07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 9, 2007

இன்னைக்கு மங்கையர் மலர்

தலைப்பு தான் மங்கையர் மலர்..ஆனா அண்ணன்மார் தம்பிமார்கள் எல்லாரும் படிங்க...எவ்வளோ விஷயம் இருக்கு படிச்சு பாருங்க கண்டிப்பா...

தாரா-பெண்கள் இன்னைக்கு கால் வைக்காத துறைகளே இல்லைன்னு சொல்லலாம். அதே போலத்தான் தொழில் நுட்பத்துறையும். இதுல அவர்கள் பல சாதனகள் புரிந்து வந்தாலும் அந்த எந்த அளவுக்கு லைம் லைட்டுக்கு வந்து இருக்குன்னு எல்லார்க்கும் தெரியும்.

''கணிணி இயந்திரத்தை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தவர். ஆனால் அவருடனேயே பணியாற்றிய Ada Byron King என்கிற பெண் தான் உலகின் முதல் கம்பூட்டர் ப்ரொக்ராமர் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அதே போல் 19ஆம் நூற்றாண்டில் நவீன கம்பைலர்கள் மூலம் மென்பொருள் தயாரிப்பதற்கான மகத்தான முயற்சிகளுக்காக Grace Hopper என்கிற பெண்மணிக்கு பல விருதுகள் கிடைத்தன, "Man of the Year" விருது உட்பட!!!''


சின்ன வயசில இருந்து நம்ம சமுதாயத்தில இருந்து வர்ர பால் நிலை பாகுபாடுகள், பெண்களின் எதிர்ப்பார்பிலும், நோக்கத்திலும் கூட வித்தியாசங்களை கொண்டுவருதுன்னு அருமையா சொல்லி இருக்காங்க.



செலவனின் கட்டுரைகள் அனைத்தும் ஆர்வமா படிப்பேன் பெண் விடுதலைன்னு, ஒரு பட்டிமண்டபத்திலல நடந்த விவாதத்த எடுத்து சொல்லி இருக்கார் பாருங்க. ஒரு பெண் அடிமை பட்டு கிடக்கிறாள் என்கிற விழிப்புணர்வே அவளுக்கு இல்லைன்னா, அதுல இருந்து வெளியே வர்ரதுக்கு எவ்வாறு போராட முடியும்?. முதல்ல அது மாதிரி பெண்களை சுயத்துக்கு வரச்செயனும்னு பெரியாரின் வாதத்தை முன் வைத்து பேசிய சில கருத்துக்கள்.


''ஆக பெண்முன்னேற்றம் என்பது "விழிப்புணர்வின் மூலம் வரும் சுயமரியாதை" என்ற கருத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன்''


திரு வின் ஐ நா சபையும் பெண்விடுதலையும் கட்டுரை. ஐ நா சபையில் பெண்களுக்கான சில திட்டங்கள், அது எதுக்காக, எவ்வாறு செயல் படுத்தப் படுகிறது என்பதை தெளிவா குடுத்து இருக்கார். தலித் இன பெண்கள் ஆதிக்க சக்திஅக்ளின் பிடியில் படும் அவஸ்தையை சொல்லி இருக்கார்.


''பெண்களின் உரிமைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் குடும்பமே பெரும் பங்கு வகிக்கிறது. இந்திய கணவர்கள் தங்கள் மனைவியர் மீது தொடுக்கிற கட்டுப்பாடுகள் ஆணாதிக்க அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துகிறது. மனைவியர் தங்களை விட படிப்பில் குறைந்தவர்களாக இருக்கவும், பதவிகளில் கீழ் நிலையில் இருக்கவும், வேலைக்கு செல்லவிடாமல், படிக்கவிடாது தடுப்பதிலும் குறிப்பாக இருக்கிறார்கள் இந்திய ஆண்கள்''


சந்திரவதனா பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.. இந்த பதிவும் நான் பல முறை படிச்சது... நமக்கே நமக்கா இருக்கும் சில உறவுகள், அதுல கிடைக்குற சில சந்தோஷங்கள்...ஹ்ம்ம்ம்,அனுபவிச்சு பார்த்தாதான தெரியும்.... இத கண்டிப்பா படிங்கப்பா...


''வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் எனபதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பது இல்லை.''


இருபதாம் நூற்றான்டின் தலை சிறந்த பெண்கள் பற்றி ஜெயா சொல்லி இருக்கார் பாருங்க..செய்தி விமர்சனம் ,விகடன்ல வந்தது. வணக்கதுக்குறியவர்கள். படிச்சுட்டு நெகிழ்ந்து போயிட்டேன்

8 comments:

  1. வணக்கம்! இதிலே சந்திரவதனா பதிவு மட்டும் தான் படிச்சிருக்கேன். மத்தது இப்போ இல்லை கொஞ்ச நேரம் பின்ன படிப்பேன். நன்றி!

    ReplyDelete
  2. நன்றி மங்கை இவையெல்லாமும் நல்ல ஒரு அறிமுகம்..இப்போது தான் இதிலிருந்து திருவின் பதிவு படித்தேன்.மீதியும் படிக்கிறேன் .

    ReplyDelete
  3. நம்ம முத்துலட்சுமியின் பதிவை தவிர வேறெந்த பதிவையும் படிக்கவில்லை....

    இங்கே இடப்படும் ஈயபதிவுகளில் காரம் தூக்கலாய் இருப்பதால் இந்த பித்தளைக்கு அதில் பெரிதாய் ஆர்வம் இருந்ததில்லை....

    இந்த பதிவினை இட்டதன் மூலம் நமது மங்கையும் ஈய பதிவராகியிருக்கிறார்....

    ஈயம், பித்தளை பற்றிய விளக்கம் தேவைப்படுவோர் நமது பொன்ஸ் அவர்களை அணுகவும். மேற்படி வார்த்தைகளுக்கான patent க்கு அவரே சொந்தக்காரர். வைத்திருக்கிறார்...

    ReplyDelete
  4. பங்காளி அப்ப நீங்க இந்த பதிவெல்லாம் போய் படிக்கப்போவதில்லை என்றா சொல்ல வருகிறீர்கள்?

    திருவின் பதிவில் இப்போது தான் பின்னூட்டமிட்டு வந்தேன்...
    30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களே
    பெண்ணுரிமை பற்றி விருப்பமில்லாமலோ குழப்பத்துடனேயோ இருக்கிறார்கள்.
    மாற்றம் முழுதாக வர இன்னும் எத்தனை காலம்
    காத்திருக்கவேண்டுமோ?

    ReplyDelete
  5. இன்றும் என்றும் ஒரு பெண் உயர் நிலை,லைய்ம் லைட்க்கு
    வந்துவிட்டால் உடனே விரால் நீட்டும் சமுதாயம் தான்
    அதிகம் கேட்டு பெறுவதில்லை சுதந்திரம்.

    ReplyDelete
  6. மங்கை
    எனக்கும் பிடித்த வலைப்பூக்களை குரித்து வருகிறீர்கள். ஒத்த கருத்தை கண்டு ஒரு சின்ன சந்தோஷம்.
    மெனோபாஸ் பற்றிய பதிவு போலவே முன்பு ரம்யா கணவன் மனைவி என்னும் பெற்றோர் என்ற பதிவொன்றை எழுதி இருந்தார்.

    ReplyDelete
  7. கருத்து சொன்ன அன்பர்களுக்கு நன்றி

    பங்காளி..
    நான் என்னைக்கு ஈயத்த பத்தி பேசியிருக்கேன்.. பேசவும் தெரியாது.. ஈயத்த பேச எண்ணத்திலேயும், எழுத்திலேயும் ஒரு தெளிவு வேனும்..
    அது எனக்கு சுத்தமா இல்லை... வாதம் பண்ணனும்..அதுவும் இல்லை..

    மேல சொன்ன பதிவெல்லாம் ஈயத்த பேசுற பதிவுகள் இல்லை... ஐ நா சபையின் திட்டங்கள் பற்றியும், அவங்க பண்ண சில ஆராய்ச்சி முடிவுகள் பற்றியும்...நிஜமாவே பிரச்சனைகள் இருக்கும் பெண்கள், அவங்க நிலமையே அவங்களுக்கு தெரியாம இருக்காங்க ன்னு வாதம் பண்ண ஒரு பட்டி மண்டபத்த பற்றியது..சில ஊனமுற்ற பெண்கள் செய்த சாதனைகள்..ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் காதலை பற்றியது அவ்வளவு தான்..
    ஈயத்த பற்றி பேசற அளவுக்கு எல்லாம் எனக்கு பத்தாதுங்கோவ்... அதுல விருப்பமும் இல்லை.

    ஒரு நாளைக்கு ஒரு பட்டம் குடுக்கறீங்க ... ஹ்ம்ம்...இது மாதிரி யாருக்கு கிடைக்கும்?..நன்றிங்கோவ்

    ReplyDelete
  8. இந்த பதிவுக்கு நேத்தே நன்றி சொல்லலாம்ன்னு இருந்தேன். ஆனா கரெக்டா தமிழ்மணம் கட்டு..

    அதனால என்ன.. இப்ப வந்த பின்னூட்டத்துல எதுக்காச்சும் ரிப்பீட்டே போடலாம்ன்னு பாத்தா எல்லாம் வம்பு வளர்க்கற மாதிரியே இருக்கு.

    அதனால கடைசியா மங்கை அக்கா பின்னூட்டத்துல சொன்ன கருத்துக்கு நான் ரிப்பீட்டே போட்டுக்கறேன். :))

    சென்ஷி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது