இப்பதிவின் முதல் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்
இப்பதிவின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்
இப்பதிவிம் மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்
(அவசரமாக எழுதுவதால் வழக்கம்போல் சுவையாக எழுதமுடியவில்லை..மன்னிக்கவும்..இந்தப் பதிவின் மூலம் நான் ரசித்த சில பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்..)
பதிவர்களின் அட்டகாசம் தாங்காமல் பேரரசு எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறார்..அந்த நேரம் பார்த்து அவருடைய உதவியாளர் பரபரப்பாக வருகிறார்.
உதவியாளர் : அண்ணே….ஓடாதீங்க..எல்லாப் பதிவர்களும் இங்க லாக் ஆகியிருக்கிறதைக் கேள்விப்பட்டு தமிழ் நடிகர்கள் திரண்டு வந்துக்கிட்டு இருக்காங்க..
பேரரசு முகம் பிரைட் ஆகிறது..உதவியாளரைப் பார்த்து கத்துகிறார்..
பேரரசு : அந்த கதவை இழுத்து மூடுடா..இன்னைக்கு ஒரு பயலும் வெளியே போகக் கூடாது..மாட்டுனீங்களா..ஏய்யா..நாங்க கோடி, கோடியா போட்டு படத்தை எடுப்போம்..நல்லா காலை மடக்கி உக்கார்ந்துக்கிட்டு விமர்சனமா பண்றீங்க..இன்னிக்கு இருக்குடி உங்களுக்கு..
எல்லாப் பதிவர்களுக்கும் வேர்த்து கொட்டுகிறது..எல்லோரும் பயத்தில் அலறுகிறார்கள்..ஒரே நேரத்தில் வாயிலை நோக்கி ஓடுகிறார்கள்..கதவு மூடியிருப்பதைக் கண்டு கதவை பலம் கொண்ட மட்டும் தட்டுகிறார்கள்..திடிரென்று கதவு திறக்கிறது..பார்த்தால் கந்தசாமி விக்ரம் சேவல் வேஷத்தில் வருகிறார்..
விக்ரம்:கொக்கொ..கொக்..கொக்..கொ…மாட்டுனீங்களா..கொக்..கொக்...
இங்க யாருய்யா செந்தழல் ரவி..கொக்கொ..,கொக்..கொ..
செந்தழல் ரவி(பீதியுடன்) : அய்யா..ரொம்ப குளோசப்ல வராதீங்க..பயமா இருக்கு..நான் ரந்தழல் செவி..சீ..செந்தழல் செவி..அய்யோ..பயத்துல வாய் குழறுதே..நாந்தான் செந்தழல் ரவி..சார்..நான் விமர்சனம் எல்லாம் எழுதமாட்டேன்..இந்தா பக்கத்துல இருக்காரே உண்மைத்தமிழன்..அவரைப் புடிங்க..அவர்தான் மொக்கைப் படத்துக்கே 10 பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறாரு..(அப்பாடா, மாட்டி விட்டுட்டேன்..என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்)
எல்லாரும் உண்மைத் தமிழனை அடிக்க வர..”அவரை அடிக்காதீங்க..டோண்ட் பீட் ஹிம்..” ஸ்டைலான குரல் கேட்டு திரும்பினால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..கூடவே “அமெரிக்க ஜனாதிபதி சூப்பர் ஸ்டார் வாழுக, வாழுக” என்ற கோஷத்துடன் "என் வழி" பதிவர்..ரஜினி நேராக உண்மைத் தமிழனிடம் வருகிறார்..
ரஜினி : தம்பி..இந்தா பாருங்க..உங்க வழியில நான் வரலை..அது போல எங்க வழியில குறுக்க வராதீங்க..எச்சச்ச கச்சச்ச எச்சச்ச..கச்சச்ச…”என் வழி..தனி வழி” என்று பாத்ரூம் நோக்கி கையைக் காட்டி அவசரமாக பாத்ரூம் நோக்கி செல்கிறார்..
என் வ்ழி: (விசில் அடிக்கிறார்) தன்மானம் காத்த தலைவர் வாழ்க..அவர் வழியே..எங்கள் வழி..என்று செல்ல எத்தனிக்க..
சுரேஷ் : அடப்பாவிகளா..அடப்பாவிகளா..ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுய்யா..அவர் பாத்ரூம் போற வழியில உண்மைத் தமிழன் குறுக்க நிக்க, வழியில குறுக்க நிக்காதீங்கன்னு சொல்லிட்டு போறாரு..அதைத் தப்பா புரிஞ்சுகிட்டு விசில் அடிச்சிட்டு கூடவே போறீங்களேய்யா..தமிழ்நாடு திருந்தவே திருந்தாய்யா..ஆஹா..இவர் இருந்தா புரியாத மாதிரியே பேசுறதுக்கே ஒருத்தர் இருப்பாரே..ஆளைக் காணோம்..
கமலஹாசன் : வெல்..ஏன் தமிழ்நாடு திருந்தாது..சமூக ஒழுக்கங்களோடு தனிமனிதர் ஒருவர் வாழ்ந்து சமூகத்திற்கும் மாற்றம் கிடைக்கும் என்று நீங்கள் கருதினால், அதை இந்தப் பரமக்குடி மைந்தன் ஒத்துக் கொள்வேன் என்று உரக்க சொல்லும் அதே சமயத்தில்..
மஸ்தான் : ஆஹா..இப்பவே கண்ணைக் கட்டுதே..சார்..தெரியாத்தனமா விமர்சனம் எழுதிட்டோம் சார்..காலுல விழுறோம்..எங்களைக் காப்பாத்துங்க..(கமல் பக்கத்தில் நைசாக சென்று) சார்..உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு விமர்சனம் எழுதாத ஓரே பதிவர் நாந்தான்..என்னை மட்டும் விட்டுட்டு இவிங்களை எல்லாம் புடிச்சுக்கங்க சார்..என்னை மட்டும் மன்னிச்சு விட்டுடுங்க சார்..
விஜய்காந்த் : விடாதீங்க சார்..தமிழிலே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு..தமிழ்நாட்டுல மொத்தம் 1018 பதிவர்கள் இருக்காங்க….அதுல விமர்சனம்ற பெயரில மொக்கை போடுறவங்க..300 பேர்..”ரிப்பீட்டு, மீ த பர்ஸ்டு” பின்னூட்டம் போடுறவங்க 212 பேர்..அனானி பேரில கமெண்ட் போடுறவங்க..35 பேர்..தானே கேள்வியையும் பதிலையும் எழுதுறவுங்க..1 பேர்…
பதிவர் ஒருவர் ஆன் த ஸ்பாட் தூக்கு போட முயல..எல்லாரும் அவரை நோக்கி ஓடுகிறார்கள்….அதில் நடிகர் சிவக்குமார் பாசமாக தூக்கு போட முயன்றவரிடம் வருகிறார்
சிவக்குமார் : அப்பாஆஆஆஆ…ஏம்பாஆஆஆஆ..இப்பிபிபிடீடீடீ…
கலையரசன் : இப்படி பேசியே கொன்னா தூக்கு போடாம என்ன செய்வாரு..
நடிகர் கார்த்திக் : ஹே..ஹே..மிஸ்டர்..எங்களைப் பத்தி..விமர்சனம்..ஹே..எப்படி ..எழுதலாம்..ஹே..எங்க உங்க தலைவர் லக்கிலுக்…
எல்லாரும் லக்கிலுக்கை பார்க்க..லக்கி ஸ்டைலாக..
லக்கிலுக் : நான்..ஆளப்பிற….
பிரகாஷ்ராஜ் : ஏ..செல்லம்..ஐ லவ்யூடா..நீ ஏன் சொல்லுற..நீ ஏன் சொல்லுறா..அதெல்லாம் நீ சொல்லக் கூடாது..பஞ்ச் டயலாக் சொல்றதுக்குதான் ஒருத்தரை கூடவே வைச்சுருக்கோம்ல..செல்லம் எங்க இருக்க..
நடிகர் விஜய்: அண்ணா..வணக்கம்னா..இப்பதான்னா ராகுல் காந்தியோட டின்னர் சாப்பிட்டு வர்றேன்னா..வாழ்க்கை ஒரு வட்டம்னா..அதுல..
அஜீத் : அது…இவுங்களை எல்லாம் பேசித் தீர்க்க கூடாது..தீர்த்துட்டுதான் பேசனும்….விஜய்..உங்க வில்லு படம் டீ.விடி எங்க..இவிங்களை கட்டி வைச்சு..போட்டு காட்டுவோம்..அது…
“டே…கும்தலக்கடி கும்மாவா..சிம்புன்னா சும்மாவா….என் மகன் குறளரசனை விட்டுட்டு எப்படி வரலாம்..ஏ..டன்டனக்கா..ஏ..டனக்குனக்கா..” தலையைக் கோதியபடி டீ.ஆர்..டெர்ரராக என்டர் ஆக..பதிவர்கள் நாலா பக்கமும் தெறித்து ஓடுகிறார்கள்..ஓடும்போது உண்மைத் த்மிழன் வைத்திருந்த ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்கள் கீழே விழ அதை எடுக்க கீழே விழுகிறார்…
துளசி: அய்யா.அவனவன் உசிரைக் காப்பாத்துறதுக்கு குலையா ஓடுறோம்..அதை வைச்சிட்டு யாருகிட்ட நிரூபிக்க போறீங்க..வாங்க ஓடலாம்…
என்று உண்மைத்தமிழனை.இழுத்துக் கொண்டு ஓடுகிறார்..பத்து நிமிசத்தில் அனைத்துப் பதிவர்களும் இடத்தை காலி பண்ண பதிவர் சீனா மட்டும் அங்கேயே நிற்கிறார்..நடிகர்கள் திகைத்துப் போகிறார்கள்..
நடிகர் ராதாரவி : ஏம்பா..யாருப்பா நீயி..அவனவன் உசிரைக் காப்பாத்துறதுக்கு ஓடிக்கிட்டு இருக்கான்..ரத்த ஆறே ஓடிக்கிட்டு இருக்கு..ஷட்டர மூடிட்டு கடைய காலி பண்ணாம நிக்குறேயேப்பா..என்னப்பா வேணும்
பதிவர் சீனா : இல்ல சார்.எல்லாரும் ஓரே இடத்துல இருக்கீங்க..இதுதான் சந்தர்ப்பம்..நாங்க வலைச்சரம்னு ஒரு குழுமம் நடத்துறோம்..எல்லாரும் வாரத்துக்கு ஒருத்தரா அவிங்க ராசா மாதிரி மொக்கை பதிவு போட்டீங்கன்னா..ஒரு வருசத்துக்கு பிரச்சனையில்லை…
இப்போது நடிகர்கள் எல்லாரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்..
(பதிவர்கள் சந்திப்பு முடிந்தது..நான் ஏற்கனவே சொல்லியபடி, யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்..அதிக பிரசங்கித்தனமா ஏதாவது எழுதி யாருடைய மனதைக் காயப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க)