உப்புமா கேசரி ஆகும் கதை....
பொதுவா எல்லோர் வீட்லயும் உப்புமா செய்வாங்க. ரவாவுல, அரிசியில, கோதுமையில் இன்னும் விதவிதமா உப்புமா செய்வாங்க.
ஆனா நமக்கு உப்புமா பிடிக்காதுன்னு வைங்க.. அதுல ரெண்டு முந்திரி பருப்பு, திராட்சை அப்புறம் சக்கர எல்லாம் போட்டு கொஞ்சம் கலர் பவுடர தூவி அதுக்கு கேசரின்னு பேர் வச்சு தருவாங்க.
நாமளும் அதுக்கு கேசரிங்கற பேர் வச்சதால இனிப்புன்னு நினைச்சுக்கிட்டு சாப்புடுவோம். :)
அப்படித்தான் நானும் என் பதிவு எல்லாமே உப்புமா. இருந்தாலும், பாராட்டி பின்னூட்டம் போடுறதுல கேசரி இல்லன்னா சில பார்ட்டிங்களுக்கு அல்வாவே கொடுத்துருக்கேன்.. அவங்களும் இவன் ரொம்ப நல்லவனா இருக்காண்டா... என்னத்த எழுதுனாலும் படிக்குறான்னு நெனச்சுக்கிட்டு அநியாயத்துக்கு மொக்க போட்டாலும் (இம்சை ரவி மாதிரி) சில நேரம் முடியாம நல்ல பதிவு கிடைச்சிடும். இந்த மாதிரி நல்ல பதிவு படிக்கணும்ங்கறதுக்காகவே எல்லோரோட பதிவயும் படிக்க வேண்டியிருந்தது..
முதல்ல பதிவுலகுக்கு வந்து முதல் பதிவு எழுதி வச்சப்புறம் பின்னூட்டத்துல யாரயுமே காணோம். அப்புறமா போனாப்போகுதுன்னு நாட்டம ஷ்யாம் வந்து முதல் பின்னூட்டம் போட்டாரு. அதுக்கப்புறம் காணாம போன ஆளுதான் (அவரு பதிவு பேரு - தினமும் என்னை கவனி) நம்ம பக்கம் இன்னிவரைக்கும் எட்டிப்பாத்துக்கறேன். முதல் பின்னூட்டம் போட்ட வகையில நாட்டாமைக்கு என் நன்றிகள்... :)
நான் தனியா எல்லா பதிவையும் படிச்சு எழுதப்போறேன் போலருக்குன்னு நினைக்காதீங்க. சிட்டிசன்ல அஜீத் சொல்றாமாதிரி நான் தனியாளு இல்லன்னு கத்த ஆசைதான் :)
உண்மைதான்... இனிமே அடுத்த பதிவுலேந்து ஒரு வாரம் உங்களை இம்சைபடுத்த நான் தனியா வரப்போறதில்ல.
என்கூட கூட்டு, பொறியல், அவியல் எல்லாம் செய்யப்போறது....
அடுத்த பதிவுல பாத்துக்குங்களேன்....
[பி.கு. : என்னடா... உப்புமா ஆரம்பிச்சு அவியல்ல முடிக்கறானேன்னு யோசிக்காதீங்க... நான் எல்லாத்திலயும் ஒரு தொடர்ச்சி இருக்கணும்னு எதிர்பார்க்குறேன் :)]
காதலுடன்
சென்ஷி
|
|
அண்ணே சத்தியமா உப்புமாதான கிண்ட வந்தீங்க.. கிண்டிருங்க.. அது ரவால செஞ்சதோ இல்லாட்டி கோதுமைல செஞ்சதோ எங்களுக்குத் தெரியாது.. துண்டு போட்டு இடம் பிடிச்சு தட்டைக் கீழ வைச்சு சமையல்கட்டு பக்கம் ஆசையா பாத்துக்கிட்டிருக்கோம்.. சீக்கிரமா வந்து உப்பாமாவை போடுங்க.. அப்படியே கொஞ்சம் அந்த 'சீனி' டப்பாவையும் சேர்த்து எடுத்திட்டு வாங்க.. உப்புமால சீனியைக் கொட்டி அப்படியே களி மாதிரி பிசைஞ்சு சாப்பிட்டா எப்படியிருக்கும் தெரியுமாண்ணேன்.. உங்க உப்புமாவைச் சாப்பிட்டுட்டுச் சொல்றேன்..
ReplyDeleteவாரா வாரம் வரும் ஆசிரியர்கள் இப்படி தன் விளக்கம் தந்து படிப்பவர் நேரத்தை வீணாக்காமல் நேரடியாக பதிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் செல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன் :(
ReplyDeleteவாங்க உண்மைதமிழன்...
ReplyDeleteசாரி அனானி...
எல்லோருக்குமே என்னைத்தெரியும் சொல்லமுடியாதில்ல. அதான் ஒரு வாரத்துல போடுற பதிவுல ஒண்ண நாங்க எடுத்துக்கறோம்...
இத நாங்க தலையங்கம்ன்னு சொல்வோம்..
உங்க தலையெழுத்துன்னும் சொல்லலாம் :))
சென்ஷி
இந்த வாரம் முழுக்க நன்றாக கிண்ட வாழ்த்துக்கள்...!!!!!!!!!!!!
ReplyDelete//செந்தழல் ரவி said...
ReplyDeleteஇந்த வாரம் முழுக்க நன்றாக கிண்ட வாழ்த்துக்கள்...!!!!!!!!!!!! //
thanks ரவி
சார் எ'நக்கும்' ஒரு பிளேட்:-)
ReplyDelete//அபி அப்பா said...
ReplyDeleteசார் எ'நக்கும்' ஒரு பிளேட்:-) //
உப்புமாவுக்கு இப்படி ஒரு மவுசா... :)