07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 14, 2014

வாழ்வியல் நுட்பங்கள்


பசிக்கு உணவு வாங்க காசின்றி ஒரு கூட்டம்!
பணத்தைப் பதுக்கிவைக்க இடமின்றி கூட்டம்!
பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று அறியாமல் ஒரு கூட்டம்!
பணத்தை செலவுசெய்வது எப்படி என்று தெரியாமல் ஒரு கூட்டம்!
என அறிவுடையோராலும், அறியாமையுடையோராலும் நிறைந்தது இவ்வுலகம்!


பறவைகள் எந்த மரங்களையும்
விலைக்கு வாங்கியதில்லை!
இருந்தாலும்..
மரங்கள் யாவும் பறவைகளுக்காகவே
வான் நோக்கி வளர்கின்றன!

நிலவு என்றும்
இரவைச் சேமித்துவைத்தில்லை!
இருந்தாலும்..
இரவு நிலவை மட்டுமே
எதிர்நோக்கியிருக்கிறது!

ஆடுமாடுகள் யாவும்
தலையில் புல்லைக் கட்டிக்கொண்டு
மேயச்செல்வதில்லை!
இருந்தாலும்..
தாவரங்கள் இவற்றையே
பச்சைக் கொடிகாட்டி அழைக்கின்றன!

நதிகள் எங்கும்
முகவரி தேடி மயங்கியதில்லை!
இருந்தாலும் கடல்
நதிகளுக்காகவே காத்திருக்கிறது!

வேர்கள் எப்போதும்
தன்னை விளம்பரம் செய்துகொண்டதில்லை!
இருந்தாலும்..
மழை என்றும்
வேர்களை மறந்ததில்லை!

ஆனால் மனிதன் மட்டும்..
எதை எதையோ விலைக்கு வாங்குகிறான்!
சேமித்து வைக்கிறான்!
உணவுமூட்டையைத் தூக்கிக்கொண்டே திரிகிறான்!
முகவரியைத் தேடித்தேடி மயங்குகிறான்!
எதற்காகவோ காத்திருக்கிறான்!
விளம்பரப் பலகை ஏந்திக்கொண்டே நடக்கிறான்!

இப்படி வாழ்க்கை என்பது சிலருக்கு வரமாகவும் பலருக்கு சாபமாகவும் உள்ளது

வாழ்க்கை என்ற சொல்லே ஒரு உண்மையை நமக்குப் புலப்படுத்துவதாகத்தான் உள்ளது.

ஆம் வாழ்வது நம் கைகளில் என்பதைதான் வாழ் + கை என்ற சொல் உணர்த்துகிறது.

இன்றைய அறிமுகத்தில் வாழ்வியல் நுட்பங்களை உரைக்கும் சில பதிவுகளைக் காணலாம்.

61.வானவில் மனிதன் என்ற வலைப்பதிவில் நண்பர் மோகன்ஜி அவர்கள் எழுதிய இங்கிலீசு ஔவையாரின் ஆத்திச்சூடிபல வாழ்வியல் உண்மைகளை அழகுபட மொழிகிறது.

62. அனுராதா கிருஷ்ணனின் நாம் ஏன் பணக்காரனாக வேண்டும் என்ற பதிவு நம்மை சிந்திக்கவைப்பதாக அமைகிறது.


63. அம்புலி அவர்களின் பதிவில் வாழ்க்கைப் பாதை என்ற பதிவு இந்த நிலையும் கடந்துபோகும் என்பதை உணர்த்திவிடுகிறது.

64. மிரர் என்ற வலையில் எழுதிவரும் சிவராமன் அவர்களின் பதிவுகளுள் வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல என்ற பதிவு வாழ்க்கைப் பாதையின் இயல்புகளைக் கூறுவதாக உள்ளது


65. என் கணேசன் அவர்களின் இருபாதைகள் ஒரு தீர்மானம் என்ற பதிவு 

வாழ்க்கைப் பாதைகளின் இயல்புகளைக் கூறி பாதைகளைத் 

தேர்ந்தெடுக்கும் நுட்பத்தையும் உரைப்பதாக அமைகிறது.


அன்பான தமிழ் உறவுகளே..

எனக்கு அளிக்கப்பட்ட வலைச்சர ஆசிரியர் பணியை முழு மனநிறைவுடன் செய்திருக்கிறேன்.

நான் அறிமுகம்செய்த பதிவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

பதிவுகளை வாசித்து மறுமொழிதந்த அன்புள்ளங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நன்றி வணக்கம்!



7 comments:

  1. அன்பு சகோ...வணக்கம்...

    மனிதர்கள் தான் எத்தனை விதம்? மிக அழகாய் உள்ளது தங்கள் கவிதை.. அறிமுகங்களுக்கு நன்றி..

    சீரும் செம்மையுமாய் பணியாற்றிய தங்களுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான முறையில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை நிறைவேற்றி மன நிறைவுடன் மன மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறீர்கள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. வாரம் முழுவதும் பல நல்ல சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டதோடு, பல பதிவர்களையும் இங்கே அறிமுகம் செய்த விதம் சிறப்பு. பாராட்டுகள் முனைவரே.

    ReplyDelete
  4. பணியை சிறப்புடன் நிறைவு செய்யும் தங்களுக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  5. சிறந்த அறிமுகங்கள்
    நன்றி

    ReplyDelete
  6. தங்கள் வலைச்சர வாரம்
    அற்புதமான வாரமாக இருந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது