07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 30, 2007

சுவாரசியமானவர்கள்

புதுசா வரவங்கள்ள [நான் எழுதவந்தே ஆறுமாசமாகல ]
என் கண்ணுக்குப்பட்ட சில பதிவுகளைக் குறிப்பிடுகிறேன்..சிலவற்றை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கலாம்..சிலவற்றை நீங்கள் கடந்துபோயிருக்கலாம்.. சிந்தாநதி ஆரம்பித்திருக்கும் முறையால் ஒருத்தருக்கொருத்தர்
நாம் பிடித்ததை அறிமுகப்படுத்திக் கொள்ள வசதியா இருக்கிறது.
நிறைய படிக்கிறேன் சிலவற்றை ஏற்கனவே வந்தவர்கள்
அறிமுகப்படுத்தி விட்டார்கள் உதாரணத்திற்கு ராதாவின் பதிவு.
இன்றைக்கு ஒரு மூன்று புதிய தளங்கள்.


அப்படியா ன்னு ஒருதளம்..அதன் படமே பாருங்க அருமையா இருக்கு.
உலகம் ஒரு சுவாரசியம் அப்படின்னு சொல்லிக்கிட்டே ஆரம்பிக்கறார் அதுல நிஜமாவே சுவாரசியமான வற்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்

உலகத்தில் ஆபத்தான சாலைகளாம் பாருங்க்ளேன் அய்யோ ,,,
மரணத்தை அருகில் பார்த்தவர் இருக்கார் பாருங்க..ஒரு பெட்டியா இரண்டு பெட்டியா பத்து போகியும் தட தடன்னு தாண்டிப்போனா எப்படி இருக்கும் ...நினைச்சுப்பார்க்கவே முடியலயே...

பனிக்கரடியோடு ஒன்னா குளிக்கலாமாம் அது அப்படியே முகத்துக்கு நேரா வந்து அதோட வாயைத்திறந்து கர்கர்ன்னு ஒரு உறுமு உறுமுனா எப்படி இருக்கும்...பாருங்க படத்தை.


கிரிக்கெட் எழுத வந்தேன்ன்னு சொல்லிக்கிட்டு வந்தாலும் நிறைய சென் கதையெழுதி இருக்காங்க போய் படிச்சுப்பாருங்க கொஞ்சம் வாழ்க்கையில் பின்பற்ற கஷ்டமா இருந்தாலும் ஒரு விதமான அறிவுரைக்கதைகள். முயற்சி செய்யலாம் .
இந்த வயசுல படிக்கறதும் மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுப்பதும் மட்டுமே
முக்கியம்ன்னு இல்லாம இப்படி அறிவை விசாலப்படுத்திக்கறது அவசியம்.
வாழ்த்துக்கள் ம்மா.


கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு நம்ம கூட குதுகலமா திருநெல்வேலிக்காரங்க
வந்துருக்காங்க ஒரு எட்டு போய் வந்துருங்க...ஊர் ஊருக்கு ஒரு விசேஷம் சொல்லி இருக்காங்க..சிலது நமக்கும் ஆசையை உண்டாக்குது.

அந்த அல்வா மேக்ரூன் எல்லாம் ஹ்ம்ம்...
அந்த அந்த ஊருல
இருக்கறவங்க கொடுத்து வச்சிருப்பாங்க போல.

அடுத்த பதிவோடு நாளை சந்திப்போம்.

5 comments:

  1. 'அட' ரொம்ப புதுவித முயற்சியா இருக்கே! சரி நீங்க சொல்லிட்டீங்கல... பார்க்காம இருக்கலாமா இதோ இப்பவே போய் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்....அசத்துங்க..

    ReplyDelete
  3. இங்க ரிப்பீட்டே போட்டா கோச்சுக்க மாட்டீங்களே :))

    ReplyDelete
  4. மங்கை சொன்னதுக்கு நானும் ரிப்பீட்டு:-)

    ReplyDelete
  5. ஜெஸிலா ரொம்ப நன்றிப்பா..சொன்னபடி போய் படிச்சு பின்னூட்டமெல்லாம் போட்டு இருக்கீங்க.. குட் குட்.

    மங்கை ..பாருங்க இப்படி போட்டா அடுத்தாள் எல்லாம் அதே ரிப்பீட் சொல்லறாங்க..ரிப்பீட் சொல்லமுடியாத மாதிரி எழுதுங்க இனிமே....

    சென்ஷி ,,துளசி ரொம்ப பிசியா இருக்கீங்களா..ரிப்பீட் சொன்னீங்களா அதான் சும்மா கேட்டேன்..நன்றி உங்களுக்கும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது