07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 30, 2014

செவ்வாயில் மங்கள்யானை நிலை நிறுத்திய தமிழர்களுக்கு வாழ்த்துகளுடன், இன்றைய வலைச்சரத்தின் கவி மாலையை சமர்ப்பிக்கின்றேன்.

                                          


              கவிப்பூக்களால் வலைச்சரம் தொடுக்க முடிவெடுத்து...இருந்த காலைப்பொழுது...

எந்த பூ சிறந்த பூ ...?எதை கோர்க்க, எதைவிட? என விழித்து குழம்பியக்கணத்தில்..

.என் நட்புகளின் பூக்களையே உங்களின் மனம் குளிர சமர்ப்பிக்கின்றேன்....

ஏற்கனவே தொடுத்த பூவாயிருப்பின் அதன் நறுமணமே மேலும் வீசக்காரணமாய்.....

                             கவிதை வானில் வண்ணக்கோலங்கள் பல....கவிஞர்களின் பார்வையில் சின்ன துகள்கள் கூட பேரண்டங்களாக விரிவடையும்...கவிதைகளில் கற்கண்டாய் இனிக்கும் சில ...சமூக அவலங்களைச் சாடும் பல...அழகியல் கவிதைகளைவிட சமூக அக்கறை உள்ள கவிதைகளே வாசகர்களின் மனதை ஊடுறுவிச் செல்கின்றன...

என்னுள் பதிந்த கவிதைகள் உங்களுக்குள்ளும் பதிய காத்திருக்கின்றன...பாரதியில் துவங்கி இக்கால புதுக்கவிதைகள் வரை எந்த வடிவில் இருந்தாலும் அதன் கருவிற்காய் போற்றப்படுகின்றன...

என்னைக்கவர்ந்த கவிப்பூக்கள் உங்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை...

கவிச்சரம் உங்களுக்காக


நடைநமது




*இலக்கணத்தில் ஆழ்ந்த விருப்பமுடையவர் ....நேர்மையாய் வாழ்ந்து          காட்டும் எளிமையானவர்...புதுக்கோட்டையில் வலைப்பூ பயிற்சி அளித்து    தமிழ் கணினியில்  வளரக்காரணமாயிருக்கும் ,எங்களின் முதன்மைக்கல்வி  அலுவலர் முனைவர் அருள்முருகன் அய்யாவின் மனித நேயமிக்க வரிகளாய்
                                                               


                                                             மகிழ்நிறை  

*வலைப்பதிவர்கள் எல்லோரும் அறிந்த என் இனிய சகோதரி மைதிலி...நகைச்சுவையால் அனைவர் மனதையும் கட்டிப்போடும் இவருக்குள் இருந்த சமூக அக்கறை ,எதையும் நேர்மறைச்சிந்தனைகளால் எடுத்தாளலாம் என்பதற்கு உதாரணமாய்

                                                  

                                                               தேன்மதுரத்தமிழ்


*வலைப்பூ அளித்த நட்பில் இனியவளாய்.... பெயரை கேட்கும் போதே இனிமையை உணரச் செய்யும் பொறியிலாளர். கிரேஸ் ...தமிழ் மீது தீராக்காதலுடன் இலக்கியங்களை ஆய்பவர்...ஐங்குறு நூற்று பாடல்கள் இவரிடம் எளிமையாய்....தவழ்கிறது.வேம்பு எல்லோருக்கும் கசக்கும் ஆனால்  சங்க இலக்கியத்தில் வேம்பின் பூவிற்கும்,தலைவியின் அழகிற்கும் என்ன தொடர்பாம்.....





                                                                         தளிர் 


*ஒரு பருக்கை சோற்றுக்கு என்ன மதிப்பிருக்கும்...ஆசிரியர் தளிர் தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஹைக்கூக்கள்....சொல்லும் மதிப்பு அளவிட முடியாதது...

                                                                ாசிபன்னீர்செல்வம்




*காட்சிகளை கண்முன் நிலைநிறுத்தும் கவிதை இது...சிறந்த விமர்சகர் ...குறைவாக பேசி நிறைவாக சிந்திப்பவர் ராசி.பன்னீர்செல்வம் அவர்களின் பார்வையில் ஒரு கூடு....

                                              



                                                          ஊமைக்கனவுகள்


*கணிதம் பற்றி படித்ததும் இவரின் நினைவில் காளமேகப்புலவர் வந்து கவிதை படிக்கின்றார்...ஒப்பீடாய் பட்டினத்தாரும்....இலக்கணத்தில் புலியாய்....


                                                            எண்ணத்தூரிகை


*சாரல் இவரின் உயிர் தழுவ எண்ணங்களால் வண்ணமாகின்றது

                                         


                                                   இளையநிலா

*கவிஞர் இளமதியின் படைப்புகள் அனைத்தும் வெண்பாக்களால் பூத்திருக்கும்....கலைகள் மிளிரும் இவரின் படைப்புகள் கைவினை சித்திரங்களால் கண்களையும்,மனதையும் நிறைக்கும்...சுமைகளையே சுகமாக எண்ணுபவரின் கவிதையாய் சந்தேகம் வேண்டாம் தோழி...கவிஞரே நீரும்.


  நோக்கும் இடமெல்லாம் நாமன்றி


*எழுத்துகள் மட்டுமல்ல இவரின் பேச்சும் நம்மை கவர்ந்திழுக்கும் தன்மையாய்....கவிதைகளை  காட்சியாய் கண்முன்னே நிறுத்தும் வல்லமை உடையவராய்..குழந்தைகள் நேசிக்கும் ஆசிரியராய் விளங்கும் சமூகப்போராளி...

                                                சுவாதியும் கவிதையும்

*நகைசுவையும்,மரபுக்கவிதைகளும் இவரிடம் சரளமாக..ஓடிவரும்....என் தோழியின் மழைப்பார்வை இது

                                         



                                                    வேர்களைத் தேடி


*இவரின் மாணவர்களை இதை விட வேறு எப்படி ஊக்கப்படுத்த முடியும்.....


                             பெண் என்னும் புதுமை


*இவரின் வார்த்தைகளைக் களவாடியவன் யாரோ..


                                                           காவியாகவி


*காட்சிகள் பிழையானால் கண்கள்.....குளமாகும் எனக்கூறும் பதிவாய்



கவிமாலை தொடுத்துள்ளேன்....மனம் தொட்டதாவென அறியவே நாடுகின்றேன்.

மீண்டும் நாளை.....
மேலும் வாசிக்க...

Monday, September 29, 2014

வணங்கி வரவேற்கின்றாள் அனைவரையும் வேலுநாச்சியார்..தென்றலின் இனிமையுடன்....இயல்பூவாய்



                                                           வலைப்பூக்கள் கோர்க்க
                                                           வளமான மனதுடன்
                                                          அன்புடனே அழைத்திட்ட
                                                          அன்பின் சீனா அய்யா
                                                           தமிழ்வாசி பிரகாஷ்
                                                          ஆகியோருக்கும், எனது
                                                         வலையில் வீழுமனைவருக்கும்
                                                         மகிழ்வான வணக்கம்

வாங்க வாங்க....!

கரம் சேர்த்து வலைச்சரம் கோர்க்க அழைக்கின்றேன்.முதல் முறை என்பதால் உள்ளூறும் நடுக்கத்தை மறைத்து தென்றலென வீசுகின்றேன்..அனைவரின் மனதையும் இதமானவலைப்பூக்களின் நறுமணங்களால்  நிறைக்கவே விரும்புகின்றேன்...

எனது வலைத்தளம் பற்றி

 வலைத்தளம் பற்றி நான் சிறிதே அறிந்த நிலையில் பூத்த பூ இது....www.velunatchiyar.blogspot.com-thendral  

தென் தமிழ்நாட்டில் தோன்றிய புயல்,சிவகங்கைச்சீமையின் ராணி வீரமங்கை வேலுநாச்சியார் சுதந்திரத்திற்காக போராடிய பெருமையை அறிந்த கணத்தில் அவருக்கு பெருமை சேர்க்க ஏதேனும் செய்யனுமே என்ற எண்ணத்தில் அவர் பெயரையே எனது வலைப்பூவிற்கு சூடி மகிழ்ந்தேன்.

                                                  தமிழ் தானும் வளர்ந்து மற்றவர்களையும் முன்னேற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் அருள்முருகன் மற்றும் அய்யா முத்துநிலவன் ஆகியோரின் தொலைநோக்கு சிந்தனையால் தமிழை இணையத்தில் வளர்க்கும் நோக்கத்தில் எங்களுக்கு அளிக்கப்பட்ட கணினிப்பயிற்சியே எனதுவலைப்பூ வளர  நீரூற்றியது.....

திண்டுக்கல் தனபாலன் சாரும் கரந்தை ஜெயக்குமார் சகோதரும் அளித்த பயிற்சி இன்னும் நீங்காமல் மனதில்...தொடர்ந்து அவர்கள் அளிக்கும் ஊக்கமே என் வலைப்பூ சோலையாக மாறி , வலைச்சரப்பணிக்கு என்னை அழைக்க காரணமானது.

இதுவரை 300பதிவுகள் பதிந்துள்ளீர்கள் வாழ்த்துகள் என சீனா அய்யா கூறியபின் தான் அப்படியான்னு கவனித்தேன்....மலைப்பாகத்தான் இருந்தது முதலில்...இந்த பதிவுக்காக அனைத்துப் பதிவுகளையும் மீண்டும் பார்க்கும் போது நினைவலைகள் வலைப்பூவின் வாசத்தை உணர்த்தியது... 

என் எழுத்துகள் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு நன்மையை விளைவிக்க கூடியதாக,சமூக அக்கறை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற  எண்ண அலைகளில் தோன்றியது கவிதையாக ,கட்டுரையாக ,அனுபவமாக என பல்வேறு தலைப்புகளில் தென்றல் மணம் பரப்புகின்றது....பள்ளி ஆசிரியராக பணி புரிவதால் என் உலகம் குழந்தைகளைச் சுற்றியே உள்ளது.எனது படைப்புகளில் அவர்களே பெரும்பாலும் ஆக்கிரமிக்கின்றனர்...

இனி தென்றலின் வாசம் நுகர்வோம்


*கவிதைகளே என் உணர்வுகளுக்கு வடிகாலாய் அமைகின்றது.மனதில் உணர்ந்தவைகளே கவிதைகளாக பூத்துள்ளன.  மனவலியில் பிறந்த கவிதை இது...என்னை யார் என எல்லோருக்கும் அடையாளப்படுத்திய கவிதை.... எல்லோராலும் மிகவும் பார்க்கப்பட்ட ,பேசப்பட்ட கவிதை....இன்றைய பெண்களின் நிலையாக மீளா வலியை உணர்த்தும் கவிதை..

* எல்லோரையும் ஊக்கப்படுத்தி வழிநடத்தும் கவிஞர் ,எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர்,5.10.14இல் மூன்று புத்தகங்களை வெளியிடுபவரும் ,அன்பு சகோதரருமான முத்து நிலவன்அய்யாவின் அணிந்துரையாய் எனது”விழிதூவிய நூல்”கவிதை நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் கட்டுரை இது

*என்னை பார்க்கும் போதெல்லாம் அக்கா இந்த கவிதைய மறக்கவே முடியலக்கா என்று கூறும் அன்புசகோதரி.இவரைப்போல நகைச்சுவையாக எழுதி மனம் கவர வைக்க முடியுமா...என என்னை கவலைப்பட வைத்த திறமைச்சாலி.இவரிடம் கற்றுக்கொண்டே வலைச்சரத்தில் பயணிக்கின்றேன். ..சமூக நோக்குள்ள ஆசிரியர் ...மாணவர்களுக்கு கிடைப்பதரிது இக்காலத்தில் ஆனால் இவரும் இவரது துணைவரும் சிறந்த ஆசிரியர்களே ....யாரன்று ஊகிக்க முடிந்ததா...நீங்கள் நினைப்பது சரிதான் சகோதரி மைதிலி&சகோதரர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் தான் இந்த உற்சாகத்திற்கு சொந்தக்காரர்கள்...ஆஹா சகோதரிய  பற்றிஎழுதும் போதே வார்த்தைகள் வரிசைக்கட்டி நிற்கின்றதே...நன்றி மைதிலி...

*எங்க புதுக்கோட்டை தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒன்று...தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகம்  உள்ளது.மேலும் புதுக்கோட்டை கி.மு.5000 நூற்றாண்டுக்கு முந்தைய காலத் தொன்மை வாய்ந்தது என எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் உலகறியச்செய்யப்பட்டது..பள்ளிக்குழந்தைகளுடன் ஜாலியா ஒருநாள்....பாக்குறீங்களா நீங்களும்...


*நாட்டிற்காய் உழைப்போர் அருகி வரும் நிலையில்...நாட்டைக்காக்க தன்னை இழந்த வீரன் மேஜர் முகுந்த் வரதராஜனின் மகள் இவள் ...


*ஒரே சமூகச்சிந்தனையாவே போகுதேன்னு ஒரு மலைப்பயணத்திற்கு உங்களை அழைத்துசெல்ல முடிவெடுத்தேன் போலாமா

*ஒரு தேவதை போல என் வகுப்பில் இருந்தாள்.அவளைப்பற்றி இப்படி ஒரு கதை எழுத நேரிடும் என நினைக்கவேயில்லை.... படிக்கிறீங்களா....அனீஸ்

*என் பாட்டியிடம் பேசும் போதெல்லாம் என் தாத்தாவைப் பற்றி அதிகம் கேட்பதுண்டு ...எத்தனை முறைக் கேட்டாலும் சொல்வதற்கு அலுக்காத நாங்களும் கேட்பதற்கு அலுக்காத ஒன்று...சுதந்திரம் பற்றி பேசும் போதெல்லாம் உடல் சிலிர்க்கும்....என் சமூக அக்கறையின் வித்து இங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும் ....

*அன்பை நோக்கிய உலகம் இன்று இதை மட்டுமே நோக்குவதால் உலகே அழிவின் பாதையில்....

*இப்போது பெண்களைச் சிதைப்பதற்கு புது வழி ஒன்று கிடைத்திருக்கின்றது..நினைக்கவே அஞ்சும் செயல்களை எளிதாய் செய்துவிடுகின்றார்கள்.இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைதான்.அதன் வலி உணராதவர்கள்...உணர.

* தமிழின் பெருமையை உணர்ந்தவர்கள் இவ்விலக்கியங்களின் பெருமையையும் அறிந்திருப்பார்கள்.தமிழாசிரியர் மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்கள் படிக்க வேண்டிய நூல்களின் தொகுப்பு.வலைச்சரத்தில் வந்த பதிவு இது

*கடிதங்கள் கையெழுத்து மட்டுமல்ல முகமும் காட்டும் கண்ணாடி....மகளிடம் இருந்து கடிதத்தை எதிர்நோக்கும்  தாய் இவள்

*எத்தனையோ இயந்திரங்களை கண்டு பிடித்து விட்டோம்.செவ்வாயில் நிலை நிறுத்தி விட்டோம் மங்கள்யான்..ஆனால் இவர்கள் மாறாமல் இன்றும்

*ஒரு அம்மாவிடம் உங்களுக்கு மிகவும் சிரமமான வேலை எதுவென கேட்டால்.....கூறும் பதிலாய்

*முன்பெல்லாம் திருமண விழாக்களுக்கு செல்வதென்றாலே ஒரே ஆட்டம் தான்....எப்படா வரும்னு காத்திருந்து ஐந்து நாள் விழாக்கள் போல சுற்றங்கள் புடை சூழ நிகழ்ந்த விழாக்கள் சிறுவயது  நினைவலைகளில்...பாவம் இந்தப்பாட்டி

*அட..வெட்கம் பெண்களுக்கு மட்டும் சொந்தமா


*ஆஹா நிறைய பதிவுகள் நான் நான்னு எட்டிப்பாக்குதுக .என் வலையில் வீழ்ந்த உங்களுக்கு நன் முத்துக்களே கொடுத்துள்ளேன் என நம்புகின்றேன்....

             அப்பாடா ஒரு வழியா முதல் நாள் முடிஞ்சிடுச்சு....ம்னு ஒத்துக்கொண்ட நாள் முதல் நல்லா செய்யனுமேன்னு ஒரே கவலை...முடிச்சிட்டோம்ல..இனி உங்க கவல படிக்கிறதெல்லாம்...இன்னும் ஒரு வாரத்துக்கு விடமாட்டோம்ல...நாளைக்கு பாக்கலாமா...!


 




மேலும் வாசிக்க...

Sunday, September 28, 2014

வரும் வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் மு.கீதா அவர்கள்!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே,
இந்த வாரத்து வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த Thillaiakathu Chronicles வலைப்பூ பதிவர் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா அவர்களின் வலைச்சர பதிவில் காட்டிய ஆர்வமும், பங்களிப்பும் மிகுந்த பாராட்டுக்குரியது. 

இவர் மொத்தம் ஏழு பதிவுகள் எழுதி, 1350 பக்கப்பார்வைகளுக்கு மேல் பெற்று சுமார் 300 மறுமொழிகள் பெற்று, நம்மிடமிருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறார். இவரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.


நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க தென்றல் வலைப்பூ http://www.velunatchiyar.blospot.com பதிவர் மு.கீதா அவர்களை அழைக்கின்றோம். இவரது வலைப்பூவில் மொத்தமாக 300 படைப்புகளுக்கு மேல் கவிதைகள் ,கட்டுரைகள்,அனுபவங்கள்,சமுகம்,போன்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.

எம்.ஏ[தமிழ்],எம்.ஏ[பொருளியல்],எம்ஃபில்,எம்.எட். படித்த இவரைப் பற்றி சொல்வதென்றால், அரசுப்பள்ளியில் ஆசிரியராக 26 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊர் அரியலூர். தற்போது வசிப்பது: புதுக்கோட்டை... இவரது கவிதை ,கட்டுரைகள்,கதைகள் மாத ,வார இதழ்களில் வெளி வந்துள்ளன. இவர் எழுதியுள்ள வேலுநாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள் என்ற ஆய்வு நூல்,விழிதூவிய விதைகள் என்ற கவிதை நூல் ஆகிய இரு நூல்கள் வெளிவந்துள்ளன. 


கின்னஸ் ரெக்கார்டுக்காக 77மணிநேரம் தொடர்ச்சியாக கவிஞர்கள் இணைந்து கவிதை படித்த நிகழ்வில், சிறப்பாக கவிதை பாடியதற்காக “புரட்சித்தென்றல்”விருது சென்னை தென்றல் சமூக நல அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது .

பைந்தமிழ் அறக்கட்டளையின் நிர்வாகியாக உள்ள இவர், பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார். குழந்தைகளையும், புத்தகங்களையும் நேசிக்கும் இவர் தேவதா தமிழ் என்ற பெயரில் முகநூலில் படைப்புகள் எழுதி வருகிறார்.

மு.கீதா அவர்களை வருக.. வருக... என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நல்வாழ்த்துக்கள் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா..
நல்வாழ்த்துக்கள் மு.கீதா

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...

மேலும் வாசிக்க...

ஞாயிறு: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் 7 ஆம் நாள்- பொழுது போக்கு-திரைப்படம், சித்திரக்கதைகள்


       அன்பர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் அன்பான, இனிய காலை வணக்கம். 

       இன்று ஞாயிறு!  வாரத்தின் இறுதி நாள்.  பெரும்பான்மையோருக்கு இந்தநாள் விடுமுறை நாள். வார நாட்கள் முழுவதும் வேலையில் மூழ்கி அயராது உழைத்து விட்டு, ஞாயிறு எப்பொழுது வரும் என்று எதிர் நோக்கி இருக்கும் நாள்! இதோ வந்து விட்டது! பெண்களுக்கு, அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஞாயிறும் எல்லா நாட்களைப் போலத்தான். என்ன கொஞ்சம் தாமதமாக எழுதிருக்கலாம்! ஆனால் வேலை என்னவோ அதேதான்! அவற்றுடன், சிறு குழந்தைகள் என்றால் மேய்த்துக் கட்ட வேண்டும்! அவர்கள் கோரிக்கை வைக்கும் உணவுகளைச் சமைக்க வேண்டும்! அவர்களது வீட்டுப் பாடங்களை எழுத வைக்க வேண்டும்!  படிக்க வைக்க வேண்டும்.  இடையில் டி.வி.!.... ரிலாக்ஸ் ப்ளீஸ்!  ரிலாக்ஸ் ப்ளீஸ்!  ஆண்களுக்கும் இந்த ஒரு நாள்தானே விடுமுறை! 

ஸோ, இன்னிக்கு எல்லாரும் குடும்பத்தோட ஜாலியா நம்ம சினிமா பதிவர்கள் எழுதியிருக்கற விமர்சனங்களப் படிச்சுட்டு எந்தப் படம் நல்லாருக்குனு சொல்லிருக்காங்கனு பார்த்துட்டு, போய் எஞ்சாய் பண்ணுங்கப்பா.  அப்படியே, மதியம் கொஞ்ச நேரம் வாண்டுகளுக்கு, காமிக்ஸ் தளங்கள காமிச்சு வாசிக்கச் சொல்லலாம்.  அவங்களுக்கும் வாசிக்கற பழக்கம் வரும்!  நீங்களும் ரிலாக்ஸ் பண்ணலாமே! நல்ல நல்ல பாட்டெலாம் இருக்குதுங்க! கேளுங்க! எல்லாம் எங்க அனுபவங்கள் தான். இப்ப எங்க வாண்டுங்க எல்லாம் பெரிசாகிடுச்சு!  வாங்கப்பா தளங்களுக்கு!  அனைத்து தளங்களுமே அருமை!


ஆனந்த ராஜா விஜயராகவன் எனும் கோவை ஆவி

பயணம் வலைத்தளம். ஆவியை அறியாதவர் யாரும் இந்த வலை உலகில் இருக்க முடியாது! சினிமாவை நேசிப்பவர்!  அருமையாக திரைவிமர்சனம் எழுதுபவர் ஆவி டாக்கீஸ் என்ற தலைப்பில்! பிற ஏரியாக்களிலும் + தனது சாப்பாடு அனுபவங்களையும் எழுதுபவர்! தற்போது எடுத்திருக்கும் அவதாரம் ஹீரோ அவதாரம்!  நண்பர் அரசனும் ஹீரோ ஆகின்றார்!!!.இதைப் பற்றி பலரும் முகநூல் வழி அறிந்திருப்பீர்கள்!  விரிவாக இன்னும் சில நாட்களில் முழுவதும் அறிய வருவீர்கள்!!


! சிவகுமார் !

மெட்ராஸ்பவன் வலைத்தளம்.  சினிமாக்களை அருமையாக விமர்சிப்பவர்.  இதோ சிகரம் தொடு படத்தின் விமர்சனச் சுட்டி

கருந்தேள்

திரைக்கதை எழுதுவது எப்படி என்று இந்தச் சுட்டியில் காணலாம்.  இது தவிர விமர்சனங்களும் உண்டு  அருமையான வலைத்தளம்.

ஜி சுரேந்திரபாபு

sharing ideas of short films என்பது வலைத்தளம். மிக அருமையான வலைத்தளம்.  குறும்படம் எடுக்க ஆர்வமுள்ளோர் இதை வாசிக்கலாம்.  நிறைய விஷயங்கள் நிரம்பி உள்ளன.   கதைகளும், கவிதைகளும்
திரைக்கதை எழுதத் தொடங்கும் முன்னர்

செங்கோவி

இந்தத் தளத்திலும் திரைப்படங்கள் பற்றியும், அதைப் பற்றிய மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன.

திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)

குறும்படம் பற்றிய சுட்டி

சிவகுமார் T

கனவுப் பட்டறை என்னைத்தேடி அலைகிறேன்.  அருமையான தளம்

முத்து சிவா

அதிரடிப்பக்கம் வலைத்தளம்.

லிங்கு போயி வெங்கி வந்துச்சி டும் டும் டும்!!! இந்தச் சுட்டிய பாருங்க.  ரொம்பவே ரசிப்பீங்க நாங்க ரசிச்சா மாதிரி!

உலகசினிமாரசிகன்

அருமையான வலைத்தளம்

‘பொற்காலம்’ என்றழைக்கப்பட்ட ‘கற்காலம்’ ! சுட்டி

Ideas of ஹாரி வலைத்தளத்தில் நிறைய சினிமா பேசப்படுகின்றது

த சினிமா சினிமா

சினிமா - கனவுகளின் நீட்சி - கனவில் உறையும் உலகம்.  அருமையான வலைத்தளம்!

கோச்சடையான் - காந்தக்குரலோனின் கம்பீர கர்ஜனை

கனவுகளின் காதலன்

ஆஹா என்று சொல்ல வைக்கும் தளம்.  சினிமா சுட்டி

ஜெய்

பிற மொழிப்படங்கள்... தமிழில்...

சிறந்த கதைகள், கருத்துக்கள் உள்ள படங்கள், வித்தியாசமான திரைக்கதை/கரு/தொழில்நுட்பம் உள்ள படங்களைப் பற்றி விவாதிப்பதே இந்த வலைப்பதிவின் நோக்கம்.

JZ

நான் பார்த்த சினிமாப் படங்கள்...எனது பார்வையில்


ILLUMINATI

கடல்புறா பற்றிய பதிவு சுட்டி

Baby ஆனந்தன்

கிறுக்கிக் கொண்டிருப்பவன் Babyஆனந்தன் முழுக்க முழுக்க சினிமா... எப்பொழுதாவது கொஞ்சம் சுயபுராணம். அவ்வளவுதான் என்று சொல்பவர்..

பார்க்க வேண்டிய கொரிய திரைப்படங்கள் சுட்டி

Kumaran's கனவுகள் ஆயிரம்

"நான் யார்" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்

உதாரணச் சுட்டி

சி.பி.செந்தில்குமார்

அட்ரா சக்க வலைத்தளம் பல சினிமா செய்திகள் அடங்கிய வலைத்தளம் 

என்.ஹெச்.பிரசாத்

பழைய படங்களைப் பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும். சமீபத்தில் ஜிகர்தண்டா விமர்சனம்.  எம்.ஆர் ராதாவைப் பற்றிய அருமையான பதிவு இது பாருங்களேன். 
http://oorkavalan.blogspot.in/2014/08/25.html


உண்மைத் தமிழன்
சினிமா பற்றி சுட்டி

கிருஷ்ணமாச்சாரி ரங்கசுவாமி

தமிழ்தேனீ என்று அறியப்படுபவர்.  தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும், சினிமாக்களிலும் நடிப்பவர்.  சிறு கதைகல் எழுதியுள்ளார்.  தளத்தில் அவர் நடித்த குறும்படங்களின் காணொளிகள் இருக்கின்றன.

தேன்கிண்ணம்
http://thenkinnam.blogspot.in   மிக்க மிக்க நன்றி தொகுப்பிற்கு!!

தேன்கிண்ணம் வலைத்தளம் தேன்கிண்ணமேதான்.  

அருமையான பாடல்கள் தொகுப்பு வருடங்கள் வாரியாகவும், பாடகர்கள் வாரியாகவும், காணொளியுடனும், பாட்டின் வரிகளுடனும்…..அருமை அருமை!  பழையா பாடல்கள் 1950 லிருந்து இருக்கின்றன!!!  சில காணொளிகள் வேலை செய்ய வில்லை ஏன் என்று தெரியவில்லை.

இது அமுதே தமிழே அழகிய மொழியே என்ற பாடலுக்கான காணொளியும், பாடல் வரிகளும் சுட்டி.  எத்தனி முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.
http://thenkinnam.blogspot.in/2010/12/blog-post_3791.html


தென்றல் இணைய வானொலி

மெரினா அமெரிக்கத் தமிழ்ழோசை மிக நன்றாக இருக்கின்றது. கேட்டுக் கொண்டே நாம் கணினியில் வேலை செய்யலாம். அதன் சுட்டி இதோ

http://www.shyamradio.com/aindex.aspx

காமிக்ஸ் வலைத்தளங்கள்

Lucky Limat - லக்கி லிமட்

சினிமா, காமிக்ஸ் என்று களை கட்டுகிறது இந்த வலைத்தளம்

காமிக்ஸ் சுட்டி  குழந்தைகளுக்கு நல்ல தளம்

சினிமா சுட்டி

PHANTOM THE LEGEND - SoundarSS

அருமையான வலைத்தளம்.  ஒரு சுட்டி இதோ

புலா சுலாகி

ஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில் உதாரணச் சுட்டி

வாண்டுமாமா அவர்களின் பின் நவீனத்துவ சிறுகதை - நூறு கண் ராட்சதன்

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்

வாண்டு மாமாவின் மரகதச் சிலை வாசிக்க சுட்டி. 

தன்னிகரில்லாத குற்ற சக்கரவர்த்தி

மீண்டும் ஸ்பைடர் வலைத்தளத்தின் பெயர்.  பேட்மேன் தோன்றும் மர்மக்கொள்ளையன் சுட்டி இதோ

ப்ரூனோ ப்ரேசில்

முதலைப் பட்டாளம் வலைத்தளம்

வேதாள மாயாத்மா  சுட்டி
http://mudhalaipattalam.blogspot.in/2014/09/blog-post.html

குழந்தைகளுக்கான புதிர்/விடுகதைகள் – குழந்தைகளின் சிந்திக்கும் திறமையையும், அறிவையும் தூண்டும் ஒரு விளையாட்டு

கண்மணி

அரும்புகள்2 வலைத்தளம். சுட்டி இதோ. தளத்தில் நிறைய உள்ளன

Rammalar’s Weblog

விடுகதைக்கானச் சுட்டி இதோ
https://rammalar.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

                இன்றோடு, வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் இறுதி நாள்! மீண்டும் நாம் நம் வலைப் பகுதியில் சந்திக்கத்தான் போகின்றோம்! என்றாலும், வலைச்சரத்தில் அன்பர்கள் எல்லோருக்கும் விடை பகறும் நாள்! எப்படியோ, நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும், அன்பின் சீனா ஐயா அவர்களும் அழைப்பு விடுத்த போது, எங்களுக்குச் சிறிது தயக்கம் இருந்தாலும், இந்த ஒரு வார வலைச்சரப் பணி எங்களுக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் நிறைய அன்பர்களையும் பெற்றுத் தந்திருக்கின்றது என்றால் மிகையாகாது! எங்களைப் பட்டை தீட்டிய பட்டறிவு எனலாம்! ஐயாவின் ஆசியுடனும், உங்கள் எல்லோரது ஆதரவுடனும் எங்கள் பணியை முடித்துள்ளோம்!  ஐயா அவர்கள் கொடுத்த பொறுப்பை நாங்கள் அவருக்கும், அவரது கொற்றமாகிய வலைச்சரத்திற்கும் எந்தக் களங்கமும் வராமல் சரியாகச் செய்திருக்கின்றோமா என்பதை ஐயா அவர்கள்தான் சொல்ல வேண்டும்!
     அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!  தாங்கள் எங்களுக்குக் கொடுத்த இந்த வாய்ப்பு எங்களுக்கு ஒரு சிறந்த பட்டறிவுப் பாடம்! ஒரு இக்கட்டானச் சூழ் நிலையிலும், சமாளித்து, பொறுப்பை நிறைவேற்றுவது எப்படி என்ற நல்ல பாடம் கற்றோம்! தங்களுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் நன்றி நவின்றாலும் தீராது ஐயா! மிக்க மிக்க நன்றி!  முதலில் அழைப்பு விடுத்த நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் எங்கள் நன்றி!

   இத்தனை நாள் எங்களுக்கு பின்னூட்டம் அளித்து எங்களை ஆதரித்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்து எங்களை ஊக்கப்படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!

      இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் நாள் எல்லாமே தங்கள் எல்லோருக்கும் இனிய நாளாக அமைந்திட எங்கள் வாழ்த்துக்கள்! எல்லோருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி!  வணக்கம்!

விடை நல்கும் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் - துளசிதரன் தில்லைஅகத்து, கீதா


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது