07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 7, 2007

இந்த வாரம் நான் தானுங்கோவ்...:-)

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஊடகம் மக்களிடையே பிரபலமடைந்து வளர்ந்திருந்தாலும், இணையம் என்ற இந்த ஊடகம் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தது போல் வேறு எந்த ஊடகமும் கவர்ந்திருக்காது என்று நினைக்கிறேன்.இன்னைக்கு இந்த தமிழ் இணைய பக்கங்கள் இல்லன்னா நம்மில் எத்தன பேர் இந்த அளவிற்கு தமிழ படிக்கிறதுலேயும், எழுதறுதுலேயும் ஆர்வம காட்டுவோம்.


தமிழ்மணம் மாதிரி இலவசமா ஒரு ஊடகம், அதுல நாமு(னு)ம் எழுதி,அத இத்தன பேர் படிச்சு, கருத்து சொல்லி, நானும் என் கருத்துகள சொல்லி..ஹ்ம்ம்...பிரமிப்பாதான் இருக்கு.தமிழ்மணம் இல்லைன்னா நாம எழுதறதெல்லாம்...... சரிங்க... நான் எழுதற தெல்லாம், அச்சடிச்சா வரப்போகுது?.என்னை இந்த வார வலைச்சரம் தொடுக்க அழைத்த சிந்தாநதிக்கும் பொன்ஸ்க்கும் என் நன்றிகள்.சரி ரொம்ப அலட்டாம நேரா சொல்ல வந்த விஷயத்திற்கு வர்ரேன்.


தமிழ்மணத்துல நான் தான் ரொம்ப கம்மியா பதிவுகளை படிக்கிறவன்னு நினைக்குறேன். நிறைய படிக்காட்டியும் நான் படிச்ச பக்கங்களையும், தமிழ்மணத்த விட்டு வெளியே இருக்கும் பக்கங்களையும் தர முயற்சிக்கிறேன்.சுவர் இருந்தா தானே சித்திரம்...அதனால ஆரோக்கியமா ஆரம்பிப்போம்...




நம்ம ஆரோக்கியத்துக்கு எத்தன விஷயத்த சொல்றார் பாருங்க இவர் . இத கண்டிப்பா படிங்க. இதில இல்லாத விஷயங்களே இல்லை... இந்த பக்கத்த சேமிச்சு வச்சுக்கலாம்.


எத வேனாலும் வாய்க்கு ருசியா இருந்தா சாப்பிட்டு பின்னால உடம்புக்கு ஏதாவது வந்ததுக்கு அப்புறம் தான நமக்கு உறைக்குது... எப்படியெல்லாம் வியாதிகள் வரலாம்னு, நம்ம போன வார நட்சத்திரம் சொல்லி இருக்கார். இந்த தகவல்கள் தெரிஞ்சிட்டா சில உணவு வகைகளை தடுத்து வரலாம்.


காய்ச்சலை போக்கும் மூலிகை இருக்கு பாருங்க.. சர்க்கரை நோயிலிருந்து நம்மள பாதுகாக்க இவர் சொல்றத நியாபகத்துல வச்சுக்கலாம்...கீரைவகைகளும் அதை சமைக்கிற விதமும் பற்றி மதியோட பதிவ ஒன்னு பார்த்தேன்..ஆங்கில பதிவு...சுட்டி கிடைக்கலை...மதி இங்க வந்து பார்த்து சுட்டிய குடுத்தா நல்லா இருக்கும்.படிச்சுட்டு உபயோகமா இருந்துச்சான்னு ஒரு வரி எழுதுங்க மக்களே.....

நோய் நொடி நீங்கி பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள்

8 comments:

  1. பின்னூட்டத்துல நாந்தானுங்கோ ஃபர்ஸ்ட்டு :))

    சென்ஷி

    ReplyDelete
  2. கலக்றீங்கோவ்....

    ReplyDelete
  3. என்ன அம்மணி கோவைக்காரங்க மாதிரி எல்லாரையும் கூவ வச்சிட்டீங்கோ...

    ஆரோக்கியம்? இதுல கொஞ்சம் சுணக்கம் தான் படிக்கறேன் இந்த பதிவெல்லாம்...நன்றி.

    ReplyDelete
  4. ஆரோக்கியமான சாப்பாடுன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே இன்னொரு பக்கம்
    pizza cutter சுத்துதே:-)))))

    ReplyDelete
  5. சென்ஷி, பங்காளி, முத்துலெட்சுமி, துளசி...நன்றி

    துளசி உங்களுக்கு நாலு நாளா அந்த பிஸ்ஸா கட்டர் மேலேயே கண்ணு..:-)

    பாருங்க இப்ப காணல...எங்க எடுத்துட்டு போய்டுவீங்களோன்னு பொன்ஸ் எடுத்து வச்சிட்டாங்க போல இருக்கு...-))

    ReplyDelete
  6. கலக்கலுங்க. நல்ல விஷயத்த தான் முதல்ல எடுத்துருக்கிறீங்க. கலக்குங்க!

    ReplyDelete
  7. நன்றி பாலா, காட்டாறு :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது