07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 23, 2009

இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு

இந்தப் பதிவில் உள்ள அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் மிகவும் ரசித்திருக்கிறேன். கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, தொழில்நுட்பம், சமையல்..அப்பப்பா..எத்தனைத் தளங்களில் அசத்தியிருக்கிறார்கள்..இவர்களை எழுத்தோடு ஒப்பிட்டால், நான் எழுதுவதெல்லாம் ஒரு எழுத்தே இல்லை..

நான் ரசிக்கும் பதிவர்களை எப்படி அறிமுகப்படுத்துவது..இதுதான் இவருடைய பிளாக், இதுதான் லிங்க் என்று கொடுத்தால் சாதரணமாக இருக்கும்..ஏதாவது வித்தியாசமாக செய்தால் என்ன என்று தோணியது..இந்தப் பதிவு நான் எதிர்பார்த்த அளவுக்கு நகைச்சுவையாக இருக்குமா என்று தெரியவில்லை..ஆனால் நான் ரசிக்கும் அனைத்துப் பதிவர்களும் இதில் வருவார்கள்..

நான் படிக்கும் பதிவர்களுடன் இயக்குனர் புயல், சீறும் சிங்கம்

(ஆத்தாடி.. இப்பவே கண்ணைக் கட்டுதே), இயக்குநர் பேரரசு கற்பனையாக சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்த பதிவு. இதில் உள்ளவர்கள் எல்லாம் நான் தினந்தோறும் ரசிக்கும் பதிவர்கள். கண்டிப்பாக தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வழக்கமா என்னுடைய பதிவைப் படித்து முடித்து, உங்கள் உதட்டோரத்தில் வரும் புன்னகையே எனக்குப் போதும். இந்தப் பதிவுனை, மூன்று, நான்கு பகுதிகளாக பிரித்துக் கொடுக்கப் போகிறேன்..ஒவ்வொரு பதிவிலும் வேறு, வேறு பதிவர்களை அறிமுகம் செய்கிறேன்.

இயக்குநர் பேரரசு அடுத்த பட டிஸ்கசனுக்காக நான் ரசிக்கும் பதிவர்களை கூப்பிட்டிருக்கிறார்..

பேரரசு : வாங்க..வாங்க..எல்லாத்தையும் எதுக்கு கூப்பிட்டிருக்கேனா..

வானம்பாடிகள் : வேறெதுக்கு..எங்க உசிரை எடுக்குறதுக்கு..

பேரரசு : வேணாம்பு..ஏற்கனவே உங்களோட “நேத்து ஆப்பு..இன்னைக்கு சோப்பு” படிச்சுட்டு மிரண்டு போயிருக்கேன்..இதோட நிறுத்திக்குவோம்..சரி இப்ப மேட்டருக்கு வருவோம்..அடுத்த படத்துல நானே ஹீரோவா நடிக்கலாமுன்னு இருக்கேன்..ஷிரேயாவைத்தான் ஹீரோயினுக்கு பேசிக்கிட்டு இருக்கோம்..

(ஒரு பதிவர் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழ)

யோ வாய்ஸ் : அருமை..அருமை..அப்படியே..என் நூடுல்ஸ் பதிவில் எழுதி இருக்குறதையும் சேர்த்து கோர்த்து விட்டோம்னா..சூப்பரா இருக்கும்ல சார்..

(பேரரசு முனுமுனுப்பாக)..என்னடா எலி இப்படி போகுதேன்னு பார்த்தேன்..

பேரரசு: அதில்லை தம்பி, கொஞ்சம் மசாலா தூக்கலா எதிர்பார்க்குறேன்..

நான் ஆதவன் : சார்..மசாலா என்ன சார் மசாலா..என் “பெசிர பப்பு” பதிவை பாருங்க..மசாலா பின்னி இருப்பேன்..

பேரரசு : (காண்டாகி) அடப்பாவி அது நீதானா..உன் பதிவை படிச்சுட்டு , நானே தயாரிக்கலாம்னு எல்லாம் பண்ணிட்டேன்யா..கடைசியில அடுப்பை மட்டும் பத்த வைக்காம விட்டுட்டேன்..சரி வேஸ்டாப் போகக்கூடாதுன்னு கண்ணை மூடிட்டு குடிச்சதுல ரெண்டு நாளா வயத்து வலியா..இங்கயே நிக்காத..கொலை வெறியாகிடும்..யாராவது உருப்படியா ஏதாவது சொல்லுங்கயா..என்ன லொகேஷன் போகலாம்..

ஞானப்பித்தன் : சார்..வைஷ்ணவதேவி கோயில், ஹரித்துவார், இமயமலை,,இப்படியே ஒரு ரவுண்ட் போகலாம்..அப்பப்ப, நீங்களும் ஸ்ரேயாவும் ஒவ்வொரு இடத்துலயும் குத்துப் பாட்டு போடுறீங்க..நானும் ஒரு பயணப்பதிவு போட்டுறேன்..ரைட்ஸ் எனக்கு குடுத்துருவீங்கள்ள..

பேரரசு : ம்..ரைட்டுலதான் கொடுப்பேன்..

துபாய் ராஜா : அதெல்லாம் விடுங்க சார்..துபாய் எப்படி…நீங்க கதைக்கு கூட அலைய வேண்டாம்..”ஏதோ மோகம்” ன்னு கலக்கலா ஒரு சிறுகதை எழுதுறேன்..ஒரு 1 லட்சம் கொடுத்தீங்கன்னா டீல் முடிச்சிடலாம்..

பேரரசு : அடப்பாவமே..ஒரு லட்சமா..

(வாசலில் இருந்து “கவலைப்படாதே மச்சான்..நான் இருக்கேன்..” என்ற குரல் வர, எட்டிப் பார்த்தால் சக்கரை சுரேஷ்..எல்லோரும் ஓட எத்தனிக்கிறார்கள்

செந்தழல் ரவி : அடப்பாவிங்களா..கொஞ்சம் மெதுவா பேசுங்கன்னு தலையால அடிச்சுக்கிட்டேன்..இப்படி எழுப்பி விட்டுட்டீங்களேயா….அது யாருய்யா சுரேஷ் பின்னாடி நிக்கிறது..

"எல்லா திரட்டிலயும் துரோகம் நடக்குது..தமிழன்னா அவ்வளவு மட்டமாயா"... சக்திவேல் “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” பேக்கிரவுண்ட்டில் வர

சென்ஷி : ))))

செந்தழல் ரவி : அடப்பாவி..இங்க ஒரு ரத்த ஆறே ஓடிக்கிட்டு இருக்கு..ஸ்மைலி போடுறேயா..இப்படித்தான் கொரியாவுல..

எல்லாரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்..

(அலும்பு நாளை தொடரும் இன்னும் புதிய பதிவர்களுடன்)

30 comments:

  1. எப்ப்பா ராசா - கண்ணெக்கட்டுதுய்யா

    பேரரசு - ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  2. //சக்திவேல் “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” பேக்கிரவுண்ட்டில் வர //

    ஹா ஹா ஹா....

    அவிய்ங்க ராஜா காலங்கார்த்தால பயங்கரமா சிரிக்க வைச்சுட்டீங்க.. கீப் இட் அப் !

    ReplyDelete
  3. :)). முதல்ல உங்க மனதில நான் இருக்கேனா ராஜா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த ஒரு வரில பதிவோட பதிவரின் அறிமுகம் அசத்தல். நன்றி ராஜா. அசத்துங்க.

    ReplyDelete
  4. பின்னீட்டீங்க ராசா

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. கலக்கிட்டீங்க ராசா. சிரிச்சு சிரிச்சு முடியல :)

    //சென்ஷி said...
    :-)//

    இதுக்கும் ஸ்மைலியா?அவ்வ்

    ReplyDelete
  7. வித்தியாசமான முயற்சி!

    ReplyDelete
  8. நல்லவேளை ஞாபக படுத்திட்டிங்க நாளைக்கு ஒரு இமயமலை பதிவ போடுறேன் :)

    ReplyDelete
  9. // சென்ஷி said...
    :-)
    //

    அங்கனையும் இதான் இங்கயும் இதானா ?

    வாட் கொடுமை சென்ஷி -:)

    ReplyDelete
  10. ஹிஹி...

    சோ நைஸ் :D

    ReplyDelete
  11. //////////////////
    பரிசல்காரன் said...
    முடியல....
    September 23, 2009 8:02:00 AM IST
    ////////////////
    நன்றி பரிசல்காரன் உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு..

    ReplyDelete
  12. ///////////////
    cheena (சீனா) said...
    எப்ப்பா ராசா - கண்ணெக்கட்டுதுய்யா

    பேரரசு - ம்ம்ம்ம்ம்

    September 23, 2009 8:14:00 AM IST
    ///////////////
    இன்னும் இருக்குண்ணே..

    ReplyDelete
  13. ////////////////
    சென்ஷி said...
    :-)

    September 23, 2009 9:25:00 AM IST

    ////////////////
    ஆ..இங்கேயும் ஸ்மைலியா..)))

    ReplyDelete
  14. ///////////////////
    சென்ஷி said...
    //சக்திவேல் “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” பேக்கிரவுண்ட்டில் வர //

    ஹா ஹா ஹா....

    அவிய்ங்க ராஜா காலங்கார்த்தால பயங்கரமா சிரிக்க வைச்சுட்டீங்க.. கீப் இட் அப் !

    September 23, 2009 9:27:
    ///////////////////
    நன்றி சென்ஷி..

    ReplyDelete
  15. /////////////////
    வானம்பாடிகள் said...
    :)). முதல்ல உங்க மனதில நான் இருக்கேனா ராஜா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த ஒரு வரில பதிவோட பதிவரின் அறிமுகம் அசத்தல். நன்றி ராஜா. அசத்துங்க.

    September 23, 2009 9:34:00 AM IST
    ///////////////////
    நன்றி வானம்பாடிகள்..

    ReplyDelete
  16. /////////////////
    கதிர் - ஈரோடு said...
    பின்னீட்டீங்க ராசா

    September 23, 2009 9:48:00 AM IST
    /////////////////
    வருகைக்கு நன்றி கதிர்

    ReplyDelete
  17. //////////////
    தூரிகை - Pandiyarajan said...
    Nice Raaja.... Congrats...

    September 23, 2009 10:55:00 AM IST
    ////////////////
    வருகைக்கு நன்றி பாண்டியராஜன்,,,

    ReplyDelete
  18. ///////////////////
    ☀நான் ஆதவன்☀ said...
    கலக்கிட்டீங்க ராசா. சிரிச்சு சிரிச்சு முடியல :)

    //சென்ஷி said...
    :-)//

    இதுக்கும் ஸ்மைலியா?அவ்வ்

    September 23, 2009 11:18:00 AM IST
    //////////////////////
    வருகைக்கு நன்றி ஆதவன்…

    ReplyDelete
  19. ///////////////
    வால்பையன் said...
    வித்தியாசமான முயற்சி!

    September 23, 2009 12:10:00 PM IST


    மணிகண்டன் said...
    கலக்கல் ராசா.

    September 23, 2009 2:40:00 PM IST


    /////////////////
    வருகைக்கு நன்றி வாலு அண்ணே..மணிகண்டன்..

    ReplyDelete
  20. ///////////////
    [ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] said...
    நல்லவேளை ஞாபக படுத்திட்டிங்க நாளைக்கு ஒரு இமயமலை பதிவ போடுறேன் :)

    September 23, 20

    அத்திரி said...
    SUPERB

    September 23, 2009 9:11:00 PM IST


    Mãstän said...
    ஹிஹி...

    சோ நைஸ் :D

    September 23, 200

    //////////////
    கண்டிப்பா பித்தன்..))) நன்றி மஸ்தான்..அத்திரி..

    ReplyDelete
  21. பேர்ரசுன்னுதம் ஓடி வந்தேன்.


    கடேசில காமடி பண்ணிட்டீங்க போங்க.

    :)

    ReplyDelete
  22. அருமை ராசாண்ணே... கலக்கிப்புட்டிங்க கலக்கி....

    அறிமுகத்திற்கு நன்றிண்ணே.. அப்புறம் 'ஏதோ மோகம்' கதையை எழுதி முடிச்சிட்டேன். என்ன ஒண்ணு சிறுகதையா எழுத நினைச்சது தொடர்கதையா ஆயிடுச்சி. அவ்வளவுதான்.... :))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது