07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 16, 2007

காவிய புதன்

புதனென்றாலே சன் டிவியின் புண்ணியத்தில் காவிய புதன் என்றாகிவிட்டது. அதனால் நானும் வலைச்சர ஆசிரியராக இருக்கும் புதனில், நான் ரசித்த, மீண்டும் மீண்டும் படித்த, இப்போதும் நினைவிருக்கிற பழைய தமிழ் பதிவுகள் சிலவற்றை பட்டியலிடலாம் என முடிவு செய்ததால் இந்த காவிய புதன் பதிவு. இனி எனை கவர்ந்த சில Old is Goldகள்

1. எப்போது Nuclear weapons, Nuclear testing பற்றி பேசப்பட்டாலும் உடனே ஹிரோஷிமா, நாகஸாகியின் நினைவுதான் நம்மில் பலருக்கு வரும். உலகின் வளர்ந்த நாடுகளுள் ஒன்றாக ஜப்பான் வளர்ந்துவிட்டாலும் இன்னும் அணுஆயுத சோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் முக்கிய காரணம் ஹிரோஷிமா, நாகஸாகி தாக்குதல்தான். தனது நாகஸாகி பயணக்கட்டுரையில் நாகஸாகியின் வரலாற்றையும் இன்றைய சூழலையும் கண்முன் கொண்டு வந்த ரோசாவசந்தின் இந்தப்பதிவு என்னை மிகவும் கவர்ந்த பயணக்கட்டுரை பதிவு.

நாகசாகி, 9/02/1945, 11.02 - வரலாறு

2. "நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் மிகவும் கொடியது" - இது எதிர் நீச்சலில் வரும் வசனம் என நினைக்கிறேன். ஒரு நட்பில் விழுந்த இடைவெளியையும் அது விலகுமுன் அந்த நண்பனின் மரணத்தையும் குறித்து கௌதம் எழுதிய பதிவு தேன்கூடு போட்டியில் முதல் பரிசு வாங்கியது என நினைக்கிறேன். இணையத்தின் மூலம் கௌதமையும், திரைப்படத்தின் மூலமாக அந்த நண்பனான திருப்பதிசாமியையும் தெரியும் என்பதால் மிகவும் பாதித்த பதிவு இது

ஒரு நண்பனின் நிஜம் இது! - கதையல்ல உண்மை

3. Satire வகைப்பதிவுகள் தமிழில் மிகவும் குறைவு. மேலும் அதிக ரிஸ்க்கானது. பெரும்பாலும் தனி நபர் தாக்குதல்களாக உணரப்பட்டு யுத்த பூமியாகிவிடும் வாய்ப்புதான் அதிகம். ஆனால் இட்லி வடையின் இந்தப்பதிவு அனேகமாக mock செய்யப்பட்ட வலைப்பதிவர்களையும் சேர்த்து பெரும்பாலனோரால் ரசிக்கப்பட்டது என நினைக்கிறேன். உலகம் அடுத்த வாரம் அழியப்போகிறது என்னும் சூழலில் தமிழ் வலைப்பதிவாளர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பதிவர்களின் பாணியில் எழுதப்பட்டது. எப்போது படித்தாலும் வயிறு புண்ணாகுவதற்கு நான் கியாரண்டி :)

தேன்கூடு போட்டி ( ஆறுதல் பரிசு ) பதிவு - பதினெட்டு பதிவர்களின் குரல்

4. காமம் - வள்ளுவர் மட்டுமே 33% சதவீகித இட ஒதுக்கீட்டை தைரியமாக, சரியாக கொடுத்தவர். காமத்தை பற்றி எழுதுவதெல்லாம் அம்மாவிடம் அமைச்சராய் இருப்பது மாதிரி. கொஞ்சம் LOCஐ cross பண்ணிவிட்டால் ஆள் அம்பேல்தான். கணவன் மனைவிக்கிடையேயான அந்தரங்கங்களை அனுபவமில்லாமல் எழுதியதாக சொன்ன (கொஞ்சம் நம்ப கஷ்டமாக இருந்தாலும்) பிரதீப்பின் இந்த இடுகை கவித்துவமானது

புணர்வு - காமக்கவிதை

5. நீங்க எப்பவாவது ஜெயிலுக்கு போயிருக்கீங்களா??, சினிமாவைத்தவிர்த்து பிரபல சிறைச்சாலைகளை ஒருமுறையாவது பாத்திருக்கீங்களா?? .. அப்படி இல்லையென்றால் இந்த உருப்படாத(!!!) பதிவு உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாயிருக்கும். நரேன் தன்னுடைய ஒரு நாள் ஜெயில் அனுபவங்களை (அவர் நண்பர் ஒருவரை வெளியிலெடுப்பதற்காக ..) எழுதிய இந்தப்பதிவு நான் படித்ததில் ரொம்ப வித்தியாசமான அனுபவத்தை தந்த பதிவு.

மத்திய சிறைச்சாலை - வழக்கமான 1,2, 3 அல்ல

6 comments:

  1. ஐந்து சுட்டிளும் அட்டகாசம்..

    ReplyDelete
  2. சுவையான சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  3. இது முத்துலட்சுமி அக்காவிற்காக ஃபிராக்ஸி பின்னூட்டம்

    ReplyDelete
  4. விக்கிக்கு வியாழன் தோஷமா? :)

    ReplyDelete
  5. // விக்கிக்கு வியாழன் தோஷமா? :)

    :)

    ReplyDelete
  6. விக்கி, கடைசிப் பதிவில் பின்னூட்டப் பெட்டியைக் காணோம்!

    தொழிற்நுட்பம் என்று பலரும் எழுதப் பார்க்கிறேன். இது பிழை. தொழில்நுட்பம் என்று எழுதுவது தான் சரி. ல் + (க, ப, த, ச) மட்டும் தான் ற் ஆகும்.

    tamil.kanimai.comஐ ஒரு திரட்டியாக கருத இயலாது. பிற திரட்டிகளின் ஓடைகளை ஒரு இடத்தில் காட்டுகிறது. அவ்வளவுதான். இதை ஒரு நிமிடத்தில் யார் வேண்டுமானால் செய்யலாம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது