07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 19, 2011

உளவியல் தமிழ்.



மனம் இருப்பதாலே நாமெல்லாம் மனிதரானோம். ஆனால் இன்று நமக்கெல்லாம் மனம் இருக்கிறதா? என்று சிந்திக்கவேண்டிய சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனத்தின் இடத்தைப் பணம் பற்றிக் கொண்டதாலேயே இன்று இத்தகைய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் நம் மனதை உற்றுநோக்கவும் நம்மை நாமே மதிப்பீடு செய்துகொள்வதற்கும் உளவியல் கூறுகள் குறித்த அறிவு நமக்கெல்லாம் அடிப்படையாகிறது.

குழந்தை உளவியல், இளைஞர் உளவியல், வயதானோர் உளவியல், பெண்கள் உளவியல், ஆண்கள் உளவியல், விளம்பர உளவியல், அரசியல் உளவியல், சமய உளவியல், சோதிட உளவியல், கல்வி உளவியல், என எங்கு பார்த்தாலும் உளவியல்சார்ந்த கூறுகளைக் காணமுடிகிறது மொத்தத்தில் மனிதர்களை இருபெரும் வகையில் பிரிக்கலாம். அவை,

1. ஏமாற்றுவோர்
2. ஏமாறுவோர் என்பதாகும்.

உளவியல் கூறுகளை நன்கறிந்தோரில் சிலர் பலரை ஏமாற்றுகிறார்கள்,
தெரியாதவர்கள் ஏமாறுகிறார்கள் என்பது என் கருத்து.
என் கண்ணில் பட்ட சில வலைப்பதிவுகளில் உளவியல் சார்ந்த கூறுகள் நன்கு ஆராயப்பட்டுள்ளன. அவர்களுடைய வலைப்பக்கங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

19. உளவியல் என்னும் வலைப்பதிவை நான் நீண்ட காலமாகவே பார்வையிட்டு வருகிறேன். உளவியல் குறித்த பல்வேறு சுவையான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. தங்கள் பார்வைக்காக இதோ எனக்குப்பிடித்த ஒரு பதிவு –“ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?

20. நண்பர் செல்வராஜால் இற்றைப்படுத்தப்படும் வலைப்பதிவு “உளவியல்“ என்பதாகும் இதிலும் உளவியல் சார்ந்த பல்வேறு செய்திகளைக் காணமுடிகிறது. சான்றாக – “குழந்தையைக் கண்டிப்பது எவ்வாறு?“

21.தமிழ் உதயம் வலைப்பதிவு தங்களில் பலரால் நன்கு அறியப்பட்டிருக்கும். இவருடைய “கோபத்தின் விளைவு” என்னும் இடுகை இன்றைய சமூக நிலையை உளவியல் நோக்கில் அழகாக எடுத்தியம்புவதாக உள்ளது

22. முனைவர்.மு.பழனியப்பன் அவர்கள் புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேருரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது “பெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளி வீதியார் பாடல்கள்” என்னும் கட்டுரை இலக்கியங்களி்ல் உளவியல் கூறுகளை அழகாகப் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

23. என்.கணேசன் அவர்கள் பழகுதலுக்கு இனிய நண்பராவார். ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பின் போது இவருடன் கலந்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.இவர் ஆனந்தவிகடன் உள்ளிட்ட பல இதழ்களில் உளவியல் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். இவர் மனித ஆழ்மனதின் ஆற்றலை அழகுத் தமிழில் பாங்குற எடுத்துரைத்து வருகிறார். சான்றாக – ஆழ்மனதின் அற்புத சக்திகள்“

24.விதை2விருட்சம் என்னும் வலைப்பக்கதில் பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் என்னும் இடுகை பல ஆண்பெண் தொடர்பான பல உளவியல் கூறுகளை அலசி ஆய்வதாக விளங்குகிறது.

25.உளவியல் கூறுகளுள் குறிப்பிடத்தக்ககது தன்னப்பிக்கையாகும் இதனை உணர்ந்த நண்பர் கமலக்கண்ணன் தன் வலைப்பதிவுக்கு “தன்னம்பிக்கை“ என்றே பெயரிட்டுள்ளார். இவரது உளவியல் சார்ந்த பதிவுகளுள் இந்த “நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள்” பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவாகும்.

26.நண்பர் உளறுவாயன் அவர்களின் தன்னம்பிக்கைப் பெண்களி்ன் தலைமை இருக்கைகள் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படிக்கவேண்டியதாக உள்ளது.

அன்பு நண்பர்களே மேற்கண்ட வலைப்பக்கங்கள் என்னைக் கவர்ந்தவையாகும் உங்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பாருங்களேன்.

34 comments:

  1. அனைத்துமே என்னையும் கவர்ந்து படிக்கவைத்த இடுகைகள். பாராட்டுக்கள். பின்னூட்டமிடத் தகுதி இருக்கிறதோ இல்லையோ என்று எண்ணி படித்துவிட்டுமட்டும் வந்த தளங்கள். அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அனைத்துமே கருத்தான அ(ரி)றிமுகங்கள், அன்பரே
    நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  4. விஷயங்கள் அனைத்தும் நல்லா இருக்குது மாப்ள நன்றி!

    ReplyDelete
  5. அருமையான அறிமுகங்கள்..

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  7. பயனுள்ள பக்கங்கள்..

    பகிர்வுக்கு நன்றி..


    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  8. பயனுள்ள பக்கங்கள் குணா.

    ReplyDelete
  9. நன்றி முனைவர் இரா.குணசீலன் என்னை அறிமுகம் செய்தமைக்கு... அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நல்ல அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. தொடர் வருகைக்கு நன்றி விக்கி.

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அமைதிச்சாரல்

    ReplyDelete
  13. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

    ReplyDelete
  14. இலக்கியம், உளவியல் என்று பதிவர்களை சிறப்பான தலைப்புகளில் அறிமுகப்படுத்துவது அருமையாக உள்ளது. பதிவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  15. அருமையான அறிமுகங்கள்... தொடர்ந்து அசத்துங்கள்

    ReplyDelete
  16. அருமையான பகிர்வுக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  17. உளவியல் தமிழ் அவசியம் அறிய வேண்டிய பகிர்வுகள் அனைத்தும்..ஆசிரியரின் தேர்வாயிற்றே கணிப்பு ஒரு போதும் தவறாது என்பதற்கு சான்றாய் அறிமுகங்கள்..அனைத்து அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..உங்களுக்கும் குணா..

    ReplyDelete
  18. அனைவுர்க்கும் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  19. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராகவாச்சாரி.

    ReplyDelete
  20. தங்களின் தேடலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணையத்தமிழுக்குத் தாங்கள் ஆற்றி வரும் பணி வளரவேண்டும்.
    மு. பழனியப்பன். விரிவுரையாளர். மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

    ReplyDelete
  21. நண்பர்களே! நான் ஒரு உளவியல் ஆலோசகன். நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து பதிவுகளையும் படித்தேன். அருமை! உளவியல் தமிழுக்கு நானும் என்னால் முடிந்த அளவில் சில விசயங்களை செய்து வருகிறேன். இது என்னுடைய வலைப்பூ: http://thamizhvalaipoo.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

    இது என்னுடைய இணையதளம்: http://counselingchennai.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    நன்றி! :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது