டால் பூ பிஞ்சு விழுந்திடும்.நானெல்லாம் ஊசியையும் நூலையும் வச்சுக்கொண்டு மாலை கட்டினாத்தானுண்டு வாழைநாருக்கும் எனக்கும் ஒத்தே வாறேல்ல.இந்த லட்சணத்தில வலைச்சரம் கட்ட வந்திருக்கிறன்.பார்ப்பம் அதாவது ஒழுங்காக் கட்டுப்படுதா என்று.

எனக்கு கோடை வகுப்புகள் 19ம் திகதி தொடங்குறதால முதலே சரத்தைத் தொடுத்து வைச்சிட்டு ஒவ்வொரு நாளும் தண்ணி தெளிச்சு உங்களுக்குக் குடுப்பம் என்று நினைச்சன் ஆனால் அதுக்கு பூக்கள் ஒத்துளைப்புத் தர மாட்டினமாம்.

பொன்ஸ் அக்காக்கு எனக்கு மெயில் போட்டே வெறுப்பு வந்திருக்கும் ஏனென்றால் நான் இப்பிடிச்செய்யலாமா? இதுக்கு அனுமதியிருக்கா? அதுக்கு அனுமதியிருக்கா? என்று 1008 கேள்வி கேட்க அவாவும் பதில் சொல்லிக் களைச்சுப்போனா.

நான் இந்த வாரம் தொகுக்க நினைத்திருப்பவை தமிழ் ராப், ஈழத்துக் கீதங்கள,ஓவியம் தொடர்பான பதிவுகள், சில ஈழத்துக்கலைஞர்களின் அறிமுகம் ,குழந்தைகளின் நடனங்கள் போன்றவற்றோடு சில புதிய வலைப்பதிவர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறன்.அத்தோடு எனக்குப்பிடித்த சில பதிவுகள் பற்றியும் சொல்றன்..இந்த வாரம் சில youtube வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.தவிர வேற சில எண்ணங்கள் குறுக்கிட்டால் அதையும் சரத்தில் செருகிவிடுறன் :-)

அடுத்த பதிவில் நான் எழுதியவற்றில் எனக்குப் பிடித்தது அல்லது என்னால திரும்ப வாசிக்கக்கூடியது என்று நினைக்கிற சில பதிவுகள் பற்றிச் சொல்கிறேன்.அதுக்காக மிச்சமெல்லாம் என்ன அலட்டி வைச்சிருக்கிறன் என்று நானே நினைப்தென்று அர்த்தமில்லை :-)

14 comments:

  1. மெனு அருமையாக இருக்கிறது. விருந்துக்கு காத்திருக்கிறேன் :)

    ReplyDelete
  2. விருந்துக்கு தடல்புடலான ஏற்பாடு நடந்துகொண்டிருக்கு.அஜிரணம் ஆக ஆகப் போட்டுச்சாப்பிட்டுக்கொண்டேயிருக்கலாம் :-)

    ReplyDelete
  3. ஆளாளுக்கு தடபுடல் விருந்து வச்சா எங்க போயி சாப்பிடுறது............

    வாழ்த்துக்கள் சினேகிதியக்கா...........கவிதையும் எழுத ஆரம்பிச்சிட்டியள். தமிழ் எழுத்துச் சூழலில் பன்முக அழுமை கொண்ட ஒரு புலம்பெயர் எழுத்தாளர் எழுத ஆரம்பித்துவிட்டார்...........

    ReplyDelete
  4. சினேகிதியக்கா,

    What's happening?
    Have you ever heard about any
    Tamil Reggae?

    ReplyDelete
  5. தம்பி சோமி என்ன அழுமை கொண்ட எழுத்தாளர் என்று சொல்லிப்போட்டீர்.

    "தம்பியே இப்பிடிச் சொல்லிட்டா அக்கா மனசு தாங்குமா :-) "

    மெடிமிக்ஸ் விளம்பர எபக்ட் :-)

    ReplyDelete
  6. என்ன பொபி?? என்ன நடக்குது?? இல்லையே தமிழ் ரகே என்றால் என்ன?

    ReplyDelete
  7. "சினேகிதி வந்திருக்கிறேன்"
    வாங்க சினேகிதி ! வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  8. சிநேகிதி வந்திருக்காக.. மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக.. வாம்மா மின்னலு...

    ReplyDelete
  9. இப்படி இரா பிச்சைக்காரன் சத்தம் போடுற மாதிரி சத்தம் போடுறியள்-:)

    ReplyDelete
  10. என்ன கொடுமை இது சார் ;-)

    ReplyDelete
  11. நன்றி கதிரவன்!

    சயந்தனண்ணா போய் அடுத்த பதிவைப்போடுற வழியைப்பாருங்கோ!

    சின்னக்குட்டி உங்களுக்கும் தெரிஞ்சிட்டுதா :-)

    பிரபாண்ணா தப்பிப்போங்கோ!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சினேகிதி....

    ReplyDelete
  13. /நானெல்லாம் ஊசியையும் நூலையும் வச்சுக்கொண்டு மாலை கட்டினாத்தானுண்டு வாழைநாருக்கும் எனக்கும் ஒத்தே வாறேல்ல/

    எனக்கும்..எனக்கும்...:)

    வாழ்த்துக்கள் சினேகிதி

    ReplyDelete
  14. நன்றி விஜே! நன்றி அய்யனார் :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது