07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 28, 2014

வரும் வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் மு.கீதா அவர்கள்!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே,
இந்த வாரத்து வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த Thillaiakathu Chronicles வலைப்பூ பதிவர் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா அவர்களின் வலைச்சர பதிவில் காட்டிய ஆர்வமும், பங்களிப்பும் மிகுந்த பாராட்டுக்குரியது. 

இவர் மொத்தம் ஏழு பதிவுகள் எழுதி, 1350 பக்கப்பார்வைகளுக்கு மேல் பெற்று சுமார் 300 மறுமொழிகள் பெற்று, நம்மிடமிருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறார். இவரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.


நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க தென்றல் வலைப்பூ http://www.velunatchiyar.blospot.com பதிவர் மு.கீதா அவர்களை அழைக்கின்றோம். இவரது வலைப்பூவில் மொத்தமாக 300 படைப்புகளுக்கு மேல் கவிதைகள் ,கட்டுரைகள்,அனுபவங்கள்,சமுகம்,போன்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.

எம்.ஏ[தமிழ்],எம்.ஏ[பொருளியல்],எம்ஃபில்,எம்.எட். படித்த இவரைப் பற்றி சொல்வதென்றால், அரசுப்பள்ளியில் ஆசிரியராக 26 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊர் அரியலூர். தற்போது வசிப்பது: புதுக்கோட்டை... இவரது கவிதை ,கட்டுரைகள்,கதைகள் மாத ,வார இதழ்களில் வெளி வந்துள்ளன. இவர் எழுதியுள்ள வேலுநாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள் என்ற ஆய்வு நூல்,விழிதூவிய விதைகள் என்ற கவிதை நூல் ஆகிய இரு நூல்கள் வெளிவந்துள்ளன. 


கின்னஸ் ரெக்கார்டுக்காக 77மணிநேரம் தொடர்ச்சியாக கவிஞர்கள் இணைந்து கவிதை படித்த நிகழ்வில், சிறப்பாக கவிதை பாடியதற்காக “புரட்சித்தென்றல்”விருது சென்னை தென்றல் சமூக நல அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது .

பைந்தமிழ் அறக்கட்டளையின் நிர்வாகியாக உள்ள இவர், பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார். குழந்தைகளையும், புத்தகங்களையும் நேசிக்கும் இவர் தேவதா தமிழ் என்ற பெயரில் முகநூலில் படைப்புகள் எழுதி வருகிறார்.

மு.கீதா அவர்களை வருக.. வருக... என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நல்வாழ்த்துக்கள் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா..
நல்வாழ்த்துக்கள் மு.கீதா

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...

26 comments:

  1. Replies
    1. என்னை வலைச்சரம் கோர்க்க அழைத்தமைக்குமனம் நிறைந்த நன்றி உங்களுக்கும் ,சீனா அய்யாவிற்கும்

      Delete
  2. கீதமஞ்சரி அக்காவை தொடர்ந்து தோழி கீதா, இப்போ மற்றுபடி நம்ம இன்னொரு கீதா அக்கா!!! சீனா சார் இப்படி வலைச்சரத்தோட என்னை கட்டிபோட்டுடீங்களே:))
    @ தில்லையகம் சகாஸ்
    வாழ்த்துகள் சகாஸ் சிறப்பான பணி!!:)
    @கீதா அக்கா
    அக்கா உங்கள் வரவு நல்வரவாகுக:)

    ReplyDelete
    Replies
    1. புதுக்கோட்டை உங்க ஊரு போல சகோதரி! இந்த வாரத்து சகோதரி கீதா!!!!!

      Delete
    2. வணக்கம் மைதிலி....மிக்க நன்றி...மா...

      Delete
  3. ஆஹா ஹாட் ட்ரிக் ஃபார் கீதா......சகோதரி கீத மஞ்சரி, எங்கள் தளத்து கீதா....இப்போ தென்றல் சகோதரி கீதாவா.....

    சகோதரி தென்றல் கீதா வருக வருக! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! கலக்குங்கப்பா!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்..நானும் இதைத்தான் நினைத்தேன்....என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்ய எண்ணியுள்ளேன்...உங்களின் ஆதரவுகளோடு...நன்றி

      Delete
  4. வருக... வருக ஆசிரியரே... அசத்துங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார் ..என்.வலைப்பூ ஆசிரியரான உங்களுக்கே என் முதல் நன்றி....

      Delete
  5. "வலைச் சரம்" ஆசிரியர் பொறுப்பு, தரும் உங்களுக்கு சுறுசுறுப்பு.
    சகோதரி கீதா அவர்களே, ஆரத்தி எடுத்து வரவேற்கிற்றோம் ! வாருங்கள்! நற்கருத்தை தாருங்கள். நன்றி!
    புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்

      Delete
  6. வாழ்த்துக்கள் துளசிதரன் சார் மற்றும் சகோதரி கீதா!

    நல்வரவு தென்றல் கீதா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  7. சென்ற திங்கள் முதல் இந்நாள் வரை வலைச்சரம் ஆசிரியர் பணியை நண்பர்களாய் இருந்து சிறப்புற நிறைவேற்றி விடைபெற்றுச் செல்லும் வலைப்பூ பதிவர் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா இருவருக்கும் மனமார்ந்த நன்றி!

    நாளை முதல் பொறுப்பேற்க வரும் புதுகை ஆசிரியை தென்றல் மு.கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! நாம் எல்லரும் சேர்ந்து வரும் சகொதரி கீதாவையும் கலக்க வைச்சுருவோம்! கலக்கிடுவாங்க!

      Delete
    2. என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை அளித்த உங்களுக்கு மிக்க நன்றி சார்.

      Delete
  8. வருக சகோதரி,

    கலக்கலான வாரத்திற்கு நன்றிகள் தில்லையகம் துளசி அய்யா மற்றும் கீதா மேமுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மது! மது என்ன இது ? இப்பத்தானே நன்றி நவின்றீர்கள்! அப்புறம் ஐயா ஆக்கிடீங்க்ளே தோழர் னு சொல்லிட்டு! நாங்க வேற மதுன்னு சொல்லலாமானு வேற கேள்வி கேட்டு வைச்சோம் ....முந்தின பக்கத்துல!....

      Delete
    2. மிக்க நன்றி சகோ....

      Delete
  9. கடந்தவார நண்பர் & நண்பி அவர்களுக்கு வாழ்த்துக்களும், சகோதரி மு.கீதா அவர்களுக்கு வரவேற்பும்.
    அன்புடன்
    கில்லர்ஜி
    அபுதாபி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்...மனம் நிறைந்த நன்றி..

      Delete
  10. சிறப்புறப் பணியாற்றியமைக்கு வாழ்த்துகள் துளசிதரன் சார். :)

    இனி வரும் கீதா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சார்...
    வாழ்த்துக்கள் மு.கீதா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்மா .....மிக்க நன்றி..

      Delete
  12. Thulasidharan V Thillaiakathu அவர்களின் பணி சிறப்பாக இருந்தது.
    மு.கீதா அவர்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.


    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்..மனம் நிறைந்த நன்றி...

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது