07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மங்கை. Show all posts
Showing posts with label மங்கை. Show all posts

Friday, May 11, 2007

பொருளாதாரம், பங்குவணிகம்

பத்திரிக்கைகள் படிக்கிறப்போ எத்தன பேர் பொருளாதாரம், பங்கு மார்கெட், போன்ற விஷயங்கள் தேடிப் போய் படிக்கிறோம். இல்ல புஸ்தகம் வாங்கறப்போ அது மாதிரி புஸ்தகங்கள் வாங்கறோமா?...ஆர்வக் கோளாறு காரணமா சில சமயம் படிக்கலாம்னா பெருசா இருக்கும். இல்லன்னா புரியாத சொற்றொடர்கள், dry ஆ இருக்குற மாதிரி உணர்வோம்.

நம்ம தமிழ்மணம் நன்பர்களே அழகா, இத பொழிபெயர்ச்சி செய்து, எளிதா, புரியற மாதிரி, தொடர்ச்சியா, தளராம எழுதீட்டு வராங்க. மா.சிவகுமார், பங்காளி, குப்புசாமி, இப்ப புதுசா தென்றல் ஆகியோர் நல்ல தொடர்கள எழுதீட்டு வராங்க.

மா.சிவகுமாரின் பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் பயனுள்ளவை. பொருளாதாரம் படிச்சவங்கிறதுனால ஆர்வமா சில சமயம் படிப்பேன்....

அவர் எழுதினது எல்லாம் ஒரே பக்கத்துல குடுத்து இருக்கார் பாருங்க.. பொருளாதாரம், வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்..இத விட அழகா அல்வா மாதிரி எங்கேயும் கிடைக்காதுங்க.. நேரம் கிடைக்கும் போது படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க..அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்...

அடுத்து பங்காளியின்...பங்குவணிகம்.

பங்குவணிகம் பற்றி ஆன்னா ஆவன்னா வில இருந்து ஆரம்பிச்சு இருக்கார். சின்ன சின்ன பதிவுகளா இருக்குறதுனால படிக்கிறதுக்கும் சலிப்பு வர்ரது இல்லை...அவர் வாக்கு குடுத்து கரெக்டா எழுதீட்டு வர்ர தொடர் இது தான். அதுக்காகவாது ஆதரவு குடுக்கனும்.( கோவிச்சுக்காதீங்க சார்)

பங்காளியின் வர்த்தகம் பதிவுல தீக்குச்சி மரம் பற்றி குறிப்பிட்டுருக்கார். இத படிச்சுட்டு அவர் குடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்கு சம்பந்தப்பட்டவர் கிட்ட பேசினேன். அட அமாங்க, நெசமாத்தான்.... பெரிய பண்ணாடிச்சி ஆகப்போறேனுங்கோவ்.. இரண்டு மாதம் கழித்து தொடர்பு கொள்ள சொல்லி இருக்கார் (வெயில் காலம் முடிஞ்ச பின்னாடி). உங்களுக்கும் எங்காவது நிலங்கள் தரிசா கிடந்தா இத முயற்சி செய்து பாருங்க. நான் கண்டிப்பா இதுல இறங்கப் போறேன்....நன்றி பங்காளி....ஒரு நாளைக்கு பெரிய பண்ணாடிச்சி ஆகும்போது உங்களை நினச்சுக்குவேன்..:-) .. ஆனா இதுல ஏதாவது மிஸ் ஆச்சு...அப்புறம் பாருங்க..

இன்னும் தமிழ்நிதியின் பதிவுகள்.. பங்குமார்க்கெட் பற்றி...

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவதற்கு முன் ....மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தமான சில முக்கியமான வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்னு ஆரம்பிச்சு இருக்கார்.

ரொம்ப நாளா பங்குவணிகம் பற்றி எழுதீட்டு வர்ர குப்புசாமியின் பதிவுகள். குறிப்பா கச்சா எண்ணை பற்றி அவர் எழுதின பதிவு...என்ன மாதிரி மக்குக்கே புரிஞ்சுரிச்சுன்னா பாருங்க... நாணயம் விகடன்லேயும் இந்த கட்டுரை வந்துச்சு.

இந்த மாதிரி தலைப்புகள் எல்லாம் தேடிப் போய் பார்த்து படிப்போமாங்கிறது சந்தேகம் தான். இவங்க அன்றாட அலுவல்களுக்கு மத்தியில, நேரம் ஒதுக்கி, சலைக்காம பின்னூட்டத்த பற்றி கவலைப்படாம, தொடர்ந்து எழுதீட்டு வர்ரது பெரிய விஷயம் தானே?.

நான் இந்த பதிவ எழுதப் போறேன்னு சொன்னப்போ லட்சுமி, சிவகுமார் பங்குபெற்ற இணையத்தில் இன்பத்தமிழ் வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு பத்தி சொன்னாங்க. இதுல மா.சிவகுமார் அவர்கள் வ்லைப்பதிவு உலகத்த பற்றி பகிர்ந்துக்குறார் கேளுங்க. பங்குவணிகம், மியூச்சுவல் ஃபண்ட் பதிவுகள் பற்றி இவர் குறிப்பிட்டு இருக்கார். இப்ப யார் படிக்கிறாங்கன்னு கவலைப்படாம எதிர்காலத்தில வர்ரவுங்க நம்ம எழுதறத படிச்சு பயண் பெறுவாங்க..அதுக்காகவாவது நமக்கு தெரிஞ்சத நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா எழுதனும்னு சொல்ரார்.

இந்த இடத்துல நான் இன்னொன்னு பகிர்ந்துக்க விரும்பறேன். எங்க கல்லூரியில் படிக்கும் நான்கு MBA மாணவர்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், பங்காளியின் பதிவுகளையும், மா.சிவகுமாரின் பதிவுகளையும் படிச்சுட்டு வர்ராங்க. இதுல கல்லுரியில் இருந்து சிவகுமாரின் பதிவுகளில் பின்னூட்டம் போட முடியறதில்லை. ஆனா பங்குவணிகம் பதிவுல போடறதுண்டு.
மேலும் வாசிக்க...

Wednesday, May 9, 2007

இன்னைக்கு மங்கையர் மலர்

தலைப்பு தான் மங்கையர் மலர்..ஆனா அண்ணன்மார் தம்பிமார்கள் எல்லாரும் படிங்க...எவ்வளோ விஷயம் இருக்கு படிச்சு பாருங்க கண்டிப்பா...

தாரா-பெண்கள் இன்னைக்கு கால் வைக்காத துறைகளே இல்லைன்னு சொல்லலாம். அதே போலத்தான் தொழில் நுட்பத்துறையும். இதுல அவர்கள் பல சாதனகள் புரிந்து வந்தாலும் அந்த எந்த அளவுக்கு லைம் லைட்டுக்கு வந்து இருக்குன்னு எல்லார்க்கும் தெரியும்.

''கணிணி இயந்திரத்தை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தவர். ஆனால் அவருடனேயே பணியாற்றிய Ada Byron King என்கிற பெண் தான் உலகின் முதல் கம்பூட்டர் ப்ரொக்ராமர் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அதே போல் 19ஆம் நூற்றாண்டில் நவீன கம்பைலர்கள் மூலம் மென்பொருள் தயாரிப்பதற்கான மகத்தான முயற்சிகளுக்காக Grace Hopper என்கிற பெண்மணிக்கு பல விருதுகள் கிடைத்தன, "Man of the Year" விருது உட்பட!!!''


சின்ன வயசில இருந்து நம்ம சமுதாயத்தில இருந்து வர்ர பால் நிலை பாகுபாடுகள், பெண்களின் எதிர்ப்பார்பிலும், நோக்கத்திலும் கூட வித்தியாசங்களை கொண்டுவருதுன்னு அருமையா சொல்லி இருக்காங்க.



செலவனின் கட்டுரைகள் அனைத்தும் ஆர்வமா படிப்பேன் பெண் விடுதலைன்னு, ஒரு பட்டிமண்டபத்திலல நடந்த விவாதத்த எடுத்து சொல்லி இருக்கார் பாருங்க. ஒரு பெண் அடிமை பட்டு கிடக்கிறாள் என்கிற விழிப்புணர்வே அவளுக்கு இல்லைன்னா, அதுல இருந்து வெளியே வர்ரதுக்கு எவ்வாறு போராட முடியும்?. முதல்ல அது மாதிரி பெண்களை சுயத்துக்கு வரச்செயனும்னு பெரியாரின் வாதத்தை முன் வைத்து பேசிய சில கருத்துக்கள்.


''ஆக பெண்முன்னேற்றம் என்பது "விழிப்புணர்வின் மூலம் வரும் சுயமரியாதை" என்ற கருத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன்''


திரு வின் ஐ நா சபையும் பெண்விடுதலையும் கட்டுரை. ஐ நா சபையில் பெண்களுக்கான சில திட்டங்கள், அது எதுக்காக, எவ்வாறு செயல் படுத்தப் படுகிறது என்பதை தெளிவா குடுத்து இருக்கார். தலித் இன பெண்கள் ஆதிக்க சக்திஅக்ளின் பிடியில் படும் அவஸ்தையை சொல்லி இருக்கார்.


''பெண்களின் உரிமைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் குடும்பமே பெரும் பங்கு வகிக்கிறது. இந்திய கணவர்கள் தங்கள் மனைவியர் மீது தொடுக்கிற கட்டுப்பாடுகள் ஆணாதிக்க அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துகிறது. மனைவியர் தங்களை விட படிப்பில் குறைந்தவர்களாக இருக்கவும், பதவிகளில் கீழ் நிலையில் இருக்கவும், வேலைக்கு செல்லவிடாமல், படிக்கவிடாது தடுப்பதிலும் குறிப்பாக இருக்கிறார்கள் இந்திய ஆண்கள்''


சந்திரவதனா பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.. இந்த பதிவும் நான் பல முறை படிச்சது... நமக்கே நமக்கா இருக்கும் சில உறவுகள், அதுல கிடைக்குற சில சந்தோஷங்கள்...ஹ்ம்ம்ம்,அனுபவிச்சு பார்த்தாதான தெரியும்.... இத கண்டிப்பா படிங்கப்பா...


''வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் எனபதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பது இல்லை.''


இருபதாம் நூற்றான்டின் தலை சிறந்த பெண்கள் பற்றி ஜெயா சொல்லி இருக்கார் பாருங்க..செய்தி விமர்சனம் ,விகடன்ல வந்தது. வணக்கதுக்குறியவர்கள். படிச்சுட்டு நெகிழ்ந்து போயிட்டேன்
மேலும் வாசிக்க...

Tuesday, May 8, 2007

பல முறை படித்தவை...

சமீபத்தில நான் படிச்ச இரண்டு பதிவுகள்...படிச்சு முடிச்ச அப்புறம் கொஞ்ச நேரம் பேசாம உட்கார்ந்துட்டேன்.

எனக்கு அப்படி இருந்துச்சு...உங்களுக்கு எப்படியோ..படிச்சுட்டு சொல்லுங்க.

அந்தாரா....ஹ்ம்ம்...சமீபத்தில் இவருடைய மெனோபாஸ் பத்தி ஒரு பதிவை படிச்சேன். நம்மில் எத்தன பேர், நம்ம அம்மாவ்ங்க எல்லாம் இந்த கட்டத்த அடைஞ்சப்போ அத புரிஞ்சு நடந்து இருப்போம். எவ்வளவு கடினமான கால கட்டம்னு நமக்கு அப்ப தெரியலை. மன சோர்வு, மன நிலை மாற்றம், போன்ற உளவியல் பிரச்சனைகளும், வேறு சில பிரச்சனைகளும் இருக்கும். இது என்ன எல்லா பொம்பளைகளுக்கும் வர்ரது தானேன்னு யாரும் பெரிசா கண்டுக்கறதில்லை. ஆனா இந்த காலகட்டத்துல அவங்களுக்கு ஆதரவா பேசி, அவங்க ஆரோக்கியத்தின் மேல அக்கறை காட்டனும்னு எதிர்பார்ப்பு இருக்கும்..இதோ

இப்போதெல்லாம் கடவுள் கோயில் பக்தி என்று உன்னுடைய நாட்கள் நகர்கிறது. உன்னுடைய தனிமையை கடவுளும் பக்தியும் குறைப்பிக்கிறதா அல்லது உன்னுடைய பயத்தை இறைமையாய் உணர்கிறாயா?- மெனோபாஸ்

அடுத்த பதிவு, வசந்தின் இளமையில் வறுமை பற்றிய பதிவு. இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடுமை.

''மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது..''

கொம்பு முளைத்த வறுமை - 'வெறுமை'.

என்னைக் கவர்ந்தது....

இந்த வரிகள், நான் வறுமையின் பிடியில், வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கையில் எழுதியன.என் காலம் வருகையில், ஆணவம் என்னைப் பற்றக் கூடாதென்று சேர்த்து வைத்திருந்தேன். வானம் அளவு நான் விஸ்வரூபம் எடுக்கும் போது, என் கால்கள் பூமியோடு புதையச் செய்ய நான் நினைவு வைத்திருக்கும் வரிகள்

அடுத்து, சித்தார்த், நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள், மனிதனின் முயற்சியில் ஒவ்வொரு நாளும் நடக்கும் புதுமைகள், கண்டு பிடிப்புகள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ன் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். எளிமையான தமிழ்ல அழகா எல்லார்த்துக்கும் புரியறமாதிரி சொல்லி இருக்கார். ஆர்வமா படிச்சேன்

தன்னிலை விளக்கம்னு தலைப்பு குடுத்துட்டு கணவன் என்ற ஒருவன் பிடியில் தவிக்கும் பெண்களின் நிலையை மனிதத்துடன் படம் பிடித்து காட்டி இருக்கும் தமிழ்நதியோட இந்த பதிவ நான் பல தடவை படிச்சிட்டேன்.

இன்னைக்கு கிளாஸ் அவ்வ்ளோ தான்...நாளைக்கு பார்க்கலாம்....
மேலும் வாசிக்க...

Monday, May 7, 2007

இந்த வாரம் நான் தானுங்கோவ்...:-)

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஊடகம் மக்களிடையே பிரபலமடைந்து வளர்ந்திருந்தாலும், இணையம் என்ற இந்த ஊடகம் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தது போல் வேறு எந்த ஊடகமும் கவர்ந்திருக்காது என்று நினைக்கிறேன்.இன்னைக்கு இந்த தமிழ் இணைய பக்கங்கள் இல்லன்னா நம்மில் எத்தன பேர் இந்த அளவிற்கு தமிழ படிக்கிறதுலேயும், எழுதறுதுலேயும் ஆர்வம காட்டுவோம்.


தமிழ்மணம் மாதிரி இலவசமா ஒரு ஊடகம், அதுல நாமு(னு)ம் எழுதி,அத இத்தன பேர் படிச்சு, கருத்து சொல்லி, நானும் என் கருத்துகள சொல்லி..ஹ்ம்ம்...பிரமிப்பாதான் இருக்கு.தமிழ்மணம் இல்லைன்னா நாம எழுதறதெல்லாம்...... சரிங்க... நான் எழுதற தெல்லாம், அச்சடிச்சா வரப்போகுது?.என்னை இந்த வார வலைச்சரம் தொடுக்க அழைத்த சிந்தாநதிக்கும் பொன்ஸ்க்கும் என் நன்றிகள்.சரி ரொம்ப அலட்டாம நேரா சொல்ல வந்த விஷயத்திற்கு வர்ரேன்.


தமிழ்மணத்துல நான் தான் ரொம்ப கம்மியா பதிவுகளை படிக்கிறவன்னு நினைக்குறேன். நிறைய படிக்காட்டியும் நான் படிச்ச பக்கங்களையும், தமிழ்மணத்த விட்டு வெளியே இருக்கும் பக்கங்களையும் தர முயற்சிக்கிறேன்.சுவர் இருந்தா தானே சித்திரம்...அதனால ஆரோக்கியமா ஆரம்பிப்போம்...




நம்ம ஆரோக்கியத்துக்கு எத்தன விஷயத்த சொல்றார் பாருங்க இவர் . இத கண்டிப்பா படிங்க. இதில இல்லாத விஷயங்களே இல்லை... இந்த பக்கத்த சேமிச்சு வச்சுக்கலாம்.


எத வேனாலும் வாய்க்கு ருசியா இருந்தா சாப்பிட்டு பின்னால உடம்புக்கு ஏதாவது வந்ததுக்கு அப்புறம் தான நமக்கு உறைக்குது... எப்படியெல்லாம் வியாதிகள் வரலாம்னு, நம்ம போன வார நட்சத்திரம் சொல்லி இருக்கார். இந்த தகவல்கள் தெரிஞ்சிட்டா சில உணவு வகைகளை தடுத்து வரலாம்.


காய்ச்சலை போக்கும் மூலிகை இருக்கு பாருங்க.. சர்க்கரை நோயிலிருந்து நம்மள பாதுகாக்க இவர் சொல்றத நியாபகத்துல வச்சுக்கலாம்...கீரைவகைகளும் அதை சமைக்கிற விதமும் பற்றி மதியோட பதிவ ஒன்னு பார்த்தேன்..ஆங்கில பதிவு...சுட்டி கிடைக்கலை...மதி இங்க வந்து பார்த்து சுட்டிய குடுத்தா நல்லா இருக்கும்.படிச்சுட்டு உபயோகமா இருந்துச்சான்னு ஒரு வரி எழுதுங்க மக்களே.....

நோய் நொடி நீங்கி பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது