கொஞ்சம் ஒற்றுமை
சில சமயம் பார்த்திருக்கீங்களா ஒரே மாதிரியே சிந்திப்போம் அதை அடுத்தவங்களும் அதே மாதிரி யோசித்திருப்பது தெரியாமலே ...ம்...க்ரேட் மென் திங்க்ஸ் அலைக் ..இல்லியா...
அப்படி ஒரு சில பதிவுகளை த் தான் இங்கே குறிப்பிடுகிறேன். இது சிந்தாநதி அவர்கள்; ஆரம்பித்த சாப்பிட வாங்க குழுப்பதிவுக்காக நான் எழுதிய முதல் பதிவு...இதே மாதிரி என் குரு அவங்களும் ஒரு பதிவு போட்டிருக்கறது லேட்டாத்தான் எனக்கு தெரிந்தது. படிச்சுப்பாருங்க ஈஸிதான் அப்படிங்கறதுல ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சம் ஒற்றுமை இருக்கில்ல.
[அவங்க எங்க நான் எங்க சும்மா எதாச்சும் எழுதிக்கிட்டு சேசே]
முதியவர்களைப் பத்தி அந்த வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் சில விஷயம் எழுதி இருக்காங்க .. [வயதாகுதுன்னு சொல்லிட்டேன்னு அடிக்க வராதிங்க ப்ளீஸ் மனதளவில் நீங்கள் எல்லாம் எங்களை விட இளமை யான வங்க ] தமிழில் முதலில் எழுதத்துவங்கிய பெண் வலைப்பதிவர்களில் ஒருவரான இப்போது அதிகம் எழுதாத இவரைப் போன்றவர்களை நான் எழுத வந்து சிறிது காலத்துக்கு எனக்கு தெரிய வே இல்லை. நம்ம துளசி வலைப்பதிவர் சந்திப்பில் தான் சொன்னாங்க அப்புறம் தான் அவங்க பதிவுஎல்லாம் படிச்சுப்பார்த்தேன். அதே பதிவில் பத்மா ,துளசி மற்றும் தாரா இவர்களின் லிங்க் இருக்கு அப்பவே ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்திருக்கிறது.
இப்ப இந்த மாதம் வல்லி எழுதிய பதிவு பார்த்து திரும்ப ஒரு வாதத்தை முதியவர்களை கவனிக்கவேண்டிய நிலையில் இருக்கும் வயதில் இருப்பவர் எழுதி இருக்காங்க .
எப்படி யெல்லாம் யோசிக்கறாங்க பாருங்களேன்.பின்னூட்டத்தில் அருமையான வாதங்கள் இருக்கு ....பதிவோடு அந்த பின்னூட்டங்களையும் உன்னிப்பாகப் படியுங்கள்..
கதை படிக்கறதுங்கறது எல்லாருக்கும் சின்னவயசுல ஒரு கொண்டாட்டமா இருந்துருக்கும்... அவங்கவங்க படிச்சத பத்தி சொல்லி இருக்காங்க பாருங்க.
ஒன்று
இரண்டு
என்னடா இவ எல்லாத்துலயும் அவ பதிவு ஒன்னுத்துக்கும் விளம்பரம் கொடுக்கறான்னு நினைக்காதீங்க...நான் எழுதப்போகும் போது தானே இதெல்லாம் என் கண்ணுல பட்டுது. அதனால தான்.
இவங்க ரெண்டு பேருதும் படிச்சுட்டு அப்புறமும் நான் என்னோட கொசுவத்தியைச் சுத்திட்டுத்தானே ஓய்ந்தேன். ரேடியோ பத்தி நான் ஒரு பதிவு எழுதினேன்[ இங்க என்னோட லிங்க் குடுக்கல பாத்துக்குங்க ] பின்னூட்டத்தில் வந்து கானாப் பிரபா நான் கூட இதே மாதிரி எழுதி இருக்க ன்னு சொன்னாங்க அப்புறம் பார்த்தா இதே மாதிரி நிறைய பேர் கொசுவத்தி சுத்தி இருந்தாங்க..ஒவ்வொன்னும் அருமையானது தான் ... கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும் , அவங்க அவங்க கோணத்துல அவங்கவங்க எழுத்துத் திறமையில் படிக்க நல்லா இருந்தது.
புதுசா வரவங்க எழுதறதுக்கு முன்னாடி இது போல யாராச்சும் எழுதி இருக்காங்களான்னு ஒரு முறை கூகிள் செய்து பார்த்துட்டு அதுல என்ன எழுதி இருக்காங்க நாம் என்ன எழுதப்போறம்ன்னு ஒருமுறை பார்த்துக்கலாம்...இல்லயா எப்படி ஐடியா. :)
|
|
நானே கவனிக்காத பதிவுகளையும் காட்டி இருக்கீங்க முந்தைய பதிவில் கூறப்பட்டுள்ளவற்றில் நான் ஒரு தடவை கூட பார்க்காத பதிவுகள் அறிமுகம் செஞ்சிருக்கீங்க...
ReplyDeleteஇதுக்குத்தான் வலைச்சரம்!!!
கவனிக்கப் படாத தவறவிட்ட பதிவுகள் தான் முக்கியம்.
தட்சிணையா கட்டை விரல்( எல்லாம்) வேணாம் ப்ளீஸ்:-))))
ReplyDeleteதுளசி அக்கா வாங்க
ReplyDeleteசாப்பிட வாங்க பதிவில் உங்களுக்கு நேரம்கிட்டும்போது எழுதுங்க என்று சொன்னதுக்காக இதுவரை ஒரு பதிவும் எழுதாம பட்டினி போடலாமா?
// தமிழில் முதல் பெண் வலைப்பதிவரான //
ReplyDelete?????
// தமிழில் முதல் பெண் வலைப்பதிவரான //
ReplyDelete????
Aruna Srinivasan?? It must be Mathy or Chandravathana. Not Aruna.
"நானே" ன்னா என்ன சிந்தாநதி அவர்களே எல்லாத்தையுமா படிக்கறீங்க உட்கார்ந்து ...எப்படி முடியும்...
ReplyDeleteதவறவிட்ட என்பது சரிதான்...
அனானி தவறான தகவல் குடுத்துவிட்டேனோ ...
இன்னும் கொஞ்சம் விசாரிச்சிருக்கலாமோ..மன்னிக்கவும்.
நானே" என்றது வேறொன்றுமில்லை புதிதாக கண்ணில் படும் பதிவுகளில் குறைந்த பட்சம் ஒரு இடுகையாவது வாசிப்பது என்று வைத்திருக்கிறேன். அப்படியும் தவற விட்டவை பல. அவற்றில் சிலவற்றை நீங்கள் சுட்டிக் காட்டினீர்கள் என்பதால் அப்படிச் சொன்னேன்.
ReplyDelete=============
// தமிழில் முதல் பெண் வலைப்பதிவரான //
தமிழில் முதல் பெண்பதிவர்களில் ஒருவர் என்று இருந்திருக்க வேண்டுமோ
ஏங்க துளசி கட்டை விரல கேட்டாங்கன்னா அவருக்கு நல்ல வில்வித்தையில் திறமை இருந்தது...நமக்கென்ன இருக்கு ...
ReplyDeleteஅப்படியே கேட்டாலும் குடுக்கலாம்..
தட்டச்ச கட்டை விரல் இல்லாட்டியும் பரவால்ல