07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 15, 2014

கீதமஞ்சரியின் வணக்கம்

அனைவருக்கும் வணக்கம். 

கீதா மதிவாணன் என்னும் நான் கீதமஞ்சரி என்ற பெயரில் பதிவுலகில் அடியெடுத்துவைத்து மூன்றரை வருடங்களாகின்றன. சராசரியாக வாரமொரு பதிவு என்ற கணக்கில் இதுவரை 199 பதிவுகள் இட்டுள்ளேன். என்னுடைய இருநூறாவது பதிவை வலைச்சரத்தில் இடுவதை பெருமையாகக் கருதுகிறேன். இதற்கு முன் இரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பணியில் இருந்துள்ளேன் என்பதால் என்னைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை என்று எண்ணுகிறேன். 

முதன்முதலில் என்னை வலைச்சர ஆசிரியராகப் பரிந்துரை செய்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நியமித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் பணிவான நன்றியும் வணக்கமும்.



இதுவரை எழுதி என்ன சாதித்திருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பதிவுலகில் பல நல்ல நட்புகளைப் பெற்றிருக்கிறேன். சிறப்பான பதிவர்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை முன்வைத்து என் எழுத்துத் திறனை மேம்படுத்தும் ஆர்வத்தை வளர்த்திருக்கிறேன். போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் விருதுகள் பெற்று எனக்கென ஒரு இடத்தை உங்கள் அனைவர் மனத்திலும் தக்கவைத்திருக்கிறேன். இவற்றோடு, நானறிந்தவரை எந்த வகையிலும் பிறர் மனம் புண்படாதவகையிலும், என் மனத்துக்கு நிறைவு உண்டாகும் வகையிலும் வாசகர் எதிர்பார்ப்பை ஓரளவேனும் ஈடுசெய்யும் வகையிலும் எழுதியுள்ளேன், எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

இதுவரை பல கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்பு கதைகள், பல்சுவைப் பதிவுகள் என கலந்துகட்டி எழுதியிருந்தாலும் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை என்னுடைய கட்டுரைகளே என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் ஆஸ்திரேலிய உயிரினங்கள் பற்றிய கட்டுரைகள் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன. நானே ரசித்து எழுதிய அவற்றை இதுவரை வாசிக்காதவர்கள் வாசிக்க விரும்பினால் அவற்றுள் சிலவற்றுக்கான சுட்டிகள் கீழே


என் பிற ஆக்கங்களுள் சில




இந்த வாரம் முழுவதும் என்னோடு பயணிக்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று மகிழ்கிறேன். என்னால் இயன்றவரை பல நல்ல படைப்பாளிகளை இங்கு அறிமுகப்படுத்த விழைகிறேன். புதியவர்களுக்குப் பழகியவர்களையும் பழகியவர்களுக்குப் புதியவர்களையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி தமிழ்ப் பதிவுகளின் தரத்தையும் பெருமையையும் அடுத்த படிக்கு உயர்த்தும் வலைச்சரத்தின் நன்னோக்கத்துக்கு நம்மாலான பங்கினை ஆற்றுவோம். வாருங்கள். 
நன்றி.

76 comments:

  1. தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முனைவர் அவர்களே.

      Delete
  2. தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி ரமணி ஐயா.

      Delete
  3. தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
    இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஐயா.

      Delete
  4. வாங்க வாங்க ஃப்ரெண்ட்.... உங்களின் கைவண்ணத்தில் இந்த வாரம் சிறக்கட்டும். ஹாட்ரிக் ஆசிரியரான உங்களுக்கு என் மகிழ்வான நல்வரவும் நல்வாழ்த்துகளும்...

    ReplyDelete
    Replies
    1. வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

      Delete
  5. வருக! வணக்கம்! வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. நல்வரவு! மிகுந்த ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கின்றேன்!

    இனிய வாரமாக அமையட்டும். வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி டீச்சர்.

      Delete
  7. அழகான வரவுக்கு
    இனிய நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி மேடம்.

      Delete
  8. வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள் கீதா.

    இந்த வாரம் முழுக்க உங்களிடம் இருந்து நிறைய நிறைய விடயங்களை அறிந்து பசியாற ஆவலோடு காத்திருக்கிறேன்.

    உங்களை இங்கு கண்டதிலும் மிக்க மகிழ்ச்சி கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி மணிமேகலா.

      Delete
  9. இனியதோர் ஆரம்பம். இந்த வாரத்தின் பதிவுகளை வாசிக்க ஆவலுடன் நானும்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  10. வணக்கம்
    சிறப்பான அறிமுகத்துடன் அதிரடி ஆரம்பம்....... தங்களின் பதிவுகளை படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.... இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. தங்களுக்கு நல்வரவு!.. தங்கள் பணி சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. இனிய நல்வரவு + நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ப்ரியசகி.

      Delete
  13. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
    தங்கள் ஆசிரியர் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். தங்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

      Delete
  14. இன்னாது.... 199 பதிவுகளா?இம்புட்டு எப்படி...? வாழ்த்துக்கள்.

    www.visuawesome.com

    ReplyDelete
  15. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழி. ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சசி.

      Delete
  16. மூன்றாம் முறையாக தாங்கள் வலைச்சர ஆசிரியராக ஜொலிப்பது எனக்கு ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பெருமை உங்களுக்கே கோபு சார்.

      Delete
  17. சுருக்கமான

    சுவையான

    சுயஅறிமுகம்

    சுத்தமாக

    சுகமாக

    சுகந்தமாக மணக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  18. //முதன்முதலில் என்னை வலைச்சர ஆசிரியராகப் பரிந்துரை செய்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நியமித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் பணிவான நன்றியும் வணக்கமும்.//

    ஆஹா, எனக்கே இது சுத்தமாக இன்று மறந்தே போயும்கூட தாங்கள் இங்கு நினைவூட்டியுள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. ஸ்பெஷல் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் மறந்தாலும் நான் மறக்கலாமா? மறக்கவும் முடியுமா?

      Delete
  19. //இதுவரை 199 பதிவுகள் இட்டுள்ளேன். என்னுடைய இருநூறாவது பதிவை வலைச்சரத்தில் இடுவதை பெருமையாகக் கருதுகிறேன்.//

    QUALITY IS MUCH MORE IMPORTANT THAN QUANTITY எனச்சொல்வார்கள். தங்களின் பதிவுகளில் மட்டும் இவை இரண்டுமே [QUALITY AS WELL AS QUANTITY] கலந்துள்ளது என்பதே விசேஷமான சிறப்பாகும். ’வாரம் ஒரு தரமான பதிவு என்ற தாரக மந்திரம் இனிமை.’ அதுபோலவே அது தொடரட்டும். 200வது சாதனைக்கு என் வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

      Delete
  20. //இதுவரை எழுதி என்ன சாதித்திருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பதிவுலகில் பல நல்ல நட்புகளைப் பெற்றிருக்கிறேன். சிறப்பான பதிவர்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை முன்வைத்து என் எழுத்துத் திறனை மேம்படுத்தும் ஆர்வத்தை வளர்த்திருக்கிறேன். போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் விருதுகள் பெற்று எனக்கென ஒரு இடத்தை உங்கள் அனைவர் மனத்திலும் தக்கவைத்திருக்கிறேன்.//

    இதுபோன்ற சிறப்பான பல சாதனைகளால் அனைவர் மனத்திலும் தாங்கள் ஓர் நிரந்தரமான இடம் பெற்றுள்ளீர்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்கதே !

    என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. போட்டிக்களங்களை உருவாக்கித் தந்த தங்களையே அப்பெருமைகள் சாரும். மிக்க நன்றி சார்.

      Delete
  21. //நானறிந்தவரை எந்த வகையிலும் பிறர் மனம் புண்படாதவகையிலும், என் மனத்துக்கு நிறைவு உண்டாகும் வகையிலும் வாசகர் எதிர்பார்ப்பை ஓரளவேனும் ஈடுசெய்யும் வகையிலும் எழுதியுள்ளேன், எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.//

    உண்மை தான். தங்களின் இந்த நம்பிக்கை + தன்னம்பிக்கை தான் யானையின் தும்பிக்கையாக தங்களுக்கு பலவிதங்களில் பயனளித்து மேலும் மேலும் பல வெற்றிகளைத் தேடித்தரும் என நானும் நம்புகிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.

      Delete
  22. புதியவர்களுக்குப் பழகியவர்களையும் பழகியவர்களுக்குப் புதியவர்களையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி தமிழ்ப் பதிவுகளின் தரத்தையும் பெருமையையும் அடுத்த படிக்கு உயர்த்தும் வலைச்சரத்தின் நன்னோக்கத்துக்கு தங்களின் இந்த வார வலைச்சர ஆசிரியர்பணி நல்லவிதமாகவே அமையட்டும்.

    முதல்நாள் அறிமுகப்பதிவும், படங்களும், சொற்சித்திரங்களும் எளிமையாகவும், அருமையாகவும் அமைந்துள்ளன. பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. தங்களது நீண்ட கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றிகள் பல கோபு சார்.

      Delete
  23. வணக்கம் இனிய தோழி கீதமஞ்சரி!

    வலைச்சரம் மின்னிடும் வாரமிது! உம்மால்
    சிலையதுங் கொள்ளுமுயிர் சேர்ந்து!

    அழகிய அருமையான சுய அறிமுகம்!
    வரைச்சரம் மணங்கமழப் போகிறது!
    யாவும் சிறப்பாக அமைய இனிய நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி இளமதி.

      Delete
  24. அன்பான வாழ்த்துக்கள் கீதா :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஏஞ்சலின்.

      Delete
  25. வாழ்த்துக்கள்! உங்களின் கைவண்ணத்தில் வலைச்சரம் மணக்கும் என்பதில் ஐயம் இல்லை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி சுரேஷ்.

      Delete

  26. இவ்வார வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்கும் தங்களை வருக வருக என வரவேற்று தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  27. இனிய ஆரம்பம். தங்கள் ஆசிரியப் பணி தொடர வாழ்த்துக்கள்! தொடர்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு அகமார்ந்த நன்றி.

      Delete
  28. அட நம்ம கீதமஞ்சரி..வலைச்சரம் மேலும் அருமையாய் இருக்கப்போகிறது இவ்வாரம். :)
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி கிரேஸ்.

      Delete
  29. வாழ்த்துக்கள் தோழி !இவ்வாரம் முழுவதும் தங்களின் ஆக்கங்கள்
    சிறந்து விளங்கட்டும் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்பாளடியாள்.

      Delete
  30. வாழ்த்துக்கள் சகோதரி ...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி மது.

      Delete
  31. வாழ்த்துகள் தோழி

    ReplyDelete
  32. உங்களின் அந்த ஆஸ்திரேலிய விலங்குகள் பதிவை எல்லாம் நோட்ஸ் எடுத்து நிறைக்கு சொல்லிவருகிறேன் அக்கா! பணிசிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பதிவையும் சிலாகித்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு என் அன்பான நன்றி மைதிலி.

      Delete
  33. வணக்கம் சகோதரி
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். சிறப்பானதொரு பங்களிப்பு தங்களுடையதாக அமையப்போவதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து கலக்குங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி பாண்டியன்.

      Delete
  34. அன்பின் கீதா மதிவாணன் - வலைச்ச்ர ஆசிரியராக மூன்றாம் முறை பொறுப்பேற்று பதிவுகள் அறிமுகத்திற்கு அடி போட்டிருக்கிறீர்கள் - அனைத்து அறிமுகங்களூம் அருமையாகத் தான் இருக்கும் - தாங்கள் கை தேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே !

    சற்றே பணிச்சுமை - நிச்சயம் அத்தனை அறிமுகங்களையும் படிப்பேன் - மகிழ்வேன் - மறுமொழியும் இடுவேன், பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. என்மீது நம்பிக்கை வைத்து மூன்றாம் முறையாக வலைச்சரப் பொறுப்பினை அளித்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். மிக்க நன்றி ஐயா.

      Delete
  35. வாழ்த்துக்கள், இந்த வார ஆசிரிய பணி சிறப்பாக அமையவாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. நல்வரவு ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கின்றேன்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  37. அன்பிற்கினிய சகோதரி...
    வருக வருக..
    இன்மண பூக்களால் அழகிய சரம் தொடுத்திடுங்கள்.
    உங்களின் 200 வது பதிவுக்கும் 3 வது முறையாக ஆசிரியர் பணிக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    ===
    தங்களின் நெடுநல்வாடை பதிவுகள் இன்னும் நெஞ்சில்
    நிலைகுத்தி நிற்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மகேந்திரன்.

      Delete
  38. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
    என் உடல் நலம் கவனித்துக் கொள்ள சொன்ன உங்கள் அன்புக்கு நன்றி கீதமஞ்சரி.
    நலமாகி வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி மேடம்.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது