07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 3, 2009

வலைச்சரத்தில் இரண்டாவது நாள் என் ஆசிரியர் பணி

கடவுள் வாழ்த்து
=================

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்

பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன்
சரண புதமலர் தலைக்கணி வோமே.

அறிமுகம் அல்ல நன்றி நவிலல்
==================================

எனது பதிவிற்கு வந்து பின்னூட்டம் அளித்ததினால் இவர்களை பற்றி விளக்குவதாக யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டாம். இதற்கு பின்னால் ஒரு சிறு கதை விளக்கம் இருக்கின்றது.


அறிமுகமான புதிதில் வலை பதிவு உள்ளே வந்துவிட்டேன். எழுதவும் ஆரம்பித்து விட்டேன். நான் கடந்து வந்த பாதைகளின் மைல் கற்களாக நான் நினைத்த நிகழ்வுகளை எழுதினேன்.


ஜீவன்: எனது முதல் பதிவிற்கு பின்னூட்டம் வழியாக ஆதரவு என்ற ஜீவனை அளித்தவர். அதன் பிறகு ஒவ்வொரு பதிவிற்கும் இந்த நண்பரின் பின்னூட்டம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அந்த பின்னூட்டத்தில் ஆறுதலான வார்த்தைகள் அப்பட்டமாக வெளிப்படும். அதே போல், நண்பரின் குடும்பத்திற்கு நண்பர் வாயிலாக நான் அறிமுகம் ஆனேன். இன்று வரை நானும் அவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகத்தான் திகழ்கிறேன். என் அருமை நண்பராகவும் என் இல்லத்தில் அனைவரின் அன்பை பெற்றவர்
ஆகவும் திகழ்கிறார். அமைதியான ஆழமான சிந்தனை திறன் கொண்ட அருமை நண்பர் என்று கூறினால் அது மிகையாகாது. எனது வலை உலகத்தின் மறு பிரவேசத்திற்கு நண்பர் ஜீவனும் ஒரு காரணம் என்று கூறிக் கொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.


அமிர்தவர்ஷிணி அம்மா. என் பதிவிற்கு தவறாமல் பின்னூட்டம் அளித்தவர்கள். இந்த பெயரை படித்தவுடன் மிகவும் பெரியவர்கள் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். பிறகுதான் அவர்கள் பதிவை பார்த்து இவரின் அன்புமகளின் பெயர் அமிர்தவர்ஷிணி என்று அறிந்து கொண்டேன். (தினம் தினம் அறிதலில் இதுவும் ஒன்று). எனது பதிவிற்கு தவறாமல் பின்னூட்டம் அளிப்பார்கள். அதில் பாசம், நேசம், உள்ளன்பு இவை எல்லாம் ஒரு சேர இருக்கும். இந்த அருமைச் சகோதரிக்கும் எனக்கும் இடைலேயான நட்பு அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.


சிம்பா: இந்த சகோதரரும் எனக்கு தவறாமல் பின்னூட்டம் அளிப்பார். எனக்கு பல நுணுக்கங்களையும் பின்னூட்டத்தில் கூறுவார். ஆரம்ப நாட்களில் புழுதிக்காடு சிம்பாவும் என் பதிவிற்கு தவறாமல் வந்து ஊக்குவித்தவர் என்ற முறையில் அவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். அக்கறை மிகுந்த சகோதரத்துவம் நிறைந்த ஒரு அன்பு சகோதரர் என்று உள்ளன்புடன் கூறிக் கொள்கிறேன்.


எஸ்.கே இவரும் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை பாசத்துடனும், நேசத்துடனும் எங்கள் இல்லத்தில் ஒருவராக திகழ்பவர். ஆரம்ப நாட்களில் எனக்கு மிகவும் ஆறுதலான பின்னூட்டத்தின் வழியாக அறிமுகமானவர். இவர் படித்துக் கொண்டு இருக்கும் எனது அருமை தம்பி. மிகவும் அறிவுத்திறன் படைத்தவர். எனக்கு இந்த பதிவு உலகத்தின் சில நுணுக்கங்களை ஆரம்ப நாட்களில் கூறி இருந்தார். அப்போது அது எனக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அதனால் சற்று கவனக் குறைவாக இருந்து விட்டேன்.

இந்த அன்புத் தம்பியின் தொடர் பதிவில் என்னை அழைத்திருந்தார். அதில் தான் நான் மறுபடியும் பதிவிற்கு பிரவேசம் ஆனேன். அந்த தொடர் அழைப்பின் பெயர் "சினிமா அனுபவங்கள்". இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த இன்னும் இருவர் இருக்கிறார்கள். அவர்கள் ஜீவன் மற்றும் அமிர்தவர்ஷிணி அம்மா. மூவருக்கும் நன்றி.

இதற்கு மேல் தான் கதை இருக்கிறது. ஒரு அதி காலையில் அலுவலகத்திற்கு செல்லுமுன் பதிவை பார்வையிட போனால், அதில் ஆபாசமான வார்த்தைகளினால் திட்டி, என்ன வெல்லாம் கூற முடியுமோ அந்த அளவிற்கு எனது பதிவை கேவலப் படுத்தி பதினைந்து வரிகளில் பெயரில்லா பின்னூட்டம் இருந்தது. படித்து விட்டு அதிர்ந்து விட்டேன். எனது பதிவின் பெயரை எனது நட்பு வட்டாரத்தில் கொடுத்திருந்த படியால் உடனே அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். அலுவலகம் சென்று மறு பதிவு போடலாம்
என்று போனால், மறுபடியும் அதே கேவலமான வார்த்தைகளால் பெயரில்லா ஒரு பின்னூட்டம். இது ஒரு முறை அல்ல பல முறை நடந்தது. கொஞ்சம் மனம் விட்டுத்தான் போனேன். மறுபடியும் நீக்கினேன் இந்த முறை பின்னூட்டத்தை அல்ல என் பதிவுகளையே நீக்கிவிட்டேன். அதில் ஒரு நகல் கூட எடுத்து வைத்துக் கொள்ள வில்லை. இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தது போல் ஒரு பதிவு போட்டேன்.


என் பதிவை நீக்கியத்திற்கு யாரும் காரணம் இல்லை. என்னை எல்லாரும் மன்னித்து விடுங்கள் என்று ஒரு பதிவு போட்டேன். அதற்கு அமிர்தவர்ஷிணி அம்மாவும், நண்பர் ஜீவன் அவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கும் இந்த உண்மை தெரியாது. இதை படிக்கும் போதுதான் அன்றைய என் நிலை அவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். எனக்கு தொடர்ந்து நண்பர்களிடம் அழைப்பு வந்து கொண்டிருந்தது, வற்புறுத்தல்களுக்கு முத்தாய்ப்பு வைப்பது போல் என் பதிவை சிரிப்பு பதிவாக்கினேன். சிந்திக்க எழுதினால் ஆரோக்கியமான வரவேற்பு எனக்கு இந்த பதிவு உலகத்தில் கிடைக்க வில்லை. இதை படித்து யாரும் என்னை தவறாக நினைக்கக் கூடாது. சிந்திக்க எழுதியதிற்கும் எனக்கு மோசமான பின்னூட்டம் வந்தது. அதையும் நீக்கி விட்டேன்.


பல இழிவான சொற்களை ஏந்தி மின்னஞ்சல்கள் வந்தன; பொது வாழ்க்கை என்று வந்து விட்டால் விமரிசனங்கள் என்பது மிகவும் சாதாரணம். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் எனக்கு உள்ளது. ஆனால், கடந்து வந்த பாதையில் கண்ட முட்களையும், புதர்களையும் பற்றி எழுதும் போது, அங்கே எங்கே வந்தது இழிவான பின்னூட்டங்கள்??


ஆரோக்கியமான விமரிசனம் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். நாம் தவறே செய்திருந்தாலும் அதை திருத்திக் கொள்ளலாம். ஆனால் பதிவே இருக்ககக் கூடாது என்று எதிபார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? நான் என் பதிவை நீக்கியதால் 'நான் மிகவும் சீரியஸ் டைப்' என்று கருதி விட்டார்கள் சிலர். அதெல்லாம் பரவா இல்லை. எதனால் நீக்கினேன் என்று இன்று எல்லாருக்கும் தெரிந்து இருக்கும். சிலர் ஏன் என்று என்னைக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் கூறினேன், சந்தர்ப்பம் வரும் அப்போது
கூறுகிறேன் என்று. அந்த சந்தர்ப்பம் இந்த வலைச்சரமாக அமையும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பாராத ஒன்று.


நான் எழுதிய பதிவு மற்றவர்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக அமையும் என்ற ஒரே காரணத்தினால் தான் என் அனுபவங்களை எழுதினேன், சரி எப்படியோ, நான் பெயரில்லா பின்னூட்டம் போட அனுமதியை எடுக்க வேண்டும் என்று கூட நினைத்ததில்லை. ஏனெனில் பதிவுகள் இல்லாதவர்கள் பின்னூட்டமிட வசதியாக இருக்கட்டும் என்று தான் விட்டு வைத்து இருந்தேன். இதே அவல நிலை மறுபடியும் தொடர்ந்ததினால் சென்றமாதம்தான் அந்த பெயரில்லா பின்னுட்டமிடுதல் என்ற அனுமதியை எடுத்து விட்டேன். இந்த உணர்வுகள் என் மனதில் செல்லரித்துப் போனவைகளாகி விட்டன. நான் பாதித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்.


அதற்காக ரம்யா ஒரு சீரியஸ் டைப் என்றெல்லாம் முடிவெடுக்கக் கூடாது சரியா?? நான் எப்படிப் பட்ட டைப் என்று சமீபத்திய பதிவுகள் உங்களுக்கு என்னை அடையாளம் காட்டி இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் எள்ளளவும் இல்லை. தற்சமயம் எனது பணிகள் மட்டும்தான் என் முன்னே நிற்கின்றது.


ஆனால் இன்று எனக்கும் ஒரு கௌரமான பதவி வலைச்சரத்தின் ஆசிரியர் சீனா கொடுத்து இருக்கிறார்கள். என் மனதில் புகைந்து கொண்டு இருந்ததை இங்கு கூறி விட்டேன். இப்போது என் மனம் லேசாகிப் போனது. நன்றி சீனா அவர்களே!!


இந்த என் ஆரம்பகால நண்பர்களின் நான் ரசித்த வலைப்பதிவுகளை பார்ப்போம். இவர்கள் புது பதிவர்கள் அல்ல நான் இங்கு இருப்பதில் இவர்களும் ஒரு காரணம் என்பதால் அவர்களை என் வழியில் அறிமுகப் படுத்துகிறேன்.




ஜீவன்:
======
அமைதியான அந்த நண்பரின் பதிவில் நான் ரசித்த சில பக்கங்கள்.


பிஞ்சு உள்ளத்தின் அருமையான வெளிப்பாடு என் மனதை தொட்டது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போல் நிகழ்ச்சி கண்டிப்பாக இருந்திருக்கும். அதை நண்பர் ஜீவன் என்ன ரசனையோட சொல்லி இருக்கிறார் பாருங்களேன். அந்த வெளிப்பாட்டின் அழகு இருக்கிறதே, நம்மை அந்த கால கட்டத்திற்கே இழுத்து செல்கிறது. செடி மிளகாய் செடிதான்
அதை நம் நண்பர் கூறி இருக்கும் விதம் அருமையோ அருமை!!


பிரசவம் என்பது ஒரு மறுபிறவி என்று சொல்லுவார்கள். அதை ஒரு நேர் காணலாக சொல்லி இருக்கும் விதம் ஒரே திக் திக் தான்.


இந்த புகை பிடிக்கும் பழக்கம் ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் யோசிக்க வைத்த பதிவு. இதை பார்த்து பலர் அந்த பழக்கத்தை விட்டிருப்பார்கள் என்று இந்த அன்பு சகோதரி நினைக்கிறேன். ஒரு உயிரின் முடிவில், புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே ஒழிக்க அரும்பாடு பட்டு ஒரு வேதனையான சம்பவம் போல் விவரித்து இருக்கிறார். அதை படிக்க படிக்க மனம் பதை பதைத்துப் போனது. தயவு செய்து இந்த அன்பு சகோதரிக்காக அந்த பழக்கம் இருப்பவர்கள் விட்டு விடுங்களேன். வீட்டில் உங்களையே நம்பி இருப்பவர்களை நினையுங்கள்; நண்பர்களை நினையுங்கள்; எல்லாரும் உங்களுக்கு வேணும் தானே, அப்போ புகை பிடிக்கும் பழக்கத்திற்கு தடா! சரியா!! நம் நண்பர் எழுதி இருப்பதை படிங்க. வலி உணர்வீர்கள். அது இந்த பழக்கம் உள்ளவங்களுக்கும் தெரியும். அதனால்.... அப்படின்னு ஜீவன் சொல்லறதை பாருங்க.. நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன்? எப்படி ?



அமிர்தவர்ஷிணி அம்மா.
=========================
பொருத்தமற்ற தலைப்பு என்று கூறி, அப்படி எட்டி பார்த்தால் பக்கத்து வீட்டு தோழி போல் உணர்வை ஏற்படுத்தி, கடற்கரையில் நட்புகளுடன் சுற்றி, ஆஹா எல்லாருக்கும் இதே போல் ஒரு தருணம் இருந்திருக்கிறதே!! அதை மிக அழகான கோர்வையாக அவங்களுக்கே உரித்தான நகைச்சுவை கலந்து சொல்லி இருக்காங்க. என் தோழிகளுடன் நான் சுற்றியதை நினைவிற்கு கொண்டுவந்த அருமையான பதிவு. இவை எல்லாம் அப்பப்போ அசை போட்டால் மிகவும் அருமையான விருந்தாக அமையும். படிச்சிருப்பீங்க, இன்னொரு முறை படிங்க. பொருத்தமற்ற தலைப்பு....


பணத்தின் ருசி என்று கூறி ஒரே அசத்தறாங்க. அருமையாக சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். ஆயிரத்திற்குள் அடங்கும் நோட்டுக்குள் மதிப்பு 10 ரூபாயோ, 10 ஆயிரம் ரூபாயோ, அப்பொருட்களோடு நினைவுகளையும் முடிச்சிட்டு வையுங்கள். நினைவுகளுக்கு என்றுமே மக்கும் சக்தியில்லை.பணத்தை டெப்பாஸிட் செய்து, வட்டியோடு சேர்த்து திரும்பி வந்த அதனை செலவழிக்கும் போது, நினைவினை மட்டும் நிறுத்தி வையுங்கள். குறைந்த பட்சம் பதிவிடவாவது, இல்லை, அதிகபட்சம் முதுமையின் கடைசி நாட்களின் தனிமையில் அசை போட்டு மென்று திங்க, உங்கள் நினைவுகளாவது உதவும். பணத்துக்கும் மதிப்பு இருக்குன்னு சொல்லறாங்க நினைவிற்கும் மதிப்பு இருக்குன்னு சொல்லறாங்க சில அல்ல பல நேரங்களில் இவை இரண்டுமே தேவைதானே! நீங்களும் இன்னொருமுறை படிச்சுதான் பாருங்களேன்.



அன்றில் தாய்கள்: இவங்க கவிதை எழுதியும் மனதை சுருட்டிடுவாங்க. இத படிங்க நான் கூறிய உண்மை உங்களுக்கு தெரியும். வேலைக்கு போகும் தாய்மார்களின் எண்ண அலைகளை எப்படி எல்லாம் திறம்பட சொல்லி இருக்காங்க. அடுத்தவர் பொறுப்பில்.



புழுதிக்காடு சிம்பா
====================
இவரது எழுத்தில், அவலங்களை சுட்டி காட்டுவதில் ''வாள் வீச்சு'' இருக்கும் என்று நண்பர் ஜீவன் சொன்னார். ஆனால் சிந்திக்கவும் நிறைய இருக்குதுங்க இப்படியே போய்கிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவே இல்லையா??.. பாருங்க நல்ல கேள்விதான் கேக்கறாரு. பதில் சொல்லனுமே. சொல்லுங்க சொல்லுங்க. இப்படி தனியா கரன்சி நோட்டு போடறவங்க, மிட்டாய் தர்றவங்கள என்ன பண்ணலாம்????


சில்லறை தட்டுபாடு, நொந்து போயிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிராறு. நல்ல கேள்வி கேட்டு இருக்காரு, இதுக்கு காரணமானவங்க பதில் சொல்லுவாங்களா ?? நல்ல சமுதாயச் சிந்தனயுடைய கேள்வி! பார்ப்போம் மாற்றங்கள் நிகழ்ந்தால் அந்த வெற்றி நம் நண்பர் சிம்பாவிற்கே போய் சேரும்! என்ன, நான் சொல்லறது சரிதானே. அங்கே போயி பாருங்க சில்லறைகளா வஞ்சனை இல்லாமே கொட்டி வச்சிருக்காரு.


நான் தப்பிச்சுட்டேன்... நீங்க எப்போ... இப்படி ஒரு கேள்வி கேட்டு நமக்கு சில தேவையான டிப்ஸ் கொடுத்திருக்கார். முக்கியமான அலுவலக வேலைகளில் இருப்போம், இல்லேண்ணே உயர் அதிகாரிகளின் முன்னால் நின்று கொண்டி இருப்போம், அவரை திட்டவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல். அப்படி ஒரு தர்ம சங்கடமான இடம். அப்போ வரும் ஒரு தொலை பேசி அழைப்பு. இது எங்கள் தொலைபேசி சேவை மையம் அழைப்பு, உங்களுக்கு தேவையான பாடல்களை உடனே சொன்னீங்கன்னா நான் உங்களுக்கு உடனே அதை அனுப்புகிறோம் அப்படின்னு ஒரு தொலை பேசி அழைப்பிலேயே கேட்பார்கள். இது ரொம்ப தேவை. இதற்கும் சேத்து அர்ச்சனை வாங்க வேண்டும். இந்த சோதனையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் நம் அருமை நண்பர் சிம்பா நல்ல தகவல்களை சொல்லி இருக்கிறார். என்னான்னு கேக்கிறீங்களா, பாக்காதவங்க எல்லாம்... தேவை இல்லாத அழைப்புகளை தவிர்க்க.


தம்பி கணேசா நான் வக்கீல் ஆஹா ஒரு மொக்கை பதிவு போடனும்னு ரொம்ப நாளா ஆசையாம். அதுக்காக சேலத்துக் கெல்லாம் போயி, நண்பர்
உதவியுடன் அருமையான ஒரு கவித்துவம் நிறைந்த சொற்களை, கற்றுக்கொண்டு வந்துள்ளார். மொக்கை நல்லாத்தான் வந்திருக்கு. ஒரு இடத்துக்கு போயி பெயரே இல்லாத ஒரு பெயரை வைத்து அழைத்து அங்கே இருந்து தேவையான் மருந்துகள் வாங்கிக் கொண்டு தப்பித்து வந்திருக்கிறார். நான் நல்லா சிரிச்சேன், நீங்களும் நல்லா சிரிங்க!!

பொலம்பல்கள் (எஸ்.கே.)

இவர் எனது அருமை உடன் பிறப்பு. மேற் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அதனால் இவரால் அதிகமா எழுத முடிவது இல்லை. நேரமின்மை காரணத்தினால் எழுதுவது குறைந்து விட்டது. நல்ல புத்திசாலி என் தம்பி. இந்த தம்பியும் என்னை தொடர் ஆட்டத்தில் அழைத்து என் சினிமா அனுபவங்களை எழுத வைத்தார். என் அமைதிக்கு முத்தாய்ப்பு வைத்தார். அன்பான பொறுப்பான சகோதரன் என்று சொன்னால் அது மிகையாகாது. இவரது பதிவுகள் ஆரம்ப காலத்தில் இருந்து படித்து வந்திருக்கிறேன். அந்த பதிவு எல்லாம் இப்போ இல்லை. ஆனாலும் எப்போதாவது ஒரு பதிவு போடுவாரு! அதுலயும் தாய்நாட்டின் ஏக்கம் வெகுவாக இருக்கும். அதை படித்தாலே மனம் மிகவும் வெறுமையாகி போகும். தனிமை பற்றி எவ்வளவு விளக்கமாவும், சில இடத்தில் நகைச்சுவையாகவும் சொல்லி இருக்கிறார். படிச்சுதான் பாருங்களேன் இந்த தனிமை பற்றி.

தம்பிக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாதாம். ஆனாலும் எப்படியாவது கவிதை கொடுக்கணும்னு முடிவு செய்து அவர் நண்பரின் கவிதை கொடுத்து இருக்காரு. எவ்வளவு பெரிய மனது பாருங்க. கீழே நண்பரோட முழு கவிதையும் தர்றேன்.

படித்துக் கொண்டிருந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற துடிப்போடும், சமுதாயச் சிந்தனையோடும் இருப்பவர். உதவி செய்வது என்று நினைத்து விட்டால் அதை எப்படியாவது சாதித்து விடுவார். இதுவும் இவர் பதிவிலேயே இருக்கிறது. அதனால் அந்த இணைப்பை தருகிறேன்.



எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்
============================

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே






இன்று என் முடிவுரை
=======================
நல்லதை நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்!!!





மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா









211 comments:

  1. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ரம்யா!!

    ReplyDelete
  3. கொஞ்சம் சொந்த வேலை
    இருக்கிறது அப்புறம் வாரேன்!!

    ReplyDelete
  4. முழுவதுமாக படிச்சிட்டு
    அப்புறம் எழுதறேன் !!

    ReplyDelete
  5. இரண்டாம் நாள் ஆசிரியர் பணி தொடர்ந்து விட்டதா வாழ்த்துக்கள் ரம்யா...

    ReplyDelete
  6. கலக்கலாக இருக்கிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. ம்ம் கிட்டத்தட்ட என் அனுபவங்கள் உங்களுக்கும். என்னை கடுமையாக விமர்சித்து மடல்கள், பின்னூட்டங்கள் ஏன் சாட்டிங்குகள் கூட உண்டு.

    அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என தூக்கிப்போட்டுவிட்டேன்.

    தங்களின் அறிமுகங்களில் இரண்டு எனக்கு புதியது. இதோ படிக்க கிளம்பிவிட்டேன்.

    ReplyDelete
  8. ஜீவன்(கண்ணாடி)
    அமித்து அம்மா

    இரண்டு வலைகளும் நமக்கு பழக்கம் தான்.

    மற்றவைகளை பார்ப்போம்.

    ReplyDelete
  9. மூவரும் எனக்கு அறிமுகம் தான். ஜீவன் & அமித்து அம்மாவின் பின்னூட்டங்கள் தான் எனக்கும் மிகுந்த ஊக்கம் அளித்தன. அருமையா எழுதறீங்க. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அட நம்ம நண்பர்கள் மூணு பேரும். ஜீவன் அண்ணாவும் சிம்பாவும் அடிக்கடி நிறைய எழுதணும் இது என்னோட வேண்டுக்கோளுங்க.

    ReplyDelete
  11. 2ம் நாள் வாழ்த்துக்கள்.. சிம்பா, ஜீவன் அண்ணா, அமித்து அம்மா நமக்கு தெரிந்த உறவுகள்.. மற்றவர்களை பார்கிறேன்

    ReplyDelete
  12. இந்த பின்னூட்டங்கள், பல சமயங்களில் எழுதக் கூசும் அளவுக்கு வந்து கொண்டு இருக்கின்றது..

    அது ஒரு மனநோய். அதை தடுப்பது என்பது மிகக் கடினம். அவர்களை புறந்தள்ளுவதுதான் சரியான வழி என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  13. வெற்றிகரமான இரண்டாம் நாள். வாழ்த்துக்கள்.

    மிக நன்றாக உள்ளது.. மாறுப்பட்டதாகவும் உள்ளது.

    ReplyDelete
  14. ஜீவன் - எல்லாருக்குன் ஜீவன் அளிப்பவர். பின்னூட்டத்தில் ஆதரவு என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்த ஆசான்.

    அமிர்தவர்ஷிணி அம்மா. - உங்கள் பின்னூட்டங்களில் அடிக்கடி பார்த்த பெயர். உங்கள் பதிவு ஒன்றில் உங்களுக்கு அருமையாக ஆதரவு கொடுத்து, உங்களை மறுபடி எழுதத்தூண்டியவர். நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா அவர்களே

    ReplyDelete
  15. // நான் எழுதிய பதிவு மற்றவர்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக அமையும் என்ற ஒரே காரணத்தினால் தான் என் அனுபவங்களை எழுதினேன்,//

    அது சரி... அவர்கள் பார்வையில் கோளாறு, ஊக்க மருந்தை அதிகமாக உபயோகப் படுத்திவிட்டனர் .. அதனால் தான் உங்களை புரிந்து கொள்ளமுடியவில்லையா

    ReplyDelete
  16. ஜீவன், அமிர்தவர்ஷிணி அம்மா மற்றும் சிம்பா இவர்கள் மூவரும் பரிச்சயமானவர்கள் எஸ்.கே இவர் மட்டும் தான் புதியவர்...

    ReplyDelete
  17. ஜீவன் அண்ணாவின் பதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் யதார்த்தமான நடையில் எழுதுபவர்...

    அவர் எழுதிய என் ”அப்பா வெளிநாட்டில இருக்காரு'' பதிவில் எனக்கு பிடித்த சில வரிகள்

    //கல்யாணம் ஆனா புதுசுல பிரியுறாங்க
    பாருங்க அவங்க நிலைமை இன்னும் சோகம் .
    நான் என் நண்பர்கள் சிலரை பார்த்து இருக்கேன்
    அவங்க தங்கள் குழந்தைகளிடம்
    ''மழலை இன்பத்தை'' அனுபவித்ததே கிடையாது!//

    ReplyDelete
  18. அமிர்தவர்ஷிணி அம்மா- இவங்க வலைப்பூ அறிமுகம் சமீபத்தில தான் கிடைச்சது இவங்க எழுதின “புழுக்கள்” கவிதையில எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்

    //வார்த்தை சிதறலில்
    தொடங்கிய
    மௌனத்தை
    மேலும்
    தொடரச்செய்கிறது
    ...ம்.......
    என்னும்
    ஒற்றைச்சொல்//

    ReplyDelete
  19. கலக்கறீங்க.. இவ்ளோ பெரிய பதிவ வலைச்சரத்தில் பார்த்ததே இல்லை

    ReplyDelete
  20. சிம்பா - இவருடைய பதிவுகள் அனேகமா உலக நிகழ்வுகள் சார்ந்ததா இருக்கும் இவர் எழுதின ”பாமரனின் காதல் மடல்..” நான் மிகவும் ரசித்து படித்த பதிவுகளில் ஒன்று...அந்த பதிவில் யதார்த்தமான சில வரிகள்...

    //இது வரை சூரியன் மேற்க போற வரை எந்திரிக்காத ஆளு நான். இப்போ கொஞ்ச நாளா, நீ காலேஜ்க்கு போறதுக்கு முன்னாடியே நான் எழுந்து ரெடி ஆகி வர்றேன். உன்ன பார்க்க தான். என்னமோ தெரியல, நீ வரும் பொது தலைய குனிஞ்சா, என்ன கடந்து போற வரை நிமிர தோனல..//

    ReplyDelete
  21. எஸ்.கே - இவருடைய பதிவுகளை இனிமேல் தான் படிக்கணும்...இவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ரம்யா...

    ReplyDelete
  22. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. என்ன பதிவு சோகமா இருக்கு....:(

    ReplyDelete
  24. கும்மி அடிக்க மனசு வரலை...அப்பீட்டு ஆகிக்கிறேன்...:)

    ReplyDelete
  25. இப்படி எல்லாம் சொல்லிட்டு நான் எஸ் ஆகிடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க...::)

    ReplyDelete
  26. பதிவை படிச்சதிலேயே ரொம்ப டயர்டு ஆகிட்டேன்...

    ReplyDelete
  27. கொஞ்சம் பூஸ்ட்....அப்புறமா ஹார்லிக்ஸ்.....அப்புறம் கொஞ்சம் போன்விட்டா எல்லாம் குடிச்சிட்டு தெம்பா வர்றேன்...:)

    ReplyDelete
  28. /கார்க்கி said...
    கலக்கறீங்க.. இவ்ளோ பெரிய பதிவ வலைச்சரத்தில் பார்த்ததே இல்லை
    /

    விழுந்து புரண்டு கன்னா பின்னான்னு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)

    ReplyDelete
  29. தாங்கள் அறிமுகப்படுத்திய அனைவரின் வலைக்கும் போய்வந்துவி்ட்டேன். அதான் தாமதம். சிலரின் வலைத்தளத்திற்கு ஏற்கனவே சென்று வந்திருக்கிறேன். அனைவருக்கும் பின்னூட்டமும் இட்டாகவி்ட்டது. வாழ்த்துக்கள் ரம்யா! (என் அன்புக்குட்டி மகளின் பெயரும் ரம்யாதான்!)

    ReplyDelete
  30. மிகவும் அருமையாக இருக்கிறது ரம்யா

    உண்மையில் சொல்கிறேன் இந்தப் பதிவு உங்களின் முதல் பதிவுகளை படித்த திருப்தியைத் தருகிறது. உங்களின் எழுத்து நடையை குறிப்பிடுகிறேன்.

    இப்படி ஒரு நிகழ்வு இருப்பதை அறிந்து மிகவும் கஷ்டமாக இருக்கிற்து தோழி

    வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு

    மன்னிப்பு தாமதமான பின்னூட்டத்திற்கு.

    மேலும் எழுத்துக்களால் மிளிர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. //கொஞ்சம் பூஸ்ட்....அப்புறமா ஹார்லிக்ஸ்.....அப்புறம் கொஞ்சம் போன்விட்டா எல்லாம் குடிச்சிட்டு தெம்பா வர்றேன்...:)//

    அதற்கு பதிலா கொஞ்சம் சரக்கு அடிச்சிட்டு வரேன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  32. நல்லவரே இருக்கியளா ...

    ReplyDelete
  33. வந்து வாழ்த்திய அனைத்து
    உள்ளங்களுக்கும் நன்றி!!!

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் ரம்யா
    இரண்டாம் நாள் பதிவுக்கு

    ReplyDelete
  35. மூவரில், அமித்து அம்மாவின் வலைக்கு போய்வந்திருக்கிறேன், மற்ற இருவரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  36. ரொம்ப நீளமான பதிவு.. இருந்தாலும் நல்லாதான் போய்க்கிட்டு இருக்கு....

    ReplyDelete
  37. வலைத்தளம் ஒரு அருமையான ஆரோக்கியமான பதிவுகள் போடும் இடம்.. அதிலும் வைரஸ் மாதிரி சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள் குழப்பம் பண்ணுவதற்கு..

    ReplyDelete
  38. ஜீவன்.. அப்படியே கண்ணாடி மாதிரி இழைச்சிருக்கிறார் நிஜத்தை


    ''என் அப்பா வெளிநாட்டில இருக்காரு''

    ஒவ்வொரு வரியும் மனதை அள்ளுகிறது

    ReplyDelete
  39. ஜீவன்..

    பிடித்த வரிகள்

    இத பாக்கும் போது எனக்கு என்ன தோணிச்சுன்னா ?
    கூழு,கஞ்சி, குடும்பத்த ஓட்டினாலும் இப்படி பிரிய கூடாது
    என்ன வாழ்க்கை இது ? குடும்பத்த பிரிஞ்சு வாழ்றது
    ஒரு வாழ்க்கையா ?அப்படிதான் தோணிச்சு!//

    உண்மையை நல்லாகவே சொல்லிருக்கிரார்

    ReplyDelete
  40. ஜீவன்..
    //இப்போ எனக்கும் தோணுது
    வெளிநாடு போகனும்னுஆனா நான் சமாதான
    படுத்திகிறேன் குடும்பத்தோடவாழ்றதுதான்
    வாழ்க்கை அப்படின்னு என் மனைவியையும்
    சமாதான படுத்துறேன். கொஞ்ச நாள்ல குழந்தை
    பிறக்குதுஇப்போ எங்களுக்கு என்ன தோணும் மத்த
    புள்ளைங்க போலவேஎங்க புள்ளையையும் நல்ல
    வசதியா வளர்க்கணும் அப்படின்னு.

    எங்க ஊர் மாதிரி ஒரு சின்ன நகரத்துல மாசம்
    ஒரு பத்தாயிரம்ரூபாய் சம்பாதிக்கிறதே
    பெரிய விஷயம்! எங்க பிள்ளை அடுத்தவங்கல
    பார்த்து ஏங்கி போய்ட்டா? இப்போ நான் தானாவே
    வெளிநாடு கிளம்பிடுவேன்.
    //

    யதார்த்தம்

    ReplyDelete
  41. வலைச்சரத்தில் வெற்றிகரமாக இரண்டாவது நாளாக ஆசிரியர் பணியை தொடர்கிறீர்கள்.

    அதற்கு முதற்கண் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  42. //பல இழிவான சொற்களை ஏந்தி மின்னஞ்சல்கள் வந்தன; பொது வாழ்க்கை என்று வந்து விட்டால் விமரிசனங்கள் என்பது மிகவும் சாதாரணம். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் எனக்கு உள்ளது//

    வலைதளத்திற்கு நாங்களெல்லாம் புதியவர்கள் என்பதால் இப்படி கூட நடக்குமா என்று
    எங்களுக்கு தெரியாது.

    இருந்தாலும் உங்களிடமிருந்து அந்த பக்குவத்தை நாங்களும் கற்றுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  43. 50 போட்டது நான் தாம்ப்பா...

    ReplyDelete
  44. தல அபுஅஃப்ஸர்...மயிரிழையில் நீங்கள் தவற விட்டு விட்டீர்களே அரை சதத்தை..

    ReplyDelete
  45. அந்த கப்பை எடுத்து கொடுங்கப்பா

    ReplyDelete
  46. சர்தான் தல‌
    இன்னும் இருக்கே
    Century & Double century

    ReplyDelete
  47. //அதற்காக ரம்யா ஒரு சீரியஸ் டைப் என்றெல்லாம் முடிவெடுக்கக் கூடாது சரியா?? //

    நீங்க சீரியஸ் டைப்பா இருந்தீங்களா ?? நீங்கள் இதையெல்லாம் குறிப்பிடவில்லையென்றால் உங்களை ஒரு சிரிப்பு வைத்தியராகவே உருவகம் செய்திருப்போம்.

    ReplyDelete
  48. உங்கள் அறிமுகத்தில் சிம்பா..எஸ்.கே எனக்கு புதியவர்கள்.
    ஜீவனை பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

    அமிர்தவர்ஷினி அம்மா மட்டும் எனக்கு வெகு பரிச்சயம்.தவறாமல் அவர் பதிவுகளை படித்து வருகிறேன்.பின்னூட்டங்களும் இடுவேன்.

    ReplyDelete
  49. நம்ம தல நைஜீரிய ராகவன் சொன்னதுபோல‌
    வடிவேலு ரொம்பவே மிஸ் பண்ணுறார் ரம்யாவோட ஸ்கிரிப்டை, ரம்யாவோட வடிவேலு அலப்பால் தாங்க முடியலப்பூ... தாங்கமுடியலே.. ஒரு சின்ன மினி காமெடி கிளிப் பார்த்தாமாதிரி இருந்திச்சி

    ReplyDelete
  50. ஜீவனிம் மிளகாய்ச் செடி பதிவு அருமை...

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் வாடினேன்..

    அவ‌ர் மிளகாய்ச் செடி மீது கொண்ட அந்த காதல்,விவரித்த முறை அழகு...

    ஐ லவ் தி எமோஷன்..( பாரதிராஜா ஸ்டைலில் )

    ReplyDelete
  51. எஸ்.கே வின் "நல்ல வார்த்தை கூட இப்ப கெட்ட வார்த்தை ஆனதே" அருமை..

    "த‌னிமை" யை ப‌ற்றி கூட ஒரு ப‌திவு போட்டிருக்கிறார்.

    //கண்ணாடிய பாத்தா அழுகை வரும்.
    இளையராஜா பாட்டு கேட்டாலும் அழுகை வரும்.
    அம்மா குரல் கேட்டாலும் அழுகை வரும்.
    சமைக்கணும்னு நினைச்சாலும் அழுகை வரும்.
    சாப்பாட பாத்தாலும் அழுகை வரும்.
    வீட்டுக்கு போன் பண்ணி பேசலாம்னா டெலிபோன் பில் நெனைச்சு அழுகை வரும்.

    அழுகை மட்டுமே ஆறுதலாய் இருக்கும்...//

    த‌னிமையின் அவ‌ல‌ங்க‌ள் குறித்து பின்னியெடுக்கிறார்.

    ReplyDelete
  52. சிம்பாவின் "தேவையில்லாத அழைப்புகளை தவிர்ப்பது எப்படி" பதிவு பயனளிக்கும்.

    அவருடைய "சரக்கு பார்ட்டி" ஒரு பாட்டியின் பாட்டிலும் குறித்து எழுதியிருக்கிறார்.
    வெகுவாக ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  53. அண்ணன் அப்துல்லா வருகிறார்
    பராக்... பராக்.. பராக்....

    ReplyDelete
  54. //கண்ணிமைக்கும் நேரத்தில்
    கையில் இருந்த காசை
    கானல் நீர் போல் காணமல் போக செய்தாய்,

    கை தேர்ந்த வித்தைக்காரன் போல்
    வித்தைகள் செய்தாய்
    விந்தைகள் செய்தாய்,

    கடோத்கஜன் போல் உருவாகி
    உனக்கிட்ட உணவுகளை
    விழுங்கி ஜீரணம் செய்தாய்,

    இதற்கு மேல் தாங்காது, இனி இரங்கற்ப்பா தான்
    என்று நினைத்த வேளையில்
    மீண்டு வந்தாய்.

    இது நிலைக்க வேண்டும்
    நினைவு மெய்ப்பட வேண்டும்
    மீண்டு வா, என் நம்பிக்கையை மீட்டு வா.//

    சிம்பாவின் கவிதை..ஒரு அப்பாவி பங்கு வணிகரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ReplyDelete
  55. // அபுஅஃப்ஸர் said...

    நம்ம தல நைஜீரிய ராகவன் சொன்னதுபோல‌
    வடிவேலு ரொம்பவே மிஸ் பண்ணுறார் ரம்யாவோட ஸ்கிரிப்டை, ரம்யாவோட வடிவேலு அலப்பால் தாங்க முடியலப்பூ... தாங்கமுடியலே.. ஒரு சின்ன மினி காமெடி கிளிப் பார்த்தாமாதிரி இருந்திச்சி //

    என்னாது இது...என்ன போய் தல அப்படின்னு சொல்லிகிட்டு...

    இதுல உள்குத்து வெளிகுத்து ஒன்னுமில்லையே...

    நண்பா ...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  56. அமிர்தவர்ஷினி அம்மா பதிவுகளை நான் மட்டுமல்ல..என் அம்மாவும் விரும்பி படிப்பார்கள்.

    அவர்களுடைய "அன்றில் தாய்கள்" கவிதை வேலைக்கு செல்லும் பெற்றோர்களின்
    த‌ம் குழந்தைகளைப் பற்றிய அவர்களது மனநிலையை அழகாக எழுதியிருந்தார்கள்.

    ReplyDelete
  57. // Blogger அபுஅஃப்ஸர் said...

    அண்ணன் அப்துல்லா வருகிறார்
    பராக்... பராக்.. பராக். //

    வாங்கோ... வாங்கோ... அப்துல்லா அவர்களே...

    நலமா?

    ReplyDelete
  58. //இராகவன் நைஜிரியா said...

    இதுல உள்குத்து வெளிகுத்து ஒன்னுமில்லையே...//

    ஒரு குத்தும‌திப்பா சொல்லியிருப்பாரோ ???

    ReplyDelete
  59. அப்பாடா கும்மி அடுச்சு எம்மா நாளாச்சு???

    ReplyDelete
  60. //இராகவன் நைஜிரியா said...
    // அபுஅஃப்ஸர் said...

    நம்ம தல நைஜீரிய ராகவன் சொன்னதுபோல‌
    வடிவேலு ரொம்பவே மிஸ் பண்ணுறார் ரம்யாவோட ஸ்கிரிப்டை, ரம்யாவோட வடிவேலு அலப்பால் தாங்க முடியலப்பூ... தாங்கமுடியலே.. ஒரு சின்ன மினி காமெடி கிளிப் பார்த்தாமாதிரி இருந்திச்சி //

    என்னாது இது...என்ன போய் தல அப்படின்னு சொல்லிகிட்டு...

    இதுல உள்குத்து வெளிகுத்து ஒன்னுமில்லையே...

    நண்பா ...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    //

    இது பெரிய டப்பாங்குதாக்கீதே...
    Start Music...

    ReplyDelete
  61. //வாங்கோ... வாங்கோ... அப்துல்லா அவர்களே...

    நலமா?
    //

    ராகவன் அய்யா நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க???

    ReplyDelete
  62. இன்னாபா ரொம்ப நாளைக்கு அப்புறம் கும்மி அடிக்கலாம்னு வந்தா எல்லாரும் நம்பள வுட்டுட்டு ஓடி பூட்டீங்கோ :(

    ReplyDelete
  63. இன்னிக்கு "சிறந்த வலைக்கும்மி" பட்டம் யாருக்கு??

    அதை நம்ம தல நைஜீரிய ராகவன் அண்ணன் முடிவு பண்ணுவார்கள் என்பதை அனைவரின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  64. ஆளில்லாக் கடையில நா எம்மா நேரம் கூவிகினுகீறது...வ்ர்ற்ட்டாஆ..
    பை :)

    ReplyDelete
  65. //எம்.எம்.அப்துல்லா said...
    அப்பாடா கும்மி அடுச்சு எம்மா நாளாச்சு???
    //\

    வாங்க....அதுக்கு தான நம்ம இருக்கோம்..வேற என்ன வேல இருக்கு..

    ReplyDelete
  66. களத்திலா யார்னா கீறிங்களா..

    ReplyDelete
  67. செய்யது அண்ணே நானும்,ராப்பும்,வெண்பூவும்,தாமிராவும் ரவுண்டு கட்டி அடிப்போம்.நம்புவீர்களா.... ஒரு நிமிடத்திற்குள் 13 கமெண்ட் பப்ளிஷ் பண்ணுன ஹிஸ்ட்ரி எல்லாம் இருக்கு எங்க நாலு பேருக்கும். இப்ப கொஞ்ச நாளா ஒழுங்கா வேலை பாக்குறோம் கும்மி அடிக்காம :))

    ReplyDelete
  68. வேலை சற்று அதிகம்...நான் வர்றேன் செய்யது அண்ணே பை
    :)

    ReplyDelete
  69. // Blogger அ.மு.செய்யது said...

    ஜீவனிம் மிளகாய்ச் செடி பதிவு அருமை...

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் வாடினேன்..

    அவ‌ர் மிளகாய்ச் செடி மீது கொண்ட அந்த காதல்,விவரித்த முறை அழகு...

    ஐ லவ் தி எமோஷன்..( பாரதிராஜா ஸ்டைலில் )//

    இதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுகிறேன்

    ReplyDelete
  70. //எம்.எம்.அப்துல்லா said...
    செய்யது அண்ணே நானும்,ராப்பும்,வெண்பூவும்,தாமிராவும் ரவுண்டு கட்டி அடிப்போம்.நம்புவீர்களா.... ஒரு நிமிடத்திற்குள் 13 கமெண்ட் பப்ளிஷ் பண்ணுன ஹிஸ்ட்ரி எல்லாம் இருக்கு எங்க நாலு பேருக்கும். இப்ப கொஞ்ச நாளா ஒழுங்கா வேலை பாக்குறோம் கும்மி அடிக்காம :))
    //

    இப்போ கூப்புடுங்களேன் எல்லாதையும், ஒரு கை பாத்துடுவோம், 12 செகண்லே 13 கமெண்ட் போட்டுடலாம்..

    ReplyDelete
  71. // Blogger அ.மு.செய்யது said...

    //இராகவன் நைஜிரியா said...

    இதுல உள்குத்து வெளிகுத்து ஒன்னுமில்லையே...//

    ஒரு குத்தும‌திப்பா சொல்லியிருப்பாரோ ??? //

    இருக்கும் ... இருக்கும்..

    ReplyDelete
  72. //எம்.எம்.அப்துல்லா said...
    செய்யது அண்ணே நானும்,ராப்பும்,வெண்பூவும்,தாமிராவும் ரவுண்டு கட்டி அடிப்போம்.நம்புவீர்களா.... ஒரு நிமிடத்திற்குள் 13 கமெண்ட் பப்ளிஷ் பண்ணுன ஹிஸ்ட்ரி எல்லாம் இருக்கு எங்க நாலு பேருக்கும். இப்ப கொஞ்ச நாளா ஒழுங்கா வேலை பாக்குறோம் கும்மி அடிக்காம :))
    //

    கேள்விப் பட்டிருக்கிறேன் தலைவரே !!!.கும்மியில் பல மைல்கல்களை நீங்கள் எட்டியிருக்கிறீர்கள் என்று.
    உங்கள் கும்மி பதிவர் கூட்டமைப்பில் நானும் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாமா ?

    ReplyDelete
  73. //எம்.எம்.அப்துல்லா said...
    வேலை சற்று அதிகம்...நான் வர்றேன் செய்யது அண்ணே பை
    :)
    //

    போயிட்டு அப்புறமா வாங்க..அதுவரைக்கும் உங்கள் பணியை சிரமேற்கொண்டு நிறைவேற்றுகிறோம்.

    ReplyDelete
  74. // Blogger எம்.எம்.அப்துல்லா said...

    செய்யது அண்ணே நானும்,ராப்பும்,வெண்பூவும்,தாமிராவும் ரவுண்டு கட்டி அடிப்போம்.நம்புவீர்களா.... ஒரு நிமிடத்திற்குள் 13 கமெண்ட் பப்ளிஷ் பண்ணுன ஹிஸ்ட்ரி எல்லாம் இருக்கு எங்க நாலு பேருக்கும். இப்ப Blogger எம்.எம்.அப்துல்லா said...

    செய்யது அண்ணே நானும்,ராப்பும்,வெண்பூவும்,தாமிராவும் ரவுண்டு கட்டி அடிப்போம்.நம்புவீர்களா.... ஒரு நிமிடத்திற்குள் 13 கமெண்ட் பப்ளிஷ் பண்ணுன ஹிஸ்ட்ரி எல்லாம் இருக்கு எங்க நாலு பேருக்கும். இப்ப கொஞ்ச நாளா ஒழுங்கா வேலை பாக்குறோம் கும்மி அடிக்காம :)) :))//


    என்ன கெட்ட பழக்கம் இது...
    ரொம்ப தப்பு...

    கும்மி அடித்து வாழ்வாரே வாழ்வார்,
    மற்றவரெல்லாம்...

    மறந்து போச்சுப்பா... யாரவது முடியுங்களேன்

    ReplyDelete
  75. // Blogger அ.மு.செய்யது said...
    கேள்விப் பட்டிருக்கிறேன் தலைவரே !!!.கும்மியில் பல மைல்கல்களை நீங்கள் எட்டியிருக்கிறீர்கள் என்று.
    உங்கள் கும்மி பதிவர் கூட்டமைப்பில் நானும் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாமா ? //

    நீங்க இல்லாமலா..

    போட்டு தாக்குங்க...

    இப்போதைக்கு யாரும் கிடையாது..

    ReplyDelete
  76. சரி ... லஞ்ச் டைம் (தப்பா படிச்சுடாதீங்கப்பா... அதாவது சாப்பாட்டு நேரம் அப்படின்னு சொல்ல வந்தேன்)..

    போய் சாப்பிட்டு வந்து கவனிச்சுகிறேன்

    ReplyDelete
  77. அட இன்னும் அடிக்கலையா

    ReplyDelete
  78. செய்யதுக்கு கோப்பை

    ReplyDelete
  79. யாருப்பா அது...

    இங்க ஒருத்தன் சாப்பிட கூட போகாம
    94, 95, 96 அப்படின்னு எண்ணிகிட்டு இருக்கும் போது...

    ஊடால ஆட்டோ ஓட்டறது...

    அவ்...அவ்....அவ்...

    ReplyDelete
  80. இன்னிக்கு ஆஃப் செஞ்சுரி மட்டுமல்ல...ஃபுல் செஞ்சுரியும் நம்ம தானு பெருமையோடு
    தெரிவித்து கொள்கிறேன்.

    கொரில்லா போர்முறையில் போட்டது செஞ்சுரிகள்.

    ReplyDelete
  81. // Blogger அ.மு.செய்யது said...

    நாந்தாங்க 100... //

    ஆமாங்க நீங்கதான் 100

    ReplyDelete
  82. //Blogger அ.மு.செய்யது said...

    இன்னிக்கு ஆஃப் செஞ்சுரி மட்டுமல்ல...ஃபுல் செஞ்சுரியும் நம்ம தானு பெருமையோடு
    தெரிவித்து கொள்கிறேன்.

    கொரில்லா போர்முறையில் போட்டது செஞ்சுரிகள்...//


    நடக்கட்டும், நடக்கட்டும்...

    ReplyDelete
  83. இன்னப்பு நம்ம யுவராஜ் சிங்கைவிட பாஸ்டா 100 போட்டுடீக... நாம அவரு போடுற 100 பாத்ததிலே இதுலே கோட்டைவிட்டுப்புட்டோமுங்க‌

    ReplyDelete
  84. //இராகவன் நைஜிரியா said...
    யாருப்பா அது...

    இங்க ஒருத்தன் சாப்பிட கூட போகாம
    94, 95, 96 அப்படின்னு எண்ணிகிட்டு இருக்கும் போது...

    ஊடால ஆட்டோ ஓட்டறது...

    அவ்...அவ்....அவ்...
    //

    100 ஐ விட்டு கொடுத்த உங்க பெரிய மனச நினைக்கும் போது..

    நன்றி தலைவரே !!!!!!

    ReplyDelete
  85. // Blogger நட்புடன் ஜமால் said...

    செய்யதுக்கு கோப்பை//

    ஆமாங்க நம்ம செய்யதுக்குத்தாங்க கோப்பை...

    அவர் 50 பின்னூட்டம், 100 பின்னூட்டம் அப்படின்னு செய்யறதாலதான்... செய்யது என பேர் வச்சு இருக்காரா?

    ReplyDelete
  86. //அபுஅஃப்ஸர் said...
    இன்னப்பு நம்ம யுவராஜ் சிங்கைவிட பாஸ்டா 100 போட்டுடீக... நாம அவரு போடுற 100 பாத்ததிலே இதுலே கோட்டைவிட்டுப்புட்டோமுங்க‌
    //

    அவர் போட்டு அவுட் ஆயி ரெம்ப நேரம் ஆகுது..

    நாங்க இன்னும் நாட் அவுட் தெரியும்ல...

    இன்னிக்கு முரளிதரன் ரெகார்ட முறியடிக்கப் போறோம்.

    (ரெண்டு பதிவுகளின் பின்னூட்டங்களையும் சேர்த்து கவுண்ட் பன்னிக்கோங்க )

    ReplyDelete
  87. \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger நட்புடன் ஜமால் said...

    செய்யதுக்கு கோப்பை//

    ஆமாங்க நம்ம செய்யதுக்குத்தாங்க கோப்பை...

    அவர் 50 பின்னூட்டம், 100 பின்னூட்டம் அப்படின்னு செய்யறதாலதான்... செய்யது என பேர் வச்சு இருக்காரா?\\

    அட இது நல்லாருக்கே

    ReplyDelete
  88. // Blogger அபுஅஃப்ஸர் said...

    இன்னிக்கு "சிறந்த வலைக்கும்மி" பட்டம் யாருக்கு??

    அதை நம்ம தல நைஜீரிய ராகவன் அண்ணன் முடிவு பண்ணுவார்கள் என்பதை அனைவரின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் //

    இப்போதைக்கு உள்ள நிலையில்,

    ஜமால், செய்யது, அஃப்ஸர் மூவரும் முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

    யார் அதிக பட்ச மார்க் வாங்கி, சிறந்த கும்மி என்பதை, இன்னும் 4 மணி நேரம் கழித்து அறிவிக்கப்படும்..

    ReplyDelete
  89. //இராகவன் நைஜிரியா said...
    // Blogger நட்புடன் ஜமால் said...

    செய்யதுக்கு கோப்பை//

    ஆமாங்க நம்ம செய்யதுக்குத்தாங்க கோப்பை...

    அவர் 50 பின்னூட்டம், 100 பின்னூட்டம் அப்படின்னு செய்யறதாலதான்... செய்யது என பேர் வச்சு இருக்காரா?
    //

    ஆமாங்கோ...........ஓஓஓஓ

    ReplyDelete
  90. 100 அடிச்சிட்டாங்களா?

    ReplyDelete
  91. கொஞ்ச நேரம் அந்த பக்கம் போயிட்டு வந்தா இவ்ளோ கும்மியா?

    ReplyDelete
  92. Bye for Lunch Break...

    நேரத்திற்கு சாப்பிட போகலன்னா...

    அண்ணி அடிக்கும்... அதனால பை..பை...

    ReplyDelete
  93. //நட்புடன் ஜமால் said...
    செய்யதுக்கு கோப்பை
    //

    அது என்ன கோப்பைனு சொல்லவேயில்லையேங்க....

    ReplyDelete
  94. யார் யார் இருக்கீங்க?

    ReplyDelete
  95. \\நிஜமா நல்லவன் said...

    100 அடிச்சிட்டாங்களா?\\

    அட ஆமாம்பா

    ReplyDelete
  96. //நிஜமா நல்லவன் said...
    கொஞ்ச நேரம் அந்த பக்கம் போயிட்டு வந்தா இவ்ளோ கும்மியா?
    //

    வாங்க தலைவா.....

    ReplyDelete
  97. நம்ம தள செய்யது இருக்காக ...

    ReplyDelete
  98. அட தல இங்க தான் இருக்காரா?

    ReplyDelete
  99. /அ.மு.செய்யது said...

    //நிஜமா நல்லவன் said...
    கொஞ்ச நேரம் அந்த பக்கம் போயிட்டு வந்தா இவ்ளோ கும்மியா?
    //

    வாங்க தலைவா...../

    நீங்க தான் தல ன்னு ஒரு மனதா தீர்மானம் நிறைவேத்திட்டோம்....:)

    ReplyDelete
  100. //நிஜமா நல்லவன் said...
    யார் யார் இருக்கீங்க?
    //

    அபுஅஃப்ஸர்..ஜமால் போன்ற பெருந்தகைகள்..களத்தில் உள்ளனர்.

    சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, அண்ணன் ராகவன் மதிய உணவு விடுமுறைக்கு சென்று விட்டார்.

    ReplyDelete
  101. / நட்புடன் ஜமால் said...

    125ஆவது யாருப்ப்பா/

    சாட்சாத் நீங்களே தான்...

    ReplyDelete
  102. \\நிஜமா நல்லவன் said...

    அட தல இங்க தான் இருக்காரா?\\

    நெசமாத்தான்

    எசமான்.

    ReplyDelete
  103. கோப்பை பிறகு சொல்லப்படும்.

    ReplyDelete
  104. //இராகவன் நைஜிரியா said...
    Bye for Lunch Break...

    நேரத்திற்கு சாப்பிட போகலன்னா...

    அண்ணி அடிக்கும்... அதனால பை..பை...
    //

    அண்ணாத்தே இப்படி எங்களை தவிக்க்வுட்டுபொட்டு போய்ட்டா ஏன் அவங்களயும் கூட்டிட்டு வரலேமு அண்ணி அடிப்பாங்க..

    ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பசிக்குது

    ReplyDelete
  105. / அ.மு.செய்யது said...

    //நிஜமா நல்லவன் said...
    யார் யார் இருக்கீங்க?
    //

    அபுஅஃப்ஸர்..ஜமால் போன்ற பெருந்தகைகள்..களத்தில் உள்ளனர்.

    சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, அண்ணன் ராகவன் மதிய உணவு விடுமுறைக்கு சென்று விட்டார்./

    நானும் இங்கு டீ விடுமுறைக்கு செல்கிறேன்...

    ReplyDelete
  106. //நிஜமா நல்லவன் said...
    யார் யார் இருக்கீங்க?
    //

    வாங்க நல்லவரே எங்க கடையாண்ட வந்துப்பாருங்க‌

    ReplyDelete
  107. //நிஜமா நல்லவன் said...
    /அ.மு.செய்யது said...

    //நிஜமா நல்லவன் said...
    கொஞ்ச நேரம் அந்த பக்கம் போயிட்டு வந்தா இவ்ளோ கும்மியா?
    //

    வாங்க தலைவா...../

    நீங்க தான் தல ன்னு ஒரு மனதா தீர்மானம் நிறைவேத்திட்டோம்....:)
    //


    கண்கள் பனிக்கின்றன...

    என்ன தலைவா...நீங்க இருக்கிங்க..அண்ணன் ஜமால் இருக்காக..அபுஅஃப்ஸர் இருக்காக...

    ReplyDelete
  108. இப்பதான் வந்தீக அதுக்குள்ள என்ன டீ விடுமுறை.

    ReplyDelete
  109. \\
    கண்கள் பனிக்கின்றன...\\

    ஆரம்பிச்சிட்டாரு நம்ம பின்னூட்ட தல

    ReplyDelete
  110. //நட்புடன் ஜமால் said...
    ஒன்னேலெக் நாமதானா
    //

    வாழ்த்துக்கள் ஜமால் அவர்களே..150 போடும் போது நீங்களும் நம் நிஜமா நல்லவரைப் போல் டீ விடுமுறைக்கு சென்றால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  111. இளநீர் குடிக்க யாருக்கீறா

    ReplyDelete
  112. நான் தேவா கடையில மட்டும் தான் டீ குடிப்பேன்.

    ReplyDelete
  113. சொல்லிவச்சி 150 அடிக்கிறியளா

    ReplyDelete
  114. //நட்புடன் ஜமால் said...
    \\
    கண்கள் பனிக்கின்றன...\\

    ஆரம்பிச்சிட்டாரு நம்ம பின்னூட்ட தல
    //

    நேத்து விட்டத இன்னிக்கு பிடிக்க வேணாமா...அதனால கொஞ்சம் எமோசன மிக்ஸ் பண்ணி பின்னூட்டம் போடுறோம்.

    இதெல்லாம் கண்டுக்க படாது..

    ReplyDelete
  115. பின்னூட்டம் செய்பவராமே நீங்க

    செய்யது

    வாங்க வாங்க

    ReplyDelete
  116. \\
    இதெல்லாம் கண்டுக்க படாது..\\

    கண்டுக்காம எப்படிகீறது ba

    ReplyDelete
  117. நம்ம தேவா தான் ரெண்டு நாளா டீ போடல போல...

    பால் பஞ்சமா..இல்ல தண்ணியா ??

    ReplyDelete
  118. ஹைய்யா..150 உம் நான் தானு அவையடக்கத்தோடு தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  119. நேற்று அடிச்சாரு பாருங்க தேவா

    பின்னூட்ட வரலாற்றுல எழுதனும்

    ReplyDelete
  120. என்னாபா வேகம் குறையுது

    மறைஞ்சிருந்து ...

    ReplyDelete
  121. சரி...நான் கிளம்புறேங்க...வெளியுலக அலுவல் என்னை அழைக்கிறது.

    யாராவது களத்தில இருந்தா கன்டினுயு பண்ணுங்க..ஆனா 199 வோட நிறுத்தி வச்சிட்டு
    ஒரு போன் போடுங்க..பிரவுசிங் சென்டர் போயாவது 200 போட்டுடறேன்.

    ReplyDelete
  122. வலைச்சரம் எனும் நல்லதோர் மேடையில்
    உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
    அன்பு என்ற மையை நிரப்பி
    என் எண்ணங்கனை வடிக்கிறேன்

    தமிழ்மணம் பார்த்தேன்
    பதிவுகள் ஜொலித்தன
    வலைச்சரம் தொடுத்தேன்
    கும்மிகள் தெறித்தன...

    உன் பதிவுகளில் பின்னூட்டமிட்டேன்
    என் பதிவுகளில் நீ வந்தாய்
    உன் வரவு என் ப்ளாக்கில்
    கடல் போல் ஆர்பரித்தன

    வலை உலகே நம் தொடர்பு அழியாது
    இதை நான் கூறவும் வேண்டுமோ
    ஆனால் உன் அமைதியின் ஆழம்
    நான் அறியவில்லையே என் செய்ய

    ReplyDelete
  123. அட அட அடா கவிதை வழி பின்னூட்டம்

    நல்ல ஊட்டம்

    நிஜமா நல்லவரு

    மீண்டும் வல்லவரு என்று நிருபித்து விட்டார்

    ReplyDelete
  124. //நிஜமா நல்லவன் said...
    வலைச்சரம் எனும் நல்லதோர் மேடையில்
    உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
    அன்பு என்ற மையை நிரப்பி
    என் எண்ணங்கனை வடிக்கிறேன்

    தமிழ்மணம் பார்த்தேன்
    பதிவுகள் ஜொலித்தன
    வலைச்சரம் தொடுத்தேன்
    கும்மிகள் தெறித்தன...

    உன் பதிவுகளில் பின்னூட்டமிட்டேன்
    என் பதிவுகளில் நீ வந்தாய்
    உன் வரவு என் ப்ளாக்கில்
    கடல் போல் ஆர்பரித்தன

    வலை உலகே நம் தொடர்பு அழியாது
    இதை நான் கூறவும் வேண்டுமோ
    ஆனால் உன் அமைதியின் ஆழம்
    நான் அறியவில்லையே என் செய்ய
    //

    முடியல....டீ சாப்பிட போன கேப்புல எழுதினதாங்க...

    சொல்ல வார்த்தைகளில்லை...தலைசிறந்த பின்னூட்ட கவிதை இதுவென்றால் அது
    மிகையாகாது..

    நீங்க ரெம்ப நல்லவருங்க..

    ReplyDelete
  125. வலைச்சர மேடையிலே
    தென்பட்ட உன்முகம்
    கோடி எண்ணங்களை கொண்டிருக்க
    ஒளி தாங்காமல் திகைக்கிறது கும்மி உலகம்!

    ReplyDelete
  126. அட மீண்டும் ஒரு கவிதை.

    எவ்வளவு நல்லவருங்க நீங்க

    ReplyDelete
  127. என்னங்க நடக்குது இங்க? தல சுத்துது...

    ReplyDelete
  128. முதலில்... தாமதத்திற்கு மன்னிக்கவும்....

    சில நாட்களுக்கு முன்னர் பதிவு எழுதுவதை நிறுத்த போகிறேன் என்று சொன்ன ரம்யா மீண்டும் எழுதவந்து மெல்ல வளர்ந்து, இன்று தான் யார் என்பதை நிரூபித்து இருக்கிறார். வலைச்சரத்து நூறாவது ஆசிரியராக நம் மதிப்பிற்குரிய மஹாராணி ரம்யா முடிசூட்டி இருப்பதை பார்க்கும்போது எனக்கு மனதில் ஒரு பூரிப்பும்,பெருமையும் ஏற்படுகிறது.ரம்யாவின் வளர்ச்சியயை ஒரு ஓரமாக நின்று ஒரு பெருமிதத்துடன் கவனிக்கிறேன். நண்பர்களே!! நம் ரம்யா சாதாரண பெண் அல்ல
    ரம்யாவின் மன உறுதி அசாதாரணமானது! ரம்யாவிடம் நாம் நெறைய கற்றுக்கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  129. ரம்யா......ரொம்பத்தான் நெகிழ வைச்சுடிங்க!

    நீங்கள் மறுபடி பதிவு எழுத என்னையும் ஒரு காரணமாக கூறி இருப்பதை பார்க்கும் போது மனது நிறைந்து விட்டது! நீங்கள் வலைசரம் ஆசிரியராக ஆனதில் எனக்குதான் அதிக பெருமை,சந்தோசம் எல்லாம்! (இதுல யாரும் போட்டிக்கு வரக்கூடாது) மேலும் நீங்க எனது பதிவுகளை பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி
    என் பதிவுகளை படித்து விட்டு அதனை இங்கே விமர்சித்த நண்பர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  130. லேட் இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  131. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
    ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்//

    ரம்யா நீடூழி வாழ்க!

    ReplyDelete
  132. பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன்
    சரண புதமலர் தலைக்கணி வோமே.
    ///

    அணிவோம்...

    ReplyDelete
  133. எனது பதிவிற்கு வந்து பின்னூட்டம் அளித்ததினால் இவர்களை பற்றி விளக்குவதாக யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டாம். இதற்கு பின்னால் ஒரு சிறு கதை விளக்கம் இருக்கின்றது. ///

    ஏகப்பட்ட கதை பாக்கி இருக்கா?

    ReplyDelete
  134. அறிமுகமான புதிதில் வலை பதிவு உள்ளே வந்துவிட்டேன். எழுதவும் ஆரம்பித்து விட்டேன். நான் கடந்து வந்த பாதைகளின் மைல் கற்களாக நான் நினைத்த நிகழ்வுகளை எழுதினேன். ///

    நாங்க அதெல்லாம் படிக்கல..

    ReplyDelete
  135. /பரிசல்காரன் said...

    என்னங்க நடக்குது இங்க? தல சுத்துது...
    /

    அண்ணே...ரொம்ப நேரமா தல சுத்துதா....கோச்சுக்காதீங்க...சோடா எங்கயுமே கிடைக்கலை.....அலைஞ்சு திரிஞ்சி வாங்கிட்டு வந்திருக்கேன்....இந்தாங்கண்ணே...:)

    ReplyDelete
  136. /thevanmayam said...

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
    ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்//

    ரம்யா நீடூழி வாழ்க!/

    ரிப்பீட்டு...

    ReplyDelete
  137. /thevanmayam said...

    பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன்
    சரண புதமலர் தலைக்கணி வோமே.
    ///

    அணிவோம்.../

    இதுக்கும் ஒரு ரிப்பீட்டு...

    ReplyDelete
  138. //ஜீவன்: வலைச்சரத்து நூறாவது ஆசிரியராக நம் மதிப்பிற்குரிய மஹாராணி ரம்யா முடிசூட்டி //

    ஓஹ்.. இதுலே கூட 100 (Century ) வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. 100 வரை போட ஆசை, அப்புறம் அடிக்க வந்துடுவாங...

    ReplyDelete
  139. எனது முதல் பதிவிற்கு பின்னூட்டம் வழியாக ஆதரவு என்ற ஜீவனை அளித்தவர். அதன் பிறகு ஒவ்வொரு பதிவிற்கும் இந்த நண்பரின் பின்னூட்டம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ///

    பாராட்டுக்கள் ஜீவன்...

    ReplyDelete
  140. அதே போல், நண்பரின் குடும்பத்திற்கு நண்பர் வாயிலாக நான் அறிமுகம் ஆனேன். இன்று வரை நானும் அவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகத்தான் திகழ்கிறேன்.///

    அப்படித்தான் இருக்கவேணும்...

    ReplyDelete
  141. அந்த பின்னூட்டத்தில் ஆறுதலான வார்த்தைகள் அப்பட்டமாக வெளிப்படும்.//

    ஆஹா! ஆஹா!!!

    ReplyDelete
  142. எனது வலை உலகத்தின் மறு பிரவேசத்திற்கு நண்பர் ஜீவனும் ஒரு காரணம் என்று கூறிக் கொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். ///

    நட்புன்னா இதுதான் பேஷ்...

    ReplyDelete
  143. நேத்து மாதிரி இன்னைக்கும் ரெண்டு பேரும் ஆரம்பிச்சிட்டாங்க.....எப்ப முடியுமோ தெரியலை...:)

    ReplyDelete
  144. நடத்துங்க...நடத்துங்க.....

    ReplyDelete
  145. ஆரம்ப நாட்களில் புழுதிக்காடு சிம்பாவும் என் பதிவிற்கு தவறாமல் வந்து ஊக்குவித்தவர் என்ற முறையில் அவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ///

    நன்றி
    சிம்பா...

    ReplyDelete
  146. என் பதிவிற்கு தவறாமல் பின்னூட்டம் அளித்தவர்கள். இந்த பெயரை படித்தவுடன் மிகவும் பெரியவர்கள் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ///

    அமித்து அம்மா எங்களையும்
    கவனிங்க..

    ReplyDelete
  147. இவரும் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை பாசத்துடனும், நேசத்துடனும் எங்கள் இல்லத்தில் ஒருவராக திகழ்பவர். ஆரம்ப நாட்களில் எனக்கு மிகவும் ஆறுதலான பின்னூட்டத்தின் வழியாக அறிமுகமானவர்.///

    பாராட்டுக்கள் எஸ்.கே..

    ReplyDelete
  148. என் பதிவை நீக்கியத்திற்கு யாரும் காரணம் இல்லை. என்னை எல்லாரும் மன்னித்து விடுங்கள் என்று ஒரு பதிவு போட்டேன்.///

    எதுக்கு மன்னிப்பு எல்லாம்?....

    ReplyDelete
  149. அபு அஃப்சர்,நல்லவன்,ஜமால்
    எல்லாம் எங்கேப்பா..

    ReplyDelete
  150. ஒளிந்து இருந்து 200 அடிக்கக்கூடாது..

    ReplyDelete
  151. வற்புறுத்தல்களுக்கு முத்தாய்ப்பு வைப்பது போல் என் பதிவை சிரிப்பு பதிவாக்கினேன்.///

    வருத்தத்தை சிரிப்பாக மாற்றியுள்ளீர்கள்...

    ReplyDelete
  152. வாங்க தம்பி தேவா
    இங்கே யாராவது
    ஒளிஞ்சி இருக்காங்களா
    இல்லே நான் ரம்யாவிற்கு
    200 போடலாமான்னு
    யோசிக்கிறேன் !!!

    ReplyDelete
  153. இந்த அன்புத் தம்பியின் தொடர் பதிவில் என்னை அழைத்திருந்தார். அதில் தான் நான் மறுபடியும் பதிவிற்கு பிரவேசம் ஆனேன்.//

    அது என்னங்க தொடர் பதிவு?

    ReplyDelete
  154. //
    ஹரிணி அம்மா said...
    எனது முதல் பதிவிற்கு பின்னூட்டம் வழியாக ஆதரவு என்ற ஜீவனை அளித்தவர். அதன் பிறகு ஒவ்வொரு பதிவிற்கும் இந்த நண்பரின் பின்னூட்டம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ///

    பாராட்டுக்கள் ஜீவன்...

    //

    உங்களுக்கும் பாராட்டுக்கள்
    பின்னூட்டத்தில் பின்னரீங்க
    ஹரிணி அம்மா !!!

    ReplyDelete
  155. சிந்திக்க எழுதினால் ஆரோக்கியமான வரவேற்பு எனக்கு இந்த பதிவு உலகத்தில் கிடைக்க வில்லை. இதை படித்து யாரும் என்னை தவறாக நினைக்கக் கூடாது. சிந்திக்க எழுதியதிற்கும் எனக்கு மோசமான பின்னூட்டம் வந்தது. அதையும் நீக்கி விட்டேன்.
    ///

    வலையை கொஞ்சம் க்ளீன் பண்ணுங்கப்பா..

    ReplyDelete
  156. ஒரு அதி காலையில் அலுவலகத்திற்கு செல்லுமுன் பதிவை பார்வையிட போனால், அதில் ஆபாசமான வார்த்தைகளினால் திட்டி, என்ன வெல்லாம் கூற முடியுமோ அந்த அளவிற்கு எனது பதிவை கேவலப் படுத்தி பதினைந்து வரிகளில் பெயரில்லா//

    வன்மையாகக் கண்டிக்கிறோம்..

    ReplyDelete
  157. ரம்யா நீ எவ்வளவு எழுதினாலும்
    நான் நிதானமா எல்லாம்
    படிச்சுட்டுதான் பின்னூட்டம் போடுவேன்
    படிக்காம போடரதில்லேன்னு சபதம்
    எடுத்திருக்கேன் !!!

    ReplyDelete
  158. அதை நண்பர் ஜீவன் என்ன ரசனையோட சொல்லி இருக்கிறார் பாருங்களேன். அந்த வெளிப்பாட்டின் அழகு இருக்கிறதே, நம்மை அந்த கால கட்டத்திற்கே இழுத்து செல்கிறது. செடி மிளகாய் செடிதான்///

    நாங்களும் ரசிக்கிறோம்...

    ReplyDelete
  159. ரம்யா நீ எவ்வளவு எழுதினாலும்
    நான் நிதானமா எல்லாம்
    படிச்சுட்டுதான் பின்னூட்டம் போடுவேன்
    படிக்காம போடரதில்லேன்னு சபதம்
    எடுத்திருக்கேன் !!!///

    வாங்க கலை அக்கா..

    ReplyDelete
  160. நீ வலை எழுதப் போயி
    உனக்கு இவ்வளவு மன
    உளைச்சலா ??

    இதெல்லாம்
    எங்களிடம் சொல்லாமல்
    மறைத்து விட்டாயே சகோதரி!!

    ReplyDelete
  161. இந்த முறை பின்னூட்டத்தை அல்ல என் பதிவுகளையே நீக்கிவிட்டேன். அதில் ஒரு நகல் கூட எடுத்து வைத்துக் கொள்ள வில்லை. //

    பதிவுகளும் நீங்கிவிட்டதா?
    கொடுமை..

    ReplyDelete
  162. //
    thevanmayam said...
    ரம்யா நீ எவ்வளவு எழுதினாலும்
    நான் நிதானமா எல்லாம்
    படிச்சுட்டுதான் பின்னூட்டம் போடுவேன்
    படிக்காம போடரதில்லேன்னு சபதம்
    எடுத்திருக்கேன் !!!///

    வாங்க கலை அக்கா..

    //

    இங்கே தான் இருக்கேன் தம்பி தேவா
    ரம்யா எழுதினதை படிச்சி ரச்சிச்சுகிட்டு
    இருக்கேன்,

    வேதனை பட்டுகிட்டும் இருக்கேன்.

    ReplyDelete
  163. இந்த புகை பிடிக்கும் பழக்கம் ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் யோசிக்க வைத்த பதிவு. இதை பார்த்து பலர் அந்த பழக்கத்தை விட்டிருப்பார்கள் என்று இந்த அன்பு சகோதரி நினைக்கிறேன்///

    இன்று முதல் புகை பிடிக்காதீங்கப்பா..

    ReplyDelete
  164. //
    thevanmayam said...
    இந்த முறை பின்னூட்டத்தை அல்ல என் பதிவுகளையே நீக்கிவிட்டேன். அதில் ஒரு நகல் கூட எடுத்து வைத்துக் கொள்ள வில்லை. //

    பதிவுகளும் நீங்கிவிட்டதா?
    கொடுமை..

    //

    இவைகள் எல்லாம் நமக்கு தெரியாத உண்மைகள் !!!

    ReplyDelete
  165. இன்று முதல் புகை பிடிக்காதீங்கப்பா..

    நானும் இதையேதான் இங்கே சொல்ல விரும்பறேன் !!!

    ReplyDelete
  166. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
    //
    சரியாச்சொன்னீங்க!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது