உன்னையறிந்தால்..
➦➠ by:
முனைவர்.இரா.குணசீலன்.
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.. என்பார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.. என்பார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
தன்னையுணர்தல்
என்பது எல்லோராலும் இயலாத ஒன்று.
நல்ல நூல்,
நல்ல குரு,
நல்ல நண்பன்,
நல்ல வழிகாட்டி,
இந்த வரிசையில்
நல்ல சிந்தனையும் நம்மை நமக்கு உணர்த்தும்.
தம் எழுத்துக்களின்
வழியாக நம்மை நமக்கு உணர்த்தி நம்மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்துச் செல்லும் பதிவர்களை
இன்று காணவிருக்கிறோம்..
51. அன்பு நண்பர்
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் பள்ளிக்குழந்தைகளின் படைப்பாக்கத் திறனை முயற்சி+ பயிற்சி=வெற்றி என்று பதிவாக்கம் செய்துள்ளார். ஒவ்வொரு படைப்பும் சிந்திக்கவைப்பதாக உள்ளது.
52. அ.முத்துக்குமார்
அவர்களின் நம் திறமையை வளர்ப்பது எப்படி? என்ற பதிவு வெற்றிக்கான வழிகாட்டும் நெறிமுறைகளாக
அமைகிறது.
53. நாவலன் தீவு
என்ற வலைப்பதிவில் இடம்பெற்ற மனதில் உறுதிவேண்டும் என்ற பதிவு கதைவழியே மனதில் உறுதியை
ஏற்படுத்துகிறது.
54. நண்பர் செந்தில்குமார்
அவர்களின் சுயமுன்னேற்றம் என்ற வலைப்பதிவில் இடம்பெற்ற நம்பிக்கை மேற்கோள்கள் பயனுள்ள
தொகுப்பாக உள்ளன.
55. மழைக்காகிதம்
என்ற வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள உன்னால் முடியும் என்ற பதிவு நம்மாலும் முடியும் என
நம்மை நம்பவைக்கிறது.
56. நண்பர் சி.கிருஷ்ணன்
அவர்கள் தம் வலைப்பதிவில் உங்கள் குறிக்கோளில் வெற்றியடைவது எப்படி என்று தியானம் வழியே
தீர்வுசொல்கிறார்.
57. வாழ்க்கை விளக்கம் என்ற வலைப்பதிவில் இடம்பெற்ற
தன்னையறிதல் என்ற பதிவானது உணர்வுகளின் வழியே எவ்வாறு தன்னையறிவது என்பதை உணர்த்திச்செல்கிறது.
58. நண்பர் செந்தில்குமார்
அவர்களின் தன்னையறிதல் என்ற பதிவானது மனதின் மகத்துவத்தை அழகுபட எடுத்துரைக்கிறது.
59. வாழ்வில்
அமைதி கிடைக்க தன்னையறிதலே முதல் படி என்பதைக் கலையரசியின் கவிதை பகர்கிறது.
60. மனம் என்ற
வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற தொடர் நம்மை நமக்குள்
தேடவைப்பதாக அமைகிறது.
|
|
மிகவும் நன்றி முனைவரே...
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மதுரையில் சந்திப்போம்....
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteஅருமையான அறிமுகங்கள்
ReplyDelete.பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.!
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் இராஜராஜேஸ்வரி
Deleteகலை அரசி அவர்களின்
ReplyDeleteவலைப்பக்கம்
கால் எடுத்து வைத்தேன்.
வாயிலில் நிற்கிறார்
அணைப்பட்டி ஆஞ்சநேயர்.
பாடுகிறார் கலை அரசி அவர்கள்.
"மகாலிங்க மலையோனே!
மக்கள் குறைநீ தீர்ப்பாய்
முவ்வாறு சேர்கின்ற இடமல்லவா!
முக்கூடலில் முத்தான உள்பாதம்
பற்றுகின்ற பக்தர்ல்லவா!
நாவல்பழ தல விருட்ச நாயகனே!
எங்கள் நம்பிக்கை வீண்போகா
அருள் செய்வாய்."
என்ன ஒரு பிரார்த்தனை !
அனுமன் அருள் மழை பொழிவான்.
நிச்சயம்.
கலையரசிக்கு எமது வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
தங்கள் தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் வாழ்த்துக்கள் தாத்தா.
Deleteமனம் என்னும் பதிவு சொல்கிறது:
ReplyDelete"நாமெல்லாம் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர்கள்தான்.மண் சூடே சுகம் என்று மண்ணீலேயே தங்கி விட்டதால் விண்ணின் முகவரி மறந்து போயிற்று.இல்லையெனில் நாமும் "மண்ணோடு விண்காட்டி" என ஏங்கத்துவங்கியிருப்போம். மறந்ததை நினைவுபடுத்தவே ஆலயங்களில் ஏற்றப்படும் கற்பூரக்கட்டிகள் சோதியாய் உயர்த்தும் தம் ஒற்றை சுட்டு விரலால் "என்னை உருக்கி நான் உயரும் திசை கண்டு தெளிந்து உன்னையும் உயர்த்திக்கொள் "- என்கிறதோ!!"
என்ன ஒரு தெளிவு !!
இவரது பெயர் குறிப்பிடப்படவில்லையே !!
எனது ஆசிகளைச் செல்லுங்கள்.
சுப்பு தாத்தா.
தங்கள் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா. அவரது வலையில் அவர்தம் பெயரைக் குறிப்பிடவில்லை ஐயா.
Deleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்ந்ததற்கு நன்றி முனைவரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் கிரேஸ்
Deleteதன்னம்பிக்கை ஊட்டும் இனிய பதிவுகளின் தொகுப்பு.. மகிழ்ச்சி!..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Delete//தன்னையுணர்தல் என்பது எல்லோராலும் இயலாத ஒன்று.
ReplyDeleteநல்ல நூல், நல்ல குரு, நல்ல நண்பன், நல்ல வழிகாட்டி, இந்த வரிசையில் நல்ல சிந்தனையும் நம்மை நமக்கு உணர்த்தும்.//
மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சென்று வருகிறேன் பதிவின் பக்கம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைவருக்கும் வாழ்த்துக்கள் முனைவரே...
ReplyDeleteதன்னையறிந்தாலே நினைப்பது நடந்து விடும் என்பதாய் முடித்த விதம் சிறப்பு.
ReplyDeleteசிறப்பான வலைப்பக்கங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்வுக்கு வழிகாட்டும்
ReplyDeleteதன்னம்பிக்கை தரும் அறிமுகங்கள்
பாராட்டுகள்
இன்றைய அறிமுகத்தில் மிகவும் பயனுள்ள நல்ல தகவலைத் தரவல்ல
ReplyDeleteபுதிய தளம் ஒன்றும் அறிமுகமானது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது !
அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் !
பலர் எனக்குப் புதியவர்கள்..... அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDelete