07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 3, 2014

தெரியுமா உங்களுக்கு ?



நண்பர்களே இந்த பதிவர்களை உங்களுக்கு தெரியுமா ? இவர்கள் தங்கள் தளங்களில் பல அருமையான பதிவுகளை எழுதிவருகின்றனர் . இவர்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் , தெரியாமல் இருந்தால் இன்று முதல் இவர்களை தொடருங்கள் . ஒரு நல்ல அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் .



கில்லர்ஜி :


             பூ பறிக்க கோடரி எதற்கு என்ற சொற்பதத்துடன் தனது வலை பூவை வைத்துள்ளார் நண்பர் . இங்கு போட்டிகள் கூட நடத்தபட்டு பரிசுகள் வழங்கபடுகிறது . அனைத்துவிதமான தலைப்புகளிலும் பதிவுகள் இங்கு கொட்டி கிடக்கிறது .


இங்கே போங்க பாஸ் :

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 

 

சுட்டபழம்

=================================== 

தனிமரம் :

பெயர்தான் தனிமரம் ஆனால் இந்த மரத்தில் கிளைகள் (பதிவுகள் ) பல உள்ளது . பல அருமையான பதிவுகள் எழுதியுள்ளார் நண்பர் தனிமரம் . இவரது தாலியுடன் தவிக்கிறேன் தனிமரம் என்னும் தொடர் மிகவும் பிரபலமானது .

 இங்கே போங்க பாஸ் :

 

===================================

 அகசிவப்பு தமிழன் :

 நண்பர் இ .பு .ஞானபிரகாசம் அவர்களின் வலைபூ இது . தமிழ் மேல் காதல் கொண்ட இவர் பல இலக்கிய , சமுக கட்டுரைகள் எழுதியுள்ளார் . தமிழை நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய வலைபூ இது என சொல்கிறார் . வாருங்கள் படித்து பார்க்கலாம் .

இங்கே போங்க பாஸ் :

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்?!

 

மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!


=======================================================

ஊர் காவலன் 

நண்பர் N.H. பிரசாத் அவர்களின் வலைபூ இது . சினிமா விமர்சனம்  மற்றும் சினிமா செய்திகள் நிறைய கிடைகிறது இவர் தளத்தில் . சமிபத்தில் M.R.ராதா பற்றி இவர் எழுதிய கட்டுரை மிக அருமையாக உள்ளது . இதோ அது உங்கள் பார்வைக்கு ....

இங்கே போங்க பாஸ் :
 

எம். ஆர். ராதா - 25

  ==============================================

சுடுதண்ணி 

 

சுடுதண்ணி என்ற வித்தியாசமான பெயருடன் பதிவுலகில் கலக்கி வரும்நபர் இவர் . இணையம் வெல்வோம் என்னும் தொடரும் எழுதிவருகிறார் . இவரது ப்ரோபைல் படமே வித்தியாசமாக உள்ளது .


இங்கே போங்க பாஸ் :

இணையம் வெல்வோம் - 19

 

மாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது?


============================================= 

ஒரத்தநாடு கார்த்திக்:

நண்பர் ஒரத்தநாடு கார்த்திக்கின் வலைபூ ஒரு புத்தக பூங்கா என சொல்லலாம் . இங்கு பலவகையான புத்தகங்கள் கிடைகிறது . பல புத்தகங்கள் மின்நூலாகவும் (e-books) சில புத்தகங்கள் scan copy யாகவும் கிடைகிறது . நாம் புத்தகங்களை தேடி அலையவேண்டிய வேலையில்லை . அத்துடன் பல நாளிதழ்கள், வார, மாத இதழ்களும் இங்கு கிடைகிறது .போய் பாருங்கள் .

  இங்கே போங்க பாஸ் :

வட்டியும் முதலும்-மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்கள்.

 

மற்றவை நள்ளிரவு 1.05 க்கு - ராஜேஷ்குமார் நாவல் .   

  ====================================================

 அகாலம் :

 

எண்பதுகளில் எழுதத் தொடங்கிய சமயவேல் தனது முதல் கவிதைத் தொகுப்பான "காற்றின் பாடல்" மூலம் முக்கியமான தமிழ் கவிஞராக அறியப்பட்டார்.இவரது இரண்டாவது தொகுப்பான "அகாலம்" பலரது கவனத்தையும் பெற்று தமிழின் முக்கிய கவிதைத் தொகுப்பாக அமைந்தது. உயிர்ம்மை பதிப்பகம் இவரது "அரைக் கணத்தின் புத்தகம்" தொகுப்பை வெளியிட்டது.அண்மையில் இவரது புதிய தொகுப்பான "மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்" ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

   இங்கே போங்க பாஸ் :

தி.க.சி. என்னும் இடதுசாரி இலக்கிய விமர்சகர்.

  எனது சிறுகதைத் தொகுப்பு "இனி நான் டைகர் இல்லை" 

 ===================================

 இன்று :

இது வலைப்பூவின் பெயர் . இதை எழுதுபவர் பற்றிய விவரம் இல்லை . சினிமா, அரசியல் , விளையாட்டு என அனைத்து துறைகளைப்பற்றியும் இதில் பதிவுகள் உள்ளது . இதம் வடிவமைப்புதான் கொஞ்சம் கண்ணை வலிக்க செய்கிறது . போய் பாருங்கள் .

இங்கே போங்க பாஸ் :

பயமுறுத்தும் பதிவர்…

நிராகரிக்கப்படும் போது நீங்கள் செய்யவேண்டியது 

 

=========================================================

காரஞ்சன்(சேஷ்)

           இந்த வலைபூ கவிதைகளின் நந்தவனமாக உள்ளது . பலவகையான தலைப்புகளில் பல கவிதைகள் இங்கு உள்ளது . நியாயமாக இவரின் வலைபூ கவிதை வித்தகர்களில் அறிமுகமாகி இருக்கவேண்டும் . நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன் . ஆனாலும் இப்போ அந்த தவறை சரிசெய்துவிட்டேன் . கவிதை பிடிப்பவர்கள் , படிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய தளம் இது .

 இங்கே போங்க பாஸ் :

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் கவிதைப்போட்டிக்கான ஓவியக்கவிதை! -காரஞ்சன்(சேஷ்)

 

கயல்-விழி! -காரஞ்சன்(சேஷ்) 

 ==========================================================

 

மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

 

இவர் எங்க ஊர்காரர் . கவிதை , கட்டுரைகள் , சிறுகதைகள் என அனைத்திலும் சிறப்பாக நடைபோடும் இவரின் தளம்தான் இது . இவரது பல சிறுகதைகள் பல பரிசுகள் பெற்றுள்ளது . நீங்களும் சென்று பாருங்கள் .

இங்கே போங்க பாஸ் :

தமிழச்(சி)சு ஓவியம்!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு 

 ================================

இங்கே போங்க பாஸ் :

 இணையத்தில் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்!? 

 

===========================================================

கவிசோலை :

  நண்பர் சிவநேசன் அவர்களின் வலைபூ இது . கவிதை , சமுக கட்டுரை என அனைத்தும் உள்ளது . ஆனால் குறைவாக எழுதுவதுதான் குறையாக உள்ளது . நாம் ஊக்கபடுத்தினால் இன்னும் நிறைய எழுதுவார் .

இங்கே போங்க பாஸ் :

 

 தமிழும் தமிழனும்...!

தேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...!

 

 

44 comments:

  1. வணக்கம்
    இன்றயை வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கவிதைப் போட்டி விளம்பரங்கள் பல இணையத்தளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது இன்று பார்த்தால் வலைச்சரத்திலும் உலா வந்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது அனைத்து தளங்களும் தொடரும் தளங்கள்தான்.. இருந்தாலும் ஒரு தடவை ஒரு சுற்று சுற்றி வருகிறேன். சிறப்பாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  2. அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வருகைக்கு மகிழ்ச்சி சகோ

    ReplyDelete
  4. வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி . இது போன்று பதிவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் வலைச்சரம் என்றுமே கிங்குதான் .

    நன்றி என்றும் உங்கள் நண்பன் ,

    ஒரத்தநாடு கார்த்திக் .

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் என்னைப்பற்றி கன்னாபின்னாவென்று எழுதி என்னை(யும்) அறிமுகப்படுத்திய திரு.ராஜபாட்டை - ராஜா அவர்களுக்கு வந்தனமும், நன்றியும்.

    தகவல்துறை செயலாளர் திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி.

    இன்றைய வலைப்பதிவில் அறிமுகப் படுத்தப்பட்ட இனிய நண்பர் திரு. இ.பு.ஞானபிரகாசம் அவர்கள், திரு. தனிமரம் அவர்கள், என்.எச்.பிரசாத் அவர்கள், திரு.சுடுதண்ணி அவர்கள், திரு. ஒரத்தநாடு கார்த்திக் அவர்கள், திரு.அகாலம் அவர்கள், திரு. இன்று வலைத்தல நிறுவனர் அவர்கள், திரு. கயல்விழி காரஞ்சன் அவர்கள், இனிய நண்பர் திரு.மாயவரத்தான் அவர்கள், திரு. தினக்ஸ் வலைத்தல நிறுவனர் அவர்கள், திரு.கவிச்சோலை சிவநேசன் அவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்க(ணை)ளை தொடுக்கிறேன்.

    என்றும் அன்புடன்,
    கில்லர்ஜி.
    அபுதாபி.

    ReplyDelete
  6. அறிமுகம் சிறப்பாக இருந்தது அண்ணா !! ஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் வலைதளத்தில்தான் , பல சமயங்களில் எனக்கு தவைப்படும் புத்தகங்களை டவுன்லோடி வருவேன் . மற்றவர்களின் தளங்களிலும் அவ்வப்போது மேய்ந்துவிட்டு வந்திருக்கிறேன் . :-)

    ReplyDelete
  7. அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! என்னுடைய வலைப்பூவும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்வளிக்கிரது. திரு.ராஜபாட்டை ராஜா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  8. ஜான்பாவாங்கள் பலருக்கு இடையில் தனிமரத்துக்கும் வலைச்சரத்தில் மேடைகொடுத்ததுக்கு ராஜாவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  9. இன்று என்னுடன் அறிமுகமான வலையுறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும்
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ராஜபாட்டை ராஜா! மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  12. என்னை இங்கு அறிமுகப்படுத்தியிருக்கும் தகவலைத் தேடி வந்து தெரிவித்த அன்பு நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நானும் நன்றி சொல்லிகொள்கிறேன்

      Delete
  13. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் என்னையும் கில்லர்ஜி முதலான நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதற்காக நண்பர் இராஜபாட்டை – ராஜா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரம், இதிலுள்ள ஒரு குறைபாட்டையும் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
    ஒரத்தநாடு கார்த்திக் வலைப்பூவை இப்படிப் பொதுவெளியில் அறிமுகப்படுத்தியது தவறு!
    இப்படிச் சொல்வதற்காக ஒரத்தநாடு கார்த்திக் சினம் கொள்ளக்கூடாது! உண்மையில், அந்தத் தளத்தில் பல நல்ல நூல்களும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக, ராணி காமிக்சு போன்ற நின்று போன பல இதழ்களின் முதன்மையான ஏடுகள் அங்கு பாதுகாத்துப் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளன. இனிமேல் எங்கும் கிடைக்க வாய்ப்பில்லாத அத்தகைய இதழ்களை வருங்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் விதத்தில் இப்படி ஆவணப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்க முயற்சியே! அதற்காக நான் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
    ஆனால் இவை தவிர, அந்த வலைப்பூவிலுள்ள மிகப் பெரும்பாலான நூல்கள் காப்புரிமைக்குட்பட்டவை; இன்றும் விற்பனையாகிக் கொண்டிருப்பவை. அவற்றையெல்லாம் இப்படிப் பொதுவெளியில் இலவசமாகப் படிக்கத் தருவதால் பதிப்பகத்துறைக்கு எப்பேர்ப்பட்ட இழப்பு ஏற்படும் என்பதைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டாவா? இதனால் நூல் விற்பனை பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லை, பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், அவர்களின் காப்புரிமைகள், அச்சகங்கள், இவர்களை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், தமிழ் மொழி என அனைத்துமே பாதிக்கப்படுகின்றன.

    நினைத்துப் பாருங்கள்! உலகின் மற்ற நாடுகளிலெல்லாம், அந்நாட்டு மொழிகள் தொழில், வணிகம், ஊடகம், தொழில்நுட்பம், அறிவியல் எனப் பல விதங்களில் அந்த மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்றன. ஆனால், நம் தாய்த் தமிழ் மொழியைப் பொறுத்த வரை, அதன் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயன்படுவதே ஒரே ஒரு வகையில்தான்; அதாவது படிப்பதற்கு! தமிழ் இதழ்களையும், நூல்களையும், இணையத்தளங்களையும் படிப்பதற்கு மட்டும்தான் தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயனாகிறது. எழுத்தாளர்கள், ஊடகத்தார்கள், நம்மைப் போல் பதிவர்கள் ஆகிய சிலரைத் தவிர, மற்றபடி பொதுமக்கள் யாரும் தமிழின் எழுத்து வடிவத்தை இன்று எழுதுவதற்குப் பயன்படுத்துவதில்லை. அதற்கான தேவையும் நம் சமூகத்தில் இல்லை.

    இந்நிலையில், எழுத்துத்துறையின் தலையாய பிரிவான பதிப்பகத்துறையைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தால் - அதாவது, இந்த மொழியின் எழுத்து வடிவத்துக்கு இருக்கிற ஒரே ஒரு சந்தையையும் நாம் சீர்குலைத்து விட்டால் – அதன் விளைவு என்னாகும்? இந்த மொழியின் எதிர்காலம் என்னாகும்? சிந்திக்க வேண்டாவா? தமிழ்ப் பதிப்புலகத்துக்கு இப்படி இழப்பை ஏற்படுத்தினால், நாளைக்கு நாம் படிப்பதற்குப் புதிதாக என்ன கிடைக்கும்? எங்கே போவோம்? நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம்! உலகில் அனைத்துக்குமே ஒரு விலை இருக்கிறது. அதைக் கொடுக்காமல் அதை நுகர நினைப்பது திருட்டுத்தனம் இல்லையா நண்பர்களே? படிக்கும் விருப்பம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கட்டும்! முடியவில்லையா, ஊருக்கு ஊர் அரசு நூலகங்கள் இருக்கின்றன, அங்கே இலவசமாக வாங்கிப் படிக்கட்டும். அப்படியில்லாமல், இப்படி எல்லா நூல்களையும் இலவசமாக இணையவெளியில் பகிர்வதும், அதை ஊக்குவிக்கும் வகையில் அப்படிப்பட்ட வலைப்பூக்களை வலைச்சரம் போன்ற ஊடகங்கள் அங்கீகரித்து இப்படிப் பாராட்டுவதும் வருங்காலத் தமிழ் உலகிற்கோ, தமிழர்களுக்கோ துளியும் நன்மையளிக்காது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி ..

      Delete
    2. அய்யா ,ஞானப்பிரகாசன் அவர்களுக்கு என் மேல் என்ன கோபமோ தெரிய வில்லை .அந்த சமயத்திலும் என்னை பாராட்டி எழுதிருக்கிறார் அதற்கு என்னுடைய நன்றி .உங்களின் எதிர்புக்கும் நன்றி .ஏன் என்றால் உங்கள் கோபம் நியமானது .தப்பு எங்கு நடக்கவில்லை 150 கோடி எடுத்த படம் முதல் ஷோ முடிந்த உடனே இணையத்தில் 1 லட்சம் பேர் டவுன்லோட் செய்கிறார்கள் அங்கு தப்பு நடக்க வில்லையா ? அது காப்புரிமை செய்ய படவில்லையா ? அது தமிழ் மொழி இல்லையா ? அதை நம்பி 1000 இல்லை ,லட்சம் தொழிலார்கள் இல்லையா ? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ? அது தொழில், வணிகம், ஊடகம், தொழில்நுட்பம், அறிவியல் என்ற வகையை குறிப்பது இல்லையா ? அது திரை உலகுக்குக் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லையா ?இது போல தவறுகளை கூறி கொண்டே போகலாம் ,தவறு எங்கு நடக்கவில்லை 5 ரூபாய் பான்பராக் இலிருந்து 90 ரூபாய் அரசு மதுபானம்(tasmac ) வரை தவறு நடக்கிறது .



      இதற்காக நான் செய்வதை சரி என்று கூறவில்லை .நான் கொடுக்கும் இதழ்களை 1000 பேர் கூட டவுன்லோட் செய்ய மாட்டார்கள் .நீங்கள் சொல்வது போல அரசு நூலகம் வெளிநாட்டில் இல்லை , குடும்பத்தை பிரிந்து தனிமரமாக நிற்கும் வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு தின செய்திதாள் , வார இதழ்கள் மற்றும் நாவல் எதுவும் கிடைபதில்லை அவர்களுக்காக தொடங்க பட்ட தளமே இந்த ஒரத்தநாடு கார்த்திக் .



      நான் ஒன்று கூற விரும்புகிறேன் இந்த நாவல்களை என்னுடைய வலைத்தளத்தில் கொடுக்கவில்லையெனில் மக்கள் யாரும் வரிசையில் நின்று நூலகத்தில் வாங்குவது கிடையாது . உங்களுக்கு எத்தனை நாவல் ஆசிரியர்களை தெரியும் ? சிறியவர் ,பெரியவர் எல்லாருக்கும் எத்தனை நாவல் ஆசிரியர்கள் தெரியும் எல்லாருக்கும் தெரிந்தது சுஜாதா ,பால குமாரன் மற்றும் ராஜேஷ்குமார் மட்டுமே இது என்னுடைய குற்றம் கிடையாது .அதே போல தமிழ் வார இதழ்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டு பாருங்கள் எல்லாரும் சொல்வாங்க அதற்கு என்ன காரணம் அதுவும் என்னுடைய குற்றம் கிடையாது . நான் என்னுடைய வலைத்தளத்தில் நாவல்கள் கொடுத்தது பிரபலமான நாவல் ஆசிரியர்களின் சிறந்த நாவல்களின் தொகுப்பு மட்டுமே . இதை இந்த நாவல் ஆசிரியர்களையும் இந்த நாவல்களையும் எத்தனை நண்பர்கள் புதியதாகவும் , பிடித்து போய் கூட டவுன்லோட் செய்திருக்கலாம் .என்னால் எத்தனை நாவல் ஆசிரியர்களின் திறமைகள் நண்பர்கள் படித்ததன் மூலம் அது வெளி கொணர பட்டுள்ளது .நான் எப்போதுமே என்னுடைய மனசாட்சிக்கு கட்டுபட்டவன் நான் தமிழுக்கு துரோகம் இளைத்தவன் இல்லை இனியும் இல்லை என்னால் நாவல் ஆசியர்களின் திறமை உலகுக்கு உணர்த்துவதன் நோக்கம் மட்டுமே இதை எத்தனை பேர் படித்து விட்டு நூலகத்திற்கு சென்று பிடித்த நாவல் ஆசியர்களின் நாவல் புதியது என்ன வந்திருக்கு என்று உண்மையான ஓவ்வொரு தமிழனும் கேட்பான் .......



      டிஸ்கி 1 : அம்மா உணவகம் வந்துட்டு டா அங்க இட்லி 1 ருபாய் தெரியுமா ?

      டிஸ்கி 2: அப்படியா எல்லா உணவகத்தையும் மூடிடு வாங்கடா ..

      டிஸ்கி 1: அப்படியெல்லாம் மூடிட மாட்டங்க

      டிஸ்கி 2: என் அப்படி சொல்றே ?

      டிஸ்கி 1: எல்லார்க்கும் ஒரு டேஸ்டு இருக்கு மச்சி .

      டிஸ்கி 2: அதுவும் சரிதாண்ட நானும் அங்க கம்மியா கொடுக்குறாங்க அப்படின்னு நினைச்சிகிட்டு போனேன் ஆனா எனக்கு என்னவோ நம்ம

      ரா க்கா யி சுடுற இட்லி தான் மாப்பு எனக்கு புடிச்சிருக்கு .

      டிஸ்கி 1: இத புரிய வைக்கிறது எவ்வளவு கஷ்டம்டா சாமியோ ......

      டிஸ்கி 2: அத விடுடா ஐ படத்தோட teaser யூ tubela யாரோ திருட்டு தனமா upload பண்ணியிருகானமே வாடா பார்போம் .

      டிஸ்கி : திரும்பவும் முதல்லேந்தா ............................

      இது யார் மனதையும் புண் படுத்துவதன் நோக்கம் அல்ல .உண்மை உலகு அறிய வேண்டும் நானும் தமிழ் வெறியன் அய்யா ...........


      உங்கள் மனது புண் படும் படி நான் கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் சார் .

      Delete
  15. இனிமேலாவது, ஆசிரிய வலைப்பதிவர்கள் பரிந்துரைக்கும் வலைப்பூக்கள் எப்படிப்பட்டவை என்பது குறித்து விழிப்போடு இருக்குமாறு வலைச்சர ஆசிரியர் சீனா அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வலைசர பதிவுகள் தணிக்கை செய்யபடுவதில்லை . இதில் வரும் தவறுகளுக்கு அந்த அந்த வார ஆசிரியர்களே பொறுப்பு . இனி இதுபோல நடக்காமல் பார்த்துகொள்கிறேன் . நன்றி

      Delete
    2. தவறாக எடுத்துக் கொள்ளாமல் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

      Delete
    3. ராஜபாட்டை - ராஜா சார் ஏன் நீங்க இனிமேல் இது போல் தவறு செய்ய மாட்டேன் என்று சொல்றீங்க ? இப்பவே அதற்கு முடிவு கட்ட வில்லையா? நீங்கள் உடனே என்னுடைய தளத்தின் அறிமுக பகுதியை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . ஏன் என்றால் தமிழுக்கு துரோகம் செய்பவர்கள் என்றுமே அழிய வேண்டும் அல்லவா ? இனிமேலாவது தமிழுக்கு நல்லது செய்பவர்களை அறிமுகம் செய்யுங்கள் சார் .

      நீங்கள் உங்களுக்கு தெரியுமா ? என்று தலைப்பு வைப்பதற்கு பதிலாக தமிழுக்கு நல்லது செய்பவர்களை உங்களுக்கு தெரியுமா என்று பதிவுலக நல்லவர்களை அறிமுகம் செய்யுங்கள் .நன்றி சார் ....என்னால் உங்கள் தளமும் ஆசிரியர்களுக்கும் அவ பெயர் ஏற்பட்டதை நினைத்து வருத்ததுடன் விடை பெறுகிறேன் .

      Delete
  16. சுடுதண்ணி, அகாலம் ஆகிய தளங்களுக்கு சென்றதில்லை! சென்று பார்க்கிறேன்! சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

    ReplyDelete
  17. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய 'ராஜபாட்டை ராஜாவுக்கு' என் நன்றி. இது எனக்கு 'நான்காவது' அறிமுகம், வலைச்சரத்தில். மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். குறிப்பாக, 'ஒரத்த நாடு கார்த்திக்' பற்றி அறியப் பெற்றேன்.

    ReplyDelete
  18. அய்யா ,ஞானப்பிரகாசன் அவர்களுக்கு என் மேல் என்ன கோபமோ தெரிய வில்லை .அந்த சமயத்திலும் என்னை பாராட்டி எழுதிருக்கிறார் அதற்கு என்னுடைய நன்றி .உங்களின் எதிர்புக்கும் நன்றி .ஏன் என்றால் உங்கள் கோபம் நியமானது .தப்பு எங்கு நடக்கவில்லை 150 கோடி எடுத்த படம் முதல் ஷோ முடிந்த உடனே இணையத்தில் 1 லட்சம் பேர் டவுன்லோட் செய்கிறார்கள் அங்கு தப்பு நடக்க வில்லையா ? அது காப்புரிமை செய்ய படவில்லையா ? அது தமிழ் மொழி இல்லையா ? அதை நம்பி 1000 இல்லை ,லட்சம் தொழிலார்கள் இல்லையா ? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ? அது தொழில், வணிகம், ஊடகம், தொழில்நுட்பம், அறிவியல் என்ற வகையை குறிப்பது இல்லையா ? அது திரை உலகுக்குக் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லையா ?இது போல தவறுகளை கூறி கொண்டே போகலாம் ,தவறு எங்கு நடக்கவில்லை 5 ரூபாய் பான்பராக் இலிருந்து 90 ரூபாய் அரசு மதுபானம்(tasmac ) வரை தவறு நடக்கிறது .



    இதற்காக நான் செய்வதை சரி என்று கூறவில்லை .நான் கொடுக்கும் இதழ்களை 1000 பேர் கூட டவுன்லோட் செய்ய மாட்டார்கள் .நீங்கள் சொல்வது போல அரசு நூலகம் வெளிநாட்டில் இல்லை , குடும்பத்தை பிரிந்து தனிமரமாக நிற்கும் வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு தின செய்திதாள் , வார இதழ்கள் மற்றும் நாவல் எதுவும் கிடைபதில்லை அவர்களுக்காக தொடங்க பட்ட தளமே இந்த ஒரத்தநாடு கார்த்திக் .



    நான் ஒன்று கூற விரும்புகிறேன் இந்த நாவல்களை என்னுடைய வலைத்தளத்தில் கொடுக்கவில்லையெனில் மக்கள் யாரும் வரிசையில் நின்று நூலகத்தில் வாங்குவது கிடையாது . உங்களுக்கு எத்தனை நாவல் ஆசிரியர்களை தெரியும் ? சிறியவர் ,பெரியவர் எல்லாருக்கும் எத்தனை நாவல் ஆசிரியர்கள் தெரியும் எல்லாருக்கும் தெரிந்தது சுஜாதா ,பால குமாரன் மற்றும் ராஜேஷ்குமார் மட்டுமே இது என்னுடைய குற்றம் கிடையாது .அதே போல தமிழ் வார இதழ்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டு பாருங்கள் எல்லாரும் சொல்வாங்க அதற்கு என்ன காரணம் அதுவும் என்னுடைய குற்றம் கிடையாது . நான் என்னுடைய வலைத்தளத்தில் நாவல்கள் கொடுத்தது பிரபலமான நாவல் ஆசிரியர்களின் சிறந்த நாவல்களின் தொகுப்பு மட்டுமே . இதை இந்த நாவல் ஆசிரியர்களையும் இந்த நாவல்களையும் எத்தனை நண்பர்கள் புதியதாகவும் , பிடித்து போய் கூட டவுன்லோட் செய்திருக்கலாம் .என்னால் எத்தனை நாவல் ஆசிரியர்களின் திறமைகள் நண்பர்கள் படித்ததன் மூலம் அது வெளி கொணர பட்டுள்ளது .நான் எப்போதுமே என்னுடைய மனசாட்சிக்கு கட்டுபட்டவன் நான் தமிழுக்கு துரோகம் இளைத்தவன் இல்லை இனியும் இல்லை என்னால் நாவல் ஆசியர்களின் திறமை உலகுக்கு உணர்த்துவதன் நோக்கம் மட்டுமே இதை எத்தனை பேர் படித்து விட்டு நூலகத்திற்கு சென்று பிடித்த நாவல் ஆசியர்களின் நாவல் புதியது என்ன வந்திருக்கு என்று உண்மையான ஓவ்வொரு தமிழனும் கேட்பான் .......



    டிஸ்கி 1 : அம்மா உணவகம் வந்துட்டு டா அங்க இட்லி 1 ருபாய் தெரியுமா ?

    டிஸ்கி 2: அப்படியா எல்லா உணவகத்தையும் மூடிடு வாங்கடா ..

    டிஸ்கி 1: அப்படியெல்லாம் மூடிட மாட்டங்க

    டிஸ்கி 2: என் அப்படி சொல்றே ?

    டிஸ்கி 1: எல்லார்க்கும் ஒரு டேஸ்டு இருக்கு மச்சி .

    டிஸ்கி 2: அதுவும் சரிதாண்ட நானும் அங்க கம்மியா கொடுக்குறாங்க அப்படின்னு நினைச்சிகிட்டு போனேன் ஆனா எனக்கு என்னவோ நம்ம

    ரா க்கா யி சுடுற இட்லி தான் மாப்பு எனக்கு புடிச்சிருக்கு .

    டிஸ்கி 1: இத புரிய வைக்கிறது எவ்வளவு கஷ்டம்டா சாமியோ ......

    டிஸ்கி 2: அத விடுடா ஐ படத்தோட teaser யூ tubela யாரோ திருட்டு தனமா upload பண்ணியிருகானமே வாடா பார்போம் .

    டிஸ்கி : திரும்பவும் முதல்லேந்தா ............................

    இது யார் மனதையும் புண் படுத்துவதன் நோக்கம் அல்ல .உண்மை உலகு அறிய வேண்டும் நானும் தமிழ் வெறியன் அய்யா ...........


    உங்கள் மனது புண் படும் படி நான் கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் சார் .

    ReplyDelete
    Replies
    1. அன்பரே! உங்கள் மீது எனக்குச் சினம் (கோபம்) எதுவும் கிடையாது. இணையத்திலோ வெளியிலோ உங்களுக்கும் எனக்கும் பழக்கம், அறிமுகம் கூடக் கிடையாது. அப்படியிருக்க உங்கள் மீது நான் ஏன் சினம் கொள்ள வேண்டும்! அப்படி உங்கள் மீது காழ்ப்புணர்வு ஏதாவது இருந்தால் ராணி காமிக்சு போன்ற அழிந்து போன இதழ்களை நீங்கள் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு நான் ஏன் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்? சிந்தியுங்கள்!

      நல்ல இதழ்களையும், நூல்களையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்றால், அதை அந்தந்த இதழாளர்களின், நூலாசிரியர்களின் ஒப்புதல் பெற்று நீங்கள் தாராளமாகச் செய்யலாமே? அப்படிச் செய்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் என இரு தரப்பினருக்குமே புகழும் வருமானமும் கிடைக்கும். அப்படியில்லாமல், எழுத்தாளர்களின் பல நூல்களை நீங்கள் இணையத்திலேயே படிக்கக் கொடுத்துவிட்டால் அந்தக் குறிப்பிட்ட நூல்களின் விற்பனை பாதிக்கப்படாதா? ஒரு நூலை வெளியிடுவது என்பது எப்பேர்ப்பட்ட முயற்சி தெரியுமா? அதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது தெரியுமா? நூலை முதலில் தட்டெழுத வேண்டும்; பிறகு, கண் வலிக்க வலிக்கப் பிழை திருத்த வேண்டும்; பிறகு, நூலை வடிவமைக்க வேண்டும்; பிறகு அதையும் சரி பார்க்க வேண்டும்; இதன் பிறகு அச்சுக்கு அனுப்புதல்; அதன் பிறகு விநியோகம்; நூலகக் கேட்பாணை (order); நூலகக் கண்காட்சியில் இடம் பிடித்தல்... - இவ்வளவுக்கும் பிறகு விற்பனை என இத்தனைக்கும் எவ்வளவு பேர், எத்தனை மணி நேர உழைப்பு தேவைப்படுகிறது தெரியுமா?

      தமிழ் இதழ்களோ, நூல்களோ வெளிநாட்டில் கிடைப்பதில்லை என்கிறீர்கள். உண்மைதான். ஆனால், இணையக் கடைகள் மூலம் எல்லா நூல்களுமே உலகெங்கும் இப்பொழுது கிடைக்கின்றன. நூல் உலகம், அமேசான், அது இது என ஏராளமான இணையக் கடைகள் இப்பொழுது வந்து விட்டன. அவற்றின் மூலம் நீங்கள் எந்தத் தமிழ் நூலையும், எந்தக் காலக்கட்டத்தைச் சேர்ந்ததையும் வீட்டிலிருந்தபடியே எளிதில் வாங்கலாம்.

      அரசு நூலகங்கள் வெளிநாட்டில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அரசு இணையக் கல்விக்கழகம், ஓபன் ரீடிங் ரூம், மதுரைத் திட்டம் போன்ற இணைய நூலகங்களில் நாட்டுடைமையாக்கப்பட்ட ஏராளமான நூல்கள் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றைப் படித்துத் தீர்க்கவே வாழ்நாள் ஒன்று போதாது. அப்படியிருக்க எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இவற்றை நம்பியிருக்கும் ஏராளமானோரைப் பாதிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படாத நூல்களைப் பகிர்வது தேவையா என்பதைச் சிந்திக்க வேண்டுகிறேன்!

      அப்படி எத்தனை பேர் உங்கள் தளத்திலிருந்து நூல்களைத் தரவிறக்கிப் படித்துவிடப் போகிறார்கள், ஆயிரம் பேர் கூட இருக்க மாட்டார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். அது தவறு! நானும் தமிழில் எத்தனையோ முன்னணி வலைப்பூக்களைப் படிக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பின்தொடரப்படும் வலைப்பூக்களைக் கூட ஒரே நேரத்தில் மிஞ்சிப் போனால் 4 பேருக்கு மேல் படித்துக் கொண்டிருந்து நான் பார்த்ததில்லை. ஆனால், உங்கள் தளத்துக்கு நான் ஒவ்வொரு முறை வரும்பொழுதும் என்னுடன் சேர்ந்து மேலும் 10, 11 பேர் அதே நேரத்தில் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். ஒரே நேரத்தில் படிப்பவர்கள் எண்ணிக்கையே இத்தனை என்றால், பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை எத்தனை, தரவிறக்குவோர் எண்ணிக்கை எத்தனை, ஆக எத்தனையாயிரம் பேர் காசு கொடுக்காமலே குறிப்பிட்ட நூல்களைப் பெற்று விடுகிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!

      'நானும் தமிழ் வெறியன்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதை நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. வெளியில் கிடைக்காத, இனி கிடைக்க வாய்ப்பே இல்லாத பல அரிய இதழ்களும் நூல்களும் உங்கள் தளத்தில் மட்டுமே கிடைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் வருடிப் (ஸ்கேன் செய்து) பதிவேற்ற ஒற்றை ஆளாக உங்களுக்கு எந்தளவுக்கு உழைப்புத் தேவைப்படும், எத்தனை மணி நேரம் தேவைப்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது! இந்த அளவுக்கு வேலை வினைகெட்டு இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் இவற்றைப் பாதுகாப்பதிலும், மக்களுக்குப் படிக்கத் தருவதிலும் உங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்க வேண்டும் என்பது உங்கள் தளத்தைப் பார்க்கும்பொழுதே தெரிகிறது.

      உங்களைக் குறை சொல்வது என் நோக்கம் இல்லை. நீங்கள் நல்லது செய்வதாக நினைத்துச் சில கெடுதல்களையும் சேர்த்துச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதே என் அவா! இப்பொழுது கூட, விற்பனையில் இல்லாத நூல்களையும், இதழ்களையும் தவிர மற்றவற்றை உங்கள் தளத்திலிருந்து நீக்கி விட்டால் உங்கள் தளத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களில் நான்தான் முன்னணியில் இருப்பேன்.

      Delete
  19. நான் இந்திரா சௌந்தராஜன் நாவல்களின் பிரியன் எனது ஊரில் அந்த நாவல்கள் கிடைப்பதில்லை. அதனால் இங்கு கிடைக்கும் நாவல்களை டவுன்லோட் செய்து படித்து கொண்டிருக்கிறேன் மற்றும் நல்ல நாவல்கள் அனைத்தையும் படித்துவிட்டு பின் நல்லா இருந்தால் அதை வாங்கி சேகரித்து கொண்டிருக்கிறேன். முன்னோட்டம் பார்க்க மட்டுமே நான் அவர் வலைப்பூவில் இருந்து டவுன்லோட் செய்கிறேன், ஏதோ இந்த மாதிரி நல்லவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்கிற சந்தோசம் அதில் ஏன் அண்ணே மண்ன போடுறிங்க :\

    ReplyDelete
    Replies
    1. ஒரு துறையின் உற்பத்தியை இலவசகமாகக் கிடைக்கச் செய்வது அவர்கள் பிழைப்பில் மண் போடுவதா அல்லது அதைத் தடுக்க முயல்வது மண் போடுவதா? நீங்கள் நூலை ஒருமுறை முன்னோட்டம் பார்த்துவிட்டுப் பிறகு அதையே காசு கொடுத்து வாங்கிச் சேகரிப்பதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் நூல் சேரிப்பாளர். உங்களைப் போன்றோர் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. ஏற்கெனவே படித்ததை மீண்டும் ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும், அந்தக் காசுக்கு வேறு ஏதாவது படிக்காத நூலை வாங்கலாமே என்று நினைப்பவர்கள்தாம் கூடுதல். எனவே, ஒரத்தநாடு கார்த்திக் போன்ற தளங்களால் விற்பனை பாதிக்கப்படத்தான் செய்யுமே தவிர, கூடாது!

      Delete
  20. இங்கே இன்னொரு விசயத்தையும் தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரத்தநாடு கார்த்திக் அவர்கள் அளிப்பது ஏற்கனவே, இணையத்தில் கொட்டிகிடக்கும் நாவல்களின் ஒரு தொகுப்பு நிலையமே என்றால் அது மிகையாகாது. இங்கே இருக்கும் நாவல்கள் நூல்களில் 98% இணையத்தில் ஏற்கனவே பலரால் தரவேற்றம் செய்யப்பட்டவைதான். இவருடைய வலைச்சரத்தை நான் ஒரு தொகுப்பு நூலகமாக மட்டுமே பார்க்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. கள்ளக் குறுவட்டை (pirated DVD) உற்பத்தி செய்வதுதான் தவறு; பர்மா பசாரில் வெளிப்படையாக விற்பனைக்கு வைப்பது தவறில்லை என்பது போல் இருக்கிறது ஐயா நீங்கள் சொல்வது!

      இணையத்தில் நூல்களைப் பகிரும் எல்லோருமே கூறுகிற சமாளிப்புதான் இது. உண்மையில் இந்தச் சமாளிப்பு எதிர்மறையானது. இணையத்தில் வெறுமனே தரவேற்றி வைத்தால் கூட அது வெளியில் யாருக்கும் தெரியாது. கூகுள் போன்ற தேடுபொறிகளில் அவை எளிதில் சிக்கா. ஆனால், அதையே இப்படி வலைப்பூ ஒன்றின் மூலம் சரியான பெயர், அறிமுகம் போன்றவற்றுடன் இணைப்புத் தரும்பொழுது மிக மிக எளிதில் அது பொதுமக்களுக்குக் கிடைத்து விடுகிறது. ஆகவே, இணையத்தில் நூலைத் தரவேற்றி வைப்பது கூடப் பெரிய பாதிப்பைத் தருவதில்லை; தரவேற்றிய அந்த இணைப்பை இப்படிப் பொதுவெளிக்குக் கொண்டு வரும்பொழுதுதான் பாதிப்பே தொடங்குகிறது.

      தொகுத்ததோ புதியதோ! ஆக மொத்தம், அவருடைய தளத்தில் இத்தனை நூல்கள் இலவசமாக உடனுக்குடன் கிடைக்கும்பொழுது அவற்றை யாராவது காசு கொடுத்து வாங்க முன்வருவார்களா? சிந்தியுங்கள்!

      Delete
  21. ஒரத்தாநாடு கார்த்திக் செய்வது ஒரு தொகுப்புதான்,,,, அத்தனையும் இணைய வெளியில் கிடைப்பவையே,,, அதற்காக அவரை பாராட்டுகிறேன்
    இவரால் பதிப்பக துறையே அழிந்துவிடப்போகிறது என்று கூக்குரலிடவேண்டிய அவசியம் இல்லை,,,, இவர் நிறுத்திவிடுவதால் நான்கு புத்தகம் கூட விற்றுவிடப்போவதில்லை ஆனர்ல் யாராவது ட்வுண்லோடு செய்து படித்து,,, அதனால் அவருக்கு புத்தகம் வாங்கிப்படிக்கும் ஆவல் கூடி வரும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது,,,,, நல்லது செய்யாவிட்டாலும் குறைகூறாதிருப்பது நன்று கார்த்திக்கின் முயற்சிக்கு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. //ஒரத்தாநாடு கார்த்திக் செய்வது ஒரு தொகுப்புதான்,,,, அத்தனையும் இணைய வெளியில் கிடைப்பவையே// - கள்ளக் குறுவட்டை (pirated DVD) உற்பத்தி செய்வதுதான் தவறு; பர்மா பசாரில் வெளிப்படையாக விற்பனைக்கு வைப்பது தவறில்லை என்பது போல் இருக்கிறது!

      இணையத்தில் நூல்களைப் பகிரும் எல்லோருமே கூறுகிற சமாளிப்புதான் இது. உண்மையில் இந்தச் சமாளிப்பு எதிர்மறையானது. இணையத்தில் வெறுமனே தரவேற்றி வைத்தால் கூட அது வெளியில் யாருக்கும் தெரியாது. கூகுள் போன்ற தேடுபொறிகளில் அவை எளிதில் சிக்கா. ஆனால், அதையே இப்படி வலைப்பூ ஒன்றின் மூலம் சரியான பெயர், அறிமுகம் போன்றவற்றுடன் இணைப்புத் தரும்பொழுது மிக மிக எளிதில் அது பொதுமக்களுக்குக் கிடைத்து விடுகிறது. ஆகவே, இணையத்தில் நூலைத் தரவேற்றி வைப்பது கூடப் பெரிய பாதிப்பைத் தருவதில்லை; தரவேற்றிய அந்த இணைப்பை இப்படிப் பொதுவெளிக்குக் கொண்டு வரும்பொழுதுதான் பாதிப்பே தொடங்குகிறது.

      தொகுத்ததோ புதியதோ! ஆக மொத்தம், அவருடைய தளத்தில் இத்தனை நூல்கள் இலவசமாக உடனுக்குடன் கிடைக்கும்பொழுது அவற்றை யாராவது காசு கொடுத்து வாங்க முன்வருவார்களா?

      //இவரால் பதிப்பக துறையே அழிந்துவிடப்போகிறது என்று கூக்குரலிடவேண்டிய அவசியம் இல்லை// - கூக்குரலிட எனக்கு அவசியம் இல்லை என்றால், அதை விமர்சிக்க உமக்கு மட்டும் என்ன அவசியம்?

      //இவர் நிறுத்திவிடுவதால் நான்கு புத்தகம் கூட விற்றுவிடப்போவதில்லை ஆனர்ல் யாராவது ட்வுண்லோடு செய்து படித்து,,, அதனால் அவருக்கு புத்தகம் வாங்கிப்படிக்கும் ஆவல் கூடி வரும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது// - அஃது உமது கருத்து. எனக்கு அப்படித் தோன்றவில்லை என்பதால் நான் அப்படிக் கூறுகிறேன். உமக்கென்ன?

      //நல்லது செய்யாவிட்டாலும் குறைகூறாதிருப்பது நன்று// - நல்லது எது கெட்டது எது என்பதே தெரியாத இந்தச் சமூகத்துக்கு எதைச் செய்தால் என்ன?

      Delete
  22. நான் காலேஜ் முடித்தபிறகும் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே கிடையாது. எதேச்சையாக இணையதளத்தில் தமிழ் வரலாற்று நாவல் படித்தேன். அதிலிருந்து தமிழ் புத்தகங்களை தேடிப்பிடித்துப் படிக்கிறேன். கிட்ட தட்ட இதுவரைக்கும் 4000 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கியுள்ளேன். இன்னும் வாங்குவேன். என்னைப் பொருத்தவரைக்கும் ஒரத்தநாடு கார்த்திக் போன்றோர் தெரிந்தோ தெரியாமலோ " புத்தகம் படிக்கும் விழிப்புணர்வை " ஏற்படுத்தராங்க. இது என்னுடைய தாழ்மையான கருத்து.

    பூபதி தங்கராஜ்.

    ReplyDelete
    Replies
    1. இஃது உண்மையாக இருந்தால் கண்டிப்பாக எனக்கும் மகிழ்ச்சிதான். மக்களிடையே தமிழ் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தத்தான் பாலகுமாரன் போன்ற மாபெரும் எழுத்தாளர்கள் முதல் என்னைப் போல் எளிய பதிவர்கள் வரை தலையால் தண்ணீர் குடித்து வருகிறோம். 'ஒரத்தநாடு கார்த்திக்' போன்ற இலவசத் தளங்களால் அந்த மாற்றத்தை இவ்வளவு எளிதில் ஏற்படுத்த முடியுமானால் அதை விட மகிழ்ச்சி தருவது என்னைப் போன்றவர்களுக்கு வேறு ஏதுமில்லை.

      ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், 'ஒரத்தநாடு கார்த்திக்' போன்ற வலைப்பூக்களிலிருந்து நூல்களை இலவசமாகப் பெறுபவர்களில் எத்தனை பேர் உங்களைப் போல் மாறுவார்கள் என்பதை நீங்களும் புள்ளி விவரப்படி எடுத்துக்காட்ட முடியாது; எத்தனை பேர் நான் கூறுவது போல் காசு கொடுத்து வாங்கும் வழக்கத்தைக் குறைத்துக் கொள்வார்கள் என்பதற்கு என்னாலும் கணக்குக் காட்ட இயலாது.

      Delete
  23. உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி பூபதி , நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை இதே போல் பல நண்பர்கள் என்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவிதுள்ளர்கள் .இதுதான் எனக்கு ஊக்கம் நண்பரே .என் மன சாட்சி படி நான் என் பணியை செய்வேன் .



    இ.பு.ஞானப்பிரகாசன் பற்றி இங்கு யாரும் குறை கூற வேண்டாம் அவருடைய தரப்பிலிருந்து பார்க்கும் பொது தவறாக தெரிபவை என்னுடைய தரப்பிலிருந்து தவறாக தெரியவில்லை அதனால் நானும் வருத்தபடவும் இல்லை .

    பூபதி ,பாலா ,ஜெயசங்கர் .சுப்ரமணி அனைவர்க்கும் என்னுடைய நன்றிகள் .

    என்றும் உங்கள் சேவகன் ,

    ஒரத்தநாடு கார்த்திக் .

    ReplyDelete
    Replies
    1. //இ.பு.ஞானப்பிரகாசன் பற்றி இங்கு யாரும் குறை கூற வேண்டாம் அவருடைய தரப்பிலிருந்து பார்க்கும் பொது தவறாக தெரிபவை என்னுடைய தரப்பிலிருந்து தவறாக தெரியவில்லை அதனால் நானும் வருத்தபடவும் இல்லை// - உங்கள் புரிதல் வியப்புக்குரியது! மிக்க நன்றி!

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது