பதிவுகல்
➦➠ by:
சுகுமார் சுவாமிநாதன்
பதிவுகள் தெரியும். அது என்ன பதிவுகல்? பதிவில் கல்லா.. என நினைக்காதீர்கள். கல் என்பதை இங்கே கற்றல் என எடுத்துக்கொள்ள வேண்டும். வலைச்சரத்தில் இன்று இணையத்தை குறித்தும், மென்பொருட்கள் குறித்தும், இவை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் நான் அறிந்த பதிவுகளை அறிமுகப்படுத்துகிறேன்.
பதிவர் வடிவேலன் அவர்களின் இந்த பதிவில் கணிணியில் நிறுவக்கூடிய இலவச மென்பொருட்கள் குறித்து அறிமுகம் தருகிறார்.. மேலும் இவரது தளம் முழுவதிலுமே இணைய தொழில்நுட்ப தகவல்கள் நிரைந்து கிடக்கின்றன.
இணையத்தில் தொழில்நுட்பத்தில் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லையா.. எப்படி நம்மை அப்டேட் செய்து கொள்வது என தெரியவில்லையா.. பதிவர் கிரி அவர்கள் கொடுக்கும் இந்த பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.
மூட்டை மூட்டையாக பயனுள்ள தொழில்நுட்ப சரக்குகள் இந்த தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. பிரித்து படித்து பயன்பெறலாம்.
பல மென்பொருட்கள் குறித்த தகவல்களையும், செய்திகளையும் அறியத்தருகிறது இந்த தள பதிவுகள்.
விக்கிபீடியா குறித்த பயனுள்ள தகவல்களை இந்த பதிவில் தருவது போல பதிவர் சூர்யகண்ணன் அவர்களின் இந்த வலைதளம் முழுவதிலுமே பயனுள்ள பதிவுகள்தான்.
நமது வலைதளத்தில் சமீபத்திய பதிவுகளுக்கான அனிமேட்டட் விட்ஜெட்டை நிறுவ சொல்லித்தரும் தமிழ் குமார் அவர்களின் இந்த பதிவை படித்து முயன்று பாருங்கள். அட்டகாசமாக இருக்கிறது.
சைபர் சிம்மன் அவர்களது இந்த வலைப்பூ தொழில்நுட்பம் சார்ந்த, இணையம் சார்ந்த பல பல பல அரிய தகவல்களை தந்து கொண்டே இருக்கும். விகடன் வரவேற்பரையிலேயே பாராட்டப்பட்ட தளம் இவருடையது.
நான் கொடுத்திருப்பது வெகு குறைவானவர்களின் அறிமுகங்களே என எனக்கு தெரியும். மேலும் தொழில்நுட்பம் சார்ந்த தளங்களை பின்னூட்டங்களில் அறிமுகப்படுத்தினால் யாவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
நாளை சந்திப்போம்
அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை
|
|
நல்ல அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteநல்ல நல்ல இடுகைகளையும், தொழில்நுட்ப பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க..நன்றிங்க சுவாமிநாதன்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteவித்தியாசமான தலைப்பு. நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான தொகுப்பு... பிளாகில் உபயோகமா பொழுது போக்க வெக்கிற சமாச்சாரங்கள். மிக்க நன்றி...:)
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..நன்றி
ReplyDeleteஎன்னுடைய தளத்தையும் குறிப்பிட்டமைக்கு நன்றி
ReplyDelete