07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label सुREஷ் कुMAர். Show all posts
Showing posts with label सुREஷ் कुMAர். Show all posts

Sunday, September 13, 2009

வலைச்சரத்தில் என் ஏழாம்நாள் ஆசிரியப்பணி..

ஏழாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..

அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக நேற்று வலைச்சரத்தில் வலைப்பூக்களை விளக்கமாக அறிமுகப்படுத்த இயலவில்லை..

எனினும், நேற்று பணிக்கே வராமல் இருந்திருப்பதைவிட, வந்து என்னால் இயன்றவாறு சில வலைப்பூக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்திய திருப்தியோடு இன்று ஏழாம்நாள் பணியினை தொடங்குகிறேன்..

மேலும் கடந்த ஆறுநாட்களுக்கு இட்டபணியை திருப்திகரமாகவும், வெற்றிகரமாகவும், பல பதிவர்களுக்கு உபயோகமானதாகவும் செய்துமுடித்ததில் மிக்க மகிழ்ச்சியே..

இது என்னுடைய தனி முயற்சியால் மட்டும் சாத்தியபட்டிருக்காது.. வலைச்சரத்தில் எழுதிய கடந்த ஆறு நாட்களுக்கும் தவறாமல் வந்து பின்னூட்டம் மூலம் ஊக்கப்படுத்திய நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரின் கூட்டு முயற்சியாலேயே இலக்கை அடைய முடிந்தது..

ஆரம்ப காலம் முதல் சிறுக சிறுக கிடைத்த நண்பர்கள் பலரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் இங்கு அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றிகள் சொல்ல விருப்பமிருப்பினும், தவறுதலாக யாருடைய பெயராவது விடுபட்டுவிட்டால் அதுவே அவர்களுக்கு பெரியதொரு வருத்தத்தை, மனக்குறையை உண்டுபண்ணிட வாய்ப்பாக அமைந்துவிடுமென்று எண்ணியதால், என் வலைப்பூவில் ஆதரவும் ஊக்கமும் தந்துகொண்டுள்ள நண்பர்களுக்கும், இந்த ஒருவார காலமும் ஒரு இடுகைக்கேனும் வந்து ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பலவற்றை தெரிவித்துக்கொள்கிறேன்..

என் ஆசிரியப்பணி இன்றோடு முடிவடைந்தாலும், வலைச்சரம் கடந்துசெல்லவேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவோ இருக்கின்றது..

பல புதிய பதிவர்களையும் அவர்களின் வலைப்பூக்களையும் பதிவுலகில் பலரும் அறியக்கொடுக்கும் பணியினை தொடர்ந்து பல ஆசிரியர்களைகொண்டு செம்மையாய் செய்விக்கும் ஐயா சீனா அவர்களின் பணி உண்மையில் அபாரமான பாராட்டத்தக்க செயல் / சேவை..

சீனா ஐயா'வின், வலைச்சரத்தின் சேவை என்னைபோன்ற புதிய பதிவர்கள் பலரையும் இந்த வலையுலகிற்கு அறிமுகப்படுத்த எப்போதும் தேவை என்பதில் ஐயமில்லை..

தொடர்ந்து உங்களின் பணி சிறப்பாய் அமைந்து செயல்பட வாழ்த்தி, உங்களின் சேவையில் என்னையும் ஒரு சிறு பொறுப்பினையேற்று உதவிட வாய்ப்பளித்த சீனா ஐயாவின் அன்புக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டு, எழுதத்தொடங்கிய முதல்நாள் முதல் இன்றுவரை அங்கும் இங்கும் ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியினையும், அடுத்து வலைச்சர சேவையில் இணையவரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு வீடு திரும்புகிறேன்..

இனி மீண்டும் எப்போதும் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.. வில் சந்திப்போம்..

நன்றி நண்பர்களே..



மேலும் வாசிக்க...

Saturday, September 12, 2009

வலைச்சரத்தில் என் ஆறாம்நாள் ஆசிரியப்பணி..

ஆறாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..

கொஞ்சம் அதிகப்படியான பணிச்சுமையின் காரணமாக இன்று அறிமுகப்படுத்தப்படுபவர்களின் வலைப்பூபற்றி விளக்கமாக கூற நேரமின்மையால் அவர்களின் வலைப்பூ முகவரிகள்மட்டும் இங்கே..

இன்று ஒருநாள் ஆசிரியப்பணிக்கு விடுப்பெடுத்துக்கொள்ளலாம் என்றே நினைத்திருந்தேன்..

ஆனாலும், அரிதினும் அரிதாக, சக, புதிய பதிவர்களை பலருக்கும் அறிமுகப்படுத்த கிடைத்த ஒருவாரகால அவகாசத்தில் ஒருநாளை பணிச்சுமையின் காரணமாக வீணாக்குவதில் உடன்பாடு இல்லாமையால் இன்று சில வலைப்பூக்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தி இன்றைய பணியினை செய்யத்திட்டமிட்டுள்ளேன்..

ஆதரவு தந்து ஊக்கப்படுத்துவீர்களென்ற நம்பிக்கையில் இன்றைய படையலை சுவைப்போம்..

முதலில், கடந்த மூன்று மாதங்களாக எழுதப்பட்டுவரும் ஒரு புது வலைப்பூ..

வலைப்பூவின் பெயர் எதிர் வீட்டு ஜன்னல்

முகவரி http://ethirveettujannal.blogspot.com/

$$$$$$$$


அடுத்து வண்ண வண்ண படங்களைக்கொண்ட இடுகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள புதியதொரு வலைப்பூ..

வலைப்பூவின் பெயர் PARTHATHUM KETATHUM

முகவரி http://vazhavazhamudan-viswam.blogspot.com/

$$$$$$$$



அடுத்து 2008'ன் இறுதியில் எழுதத்துவங்கியுள்ள ஒருவரின் வலைப்பூ..

வலைப்பூவின் பெயர் This is buzz in a pit for biz

முகவரி http://pitbuzz.blogspot.com/

$$$$$$$$


எந்தவித விளக்கமும் இல்லாமல் இப்படி வெறுமனே வலைப்பூவின் பெயர் மற்றும் முகவரியை தருவதில் உடன்பாடு இல்லைதான் எனினும், விடுப்பெடுத்துக்கொண்டு பதிவர்களை அறிமுகப்படுத்தாமல் இருப்பதைவிட இது எவ்வளோமேலான செயல் என்று தோன்றியதால் பணியினை தொடர்கிறேன்..

$$$$$$$$


அடுத்து, கடந்த நான்கே மாதங்களில் 142 இடுகைகளிட்டு கலக்கிவரும் இவர் வசிக்கும் உலகம் தமிழன் உலகம்..

முகவரி http://tamilanulagam.blogspot.com/

$$$$$$$$


அடுத்து இரவினில் ஒளிரும் ஆற்றல் படைத்த மின்மினிப்பூச்சிகளின் பெயரில் அமைந்த மின்மினிப்பூச்சிகள் என்ற வலைப்பூ..

இவர் 2006 யிலேயே எழுததுவக்கப்பட்டுவிட்ட எனக்கு மிகவும் சீனியர் பதிவர்தான் எனினும் அறிமுகப்படுத்துவதில் தவறில்லைஎன்றே எண்ணுகிறேன்..

வலைப்பூ முகவரி http://minminipoochchigal.blogspot.com/

$$$$$$$$


அடுத்து சமையல் தொடர்பான வலைப்பூ..

இவர் சமீப காலத்தில், அதாவது கடந்த ஐந்து மாதங்களாக எழுதத்துவங்கி, வலைப்பூக்கள் பலவற்றில் மானாவாரியாக ஃபாலோவராகி தனது வலைப்பூவிற்கும் பல ஃபாலோவர்களை பெற்றுவரும் என் சமையல் அறையில் என்ற வலைப்பூ..

வலைப்பூ முகவரி http://geethaachalrecipe.blogspot.com/



நண்பர்களே.. இப்படி அவசரகதியாய் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியமைக்கு மீண்டுமொருமுறை வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வலைப்பூக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இன்றைய பணியினை நிறைவு செய்து நன்றியுடன் விடைபெறுகிறேன்..

நன்றி நண்பர்களே..

மீண்டும் நாளை சந்திப்போம்..

மேலும் வாசிக்க...

Friday, September 11, 2009

வலைச்சரத்தில் என் ஐந்தாம்நாள் ஆசிரியப்பணி..

ஐந்தாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..

நான்குநாட்கள் வெற்றிகரமாய் உற்சாகமாய் எழுத ஆதரவுதந்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைதெறிவித்துகொண்டு ஐந்தாம்நாள் பணியை இனிதே தொடங்குகிறேன்..

இதுக்கு அப்புறம் என்னத்த எழுதினாலும் டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்தான் வருமென நினைக்கிறேன்..

அதுக்காக இப்டி சிக்கல்ல சிக்கவெச்ச சீனாவ நொந்துகிட்டு எழுதாம இருக்கமுடியுமா..

வழக்கம்போல இன்னைக்கும் எழுதிவெக்கிறேன்..
ஆனா நீங்க வழக்கத்துக்குமாறாக நல்லபுள்ளைங்களா இடுகைய முழுசா படிச்சுட்டு கருத்துசொல்லுங்க..

நேத்தாவது ஃபாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பூக்கள் 33.33 சதவிகிதம்..

இன்னைக்கு அறிமுகப்படுத்தப்போகும் வலைப்பூக்களில் 83.33 சதவிகிதம் வலைப்பூக்கள் ஃபாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பூக்களாக உள்ளன..

ஒரே ஒரு வலைப்பூ மட்டும் விதிவிலக்காக ஃபாலோவர் விட்ஜெட் கொண்டுள்ளது..



இன்றைய படையலை குட்டிக்கதைகள் சொல்லும் வலைப்பூவுடன் தொடங்கலாம்..

இவர் தனது வலைப்பூவினை குட்டிகுட்டி கதைகள் சொல்வதற்காகவே கொண்டுள்ளார் போலும்..

இதற்காகவே வலைப்பூவிற்கு குட்டி கதைகள் என்று பெயரிட்டுள்ளார்..

இவரின் வலைப்பூ முகவரி http://tamil-kutti-kathaikal.blogspot.com/

இதுவரை இவரின் வலைப்பூவில் இடுகைகள் ஏதும் பின்னூட்டம் என்ற ஒன்றை கண்டதே இல்லை..

ஆனாலும் தளராமல் எழுத்தும் இவர், தனது வாசகர்கள் தொடர்ந்து இவரை தொடர ஃபாலோவர் விட்ஜெட்டும் கொடுக்கவில்லை..

நீங்கள் எப்போது சென்றாலும் தாராளமாய் மீ த ஃபஸ்ட்டேய் போடலாம்..

ஆனால் நம்மின் வருகை அவருக்கு பிடிக்குமா இல்லையா, வாசகர்களின் பின்னூட்டத்தை விரும்புகிறாரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமாய் உள்ளது..

விருப்பமிருப்பின் முயற்சித்துபாருங்களேன்..

$$$$$$$$


அடுத்து பல அறிய புகைப்படங்களின் தொகுப்புகள், கலக்கல் கதைகள் என்ற பெயரில் சிலபல கதைகள், சில நகைச்சுவையான இடுகைகள் என்று நம்மை எப்போதும் ஒரு புன்சிரிப்புடனேயே தனது வலைப்பூவை வாசிக்கவைக்கிறார்..

இவரின் வலைப்பூவின் பெயர் கீ த ப் ப் ரி ய ன்..

வலைப்பூ முகவரி http://geethappriyan.blogspot.com/

கலக்கல் கதையில் இது தமிழனால் மட்டுமே முடியும் (கலக்கல் கதைகள்) என்ற கதையில் ஒரு தமிழனின் வாய்சாமார்த்தியம் பற்றி நகைச்சுவையாய் சொல்லியுள்ளார்..

இதுபோல் ஒவ்வொரு கலக்கல் கதையுமே பெயருக்கு ஏற்றாற்போல் கலக்கல்தான்..

பல இடுகைகளில் இவர் தொகுத்துள்ள படங்களும் மிக அருமை..

முன்பே கூறியதைபோல் இந்த வலைப்பூவிலும் ஃபாலோவர் விட்ஜெட் இல்லை.. இருப்பினும் அவரின் வலைப்பூ சென்று உற்சாகப்படுத்துங்கள்..

(அதற்கு முன், ஒழுங்கா இந்த ஐந்தாம்நாள் இடுகை முழுதும் படித்து என்னை உற்சாகப்படுத்துங்கள்..)

$$$$$$$$


அடுத்து, காலப்பறவை என்ற வலைப்பூவில் 2007'இலேயே எழுதத்தொடங்கிவிட்ட இவர் தற்போதுதான் ஏக்டிவாக எழுதிவருகிறார்..

இவரின் வலைப்பூ முகவரி http://stalinfelix.blogspot.com

அடுக்குமாடி குடியிருப்பில் அண்டைவீட்டாரின் செயல்பாடுகளை பற்றி தனது சொந்த அனுபவத்தினை எதிர் வீட்டுக்காரம்மா என்ற இடுகையில் பகிர்கிறார்..

இவர் ஆகஸ்ட்டு மாதத்தில் சொந்த அனுபவங்கள் சார்ந்த இடுகைகள் பல இட்டுள்ளார்..

ரம்பா ரசிகர்களுக்கு மட்டும் என்ற இடுகையில் ரம்பா'வின்விரிவான ஆனால் சுருக்கமான பயோடேட்டா, M.R.ராதாயணம் என்ற இடுகையில் M.R.ராதா'வின் வாழ்வினில் சில முக்கிய கணங்களை பகிரும் இடுகையொன்றும் இருப்பினும், பெரும்பாலான இடுகைகள் இவரின் சொந்த அனுபவங்களை பகிர்வனவாகவும், கவிதைகள் பல நிறைந்ததாகவும் உள்ளன.

அதனால் இவரின் வலைப்பூவை அனுபவம் என்ற பிரிவின்கீழ் சேர்க்கிறேன்..
பிழையிருந்தால் மன்னிக்கவும்..

$$$$$$$$


அடுத்து இந்த ஐந்தாம் நாள் இடுகையை படிக்காமலே களைத்துவிட்ட உள்ளங்களுக்காக சமையல் குறிப்புகளை அள்ளித்தரும் வலைப்பூ ஒன்றினை காண்போம்..

tamilvili என்றபெயரில் உள்ள இந்த வலைப்பூ கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே எழுதப்பட்டுவரும், ஃபாலோவர் விட்ஜெட் கொண்டிராத ஒரு புதிய வலைப்பூவாகும்..

சமையல் குறிப்புகள் மட்டுமின்றி அழகு குறிப்புகளையும் வாரிவழங்குகிறது இந்த வலைப்பூ..

இவரின் வலைப்பூ முகவரி http://tamilvilihal.blogspot.com

இதற்குமேல் அங்குசென்று அழகுபடுத்திக்கொள்ளுங்கள்..

$$$$$$$$


நான் (நீங்களும் இருக்கலாம்) பெரும்பாலும் கேட்டறியாத வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை தேவியர் இல்லம். திருப்பூர். என்ற வலைப்பூவில் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் என்ற பெயரில் தொடரிடுகையாகேவே எழுதி வருகிறார்..

இவரின் வலைப்பூ முகவரி http://texlords.wordpress.com/

நக்கீரன் கோபாலின் இருண்ட பக்கங்கள்'இல் அவரைபோட்டு பயங்கரமாக பாராட்டிதள்ளியுள்ளார்..

இவர் Blog Archive விட்ஜெட் கொடுக்காததால் இந்த இடுகைஎன எதையும் தெரிவுசெய்து படிக்க இயலவில்லை..

எனினும், நமக்கு தெரியாத பல வரலாற்று நிகழ்வுகளின் செய்திகளை இவரின் வலைப்பூவில் பெறலாம்..

$$$$$$$$


அடுத்த வலைப்பூ நம்மை பின்னோக்கி அழைக்கிறது..

இவரின் இடுகைகள் பல வித்தியாசமாய் உள்ளது..

இவரின் வலைப்பூ முகவரி http://pinnokki.blogspot.com

காலத்தின் குரல் என்ற இடுகையில் கற்ப்பனையாக கால இயந்திரத்தில் பயணிக்கிறார் நண்பர்..

2 நாட்கள் முதல் 500 கோடி வருடங்கள் வரை என்ற இடுகையில் மனிதன் மறைந்து 2 நாட்களில் இருந்து, 500 கோடி வருடங்கள் வரை, உலகம் மாறும் விதங்களைப் பட்டியலிட்டுள்ள ஆலன் வைஸ்மேன் என்ற ஆங்கில அறிவியல் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தின் சாரத்தை படங்களுடன் பகிர்ந்துள்ளார்..

சிட்டு குருவி பிடிப்பது எப்படி ? – 4 எளிய முறைகள் என்ற இவரின் சமீபத்திய இடுகையில் தனக்கு சிட்டுக்குருவி பிடிப்பதில் சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்களை அழகாக விவரித்துள்ளார்..


அங்கு ஃபாலோவராகவழிஇல்லை.. சென்று உற்சாகப்படுத்த இடுகைகள் உள்ளன.. சென்று வலைச்சரம் சார்பில் வாழ்த்திடுங்கள்..


அப்புறம், வழக்கம்போல பெரும்பாலான வலைச்சர நண்பர்களுக்கு நுனிப்புல்மேய இத்தகைய அறிமுகநடைபோதுமென நினைக்கிறேன்.. அப்படித்தானே..

சரி நண்பர்களே.. இன்றைய பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..

மீண்டும் நாளை சந்திப்போம்.. நன்றி..


மேலும் வாசிக்க...

Thursday, September 10, 2009

வலைச்சரத்தில் என் நான்காம்நாள் ஆசிரியப்பணி..

நான்காம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..

முதல்நாள் மாதிரி இல்லாமல்,
இரண்டாம் நாள் லேட்டாவந்ததற்கு பரிகாரமா
மூனாவதுநாள் அதிகாலையிலேயே வந்து
உங்களை குசிபடுத்தின சந்தோசத்தோட
நான்காம் நாளான இன்றைய படையலை கவனிப்போமா..

இன்று நமது அறிமுக நாயகர்கள் ஆறுபேரில் 33.33 சதவிகிதத்தினர் அதாவது இருவர் தங்களின் வலைப்பூவிற்கு ஃபாலோவர்களே வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை..

அவர்களின் வலைப்பூவில் அதற்கான விட்ஜெட்டே வைக்கவில்லை..

இதன் காரணமாகவே அவர்களை இங்கு அறிமுகப்படுத்தவா வேண்டாமா என்றொரு சந்தேகம் எழுந்தது..

இங்கு அறிமுகப்படுத்தப்படும் வலைப்பூக்களை நம் வலைச்சர வாசகர்கள் சென்று கண்டு ஃபாலோவராகவிரும்பினாலும் அதற்கான வாய்ப்பு அங்குஇல்லைஎன அறிந்து வருத்தப்படுவார்களோ என்ற ஒரு சிறிய சந்தேகத்தினாலேயே அந்த வலைப்பூக்களை அறிமுகப்படுத்த சற்று யோசித்தேன்..

இப்படி ஃபாலோவர் ஆவதற்கான விட்ஜெட் இல்லையென்ற ஒரே காரணத்திற்காக இந்த வலைப்பூக்களை ஒதுக்கிவைக்க மனம் வரவில்லை..

அதனால் இன்றைய அறிமுக நாயகர்களில் 3.33 சதவிகித நாயகர்களின் வலைப்பூக்கள் ஃபாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பூக்களாய் நமது இன்றைய படையலில்..

வாருங்கள் இன்றைய படையலை ருசிக்கலாம்..

நேற்று மிக நேரத்தில் வந்து உங்களை மகிழ்வித்ததால் ஏற்கனவே ஒரு புன்சிரிப்போடுதான் உள்ளீர்கள் என்பதால், இன்று முதல் பதார்த்தமாய் கதைகள் நிறைந்ததொரு வலைப்பூவினை பதம் பார்ப்போம்..


கேட்ச் பிடி'னா என்ன..? பிடி பிடி'னு அர்த்தமா.. இல்லை, கேட்ச் கேட்ச்'னு அர்த்தமா..
எதுக்கு ஒன்னையே ரெண்டுதபா சொல்றோம்..

அதே மாதிரிதான் இவரும்..

இவரோட வலைப்பூவினை நிலாவின் பக்கங்கள்னு சொல்லிருக்கலாம்.. இல்லைனா, மதியின் பக்கங்கள்னு சொல்லிருக்கலாம்..

ஆனா இவரோ தனது வலைப்பூவினை நிலாமதியின் பக்கங்கள்.'னு சொல்றார்..

இவரின் வலைப்பூ முகவரி http://mathinilaa.blogspot.com

ஏப்ரல் மாதத்திலிருந்து எழுததுவங்கயுள்ள இவர் இடையில் இரண்டு மாதங்கள் காணாமல் போய்விட்டு மீண்டும் வந்துள்ளார்..
மொத்தம் இம்மாதத்தையும் சேர்த்து நான்கு மாதங்களில் 41 இடுகைகளிட்டுள்ளார்..

தளராமல் கதைகள் பலவற்றால் தனது வலைப்பூவினை அலங்கரித்துவரும் இவரை, அவரின் வலைப்பூ சென்று வலைச்சரம் சார்பாக உற்சாகப்படுத்துங்களேன்..

இவரின் வலைப்பூவின் பெரும்பகுதி கதைகளாகவே நிரம்பி வழிகின்றன..

இவரின் கதைகளை ஒவ்வொன்றாக விமர்சித்தால் நாளைய ஆசிரியர் பணிக்கு நேரிடையாக சென்று அமர்ந்துகொள்ளவேண்டிய அளவிற்கு நேரம் தேவைப்படும் என்பதால், இங்கு இவரைப்பற்றி இத்தோடு நிப்பாட்டிங்.. மீதியை அங்கு சென்று காணவும்..

$$$$$$$$


அடுத்து, பகீரதனின் ஆகாய கங்கை என்ற வலைப்பூவினை காண்போம்..

இவரின் வலைப்பூ முகவரி http://bakeera.blogspot.com/

இவர் இறுதியாக கோப்பியை சுவையுங்கள் ....கப்பை அல்ல என்றொரு சிறுகதை மூலம் வாழ்க்கையை வாழும் முறையை தத்துவமாக ஒரு குட்டிக்கதையின் மூலம் விளக்கியுள்ளார்.

இலங்கை பதிவர் சந்திப்பைப்பற்றி பல புகைப்படங்களுடன் அழகாக விவரித்துள்ள பதிந்தோம் சந்தித்தோம்....! என்ற இடுகைக்கு பாவம் இதுவரை யாரும் கருத்து தெரிவிக்கவில்லை..

அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களாச்சும் இவரை உற்சாகப்படுத்தி இருக்கலாம்..
இவரின் வலைப்பூவில் எனக்கு இதுகொஞ்சம் வருத்தமளிக்கும் ஒன்றாக அமைந்துவிட்டது..

இப்போது நேரமின்மையால் அவரின் வலைப்பூ சென்று உற்சாகப்படுத்த இயலவில்லை எனினும், இங்கு அறிமுகப்படுத்தியதோடு விரைவில் நானும் பின்னூட்டம் மூலம் அவரை உற்சாகப்படுத்த உத்தேசித்துள்ளேன்..

வலைச்சர நண்பர்களே.. நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்..

இன்னும் பல சுவாரசியமான இடுகைகள் கொண்டுள்ள இவரின் வலைப்பூ சென்று அவரை உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே..

$$$$$$$$


அடுத்து..

ஆட்டோ ஓட்டுறவன் ஆட்டோகாரன்..
காரில் செல்பவன் கார்க்காரன்..
அப்படியெனில்,
கடற்கரைக்காரனாய் இருக்க என்ன வைத்திருக்கவேண்டும்..?

இவரின் வலைப்பூ பெயர்கடற்கரைக்காரன்..

வலைப்பூ முகவரி http://enmaganezhilan.blogspot.com/

இவர் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் சில பல இடுகைகளிட்டுள்ளார்..
அவற்றில் சிலது சாப்பிட சென்ற இடத்தில் மடித்துக்கொடுக்க பயன்படுத்திய துண்டு பேப்பரில் உள்ளவற்றை படித்ததையும் பகிர்ந்துள்ளார்..

அவற்றின் சுட்டி இணைப்புகளை இங்கு கொடுத்தால் இந்த இடுகையே ஒரு மினி கடற்கரைக்காரன் ஆகிவிடும்.. அவ்வளவு சுட்டிகள் தரவேண்டி இருக்கும்.. அவ்வளவு இருக்கு..

இதுபோக, இவர் தனது பயண அனுபவங்கள், உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக ஒரு கதை என்று பலவற்றை பகிர்ந்துள்ளார்..

இப்படி பலவகைப்பட்ட இடுகைகளைகொண்ட இவரின் வலைப்பூவினை என்னவென்று வகைப்படுத்துவதென தெரியவில்லை.. அதனால் இதனை பொது என்ற வகையில் சேர்க்க உத்தேசித்துள்ளேன்..

நான் முன்னமே தெரிவித்த ஃபாலோவர் விட்ஜெட் இணைக்கப்படாத உயர்ந்த உள்ளங்களில் இவருடையதும் ஒன்று..

அது இணைப்பது இணைக்காதது அவரின் விருப்பம்.. நம் விருப்பம் அவரை மேலும் பல இடுகைகளிட உற்சாகப்படுத்துவது.. வாருங்கள் நண்பர்களே.. நாம் நம் கடமையை செய்வோம்.. அவரை உற்சாகப்படுத்துவோம்..

$$$$$$$$


என்ன நண்பர்களே.. ரொம்ப போரடிச்சிட்டேனா..

சரி.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க இந்தவார பதார்த்தங்களில் முதல் முறையாக திரைப்படம் தொடர்பானதொரு வலைப்பூவினை அறிமுகப்படுத்துகிறேன்..

இந்த வலைப்பூ நண்பரும் நம்மை ரிலாக்'ஷாத்தான் இருக்க சொல்லுவார்போலும்.. இதற்காகவே தனது வலைப்பூவிற்கு ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்..

வலையுலகில் எனக்கு ரொம்ம்ம்ப சீனியரான இவர், 2008'ல் இருந்து இதுவரை பல திரைப்படங்களை மானாவாரியாக அலசிஎடுத்துள்ளார்..

இவரின் வலைப்பூ முகவரி http://timeforsomelove.blogspot.com/

வலைச்சர வாகர்களுக்கு இவரின் வலைப்பூவில் மீ தி ஃபஸ்ட்டேய் போடுவதற்காக ஃபாலோவர் விட்ஜெட் காத்துக்கொண்டுள்ளது..

இவரின் வலைப்பூ பிடித்திருந்தால் ஃபாலோவர் விட்ஜெட்டில் மீ தி ஃபஸ்ட்டேய் போடுங்களேன்..

$$$$$$$$


சரி.. ரிலாக்ஸ் பண்ணியாச்சுல்ல..

அப்டியே இன்னும்கொஞ்சம் ஒருபடிமேலேபோய் சிரிக்க, நகைச்சுவை பக்கம் செல்வோம்..

செல்வனூரான் இவன் பச்சைத் தமிழன் என்ற வலைப்பூவினில் எழுதிவரும் இவர் கடந்த மாதமே எழுதத்தொடங்கிய நெம்ப புதிய பதிவர்..

இவரின் வலைப்பூ முகவரி http://selvanuran.blogspot.com

கடந்த ஆகஸ்ட்டு மாதத்தில் பல நகைச்சுவை இடுகைகளுடன் (படிச்சா சிரிப்பு வருமான்னு தெரியலை.. ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க..) கலக்கிஎடுத்துள்ள நண்பர், இம்மாதம் கணினி தொடர்பான Excel சூத்திரங்கள் என்ற தலைப்பில் இரண்டு இடுகைகளிட்டுள்ளார்..

இவரும் ஃபாலோவர் விட்ஜெட் இணைக்காத நல்லுள்ளங்களில் ஒருவராக உள்ளார்..

வழக்கம்போல் நாம் நம் கடமையைஆற்றுவோம்.. வாருங்கள் அவரின் வலைப்பூவிற்கு..

$$$$$$$$


அடுத்து கணினி மென்பொருள் தொடர்பான வலைப்பூ..

இவரும் 2008'லேயே எழுத தொடங்கிவிட்ட வலையுலக சீனியர்தான்..

இவருக்கு மென்பொருள்களைக்கொண்டு புதியதொரு யுகத்தினை அமைக்க உத்தேசம்போலும்..

அதனால்தானோ என்னவோ இவர் தனது வலைப்பூவிற்கு புதிய யுகம் என்றே பெயரிட்டுள்ளார்..

இவரின் வலைப்பூ முகவரி http://pudhiyayugam.blogspot.com/

வெகு சமீபத்திய குறுஇடுகையாக அறிமுகம் நோக்கியா நெட் புக் என்ற தலைப்பில் நோக்கியா நெட் புக் ஒன்றைப்பற்றின கான்பிகுரேசன் மற்றும் அந்த நெட்புக்கிலுள்ள வசதிகளைப்பற்றி சுருக்கமாக கூறியுள்ளார்..

மென்பொருள் தொடர்பான இடுகைகளுக்கு இடையில் ஓஷோ தியானமுறைகள், ஐ.பி.எல் - ஆட்டமா பித்தலாட்டமா!! போன்ற வேறு துறைகள் சார்ந்த இடுகைகளும் இட்டுள்ளார்..

வலைச்சர நண்பர்களே.. அவர் அவரின் கடமையை ஒழுங்காக செய்கிறார் போலும்.. வாருங்கள் அவரின் வலைப்பூ சென்று நாமும் நம் கடமையை சிறப்பாய்ஆற்றுவோம்.. அவரை உற்சாகப்படுத்துவோம்..

சரி நண்பர்களே.. இன்றைய கடமையை, பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..

மீண்டும் நாளை சந்திப்போம்.. நன்றி..


மேலும் வாசிக்க...

Wednesday, September 9, 2009

வலைச்சரத்தில் என் மூன்றாம்நாள் ஆசிரியப்பணி..

மூன்றாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..

நேற்று ரொம்ப காலதாமதமாத பணிக்கு வந்ததால் நண்பர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் இன்று காணாதது எல்லாம் உலாத்தும் நேரத்திலேயே உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..

பாசமிகு நண்பர்களாகிய உங்களுக்கு வெறுமனே ஒரேஒருவகை பதார்த்தத்தை கொடுத்து ஏமாற்ற மனம் உடன்படவில்லை..

ஆகவே, நேற்றே கூறியதை போல், இனி வரும் தினங்கள் அனைத்தும் உங்களுக்கு அறுசுவை படையல்தான்..

சரி.. வாருங்கள் படையலுக்கு..

மனுஷன் என்ன கடுப்புல இருந்தாலும் கொஞ்சநேரம் நகைச்சுவையை ரசித்துக்கொண்டிருந்தான் எனில், கடுப்புகள் மறந்து சந்தோசமாக சிரிக்க ஆரமித்துவிடுவான்..

இங்கே, எனது தொல்லைதாங்காமல் கடுப்புடன் உள்ள நண்பர்கள், என் தொல்லை மறந்து புன்சிரிப்புடன் இடுகையை படித்து முடிக்க உதவும் ஆயுதமாக தொடக்கத்திலேயே நகைச்சுவை என்ற அஸ்த்திரத்தினை உங்கள்மேல் தொடுக்கிறேன்..

இன்று இங்கு அறிமுகப்படுத்தப்படும் நண்பர் 2008 இறுதியிலே எழுத ஆரமித்துவிட்ட கொஞ்சம் சீனியர் பதிவர்தான்.. நண்பர்கள் பலரும் அறிந்திருப்பினும் மீண்டும் அவரை இங்கு அறிமுகப்படுத்துவதில் தவறேதும் இல்லையென நம்புகிறேன்..

இவரின் வலைப்பூ பெயரே ஜோக்கிரி..

வலைப்பூ முகவரி http://jokkiri.blogspot.com/

இவர் சினிமா அரசியல் நிகழ்வுகளை அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாய் கலாய்த்துள்ளார்..

இவர் மேலும் பல நகைச்சுவை இடுகைகளிட்டு நம்மை சிரிப்புக்கடலில் நிரந்தரமாய் ஆழ்ந்திருக்கச்செய்ய முயற்சிக்க வாழ்த்துங்களேன்..

$$$$$$$$


அடுத்து கதை பக்கம் வருவோம்..

இங்கு அறிமுகப்படுத்தப்படும் இவர் முரண் தொடை என்ற வலைப்பூவில் 2008'ல் இருந்தே எழுதிவருகிறார்..

இவரின் வலைப்பூ முகவரி http://muranthodai.blogspot.com/

சில மாதங்களாக கதைகள் பல எழுதி வந்தாலும், அதற்கு முன்பு அரசியல் சார்ந்த இடுகைகள் பலவும் எழுதியுள்ளார்..

அவற்றைப்பற்றி இங்கு விமர்சிக்கும் அளவுக்கு போதுமான நேரமின்மையால் அவரின் வலைப்பூவிலேயே சென்றரிய அழைக்கிறேன்..

தற்சமையம் நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய் என்ற தொடர்கதை ஒன்றை எழுதி வருகிறார்..

தளராமல் எழுதிவரும் அவரை வலைச்சரம் சார்பாக நீங்களும் சென்று வாழ்த்தி உற்சாகப்படுத்துங்களேன்..

$$$$$$$$


அடுத்தது இன்னது என்று வகைப்படுத்த முடியாத அளவிற்கு பலதும் கலந்து எழுதப்பட்டுள்ள வலைப்பூ..

இந்த பதார்த்தம் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை..

இயன்றால் படித்துபார்த்து நீங்களே வகைப்படுத்துங்களேன்..

இப்பேர்பட்ட வலைப்பூ பெயர் Sri.Krishna ..

இவரின் வலைப்பூ முகவரி http://saidapet2009.blogspot.com/

இவரின் வலைப்பூவினை இந்தவகைஎன வகைப்படுத்த இயலாமைக்கு காரணம், இவரின் வலைப்பூவில் நகைச்சுவை, சினிமா, வீடியோக்கள், சமையல் குறிப்பு, அரசியல், டெக்னாலஜி / மென்பொருள் தொடர்பான என்று பலவகைப்பட்ட இடுகைகளுடன் கலக்கிக்கொண்டுள்ளார்..

இப்படிப்பட்ட வலைப்பூவினை வலைச்சர வாசகர்களாகிய நீங்களும் சென்று உற்சாகப்படுத்துங்களேன்..

$$$$$$$$


அடுத்தது என் வானம்.. என் எண்ணங்கள்... என்ற பெயரில் எழுதப்பட்டு வரும் வலைப்பூ..

இந்த வலைப்பூவினை அனுபவம் என்ற வகையில் சேர்க்கதீர்மானித்துள்ளேன்.. தவறாய் இருப்பின் திருத்தவும்..

இவர் எனக்கெல்லாம் ரொம்ம்ம்ம்ப பெரிய சீனியர்.. 2006'ல் இருந்தே எழுதி வருகிறார்..

இவரின் வலைப்பூ முகவரி http://nandhu-yazh.blogspot.com

இவரின் இடுகைகளில் பெரும்பாலும் அவரின் சொந்த அனுபவங்களும், அவரின் குழந்தையுடனான அனுபவங்களும், சில பல கவிதைகளும் கலந்துகட்டியுள்ளன..

சீனியர் பதிவர் என்பதால் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது..
அப்படி பெரும்பாலானோர் அறிந்திருப்பினும் பரவா இல்லை..

அவருக்கு, சென்று அவரின் இடுகைகளுக்கு பின்னூட்டமிட்டு அவரை மேலும் பல சிறப்பான இடுகைகளிட உற்சாகப்படுத்துங்கள்..

$$$$$$$$


அடுத்தது சமையல் தொடர்பான வலைப்பூ..

சமையலுக்கான பகுதியில் இன்று அறிமுகப்படுத்தும் வலைப்பூவின் பெயர் முத்தான முத்துக்கள்..
இந்த வலைப்பூவின் முகவரி http://allinalljaleela.blogspot.com

கடந்த எட்டு மாதங்களாக எழுதிக்கொண்டுள்ள முத்தான முத்துக்களின் சொந்தக்காரரான இவர், இதுவரை 241 சமையல் குறிப்பு இடுகைகளிட்டு அசத்திவருகிறார்..

சமையலில் 20 வருட அனுபவம் உண்டு தையற்கலையில் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

என்று தன்னைப்பற்றி பலதும் சொல்லியுள்ளார்..

வாருங்கள்.. சமையல் கலையில், குழந்தை வளர்ப்பு, தையற்கலையில் ஏதும் சந்தேகமிருப்பின், இவரின் வலைப்பூ சென்று தெளிவுபெருங்களேன்..

அதற்கு முன்பு, அவரின் வலைப்பூ சென்று அவருக்கு பின்னூட்டம் மூலம் ஆதரவு தெரிவித்து, அவரை மேலும் பல இடுகைகளிட உற்சாகப்படுத்துங்களேன்..

$$$$$$$$


அடுத்தது கணினி மென்பொருள் தொடர்பான வலைப்பூ..

இவர் பிளாக்உலகில் பலருக்கும் சீனியர்போல..

இவரின் வலைப்பூ பெயர் கணிணி மென்பொருட்களின் கூடம்..
வலைப்பூ முகவரி http://gouthaminfotech.blogspot.com/

2000'ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்..
2000 to 2005'ல் மூன்றே மூன்று இடுகைகள்தான் இட்டுள்ளார் எனினும், 2008, 2009'களில் மட்டும் 283 கணினி மென்பொருள் தொடர்பான இடுகைகளிட்டு 161 ஃபாலோவர்களைக்கொண்டு அசத்திவருகிறார்..

நீங்களும் கணினி மென்பொருள் தொர்பாக ஏதாவது அறிய விரும்பினால் இவரின் வலைப்பூவந்து முயற்சித்து அவரை மேலும் பல மென்பொருள்களை அறியக்கொடுக்க உற்சாகப்படுத்துங்களேன்..

இவ்வளவு ஃபாலோவர்கள் இருப்பதால் உண்மையில் இவருக்கு அறிமுகமே தேவை இருக்காதுஎன நினைக்கிறேன்..

அப்படி இவர் அறிமுகம் இல்லாமலே பலரால் அறியப்பட்ட சீனியர் பதிவராக இருப்பாரெனில், இந்த அறிமுகம் பல புது பதிவர்களுக்கு இந்த சீனியர் பதிவரை அறியக்கொடுப்பதற்காக என்று கொள்ளுங்கள்..

சரி நண்பர்களே.. இன்றைய கடமையை, பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..

மீண்டும் நாளை சந்திப்போம்.. நன்றி..


மேலும் வாசிக்க...

Tuesday, September 8, 2009

வலைச்சரத்தில் என் இரண்டாம்நாள் ஆசிரியப்பணி..

வணக்கம் நண்பர்களே..

பணிக்குவர சற்று தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்..

காலைல இருந்து வாத்திய காணோம்னு கடுப்பாகி பொகஞ்சுட்டு இருக்கிங்களோ..
(அன்புநெஞ்சம் அப்டி யாராவது ஒருத்தராச்சும் இருந்தா, அந்த அன்புக்கு என் கோடானுகோடி நன்றிகள்..)

பொகையாட்டியும் பரவா இல்லை.. அந்த அன்புக்கும் என் நன்றிகள்..

சரி.. வந்ததே லேட்டு.. ஒழுங்கா வேலைய பாப்போம்..

இன்னைக்கு ஒருதுறை சார்ந்த சில பல வலைப்பூக்களை இங்கு குறிப்பிடலாமென நினைத்திருந்தேன்.. ஆனால் ஒரே வித பதார்த்தத்தை எத்தனை விதமாக, வெவ்வேறு வடிவில் உண்டாலும், இறுதியில், உண்டவருக்கு அனைத்தும் ஒன்றுபோலவே உணரப்பட்டு வெறுப்பாய் இருக்கலாம் என்று நினைத்து, இன்றைய படையலை அறுசுவை படையலாக படைக்க உத்தேசித்துள்ளேன்..

இதில், படையலை உங்களுக்கு படைப்பது மட்டுமே என் பொறுப்பு..
அதில் எது சைடு டிஸ், எது மெய்ன் டிஸ் என அறிவது உங்களின் பொறுப்பு..

இனி படையல்..

முதலில் புன்னகை முதல் இடி சிரிப்புவரையும் அதற்குமேலும் தரவல்ல நகைச்சுவை..

இவர் சமீபத்தில் தனியாக சிரிக்க சங்கடப்பட்டுக்கொண்டு எல்லாரையும் அவரோடு சிரிக்க அழைப்பு விடுத்துள்ளார்.. இவருடன் போய் சிரிக்க இங்கே செல்லலாம்..

இவரின் வலைப்பூ முகவரி http://tamiljokes4u.blogspot.com/

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 54 இடுகைகள் இட்டு சிரிக்க வைத்துக்கொண்டுள்ளார்.. இந்த மாதம் இதுவரி 14 சிரிப்புகுண்டுகளை சிறப்பாக வீசியுள்ளார்.. நீங்களும் சென்று பாருங்கள்..

$$$$$$$$


அடுத்து உள்ள வலைப்பூவானது ஒரு உணவு பதார்த்தத்தின் பெயரிலேயே உள்ளது..


இவர் தனது வலைப்பூவிற்கு பலாச்சுளை என்று பெயர்சூட்டியுள்ளார்..

இவரின் வலைப்பூ முகவரி http://yasavi.blogspot.com/

வலைப்பூவும் உண்மையில் சுவையாகத்தான் உள்ளது..

சீனாவில், முட்டை ஓட்டிலிருந்து உள்ளே உள்ள மஞ்சள் கரு வரைக்கும் முழுவதும் கெமிக்கலை கொண்டு போலி முட்டை தயாரித்ததை நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா.. வெகு சிலரே கேள்விப்பட்டிருப்பீர்கலென நினைக்கிறேன்.. அந்த முட்டையை தயாரிக்க, முட்டை ஒன்றுக்கு 20 பைசா அளவிற்குதான் செலவாகிறதாம் அவர்களுக்கு.. ஆனால் விற்பதோ.. ?

கொள்ளை லாபத்திற்காக நடந்த இந்த நூதன மோசடியை அந்நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவர் கண்டுபிடித்து வெளியிட்டிருந்தார்..

அந்த செய்தியை நான் எங்கோ கேட்டிருந்தேன்.. பத்திரிக்கையில் பார்த்தேனோ இல்லையோ.. அந்த படங்களை இவர் வலைப்பூவில் பார்த்தேன்..

நமக்கான பொதுநல, அறிவுரை போன்ற இடுகைகளுடன் இண்டர்வியூவை எதிர்கொள்ளும் முறைகளையும் அழகாக சொல்லியுள்ளார்..

இவர் மேன்மேலும் பல சிறந்த இடுகைகள்மூலம் தனது வலைப்பூவினை இன்னும் அலங்கரிக்க வாழ்த்துகிறேன்..

$$$$$$$$


அடுத்தது.. குட்டிகளுக்காக..

வேணாம்.. வேணாம்..
இப்டி சொன்னா வேற யாராது வந்தாலும் வந்திடுவாங்க.. அப்புறம் வம்பா பூடும்..

அதனாலே சுட்டிகளுக்காக'னு சொல்றேன்..

இவர் கடந்த ஆறு மாதங்களில் மொத்தமே 12 இடுகைகள்தான் இட்டுள்ளார் எனினும் சுட்டிக் குழந்தைகளுக்கான வலைப்பூ என்பதனாலும், பெரும்பாலானோர்க்கு இந்த வலைப்பூ அறிமுகம் இல்லை என்பதாலும், இங்கு அறிமுகம் செய்வதால் கிடைக்கும் உற்சாகத்திலேனும் இவர் இன்னும் பல இடுகைகள் இடுவார் என்ற நம்பிக்கையிலும் அவரை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்..

இவரின் வலைப்பூ முகவரி http://chutti-ulaham.blogspot.com/

குழந்தைகளுக்கான பாட்டுக்களும், கதைகளுமாக வலைப்பூவை அமர்க்கலப்படுத்திக்கொண்டுள்ளார்.. சுட்டிகளுக்கான இந்த சேவையை இன்னும் பல இடுகைகளுடன் தொடர வாழ்த்துக்கள்..

$$$$$$$$


இவர் நமக்கு கொஞ்சம் ரொம்ப புதிய பதிவர்தான்..

கடந்த மாதம் எழுதத்தொடங்கி, இதுவரை ஆறு இடுகைகள் இட்டுள்ளார்..

அதுவும் ஒரேமாதிரியானதாக இல்லாமல் பலதும் பலவிதம்..

இவரின் வலைப்பூ முகவரி http://rekharaghavan.blogspot.com

இவரை இந்தவகை பதார்த்தம் என இனம் காண முடியாததாலும், ஆறில் மூன்று இடுகைகள் அவரின் அனுபவத்தை பகிர்வதாலும், இவரை அனுபவம் என்ற பதார்த்தத்தில் சேர்க்கிறேன்..

ஒரு சமையல் குறிப்பு, இரண்டு சிறு கதைகள், மூன்று சொந்த அனுபவங்களென ஆறு இடுகைகளில் முத்துறைகளில் முத்திரை பதித்துள்ளார்..

கடப்பா ஊரு தான் கேள்விபட்டிருப்போம்.. இங்க இவர் அப்படி ஒரு பதார்த்தமே யதார்த்தமாக செய்யக்கற்றுக்கொடுக்கிறார்..

முதல் இடுகையில்,

அன்புள்ள நண்பர்களுக்கு ,

வணக்கம். புதிதாக வந்துள்ளேன். உங்கள் ஆதரவினை அன்புடன் நாடுகிறேன்.

ரேகா ராகவன்.

என்று அன்போடு ஆதரவினை கேட்டுள்ளார்..

வாருங்கள், வலைச்சரத்தின் சார்பாக நமது ஆதரவினை அவருக்கு தந்து மேலும்பல இடுகைகள் இட அவரை உற்சாகப்படுத்துவோம்..

$$$$$$$$


அடுத்தது சமையல் தொடர்பான வலைப்பூ..

இவர் 2008'ல் இருந்தே எழுதிவருபவராம்.. இருந்தாலும், தொடர்ச்சியாய் இல்லாமல், எப்போதேனும் ஒன்றாக சில இடுகைகள் மட்டுமே இட்டுவருகிறார்..

இவரின் வலைப்பூ முகவரி http://suganthiskitchen.blogspot.com/

பிரியாணி நாம் அறிவோம்..
முளைப்பயிறும் நாம் அறிவோம்..
முளைப்பயிறு பிரியாணி..?
யார் அறிவார்களோ இல்லையோ..
இதுவரை நான் கண்டதில்லை
இந்த பிரியாணியை..

இங்குவந்து காணுங்கள் அவரின் முளைப்பயிறு பிரியாணியை..

இதனுடன் சேர்த்து இருபதுக்கும் மேற்ப்பட்ட உணவு வகைகளை இவரின் வலைப்பூ வந்து சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்..

$$$$$$$$


அடுத்தது வேலைவாய்ப்பு சம்பந்தமான வலைப்பூ..

இவரின் வலைப்பூ பெயரே வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் ..

இவரின் வலைப்பூ முகவரி http://tedujobs.blogspot.com/

IT துறைகளில், தற்போது வேலை வாய்ப்பு உள்ள, பல பல பிரிவுகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகளை நல்லமுறையில் வெளியிட்டு வருகிறார்..

இவரும் மூத்த பதிவர்தான் போலும்.. கடந்த 2006'ல் இருந்து எழுதி வருகிறார்..
இது பலருக்கு தேவையான வலைப்பூவாக இல்லாமல் இருக்கலாம்..

ஆனால், தட்சமையம் வேலைதேடிக்கொண்டிருக்கும் பல நண்பர்களுக்கு இந்த வலைப்பூ நிச்சயம் ஒரு நல்ல துணையாக இருக்குமென நம்ம்ம்ம்ம்பி இங்கு அறிமுகப்படுத்துகிறேன்..

இவர் 2006'இல் இருந்தே எழுதி வருவதால் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளதுதான் எனினும், இந்த வலைப்பூவை அறியாத, பல வேலைதேடும் நண்பர்களுக்கு இது உதவியாய் இருக்குமென இங்கு அறிமுகப்படுத்துகிறேன்..

இவரின் வலைப்பூ சென்று, அவரின் வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து, உங்களின் நண்பர்களுக்கு உதவி, அவரை உற்சாகப்படுத்துங்களேன்..


சரி நண்பர்களே.. இன்றைய கடமையை, பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..

நாளை சந்திப்போம்.. நன்றி..


மேலும் வாசிக்க...

Monday, September 7, 2009

வலைச்சரத்தில் என் முதல்நாள் ஆசிரியப்பணி..





வலைச்சரத்தில் என் முதல்நாள் ஆசிரியப்பணி..

வலைச்சரத்தின் அடுத்த முத்தாய் என்னையும் கோர்த்து அடுத்த ஒரு வாரத்திற்கு சரம் தொடுக்க அழைத்துள்ள (அ) குண்டுக்கட்டாய் மிரட்டி அள்ளிக்கொண்டுவந்துள்ள ஐயா சீனா அவர்களுக்கு நன்றிகள் பல..

நான் பதிவுலகிற்கு வந்ததே வெகு சமீபத்தில்தாம்.. அண்மையில் தான் ஒரு நண்பர் என்னை இங்கு அறிமுகப்படுத்தியதாய் நியாபகம்.. என்னை அறிமுகப்படுத்திய அந்த அறிமுகப்படுத்தலின் நியாபகம் மறையும்முன், என்னையே இப்போது வலைச்சர ஆசிரியராக்கி என் மூலம் பல புதிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்து என்னையும் ரவுடியாக்கிய சீனா அவர்களுக்கு உண்மையிலேயே மனதிடம் கொண்ட பெரியமனசுதான்..

நான் பிற சக வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் முன், முதலில் என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்வது நல்லது என நினைக்கிறேன்.. இல்லையேல், ஒருவாரம் கழித்து, இவ்வளவுநாள் இங்க கத்திட்டு இருந்தியே யார்நீ'னு நம்மாளுங்க கேட்டாலும் கேட்டுடுவாங்க.. ஆகவே ஒரு சிறு சுய அறிமுகம்..

இந்த சுரேஷ்'னு பேருவெச்சிருந்தாவே எங்க போனாலும் கொழப்பம்தான்.. எங்க திரும்பினாலும் மூணு நாலு சுரேஷுங்க இருப்பாங்க..

இங்கேயும் நம்ம சீனா ஐயா எனக்கு முன்னாடியே ரெண்டு சுரேஷ கொண்டாந்துட்டார்.. இப்போ மூனாவதா நானும் இங்க.. எல்லாரும் யார் யார் எந்த சுரேஷுன்னு தெளிவா நியாபகம் வெச்சுகிட்டு கும்முங்க..


நான் சுரேஷ், கோயமுத்தூரில் இருந்து "எழுதுவது எல்லாம் எழுத்தல்ல.." என்ற பெயரில் எழுதிவருகிறேன்..
(அதிக்கப்படியான வேலைப்பளு மற்றும் புதியவேலை தேடும் அவசரத்தில் கடந்த மாதத்தில் சரியாக எழுதமுடியவில்லை..)

கதை, கவிதைகளில் வேக வைக்க பருப்பு ஏதும் இல்லாததால் இப்போதைக்கு சொந்த அனுபவங்களின்மூலம் கொண்ட கருத்துக்களை எழுதிவருகிறேன்..

சேற்றில் முளைத்த செந்தாமரையாய், எனக்குள்ளும் ஒரு கதைக்கரு விழுந்தது..
அதனை கதையாய் வடித்ததில், பலபேர் படித்து ரெண்டுநாள் சோறு தண்ணி இறங்காமல் விக்கித்து நின்றனர்..

அவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க கதையின் தலைப்பு..

கொலைகாரன் குடும்பத்தார் (part 1)..

(அதில்வரும் கதாபாத்திரங்களும் கதையுமே ஒருவாறு உல்டாலங்கடியாய் இருப்பதால், கதையின் கடேசியில் இன்வெஸ்டிகேசன் தொடரும் என்று இருப்பதின் பொருள், கதை அவ்ளோதான்.. அடுத்த பகுதி இல்லை என்று எதிர்மறை பொருள்கொள்ளலாம்.. ஆகவே கதையின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கவேண்டியதில்லை..)

என் இடுகைகளில் சிறந்தது என்று நான் எதையும் பிரித்து கூற முடியாது..
அதற்கான காரணங்களில் ஒன்று.. அவை நான் எழுதியவை..
ரெண்டாவது.. ஒவ்வொரு இடுகையயுமே எழுதும்போது ஏதோ அந்த மாதத்திற்காக நிரப்படும் இடுகையாய் எண்ணாமல், ஒவ்வொரு இடுகையயுமே நான் எழுதும் முதல் இடுகையாய் நினைத்து மிக யோசித்து பொறுமையாய் முழு ஈடுபாட்டுடன் எழுதுவது..
முக்கியமாய் இந்த இரண்டுகாரணங்களால் எனது அனைத்து இடுகைகளுமே ஏதாவது ஒரு விதத்திலேனும் எனக்கு பிடித்தமான ஒன்றுதான்..

எனதெழுத்துக்களை தாங்கியுள்ள என் வலைப்பூவைகாண "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல"க்கு வாருங்கள்..


நாளைமுதல், கொண்ட கடமையை சிறப்பாய்ஆற்ற கூடஇருந்து நல்லவிதமாய் வழிநடத்தி உதவுங்கள் நண்பர்களே..

நாளை சந்திப்போம்.. நன்றி..

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது