07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 7, 2007

படிக்கலாம் வாங்க - 2

கல்யாணம்ன்னு வந்தாலே சுதந்திர வானில் சிறக்கடித்து பறக்கும் வாலிப வயோதிக அன்பர்கள் எல்லாம் மட்ட சரக்கு அடித்து அடி வயிறை தடவிக் கொண்டே இருக்கும் குவார்ட்டர் கோவிந்த சாமி ஆகி, பார்ப்பது எல்லாம் பிசாசு, பூதம் என அரற்றிக் கொண்டு, தூங்கும் நேரத்தில் முழித்து, முழிக்கும் நேரத்தில் தூங்கி என பண்ணாத அட்டூழியம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

"கல்யாணம் for Dummies" ன்னு ஒரு புத்தகம் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட் மார்க் என் அழைந்து திரிந்தவர்களுக்கெல்லாம், தனித்துவமாய் அத்துவானக் காட்டில் தேன் தேடி அலைந்த சிட்டு ஒன்று, தான் சேகரித்த தேனை எல்லாம் மொத்தமாக 10 நாட்களில், 6 பகுதிகளாக, கல்யாணமாம் கல்யாணம் என கொட்டி வைத்தது.

(மேலே உள்ள 2 பத்திகளுமே ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே உள்ளடக்கியது. 'வாத்தியார்' இளவஞ்சியை பத்தி பேச ஆரம்பிச்சாவே முற்றுப் புள்ளி தெறிச்சு ஓடுது. மெகா வாக்கியங்களுக்கு சொந்தக்காரரான இளவஞ்சி எழுதிய அத்தனை பதிவுகளுமே முத்திரைப் பதிவுகள்தான். தாரளமாக, ஆற அமர படிக்கலாம்.)

"அம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" என ஒரு பாசக்காரப் பயல் அம்மாவிடம் கேட்க, "உனக்கு வடக்கு பக்கம் இருந்துதான் பொண்ணு வரும், அதுவும் நம்ம தூரத்து சொந்தமா இருக்கும்ன்னு நம்ம ஜோசியர் ராஜாமணி சொன்னாரு, நீ எங்கிட்ட விளையாடாதடா" என பதில் சொன்ன அம்மாவை எனக்குத் தெரியும். சொந்த மகனை விட ஜோசிய காரனை நம்பும் இந்த உலகத்தில் ஜோசியம் பற்றி கொஞ்சமாக, ஒரு 13 பகுதிகளாக அலசினார் தருமி. புது பிளாக்கருக்கு மாறியதாலோ என்னவோ கொஞ்சம் சிதறிக் கிடக்கிறது. அதனாலென்ன, பாலையும், தண்ணியையும் பிரிக்கும் அன்னப் பறவையல்லவா நீங்கள் :-)

ஆங்கிலமும், தமிழும் கலந்த காலம் போய் இப்பொழுது ஆங்கிலத்தில் தமிழைத் தூவி பேசிக் கொண்டிருக்கிறேன். கொங்கு மண்டலத்திலேயே பிறந்து, கொங்கு மண்டலத்திலேயே 21 வருடம் வரிக்கும் இருந்தாலும், பல ஊரிலிருந்து வந்த மக்களின் தொடர்பால் என் கொங்குத் தமிழை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, அப்புறம் வட்டார வழக்கில் பேச ஆளே இல்லை என்ற நிலைக்கு ஆளான போதுதான் மணிகண்டனின் இந்த கொங்கு வட்டாரச் சொற்கள் என் மனதில் புதைந்து போன உபயோகப்படுத்தாத வார்த்தைகளின் எண்ணிக்கை ஒரு சாக்கு மூட்டைக்கும் கொஞ்சம்தான் குறைவு என ஞாபகப்படுத்தியது. இதே மாதிரி மற்ற வட்டார வழக்குகளுக்கும் ஏதாவது பதிவுகள் இருக்கும். கிடைத்தால் லின்க் கண்டிப்பாக இங்கே இருக்கும்.

கொங்கு வட்டார வழக்கு - 1
கொங்கு வட்டார வழக்கு - 2
கொங்கு வட்டார வழக்கு - 3
கொங்கு வட்டார வழக்கு - 4

இந்த மூன்று தொடர்களுமே எல்லோராலும் விரும்பி படிக்கப்பட்ட தொடர்கள் என்றாலும், இந்த மீள் பார்வையின் மூலம் இன்னுமோர் முறை படிக்கப்படும் என்ற நம்பிக்கையில்...

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது