07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 29, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-5




ஒரு கவிதை
அப்பா

சட்டைப் பித்தான்களை வரிசைமாற்றாமல்
போட்டதில்லை என்றும் நீ.

இடுப்பு வேட்டி இறுக்கக் கட்டாமல்
தடுக்கித் தடுமாறும் உன் கால்கள்.

லைஃப்பாய்மணக்க குளித்து வந்தபின்னும்
சோப்புமிச்சம் காதோரம் குழைந்துமின்னும்.

அன்னம் தரைசிதறாமல்
உண்ணத் தெரியாதுனக்கு

வேயுறுதோளிபங்கன் தவிர
வேறுபாட்டு நீ சொன்னதில்லை

கால்மாற்றி செருப்பு நுழைத்துதற
பால்மாறாது உன் கவனக் குறைவு.

காசெண்ணக்  கைநடுங்கும் இரகசியம்
சூசகமாய் சொல்ல அறியாய் நீ

அப்பா!

ஈதெல்லாம் இனியும் சொல்லி
கேலி செய்ய மாட்டேன் உன்னை.
பட்டுமாலை சார்த்திய
படம்விட்டு இறங்கிவந்து
என்
பக்கத்தில் உட்காரேன்!

********************************************
இரண்டு ஜோக்குகள்

ஆசிரியர்: ஞொய்யாஞ்ஜி! உணவு செரிமான முறையை இரண்டே வரிகளில் சொல்லு பார்ப்போம்?
ஞொய்யாஞ்ஜி:  அதுவா? வலது கையோடு ஆரம்பிச்சி இடது கையால முடியும் சார்


###########

ஞொய்யாஞ்ஜி ஒரு பத்திரிகையைக் காட்டி தன் மனைவி பல்லெலக்காவிடம் சொன்னார்,
இதுல என்ன போட்டிருக்கான் பார்த்தியா? ஒரு ஆம்பிளை ஒரு நாளில் 15000 வார்த்தைகள் தான் பேசறானாம். ஆனா பொம்பளையோ, ஒரு நாளைக்கு 30000 வார்த்தைகள் பேசுவாளாம். ரெண்டு மடங்கு!!
பல்லெலக்கா: அது ஏன்னா பொம்பளை ஒவ்வொரு விஷயத்தையும் திரும்பவும் ஒருமுறை சொல்ல வேண்டியிருக்கு ஆம்பிளைக்கு
ஞொய்யாஞ்ஜி: என்ன சொன்னே? திரும்ப சொல்லு?  




இன்றைய வலைப்பதிவர்கள் தேர்வு

எட்டயபுரம் : இது கவிஞர் கலாப்ப்ரியாவின் வலைப்பூ. என் அபிமானக் கவிஞர் . இவரது எழுத்துக்கள் ஒரு தெள்ளிய நீரோடை போல் சீரானது. தாகூரை ஆதர்சமாய்க் கொண்ட கவிஞர் இவர். கண்டிப்பாய் பாருங்கள் இந்த கவிவனத்தை.

பொன் மாலைப் பொழுது.: சகோதரர் கக்கு-மாணிக்கம் அவர்களின் வலைப்பூ.  நல்ல ரசனையுள்ள இவர் படைப்புகளும் வித்தியாசமானவை. இவர்பதிவிடும் பாடல்களின் தேர்ச்சி  இவரின் ரசனையை எண்ணி வியக்க வைக்கும்.

கலியுகம்: தினேஷ்குமாரின் வலைப்பூ. அவர் கவிதை பூனையும் வேகம் அசாத்தியமானது. இவரின் பாடுபொருள் தெரிவுகள் சில சமயம் பிரமிப்பூட்டுபவை. வார்த்தை சாரலில் தொலைந்து போய்விடுகிறாரோ அவ்வப்போது.? தினேஷ்! கொஞ்சம் பார்த்துக்குங்க. கைத்தட்ட நாங்க இருக்கிறோம்.

(லிங்க் கொடுப்பதில் மடிகணனி பிரச்னை உள்ளதால் பதிவர் அறிமுகம் சற்று நேரம் கழித்து மீண்டும் தொடருகிறேன், மன்னிக்கவும் )
மோகன்ஜி    என்னுடைய இளஞ்சாராயத்தை
என் கோப்பையு


22 comments:

  1. இனிய குயிலின் கூவலுடன் அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு

    ReplyDelete
  3. அப்பா பற்றிய கவிதை அருமை.

    மடிகணினி பிரச்சனை பண்ணுகிறதா??? மாடியிலிருந்து தூக்கி கீழே போடுங்கள். சரியாகிடும்.

    ReplyDelete
  4. ஞொய்யாஞ்ஜி பிரபலமடைஞ்சிட்டே வரார் !

    ReplyDelete
  5. மோகண்ணா...கவிதை மனசை அசைத்துவிட்டது.இப்பவே
    அப்பாவுக்குப் போன் பண்ணினேன்.வீட்ல இல்லையாம்.வெளில போய்ட்டாராம்.அம்மா
    “டக்”என்று போன் வச்சிட்டா !

    ReplyDelete
  6. அப்பப்பா கவிதை...

    ஞொய்யாஜி அறிவாளி ஆய்ட்டு வருகிறார் விடக்கூடாது....

    ரசனையான அறிமுகங்கள்...

    ReplyDelete
  7. அப்பா....!
    கண் கலங்க வைத்த கடைசி வரிகள்.
    இன்னும் எதுவும் சரியாகவில்லையா...லிங்க் ஏதும் இல்லை.

    ReplyDelete
  8. அப்பப்பா அருமை!

    ReplyDelete
  9. மிக்க நன்றி கே.பி.எஎஸ்! நலம்தானா?

    ReplyDelete
  10. நன்றி சமுத்ரா !

    ReplyDelete
  11. அவசியம் உங்கள் வலைப்பூவை பார்க்கிறேன் ராஜா!

    ReplyDelete
  12. நன்றி இந்திரா! நல்ல யோசனை தான்!

    ReplyDelete
  13. நன்றி இந்திரா! நல்ல யோசனை தான்!

    ReplyDelete
  14. நன்றி இந்திரா! நல்ல யோசனை தான்!

    ReplyDelete
  15. ஹேமா! என் அப்பா மறைந்த சில நாட்களில் பிரிவு வாட்ட ஒரு நெடுங்கவிதை எழுதினேன்! சிலவரிகளே நினவிருக்கிறது. தொலைந்து போன கவிதைகளில் அதுவும் ஒன்று!

    போனால் போகட்டும்.அப்பாவையே தொலைத்தாகி விட்டது.

    ReplyDelete
  16. மிக்க நன்றி பத்மநாபன்!

    ReplyDelete
  17. நன்றி ஸ்ரீராம்! இப்போது சரியாகி விட்டது .லிங்க் தருவேன்!

    ReplyDelete
  18. நன்றி சத்ரியன்!

    ReplyDelete
  19. //"சிலவரிகளே நினவிருக்கிறது. தொலைந்து போன கவிதைகளில் அதுவும் ஒன்று!

    போனால் போகட்டும்.அப்பாவையே தொலைத்தாகி விட்டது"//

    மோகன் ஜி...!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது