07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சென்ஷி. Show all posts
Showing posts with label சென்ஷி. Show all posts

Saturday, April 14, 2007

உயிர் எழுத்துக்கள் மூன்று

தலைப்பை ஆசான் டைப்படித்ததும் கோவிஞ்சாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

"வாத்யாரே.. நீ பெரியாளாக்கீறேப்பா... இவ்ளோ நாளா நான் தமிழ்ல உசுர் எழுத்து அதிகமா இருக்குதுன்னு நெனெச்சுக்கிட்டிர்ந்தேன்...
உனக்கெப்படி இப்படி"

"கோயிஞ்சாமி, தமிழ்ல நிறைய்ய இலக்கியங்கள் இருக்குது. ஆனா நம்மாளுங்க திருக்குறளையும், ராமாயணத்தையும் விட்டா உதாரணம் காட்ட வேற எதையும் தொட மாட்டேங்கிறாங்க."

"நீ என்னப்பா... எப்பவுமே தாடிய விட்டுக்கொடுக்காம பேசுவ.. இப்போ இப்படி ஜகா வாங்கிட்ட?"

"கோயிந்த், நீ தப்பா புரிஞ்சுக்கிட்டே... திருக்குறள படிக்குற எல்லோருமே அத்தோட நிறுத்தாம பண்டைய இலக்கியங்களையும் படிக்கணும்னு சொல்ல வர்றேன்"

"நீ வேற வாத்தியாரே, நம்ம இம்சை ரவி ஏற்கனவே தேவையில்லாத பாடத்த நடத்துன வாத்தியார் மேல ஆசிட் ஊத்தனும்னு அலையறாரு. இந்த நேரத்துல நீ வேற இப்படி பழச பத்தி ஆரம்பிச்சா ஆசிட், பினாயில்ன்னு கைக்கு கிடைச்சத எடுத்துக்கினு வந்திடப் போறாரு.."

"ஒரு விஷயம் தெரிஞ்சுக்கனும் கோயிந்த், எந்த ஒரு விஷயத்தையும் வெளியில இருந்து பாக்குறப்ப அது கஷ்டமாத்தான் தெரியும். ஆங்கிலத்தை உலகமொழியா மாத்துனதுல தமிழோனட பங்கு இல்லைன்னு நினைக்குறியா.. !

நாம நம்ம இலக்கியத்த வளர்க்காம வேற யாரு செய்வா?

நம்ம இலக்கியத்துல இல்லாத காதலையா நீ சேக்ஸ்பியரோட ஹாம்லெட்ல தேடப்போற... இல்லை நம்ம ராஜாக்கள் வீரத்தை விட நெப்போலியன் எந்த விதத்துல பெரியவனா காட்டப்போறே..?"

"அய்யோ மன்னிச்சுக்க வாத்தியாரே... தமிழன் வாழ்க..
இப்போ ஒத்துக்குறியா.. சரி இன்னிக்கு எந்த பதிவு சொல்லப்போறேன்னு இவ்வளவு பில்டப்பு..."

'அடப்பாவி.. நான் உணர்ச்சிவசப்பட்டு பேசறத கிண்டல் பண்றியா..

அருணா ஸ்ரீநிவாசனோட அலைகள்ங்கற பதிவுல கேள்விகள் ஆயிரம்ங்கற படைப்ப படிச்சுப்பாரு.. அப்பத்தான் உனக்கு புத்தி வரும்.."

"அதுக்கில்ல வாத்தியாரே... தமிழ வளர்க்கணும்ன்னு சொல்றப்ப ஒரு விஷயம் புரியல எனக்கு.. அத்த யார் அழிக்கப்போறா, நாம வாழ வைக்கிறதுக்கு.."

"இதுக்கு நான் பதில் சொல்றதவிட ஜெசிலா மேடம் எழுதுன தமிழ் சாகடிக்கப்படுகிறதாங்கற பதிவு படிச்சா உனக்கே எல்லாம் புரியும்.."

"சரி ஆசான்.. எனக்கும் இலக்கியத்துமேல ஆச வந்து அத்த படிக்கனும்னு வை. யாராண்ட போறது. எதுனா ஐடீயா கொடு.... இத்த சாக்கா வச்சிக்குனு உன்னோட கிளாஸ்லயே 5வதா என்னயும் உக்கார வச்சிடாதே..!"

"சொல் ஒரு சொல் ங்கற பதிவுக்கு போய் எல்லா பதிவயும் படி.. பிறமொழி சொல் கலப்பில்லாம எத்தனை வார்த்தைகளை நாம பேச முடியும்ன்னு வகைப்படுத்தியிருக்காங்க...

இது 4 பேர் கொண்ட குழு பதிவு... இவங்களோட பதிவுல செருங்கற பதிவு நகைச்சுவையா கருத்து சொல்றாமாதிரி அமைச்சிருப்பாங்க.. உனக்கு ஏதாவது இலக்கியத்தப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா இவங்க பதிவுல ஒரு பின்னூட்டம் போடு.. பதில விக்கிப்பசங்க மாதிரி தேடித்தருவாங்க.."

"எனக்கு கூட ஒரு இலக்கியப்பாட்டு தெரியும் வாத்யாரே...
ஓராயிரம் யானை கொன்றால் பரணின்னு ஒரு பாட்டு கேட்டிருக்கேன், இதுக்கு என்ன அர்த்தம், பரணின்னு பேர வைக்க 1000 யானைய கொல்லணுமா?"

"அதுக்கு அர்த்தம் அது இல்ல கோவிந்த்.. அந்த காலத்துல போர்ல ஜெயிச்ச மன்னர்களை புகழ்ந்து கவிஞர்கள், பாணர்கள்லாம் பாட்டு பாடி பரிசு வாங்கிப்போவாங்க.. அப்படி ஒரு கவிஞர் எழுதுன கலிங்கத்துபரணிங்கற நூல்ல மன்னன் வீரத்தோட சண்டைபோட்டு ஜெயிச்சதுக்காக இந்த பரணிப்பாட்டு எழுதினாங்க...."

"பொன்ஸ் அக்கா ஒரு யானைக்கு அடிப்பட்டாலே வருத்தப்படுவாங்க.
1000 யானய கொன்னது தெரிஞ்சா என்ன செய்வாங்க...!

நான் மறந்துட்டேன் பாத்தியா... அதென்ன உயிர் எழுத்துக்கள் மூன்று.. அத்த சொல்லு வாத்திய்யாரே.."

"அது ஒண்ணுமில்ல கோவிந்த்... யோசிப்பவர் ஸ்டைல்ல நானும் ஒருபதிவு போடலாம்ன்னு நினைச்சேன். அதான் இப்படி"

"எப்படி?"

"உயிர்-ங்கற வார்த்தையில இருக்குற எழுத்து எத்தனை?"

"மூணு"

"அதான் தலைப்பு.."
மேலும் வாசிக்க...

சித்திரை திருநாள்

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வலைச்சரம் சார்பாக எங்கள் ஆசிரியர் குழுவினரின் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

சென்ஷி
மேலும் வாசிக்க...

Friday, April 13, 2007

சில சிறந்த சிறு கதைகள்...

மன்னிக்கவும் நண்பர்களே...

கடும் அலுவலக பணியின் காரணமாய் என் தமிழ்மண பணியினை சரிவர செய்ய இயலாமல் சென்றதற்கு என்னை மன்னிக்கவும்..

எனக்கு சிறுகதை ரொம்ப பிடிக்கும். அநாவசியமா வர்ணனை இல்லாம கருத்தை சரியா பதிய வைக்கிற முயற்சி எல்லோருக்கும் வரும்ன்னு எனக்கு தோணல. அப்படி என்னை பாதிச்ச சில கதைகள இங்க பட்டியல் போட்டிருக்கேன்.

முதலில் சேவியர் இவரது ஏலி ஏலிலெமா சபக்தானி கதையை திண்ணையில் படித்து இருக்கிறேன்.. இது முதல் பரிசு பெற்ற கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பக்க வடிவமைப்பு, நிறம் மிக நேர்த்தியானது. அதே போல் இவரது கடவுள் கேட்ட லிப்ட் கதையும் எனக்கு பிடித்தமானது. இவரது பதிவுகளில் கதைகளில், கவிதைகளில் மயங்குவோர் கண்டிப்பாக திரும்பியும் வருவார்கள்.

அடுத்து சத்யராஜ்குமார் இவரது அமெரிக்க சிறுகதைகளும் பிரபலம். எனக்கு பிடித்த பக்கங்களில் வருபவை... எளிமையாய் விஷயத்தை அருகில் இருந்து பார்ப்பது போல் இருக்கும் இவரது கதைகளில்..

அப்புறம் மோகன் தாஸ், இவர் பக்கத்தை நான் கூகிளில் பார்த்தது தபூசங்கரின் கவிதைகளுக்காக.. ஆனால் மனிதர் சிறுகதைகளில் அடி பின்னியிருந்தார். இவரது நாயகி, என்றும் மாறியதில்லை. யாஹூ குழுமத்தில் போட்டோ போட்டிருந்தார். சரி நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள ஒரு நபர். அநியாயத்துக்கு புரியாத வண்ணம் (எனக்கு) கிரிப்டோ கிராஃபி, ஜல்லி போன்ற விஷயங்களை அறிமுகப்படுத்தியவர்.


அப்புறம் எங்க வாத்தியார்.... என் வலையுலக முதல் நண்பர், குரு எல்லாமே... எங்களை கிளாஸ்ல சேத்துக்கிட்டு எங்க அதகளத்தையும் பொறுத்துக்கிட்டு புது விஷயங்களை கத்துக் கொடுக்கறவர். அவரோட கிளாஸ்ரூம்ல எனக்கு இடம் இருக்குங்கறது எனக்கு சந்தோஷமான விஷயம். இவரும் சிறுகதை எழுத்தாளர்ன்னு சொன்னா என் கிளாஸ்மேட்ஸ் என்னை அடிக்க வருவாங்க. கிளாஸ்ரூமுக்கு வர்றதால சிறுகதைய மறந்துட்டாருன்னு நினைக்கிறேன்.. மறுபடியும் அவர் எழுதணும்னு ஆசைப்படுறேன்.


அடுத்து சஞ்சீத்... பெங்களூர் வாசி.. இவரும் சிறுகதை எழுத்தாளர். இவருடைய கதைகள் விமர்சனம் செய்வது எளிதல்ல. இவரது என் பெயர் சித்ரா கதையை படித்த அன்று தூக்கம் வராமல் இருந்திருக்கிறேன்..

இப்போது இவர் எழுதுகிறாரா.. இல்லையா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

இன்னும் நிறைய பேர் சிறுகதை எழுதறாங்க..

ஜோசப் சார், உஷாக்கா, வெட்டிபாலாஜி, பொன்ஸ், முத்துலட்சுமி.. இன்னும் நிறைய பேர சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல. மன்னிச்சுக்குங்க..

இன்னும் உங்களுக்கு தமிழ் கதை படிக்க ஆசைன்னா இந்த லிங்க தட்டுங்க.

இது மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டத்துல பழைய கதைகள், தொடர்கள், இலக்கிய பாடல்கள்ன்னு வரிசைப்படுத்தி வச்சிருக்காங்க. நான் இதுல தான் முதன் முதல்ல பொன்னியின் செல்வன் படிச்சேன்.. அழகா pdf செஞ்சு வச்சிருக்கறதால ப்ரிண்ட் அவுட்டும் எடுக்க முடியும்..

படிச்சு பாத்துட்டு ஜமாயுங்க...........


அன்புடன்

சென்ஷி
மேலும் வாசிக்க...

புத்தக விமர்சகர்கள்

"மன்னிச்சுக்க வாத்யாரே" என்றபடி உள்ளே நுழைந்த கோயிந்தசாமியை வாத்தியார் முறைத்தார்.

"நான் என்ன பண்றது வாத்யாரே.. டிராபிக்ல மாட்டிக்கினேன்.. அத்த வுடு.. இன்னிக்கு நான் படிச்ச ஒரு மேட்டர் செம்ம சூப்பரா இருந்ததுப்பா.."
"அப்படியா.. யார் அது..."

"மதியழகன் சுப்பையான்னு ஒரு பதிவர், ரொம்ப அருமையா 'அடுத்தவர்களின் உழைப்பை பயன்படுத்தாமல் லாபத்தை பெறுவது எப்படிங்கறத தமிழாக்கம் பண்ணியிருக்காரு.. படிக்கச்சொல்ல செம்மயா இருந்தது. தெரியுமா?"

"சரி.. அவ்வளவுதான் உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்.. மும்பையிலிருந்து எழுதுற இந்த பதிவரோட கவிதைகள் வித்தியாசமான படிமங்களை கொண்டது. அதிலும் இவர் ஹிந்தியிலேந்து மொழிமாற்றம் செஞ்சு கதைகளை கொடுப்பாரு. சிட்டுக்குருவிங்கற கதை ரொம்ப நல்லா இருக்கும்"

"சரி தல... இந்த மாதிரி வெளிநாட்டு கதைய தமிழ்ல சொல்றவங்க வேற யாரெல்லாம் இருக்காங்க"

"இதுக்கு நீ சுருக்கமா யாரெல்லாம் புத்தக விமர்சனம் பண்ணுவாங்கன்னு கேட்டுருக்கலாம்..

புரட்டிப்போட்ட புத்தகங்கள் ங்கற பதிவுல மா.சிவகுமார், யோசிப்பவர், வசந்த் இவங்க மூணுபேரும் குழு பதிவரா இருந்து அவங்க படிச்ச சிறந்த புக்ஸை பத்தி ரொம்ப சுவாரசியமா விமர்சனம் செய்றாங்க... அதுல ஹைலைட் பதிவு வெற்றிக்கு ஏழு வழிகள்ங்கறது, இங்கிலீஷ்ன்னு இல்லாம தமிழ் புக்ஸைப்பத்தியும் விமர்சனம் இங்கே கிடைக்கும். நிறைய புக்ஸைப் பத்தி தெரிஞ்சுக்க இது ஒரு சுவாரஸ்யமான பதிவு... அப்புறம் பாலபாரதி தன்னோட படித்ததில் பிடித்ததுலயும் இதே வேலைய செய்யறாரு.. அவரோட ஸ்டைல்ல..

மலையாளக்கரையோரத்தப் பத்தி ஆசிப்மீரான் கலக்குறாரு.. இப்படி எல்லோருமே ஒரு ஸ்டைல் வச்சிருக்காங்க்.

சினிமாவுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தவிட இவங்க புக்ஸுக்கு கொடுக்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம்"

'உண்மைதான் வாத்யாரே.... இதுல இன்னொரு முக்கியமான விமர்சனம நந்தாங்கறவரு இன்னிக்கு தமிழ்மணத்துல வந்திருக்கு.. சினிமாவ விமர்சனம் பண்றதுக்கு எது அளவுகோலுன்னு நல்லா கேட்டாருப்பா ஒரு கேள்விய... சூப்பர் பதிவுப்பா.. அப்பால நாம சினிமா கண்டுக்கலனு யாரும் சொல்லிடக்கூடாது பாரு.. அதனால தான் இது.. அக்காங்.."
மேலும் வாசிக்க...

Tuesday, April 10, 2007

லிவிங்ஸ்மைலுக்கு வாழ்த்துக்கள்

கணிணியில் அன்றைய தினத்தந்தி செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்த ஆசான் கோயிந்ஞ்சாமியின் வருகையில் நிமிர்ந்தார்.

"வா கோயிந்தசாமி... விஷயம் தெரியுமா? நம்ம பதிவர்ல ஒருத்தவங்க சினிமாவுல நடிக்கப்போறாங்க"

"யார் நம்ம தலயா?.... இன்னா வேஷம்பா... சும்மா ஆளு ஹீரோ கணக்கா கீறாருன்னு மெய்யாலுமே சினிமாவுல பூட்டாரா.. இனிமே பதிவெல்லாம் எழுதுவாராமா... நான் அர்ஜீண்டா போயி ஒரு சலாம் போட்டுட்டு வந்துடறேன்"

"டேய்... அது நம்ம தலயும் இல்ல, வாலுமில்ல.. லிவிங் ஸ்மைல் வித்யா தான் அது.. "கருவறை பூக்கள்' ன்னு ஒரு படத்துல நடிக்குறாங்க.. இரு...
தினத்தந்தியில என்ன போட்டுருக்கோ அதை அப்படியே படிக்குறேன் கேளு..

"வாழ்த்து சொல்லிடுவோம் வாத்தியாரே"

'சொல்லிட்டா போச்சு... வாழ்த்துக்கள் வித்யா.. அப்புறம் கோயிந்து இவங்க எப்பவுமே வித்தியாசமா கோபமா எழுதுறவங்க.. அவங்க எழுத்துல உனக்கு ரொம்ப பிடிச்சதா ஒரு பதிவு சொல்ல சொன்னா எதை சொல்வே"

"இன்னா வாத்யாரே இப்படி சொல்லிட்டே.... அந்த மரணம் கவித எவ்ளோ நல்லா இருந்தது.. தெரியுமா... "

"அப்பால இன்னிக்கு எதுனா ஸ்பெசல் இருக்குதா வாத்யாரே"

"ஏன் இல்லாம... காட்டாறுன்னு ஒருத்தர் வந்திருக்காங்க.... பதிவும் தலைப்பு மாதிரியே காட்டமா இருக்கும்ன்னு உள்ள போனா அதிர்ச்சிதான் இருக்கும். ஒரு பதிவு எழுதி அது சம்மந்தமா ஒரு அழகான கவிதையையும் தர்றாங்க..
அதுல எனக்கு பிடிச்சது டி.வி.யைப் பத்தி எழுதுனது இந்த கவிதை...

"ஆனாலும் நம்மள ஓவரா சிந்திக்க வைக்கிறது இந்த அண்ணாச்சிதான்... ஒரு கவுஜ எழுதுனா.. அவரு என்ன எழுதியிருக்குறாருன்னு நாம சிந்திக்குறதுக்குள்ள அது புரிஞ்சவங்க பதில கவுஜயா போட்டுடுவாங்க... அதுல தமிழ்மணத்த பதிவுகளால வாழ வைக்குறதுல முக்கியமான ஆளு இவரு"

"உண்மைதான் கோயிந்து... உன்ன மாதிரி எங்க வம்பு கிடைக்கும்ன்னு அலையறவங்களுக்கு எல்லாம் அவர்தான் குரு"

"அப்பால யாழினி அத்தன், சில்வண்டு, கார்மேக ராஜா இவங்க கவுஜய கூடத்தான் நான் படிக்குறேன்.. நல்லா எழுதுறாங்கப்பா கவுஜய."

"ஆனா வாத்தியாரே... நான் காதல் கவுஜ எழுதுறவங்களை பத்தி சொல்லலன்னா நல்லா இருக்காது.."

"அத எழுதாதவங்க யாராச்சும் இருந்தா சொல்லு.. அவங்க பேர சொல்வோம்"
மேலும் வாசிக்க...

Monday, April 9, 2007

உப்புமா கேசரி ஆகும் கதை....

பொதுவா எல்லோர் வீட்லயும் உப்புமா செய்வாங்க. ரவாவுல, அரிசியில, கோதுமையில் இன்னும் விதவிதமா உப்புமா செய்வாங்க.

ஆனா நமக்கு உப்புமா பிடிக்காதுன்னு வைங்க.. அதுல ரெண்டு முந்திரி பருப்பு, திராட்சை அப்புறம் சக்கர எல்லாம் போட்டு கொஞ்சம் கலர் பவுடர தூவி அதுக்கு கேசரின்னு பேர் வச்சு தருவாங்க.

நாமளும் அதுக்கு கேசரிங்கற பேர் வச்சதால இனிப்புன்னு நினைச்சுக்கிட்டு சாப்புடுவோம். :)

அப்படித்தான் நானும் என் பதிவு எல்லாமே உப்புமா. இருந்தாலும், பாராட்டி பின்னூட்டம் போடுறதுல கேசரி இல்லன்னா சில பார்ட்டிங்களுக்கு அல்வாவே கொடுத்துருக்கேன்.. அவங்களும் இவன் ரொம்ப நல்லவனா இருக்காண்டா... என்னத்த எழுதுனாலும் படிக்குறான்னு நெனச்சுக்கிட்டு அநியாயத்துக்கு மொக்க போட்டாலும் (இம்சை ரவி மாதிரி) சில நேரம் முடியாம நல்ல பதிவு கிடைச்சிடும். இந்த மாதிரி நல்ல பதிவு படிக்கணும்ங்கறதுக்காகவே எல்லோரோட பதிவயும் படிக்க வேண்டியிருந்தது..

முதல்ல பதிவுலகுக்கு வந்து முதல் பதிவு எழுதி வச்சப்புறம் பின்னூட்டத்துல யாரயுமே காணோம். அப்புறமா போனாப்போகுதுன்னு நாட்டம ஷ்யாம் வந்து முதல் பின்னூட்டம் போட்டாரு. அதுக்கப்புறம் காணாம போன ஆளுதான் (அவரு பதிவு பேரு - தினமும் என்னை கவனி) நம்ம பக்கம் இன்னிவரைக்கும் எட்டிப்பாத்துக்கறேன். முதல் பின்னூட்டம் போட்ட வகையில நாட்டாமைக்கு என் நன்றிகள்... :)

நான் தனியா எல்லா பதிவையும் படிச்சு எழுதப்போறேன் போலருக்குன்னு நினைக்காதீங்க. சிட்டிசன்ல அஜீத் சொல்றாமாதிரி நான் தனியாளு இல்லன்னு கத்த ஆசைதான் :)

உண்மைதான்... இனிமே அடுத்த பதிவுலேந்து ஒரு வாரம் உங்களை இம்சைபடுத்த நான் தனியா வரப்போறதில்ல.

என்கூட கூட்டு, பொறியல், அவியல் எல்லாம் செய்யப்போறது....

அடுத்த பதிவுல பாத்துக்குங்களேன்....

[பி.கு. : என்னடா... உப்புமா ஆரம்பிச்சு அவியல்ல முடிக்கறானேன்னு யோசிக்காதீங்க... நான் எல்லாத்திலயும் ஒரு தொடர்ச்சி இருக்கணும்னு எதிர்பார்க்குறேன் :)]

காதலுடன்

சென்ஷி

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது