07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 24, 2009

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று சொல்வார்கள். அதனால் தான்
நான் இரண்டாம் நாளே வந்துவிட்டேன்.

விருந்தோம்பல் தமிழர் பண்பாடு, இன்றளவும் விருந்தோம்பலை நாம் கட்டிக் காத்து வந்திருக்கிறோம். வீட்டுக்கு வந்த விருந்தாளியை அமரவைத்து தண்ணீர் எடுத்துவந்து குடிக்கக் கொடுத்து பின்னர் சாப்பிடுங்கள் என்றவுடன், விருந்தாளி இருக்கட்டும் இப்பதான் சாப்பிட்டு விட்டு வந்தேன் என்று ஓர் அழகிய பொய்யை அவிழ்த்துவிட(மதியம் வந்து சேர்ந்த விருந்தாளி காலையிலிருந்து சாப்பிட்டிருக்க மாட்டார்) இருக்கட்டும், கிளம்புங்க கொஞ்சமாச் சாப்பிடுங்க என்று கெஞ்சி, கைத்தாங்கலாக விருந்தாளியை அழைத்துக் கொண்டுபோய் கை நனைக்க வைப்பது, அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்தில் நின்று பார்த்து பரிமாறுவது, முடித்ததும் கை கழுவ தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, துண்டு எடுத்துக் கொடுப்பது எல்லாம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழமை

வழியில் செல்லும் வறியவனுக்கும் வயிறார சோறு போடுவது நம் பண்பாடு.
இன்றைய நிலையில் நகர்புறங்களில் வாழும் நம் மக்களும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும், தமிழர் பண்பாடு, விருந்தோம்பலை பறைசாற்றும் தமிழர்களின் பெருநாளாகிய பொங்கல் திருநாளைக்கூட தாய் வீட்டில் கொண்டாடும் நிலையில் தான் இருக்கிறார்கள். சிலர் அதையும் கொண்டாடுவதில்லை. புலம்பெயர் நாடுகளில் அடுத்த தலைமுறை, பொங்கல் போன்ற தமிழருக்கே உரித்தான பண்பாட்டு விழுமியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளுமா என்பது நம் முன்னே தொக்கி நிற்கும் மிகப்பெரிய வினா.

விரைவு உணவகங்களிலும், கையேந்தி அங்காடி உணவகங்களிலும் அலைமோதும் நடுத்தர மற்றும் இளையர்கள், வீட்டு சமையல் செய்து உண்பதற்கு விரும்புவதில்லை. அனைவரும் வேலைக்குச் செல்வது ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும், இதுபோன்ற வெளிநாட்டு உணவுவகைகளை உண்பதால், தமிழர்களின் உணவு வகைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க நேரிடலாம்.

புதிதாக வெளிநாடு செல்லும் நம் இளையர்கள் பருப்பு பொடியையும், புளியோதரை பொடியையும் பொட்டலம் போட்டு எடுத்துக் கொண்டு செல்வார்கள். ஓர் ஆறு மாதம் கழித்து அவர்களை சந்தித்தால் நான் நூடுல்ஸ் தான் சாப்பிடுவேன். ரைஸ் எல்லாம் இப்ப சாப்பிடுறது இல்ல. அப்படி அன்னியத்தனமாகப் பேசுவதைப் பார்க்கலாம். எல்லோரையும் சொல்ல வில்லை. இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுத்தால், கே.எப்.சி,மெக்டொனால்ட், பிஸ்ஸா, பாஸ்தா, பர்கர் என்கிற வகையில் வேற்று நாட்டு உணவு வகைகளை எளிதாக ஏற்றுக் கொண்டிருப்பது தெரியும். நாமே நமது உணவு வகைகளை புறக்கணித்தோம் எனில் ஜப்பான்காரர்கள் கூட நம் சாம்பாருக்கு பேட்டன் செய்து விடுவார்கள். யாரும் சாப்பிட்டிருக்கிறீர்களோ என்னவோ ஜப்பானிய உணவு வகையில் அசல் சாம்பார் மாதிரியே ஒரு குழம்பு சிறு பானையில் கொடுப்பார்கள். ருசியும் சாம்பார் மாதிரியே இருக்கும்.

இந்திய உணவு எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. வேறு வழி இல்லாத இடங்களில் மேற்கத்திய, சீன, பிரெஞ்சு உணவு வகைகளைச் சாப்பிடுவதில் தவறேதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவைகளையும் நாம் சாப்பிடக் கற்றுக் கொள்ளவேண்டும். அது சில நேரங்களில், நம் பசியாற்ற உதவி செய்யும். அதே நேரத்தில் நம்முடைய இந்திய உணவு வகைகளை வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.

சிங்கையில் கட்டுமானத்துறை மற்றும் கப்பல் பட்டறையில் வேலை செய்யும் நம் தமிழ் உறவுகள் தினமும் அவர்களே சமைத்துத் தான் சாப்பிடுகிறார்கள். கண்ணு பாத்தா கை செய்யும் என்று சொல்லுவார்கள். அதுபோல் அவர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் சமைக்கும் சாம்பார் கம கம என்ற வாசனையுடன், அப்பவே உட்கார்ந்து சாப்பிட நம்மைத் தூண்டும். சாம்பார் மட்டுமல்ல அசைவ உணவு வகைகளையும், சுவையுடன் சமைக்கக் கற்று வைத்திருக்கிறார்கள்(எல்லாம் சாப்பிட்டுப் பார்த்தாயிற்று).

இன்று இணையத்தில் பலவகையான பலகாரங்களையும், ருசியான உணவு வகைகளையும் எப்படி சமைப்பது என்று எளிமையாக, அழகாக பதிவிட்டிருக்கும் பதிவர்களின் பதிவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

ஆண் பெண் இருபாலரும் இன்றைய நிலையில் சமைக்கும் சூழல் ஓரளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை, வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா ஒன்றில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியது இன்னும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. அவர் பேசும் போது "3000 -பேர் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விழாவிற்கு ஆண் சமைக்க முடிகிறது. ஐந்திலிருந்து பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஏன் ஆண் சமைக்க முடியாது?" என்று கேட்டார். அப்போது எனக்கு 16 வயது, சபாஷ் சரியான கேள்வி என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இப்ப சபாஷ் சொல்லுவியா கண்ணுன்னு நீங்கல்லாம் என்னைக் கேக்குறது எனக்குப் புரியுது. ஆணியவாதிகள்(ஆணி உள்ளவர்கள்) என்னைக் கட்டம் கட்டி அடிக்க மாட்டார்கள் என்று நம்புறேன். இன் பாக்ட் அவங்களே, அதாவது ஆணிய வாதிகளே, சமைக்க ரெடியாத்தான் இருக்காங்க. இப்ப உள்ள சூழ்நிலையில எப்ப வேலை(ஆணி) போவும்னே தெரியாது. சமையல் வேலை மட்டும் தான் லே ஆப்பு இல்லாத வேலைன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?

மலேசியாவைச் சேர்ந்த சீன ஆடவர் லிம், சிங்கையைச் சேர்ந்த சீனப் பெண்ணான இவா -வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சிங்கையில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் லிம்-க்கு உடல் நிலை சரியில்லை. அனல் பறக்கும் காய்ச்சல். மருத்துவரைப் பார்த்துவிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்திருக்கிறார். மனைவி இவா வேலை முடித்து விட்டு வீடு வந்து சேர இரவு எட்டு மணியாகும். ஒரு துண்டு ரொட்டியை மதியம் மாத்திரை விழுங்குவதற்காக மட்டும் சாப்பிட்ட லிம், காலையில் இருந்து வேறு எதுவும் சாப்பிடாமல் படுத்திருக்கிறார். லிம் -க்கு காய்ச்சல் மேலும் அதிகரித்துக் கொண்டே போனது. எட்டு மணிக்கு வேலை முடித்து வீடு திரும்பிய மனைவி இவா கணவனின் நிலை கண்டு கவலை கொண்டாள். சாப்பிட்டீர்களா என்று கேட்டாள். இல்லை என்று சொன்னதும், கொஞ்சம் பொறுத்திருங்கள் சமைத்து விடுகிறேன் என்று சொன்னாள். மகிழ்ச்சியோடு தலையசைத்த லிம், மூன்று நிமிடத்தில் மனைவி உணவு கொண்டு வருவதைப் பார்த்தவுடன் ஆச்சர்யம். அதற்குள் சமைத்து விட்டாயா என்று கேட்டார். ம்ம்! வெந்நீர் வைத்து அதில் மேக்கியைப் பிரித்துப் போட்டேன் சமையல் ரெடி என்று சொன்னாள். கண்ணீர் விட்டார். மலேசியாவில் பெண் பிள்ளைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே சமையல் பாடம் உண்டு.

அறிமுகம்

குழிப் பணியாரம் செய்வது எப்படி என்று தனது செட்டிநாடு கிச்சனில் என்ன அழகாச் சொல்றாரு சதங்கா, அவரு செய்யிற குழிப்பணியாரம் எவ்வளவு அழகா இருக்குன்னு பாருங்களேன். நானெல்லாம் இந்த குழி பணியாரம் சாப்பிட்டு இரண்டு வருடம் ஆகுது. நீங்க எப்படி? ஆசையா இருந்தா இன்னிக்கே தொடங்குங்கள்.

ஏழைக்கேத்த எள்ளுருண்டை, அப்படின்னு சொல்லுவோம். நம்ம சகோதரி தூயா, தனது சமையற்கட்டில் செய்யுற எள்ளுருண்டைக்கு தேவையான பொருட்கள் ஏழைக்கு ஏத்தமாதிரி தெரியல. பணக்காரர்கள் சாப்பிடும் உணவு மாதிரியும் தெரியலை. அங்க போய் ஏழையையும், பணக்காரரையும் கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியாத்தான் வரும். எள்ளு+உருண்டை = எள்ளுருண்டை

பலாப்பழம் பலர் விரும்பிச் சாப்பிடும் நம் முக்கனிகளில் ஒன்று. பலாச்சுளைக்குள் இருக்கும் கொட்டையை பொடிமாஸ் செய்வார்கள். இங்கு பொரியல் செய்திருக்கிறார் மாதவி. எப்படி செய்யிறதுன்னு கத்துக்கிட்டா, இனி பலாச்சுளையை தின்னுட்டு கொட்டையை தூக்கி எறிய வேண்டியதில்லை. பலா மூசுல(பலாப்பழத்தின் பிஞ்சு) பொரியல் செய்தால் கூட நன்றாகத்தான் நன்றாக இருக்கும்.

ஜாங்கிரி குடுத்தா ஆசை ஆசையாத் திம்போம். ஆனா அது எப்படி செய்யுறதுன்னு நம்மள்ல பல பேருக்குத் தெரியாது. சொதப்பீருவோமொன்னு கொஞ்சம் பயம் இங்கே சித்ரா எவ்வளவு அழகாச் செய்யுறாங்கன்னு பாருங்க. அதை கத்துகிட்டு நாமளும் செய்யலாமே? அறிவியல் நுட்பத்தையும் இறுதியாக, உறுதியாக சொல்றாங்க!

சுலப குணுக்கு, பெயரே சொல்கிறது, அப்ப இதைச் செய்வது எளிதாக அல்லது இலகுவாகத் தான் இருக்கும். கமலாவின் அடுப்பங்கரையில் அழகான பலகாரங்களைச் செய்து வைத்திருக்கிறார். அதைப் பார்த்தாலே சாப்பிட தோன்றுகிறது. கணினியில் இருப்பதை எப்படிச் சாப்பிடுவது? நாமளும் எப்படி செய்யிறதுன்னு கற்றுக் கொள்வோமே!

பேச்சிலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் மைக்ரோ வேவ் அவனில் கமகமக்க சாம்பார் செய்யக் கற்றுத் தருகிறார் நம்ம புதுகைத் தென்றல். நீங்களும் படிச்சு பார்த்துட்டு செஞ்சு பாருங்களேன். மணத்திற்கும் ருசிக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். நன்றாகத் தான் இருக்கிறது புகை இல்லாத சமையல்.

மருந்து குழம்பு, நாம் மறந்து வரும் குழம்பு, கொஞ்சம் நினைவூட்டல் செய்ய மீரா கிச்சனில் திருமதி காஞ்சனா இராதாகிருஷ்ணன் அவர்கள் அருமையாக, அழகாகச் செய்து வைத்திருக்கிறார்கள். செய்து சாப்பிட்டுப் பாருங்கள். தேவையான பொருட்களை மறக்காமல் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாமே! எனக்கும் மருந்து குழம்பு பிடிக்கும். இந்த விருந்து மருந்து குழம்புடன் நிறைவடைகிறது.


நான் அறிமுகப் படுத்திய பதிவர்களின் மற்ற இடுகைகளையும் தொடர்ந்து வாசியுங்கள். பலவகையான ருசி மிகுந்த உணவு வகைகளை செய்து பார்ப்பது மட்டுமல்லாமல் ருசிக்கவும் முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். மேலுக்கு நல்லது அப்படின்னு நினைக்கிற உணவு வகைகளை அடிக்கடியும், கொழுப்புச் சத்து நிரம்ப உள்ள உணவு வகைகளை எப்போவாவதும் செய்து சாப்பிடுங்கள்.


எல்லாம் செய்து சாப்பிட்ட மனநிறைவு இருந்தால், அப்படியே இலையை வைத்துவிட்டு (அதை நான் பார்த்துக் கொள்வது தான் விருந்தோம்பலுக்கு அழகு) , பின்னூட்ட நீரோடையில் கை நனையுங்கள்.

அன்பன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்

102 comments:

 1. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பல்சுவை பதிவுங்கிறது இதுதானா ?

  :)

  எனக்கு பிடிச்சது மீரா கிச்சன் !

  ReplyDelete
 3. பெரிய - ஆணிகள் நிறைய உட்கொண்டதால் உங்கள் விருந்து உண்ண இயலவில்லை இப்பொழுது

  பின்பு பசியோடு வருவோம்

  ருசியோடு விருந்துண்ணுவோம் ...

  ReplyDelete
 4. தங்களின் இடுகைப் படித்த உடன் உண்ட உணர்வு


  விரைவான சமையலுக்கு
  விரிவான கதை

  வாழ்த்துகள்

  ReplyDelete
 5. அப்பா செம சாப்பாடு :)

  ReplyDelete
 6. //நட்புடன் ஜமால் said...

  இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்//


  ஜமால்,இரண்டாம் நாள் வாழ்த்துகளுக்கு நன்றி!

  ReplyDelete
 7. அருமையான விருந்து..

  ReplyDelete
 8. //கோவி.கண்ணன் said...

  பல்சுவை பதிவுங்கிறது இதுதானா ?

  :)

  எனக்கு பிடிச்சது மீரா கிச்சன் !//

  ஆம் கோவியாரே!
  நீங்க உண்மையான மீரா கிச்சன்லையே போய் சாப்பிட்டு விட்டு வந்து விட்டீர்கள்!
  எனக்கு பிடித்த மருந்து குழம்பை வலைச்சரத்தில் தொடுத்தேன்.
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 9. //நட்புடன் ஜமால் said...

  பெரிய - ஆணிகள் நிறைய உட்கொண்டதால் உங்கள் விருந்து உண்ண இயலவில்லை இப்பொழுது

  பின்பு பசியோடு வருவோம்

  ருசியோடு விருந்துண்ணுவோம் ...//

  கண்டிப்பாக வாருங்கள் ஜமால்!
  உங்களுக்கு விருந்தா, மருந்தா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

  ReplyDelete
 10. //திகழ்மிளிர் said...

  தங்களின் இடுகைப் படித்த உடன் உண்ட உணர்வு


  விரைவான சமையலுக்கு
  விரிவான கதை

  வாழ்த்துகள்//

  தங்கள் மேலான கருத்துக்கும், வருகைக்கும் நன்றி திகழ்!

  ReplyDelete
 11. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 12. //கிஷோர் said...

  அப்பா செம சாப்பாடு :)//

  படத்தில் இருப்பதைச் சொல்கிறீர்களா?
  வருகைக்கு நன்றி கிஷோர்!

  ReplyDelete
 13. அவசரமா ஒரு வாழ்த்து
  பிறகு மீதி,

  வேறே என்னா சாப்பிட
  வேண்டியதுதான்.

  அதான் அழகா விருந்து வச்சிருக்கிறீங்களே!!!

  ReplyDelete
 14. இலையில் வகைகளை பார்த்தவுடன்
  பசிக்குது.

  அப்புறம் வரேன் ஆபீஸில்
  ஆணி தான் வேறே என்னா ??

  ReplyDelete
 15. //T.V.Radhakrishnan said...

  அருமையான விருந்து..//

  நல்வரவு திரு இராதாகிருஷ்ணன் ஐயா!
  தங்கள் இல்லத்தரசியின் மருந்து குழம்பை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 16. //RAMYA said...

  இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!!//


  தொடர்ந்து வாழ்த்து தெரிவிக்கும் ரம்யா அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 17. // இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுத்தால், கே.எப்.சி,மெக்டொனால்ட், பிஸ்ஸா, பாஸ்தா, பர்கர் என்கிற வகையில் வேற்று நாட்டு உணவு வகைகளை எளிதாக ஏற்றுக் கொண்டிருப்பது தெரியும் //

  கொஞ்சநாள் கழிச்சு பாத்தீங்கன்னா எளிதா சுகர், பி.பி இதெல்லாம்கூட அவங்களுக்கு வந்திருக்கும் :)

  ReplyDelete
 18. ஜோதிபாரதி சார்...சென்னை வந்தா வாங்க...மருந்துகுழம்பு சாப்பிடலாம்

  ReplyDelete
 19. //RAMYA said...

  இலையில் வகைகளை பார்த்தவுடன்
  பசிக்குது.

  அப்புறம் வரேன் ஆபீஸில்
  ஆணி தான் வேறே என்னா ??//


  சரி சரி!
  ஆணியைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லி இருக்கிறேன். உங்களுடைய விமர்சனத்தைத் தெரிவியுங்கள்!!

  ReplyDelete
 20. //RAMYA said...

  இலையில் வகைகளை பார்த்தவுடன்
  பசிக்குது.

  அப்புறம் வரேன் ஆபீஸில்
  ஆணி தான் வேறே என்னா ??//

  நிறைவா(நிறைய அல்ல) சாப்பிடுங்கள்!

  ReplyDelete
 21. //எம்.எம்.அப்துல்லா said...

  // இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுத்தால், கே.எப்.சி,மெக்டொனால்ட், பிஸ்ஸா, பாஸ்தா, பர்கர் என்கிற வகையில் வேற்று நாட்டு உணவு வகைகளை எளிதாக ஏற்றுக் கொண்டிருப்பது தெரியும் //

  கொஞ்சநாள் கழிச்சு பாத்தீங்கன்னா எளிதா சுகர், பி.பி இதெல்லாம்கூட அவங்களுக்கு வந்திருக்கும் :)//

  நல்வரவு திரு புதுகை. எம்.எம்.அப்துல்லா,
  நீங்கள் சொல்வது சரிதான்!
  இந்தியர்களின் உடம்பிற்கு அதெல்லாம் ஒவ்வாமையைத் தான் கொடுக்கும்.
  பிட்டும், கேழ்வரகு கஞ்சியும் இந்தியர்களின் உடம்பிற்கு நல்லது.

  ReplyDelete
 22. //kanchana Radhakrishnan said...

  ஜோதிபாரதி சார்...சென்னை வந்தா வாங்க...மருந்துகுழம்பு சாப்பிடலாம்//

  வாங்க அம்மா, வருகைக்கும், அழைப்பிற்கும் நன்றி!
  சென்னை வரும் வாப்பிருக்கும் போது வருகிறேன்.
  நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!!

  ReplyDelete
 23. ஆஹா..அறுசுவை உணவோடு ஆரம்பிச்சிருக்கீங்க...

  வந்துட்டே இருக்கோம்.

  ReplyDelete
 24. இரண்டாம் நாள் ஆசிரியர் பணியை தொடர்கிறீர்கள்..

  முதலில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 25. கால்சதம்.........போட்டாச்சு..

  ReplyDelete
 26. //அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்தில் நின்று பார்த்து பரிமாறுவது, முடித்ததும் கை கழுவ தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, துண்டு எடுத்துக் கொடுப்பது எல்லாம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழமை
  //

  இந்த விருந்தோம்பல் எல்லாம் தற்காலத்தில் குறைந்து கொண்டே வருவது வருத்தமளிக்கும் ஒரு விஷயம்.

  ReplyDelete
 27. // சமையல் வேலை மட்டும் தான் லே ஆப்பு இல்லாத வேலைன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?

  //

  வாஸ்தவமான கருத்து.

  ReplyDelete
 28. //மலேசியாவில் பெண் பிள்ளைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே சமையல் பாடம் உண்டு.
  //

  புதிய தகவல் ....நம்மூர்லயும் இந்த மாதிரி கொண்டு வரணும்..( இருபாலருக்கும் சேர்த்து )

  ReplyDelete
 29. இரண்டாம் நாள் ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 30. அறிமுகத்தில் புதுகைத்தென்றல் மட்டும் பரிச்சயம்..

  மற்றவர்கள் வலைதளத்தை பார்க்கிறேன்.

  ReplyDelete
 31. //அங்க போய் ஏழையையும், பணக்காரரையும் கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியாத்தான் வரும்.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 32. சதங்காவின் குழிப்பணியாரம்,

  தூயாவின் எள்ளு+உருண்டை,அவ‌ல்,வ‌ரலாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ போன்டா..
  ( இன்னும் நரி உஸார் ப‌ண்ண‌ உளுந்து வ‌டை )

  பேர் வைக்க‌வே உக்காந்து யோசிப்பாங்க‌ளோ !!!!!!!

  மாதவியின் பலாக்கொட்டை பொரியல் ( நிறைய மருத்துவ சமையல் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார்.அனைத்தும் பயனளிக்கும் )

  சித்ராவின் லட்டு,ஜாங்கிரி,இறால் வருவல்..

  புதுகைத்தென்றல் அவர்களின் அவண் சாம்பார்..

  காஞ்சனா ராதாகிருஷ்ணனின் கத்தரிக்காய் காரக்குழம்பு..

  கமலாவின் அடுப்பங்கரையில் செய்த தயிர்வடை...

  அனைத்துமே அருமை...

  ஆஹா..ஆஹா...இதுதான் அறுசுவையோ.......

  ஒரு ச‌மைய‌ல் மாநாட்டையே ந‌ட‌த்திய‌ அண்ண‌ன் ஜோதிபார‌தி அவ‌ர்க‌ளுக்கு ஒரு மிக‌ப்பெரிய‌ விருந்தையே ஏற்பாடு செய்ய‌லாம்.

  ReplyDelete
 33. எல்லார் வீட்டு அடுப்பங்கரையிலும் நைஸா போயி, சட்டிய உருட்டிட்டு வந்தாச்சு...

  ReplyDelete
 34. இதெல்லாம் எங்க அம்மா கிட்ட இன்னிக்கே செய்ய சொல்லணும்.

  ReplyDelete
 35. // பின்னூட்ட நீரோடையில் கை நனையுங்கள்.//

  ஆஹா...அருமை..அருமை...

  பின்னூட்டம் போடுவோம்..ஆனா கை நனைக்க மாட்டோம்...

  ஏன்னா அனைத்து நளபாகமே அருமை..இன்னும் முடியல..

  ReplyDelete
 36. //அ.மு.செய்யது said...

  //அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்தில் நின்று பார்த்து பரிமாறுவது, முடித்ததும் கை கழுவ தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, துண்டு எடுத்துக் கொடுப்பது எல்லாம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழமை
  //

  இந்த விருந்தோம்பல் எல்லாம் தற்காலத்தில் குறைந்து கொண்டே வருவது வருத்தமளிக்கும் ஒரு விஷயம்.//
  இன்றும் வந்து இயல்பாக வாழ்த்தி
  இனியவை பகர்ந்து
  இளைப்பாறும்
  அன்பு உடன் பிறப்பு செய்யதுக்கு
  எனது அன்பு கலந்த நன்றி!
  தொடுப்புகளை விடுப்பிலாமல்
  எந்தத் தடுப்பும் இல்லாமல்
  படித்து,
  கருத்துக்களை
  பகிர்வது மகிழ்ச்சியளிக்கிறது!

  ReplyDelete
 37. \\அ.மு.செய்யது said...

  எல்லார் வீட்டு அடுப்பங்கரையிலும் நைஸா போயி, சட்டிய உருட்டிட்டு வந்தாச்சு.\\

  நம்ம வேலையே அதானே ...

  ReplyDelete
 38. //அன்புமணி said...

  இரண்டாம் நாள் ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.//

  தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி திரு அன்புமணி!

  ReplyDelete
 39. \\இன்றும் வந்து இயல்பாக வாழ்த்தி
  இனியவை பகர்ந்து
  இளைப்பாறும்
  அன்பு உடன் பிறப்பு செய்யதுக்கு
  எனது அன்பு கலந்த நன்றி!
  தொடுப்புகளை விடுப்பிலாமல்
  எந்தத் தடுப்பும் இல்லாமல்
  படித்து,
  கருத்துக்களை
  பகிர்வது மகிழ்ச்சியளிக்கிறது!\\

  அடுப்பில்
  போய்
  இடுப்பில்
  கை வைத்து
  இருப்பாரோ

  அல்லது

  விடுப்பில் இருப்பாரோ ...

  ReplyDelete
 40. \\அ.மு.செய்யது said...

  // பின்னூட்ட நீரோடையில் கை நனையுங்கள்.//

  ஆஹா...அருமை..அருமை...

  பின்னூட்டம் போடுவோம்..ஆனா கை நனைக்க மாட்டோம்...\\

  கை நனைத்து துவங்கவேண்டும் ...

  முடிப்பது கை கழுவுவது ...

  ReplyDelete
 41. தூயா-வின் சமையலறை புத்தக வடிவில் வருகிறது விற்பனைக்காக, ஈழத்து மக்களுக்காக ...

  நமது ஆதரவு கரங்களையும் நீட்டுவோம்.

  ReplyDelete
 42. // Thooya said...

  //அங்க போய் ஏழையையும், பணக்காரரையும் கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியாத்தான் வரும்.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  வருகைக்கு நன்றி சகோதரி தூயா!
  இருக்கட்டும், நான் ஏழைக்கேத்த எள்ளுருண்டை. அப்படின்னே எடுத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 43. //நட்புடன் ஜமால் said...

  \\அ.மு.செய்யது said...

  // பின்னூட்ட நீரோடையில் கை நனையுங்கள்.//

  ஆஹா...அருமை..அருமை...

  பின்னூட்டம் போடுவோம்..ஆனா கை நனைக்க மாட்டோம்...\\

  கை நனைத்து துவங்கவேண்டும் ...

  முடிப்பது கை கழுவுவது ...//

  ஜமால், தொடர் முழக்கத்திற்கு நன்றி!
  கை கைழுவுதல் என்று பதிவின் இறுதியில் இட்டால் நன்றாக இருக்காது என்று தெரிந்துதான் கை நனையுங்கள் என்று எழுதினேன். தாங்கள் பேனாவால் எழுதுவதாக எடுத்துக்கொண்டு பின்னூட்டத்தில், தங்கள் பேனாவின் மையால் நனையுங்கள் என்று நான் சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்!

  ReplyDelete
 44. //நட்புடன் ஜமால் said...

  தூயா-வின் சமையலறை புத்தக வடிவில் வருகிறது விற்பனைக்காக, ஈழத்து மக்களுக்காக ...

  நமது ஆதரவு கரங்களையும் நீட்டுவோம்.//

  அப்படியா! மகிழ்ச்சி!!
  கண்டிப்பாக!!!

  ReplyDelete
 45. //இன்றும் வந்து இயல்பாக வாழ்த்தி
  இனியவை பகர்ந்து
  இளைப்பாறும்
  அன்பு உடன் பிறப்பு செய்யதுக்கு
  எனது அன்பு கலந்த நன்றி!
  தொடுப்புகளை விடுப்பிலாமல்
  எந்தத் தடுப்பும் இல்லாமல்
  படித்து,
  கருத்துக்களை
  பகிர்வது மகிழ்ச்சியளிக்கிறது!//

  கண்கள் பனிக்கின்றன..

  பின்னூட்டத்திற்கு இப்படியெல்லாமா பதிலளிப்பார்கள்.

  பழம்பெரும் பதிவர்களின் பண்பாடு இதுதானோ ???

  ReplyDelete
 46. //நட்புடன் ஜமால் said...
  \\அ.மு.செய்யது said...

  // பின்னூட்ட நீரோடையில் கை நனையுங்கள்.//

  ஆஹா...அருமை..அருமை...

  பின்னூட்டம் போடுவோம்..ஆனா கை நனைக்க மாட்டோம்...\\

  கை நனைத்து துவங்கவேண்டும் ...

  முடிப்பது கை கழுவுவது ...
  //

  நல்ல விளக்கம்..இப்ப தான் புரிஞ்சது....

  எனிவே வி ஆர் ஒன்லி நனச்சிஃபையிங்..நோ கழுவிஃபையிங்...டேங்ஸ்..

  ReplyDelete
 47. //ஜோதிபாரதி said...

  ஜமால், தொடர் முழக்கத்திற்கு நன்றி!
  கை கைழுவுதல் என்று பதிவின் இறுதியில் இட்டால் நன்றாக இருக்காது என்று தெரிந்துதான் கை நனையுங்கள் என்று எழுதினேன். தாங்கள் பேனாவால் எழுதுவதாக எடுத்துக்கொண்டு பின்னூட்டத்தில், தங்கள் பேனாவின் மையால் நனையுங்கள் என்று நான் சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்! //

  புதுப்பதிவர்களாகிய நாங்கள் உங்களைப் போன்ற சான்றோர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம்.

  ReplyDelete
 48. //நட்புடன் ஜமால் said...
  \\அ.மு.செய்யது said...

  எல்லார் வீட்டு அடுப்பங்கரையிலும் நைஸா போயி, சட்டிய உருட்டிட்டு வந்தாச்சு.\\

  நம்ம வேலையே அதானே ...
  //

  கொள்கை விளக்கம்.

  ReplyDelete
 49. ஐம்பது போடுறதுக்கு யார் பதுங்கினாலும் அப்டியே வெளிய வாங்க...

  ReplyDelete
 50. ஆஃப் செஞ்சுரி போட்டாச்சுல்ல...

  ReplyDelete
 51. //நட்புடன் ஜமால் said...

  அடுப்பில்
  போய்
  இடுப்பில்
  கை வைத்து
  இருப்பாரோ

  அல்லது

  விடுப்பில் இருப்பாரோ ...//

  உங்கள் மீது அவதூறு வழக்கு 'தொடுக்க' விருக்கிறேன்...

  என்னா வில்லத்தனம்.

  ReplyDelete
 52. தோ வந்துட்டோம்லே

  ReplyDelete
 53. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஜோதி
  நல்லா ஜோதியா கலக்குங்க‌

  ReplyDelete
 54. இலையுடன் கூடைய சாப்பாட்டை பார்த்தவுடன் ஆஆணீயீண் வேலை மறந்து போச்சி தல‌
  இதை சாப்பிடவெல்லம் கொடுத்துவெச்சிருக்கனும்

  ReplyDelete
 55. //விரைவு உணவகங்களிலும், கையேந்தி அங்காடி உணவகங்களிலும் அலைமோதும் நடுத்தர மற்றும் இளையர்கள், வீட்டு சமையல் செய்து உண்பதற்கு விரும்புவதில்லை. //

  ஆமாங்க ஒருவித அலுப்பு

  ReplyDelete
 56. //வழியில் செல்லும் வரியவனுக்கும் வயிறார சோறு போடுவது நம் பண்பாடு/

  இதுதாங்க நம்முடைய மக்கள் பசியில்லாமல் இருக்காங்க‌

  ReplyDelete
 57. மிக்க நன்றி ஜோதிபாரதி.

  ReplyDelete
 58. //புதிதாக வெளிநாடு செல்லும் நம் இளையர்கள் பருப்பு பொடியையும், புளியோதரை பொடியையும் பொட்டலம் போட்டு எடுத்துக் கொண்டு செல்வார்கள்/

  இதுபோக வருகின்றவர்களிடமெல்லாம் பொட்டலம் போட்டு கொடுத்துவிட சொல்லுவாங்க வீட்டுலேர்ந்து

  ReplyDelete
 59. //அ.மு.செய்யது said...
  இதெல்லாம் எங்க அம்மா கிட்ட இன்னிக்கே செய்ய சொல்லணும்
  //
  ம்ம் கொடுத்துவெச்ச மகா ஜனங்க‌

  ReplyDelete
 60. //தே நேரத்தில் நம்முடைய இந்திய உணவு வகைகளை வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது/

  ஆணி புடுங்கவே நேரமில்லே

  ReplyDelete
 61. //கண்ணு பாத்தா கை செய்யும் என்று சொல்லுவார்கள். அதுபோல் அவர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்கிறார்கள்./

  தேவையான போது கை கொடுக்கும் கை...இது

  ReplyDelete
 62. //மலேசியாவில் பெண் பிள்ளைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே சமையல் பாடம் உண்டு/

  நல்ல விசயம்தான், இதை நம்மவூருலே அறிமுகப்படுத்தினால் அப்புறம் பள்ளி புஸ்தகத்துக்கு பதிலா புளி, அரிசி, மாவு, மசாலபொடி எல்லாத்தையும் வேறு கொண்டுப்போகனும்..

  ReplyDelete
 63. கடையிலே யாராவது இருக்கீங்களா?
  தனியா எளனிவெட்டிக்கிட்டிருக்கேன்

  ReplyDelete
 64. நல்ல விருந்து.

  ReplyDelete
 65. ஆரம்பமே சாப்பாட்டு மேட்டரா?

  படிக்கும் போதே பசிக்க ஆரம்பித்து விட்டது!

  ReplyDelete
 66. அப்பா செம சாப்பாடு :))

  ReplyDelete
 67. குழிப்பணியாரம் சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு? ம்! எங்க அம்மா செய்து சாப்பி்ட்டது.

  ReplyDelete
 68. குழிப்பணியாரம் கோதுமை மாவில் செய்வாங்க எங்க அம்மா! உடம்புக்கும் நல்லது.

  ReplyDelete
 69. /வழியில் செல்லும் வரியவனுக்கும்/

  உடம்புல வரி வரியா கோடுகள் இருக்குமே அதன் வரியவனை தானே சொல்லுறீங்க?

  ReplyDelete
 70. /ஜப்பானிய உணவு வகையில் அசல் சாம்பார் மாதிரியே ஒரு குழம்பு சிறு பானையில் கொடுப்பார்கள். ருசியும் சாம்பார் மாதிரியே இருக்கும்./


  சாம்பாருக்கும் போட்டியா?

  ReplyDelete
 71. /ஆணியவாதிகள்(ஆணி உள்ளவர்கள்) என்னைக் கட்டம் கட்டி அடிக்க மாட்டார்கள் என்று நம்புறேன்./


  இதுக்கு ஆப்பு அடுத்த மீட் ல இருக்கு...:)

  ReplyDelete
 72. மாஜரின் அப்படின்னா என்னா தூயா?

  ReplyDelete
 73. வாங்க நல்லவன் சார்!

  ReplyDelete
 74. சிங்கையில் இன்னும் மரக்கறி உணவங்கள் பரவலாக இல்லை அதுவும் இந்திய வைகையில்.சீன மரக்கறிக்கென்று உணவு அங்காடியில் ஒரு இடம் ஒதுக்கப்ட்டிருந்தாலும் அங்கு வரக்கூடிய கூட்டம் அவ்வளவு மெச்சும்படியாக இல்லாத்தால் பலர் அதை குத்தகைக்கு எடுக்க தயங்குகிறார்கள்.
  நல்ல பல சுட்டிகளை கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 75. / அன்புமணி said...

  வாங்க நல்லவன் சார்!/


  வந்துட்டேன்....இருக்கீங்களா?

  ReplyDelete
 76. மீராவின் கிச்சன் பகுதியை படிக்கமுடியவில்லை. வெறும் புள்ளி புள்ளியா தெரிகிறது.

  ReplyDelete
 77. ஜோதிபாரதி, உங்கள் அறிமுக கட்டுரையை படித்ததும் என் வலைப்பதிவில ஒரு அய்க்கூ விருந்தினர் பற்றி போட்ருக்கேன். நேரம் அமைந்தால் பாருங்கள்.

  ReplyDelete
 78. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையா..இன்று சமையல்...

  அருமை...

  சமையல் என்பது இரு பாலாருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு கலை..:-)

  ReplyDelete
 79. எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக எல்லா சாப்பாட்டுப் பதிவுகளையும் ஒரிடத்தில் தொகுத்து நீங்கள் செய்த தொண்டு, அளப்பறிய ஒன்று. வாழ்த்துக்கள்.

  ஒரு அருமையான வீட்டு சாப்பாடு சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
 80. \\ஜமால், தொடர் முழக்கத்திற்கு நன்றி!
  கை கைழுவுதல் என்று பதிவின் இறுதியில் இட்டால் நன்றாக இருக்காது என்று தெரிந்துதான் கை நனையுங்கள் என்று எழுதினேன். தாங்கள் பேனாவால் எழுதுவதாக எடுத்துக்கொண்டு பின்னூட்டத்தில், தங்கள் பேனாவின் மையால் நனையுங்கள் என்று நான் சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்!\\

  மலைகுன்றில் இட்ட ஜோதி போல் விளங்கியது ஐயா!

  ReplyDelete
 81. //அபுஅஃப்ஸர் said...

  இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஜோதி
  நல்லா ஜோதியா கலக்குங்க‌//


  வாழ்த்துகளுக்கு நன்றி அபு,
  தங்களின் தொடர் ஆதரவு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!

  ReplyDelete
 82. //புதுகைத் தென்றல் said...

  மிக்க நன்றி ஜோதிபாரதி.//

  வருகைக்கு நன்றி சகோதரி புதுகைத் தென்றல்!
  தங்கள் வலைப்பக்கம் அருமை!

  ReplyDelete
 83. //அமுதா said...

  நல்ல விருந்து.//

  வருகைக்கு நன்றி அமுதா!

  ReplyDelete
 84. //வால்பையன் said...

  ஆரம்பமே சாப்பாட்டு மேட்டரா?

  படிக்கும் போதே பசிக்க ஆரம்பித்து விட்டது!//

  வாலு, வருகைக்கு நன்றி!
  பசிஎடுக்கிறதா? அதுதான் வேண்டும்.
  சமையலில் சிறப்பு சேர்க்கும் நம் பதிவர்களின் படைப்புகளை படித்து, தாங்களும் செய்து சாப்பிடுங்கள்!

  ReplyDelete
 85. //Subbu said...

  அப்பா செம சாப்பாடு :))//

  வருகைக்கு நன்றி சுப்பு!

  ReplyDelete
 86. //அன்புமணி said...

  குழிப்பணியாரம் சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு? ம்! எங்க அம்மா செய்து சாப்பி்ட்டது.//

  வருகைக்கும் தொடர் பங்களிப்புக்கும் நன்றி அன்புமணி!
  அம்மா கை பக்குவமே அலாதிதான்!

  ReplyDelete
 87. //நிஜமா நல்லவன் said...

  கும்மி அலவ்டா?//


  கண்டிப்பா அலவ்டு!

  ReplyDelete
 88. //நிஜமா நல்லவன் said...

  /வழியில் செல்லும் வரியவனுக்கும்/

  உடம்புல வரி வரியா கோடுகள் இருக்குமே அதன் வரியவனை தானே சொல்லுறீங்க?//

  நான் அந்த வரியை போன பதிவில் போட்டுவிட்டேன்.
  அது மதிப்பு கூட்டப் பட்ட வரி,
  இது ஏழை, மாற்றிவிட்டேன். நன்றி!
  மூணு முறை படிச்சேன், அதை கவனிக்கல.

  ReplyDelete
 89. //டொன்’ லீ said...

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையா..இன்று சமையல்...

  அருமை...

  சமையல் என்பது இரு பாலாருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு கலை..:-)//

  வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி டொன் லீ!
  தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 90. //வடுவூர் குமார் said...

  சிங்கையில் இன்னும் மரக்கறி உணவங்கள் பரவலாக இல்லை அதுவும் இந்திய வைகையில்.சீன மரக்கறிக்கென்று உணவு அங்காடியில் ஒரு இடம் ஒதுக்கப்ட்டிருந்தாலும் அங்கு வரக்கூடிய கூட்டம் அவ்வளவு மெச்சும்படியாக இல்லாத்தால் பலர் அதை குத்தகைக்கு எடுக்க தயங்குகிறார்கள்.
  நல்ல பல சுட்டிகளை கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள்.//

  வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு வடுவூர் குமார்!
  தாங்கள் சொல்வது சரி.
  நானும் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 91. //ஜோசப் பால்ராஜ் said...

  எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக எல்லா சாப்பாட்டுப் பதிவுகளையும் ஒரிடத்தில் தொகுத்து நீங்கள் செய்த தொண்டு, அளப்பறிய ஒன்று. வாழ்த்துக்கள்.

  ஒரு அருமையான வீட்டு சாப்பாடு சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.//

  வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஜோசப்!

  ReplyDelete
 92. நம்ம சமையல்கட்டையும் அறிமுகம் செய்து, மற்றவர்களின் சமையல் பதிவுகளையும் அறிமுகம் செய்தது அருமை. அருமை.

  பசி வயிற்றை கிள்ள ஆரம்பிச்சிருச்சு :)))

  ReplyDelete
 93. \ சதங்கா (Sathanga) said...

  நம்ம சமையல்கட்டையும் அறிமுகம் செய்து, மற்றவர்களின் சமையல் பதிவுகளையும் அறிமுகம் செய்தது அருமை. அருமை.

  பசி வயிற்றை கிள்ள ஆரம்பிச்சிருச்சு :)))\\

  உங்களுக்குமா

  ReplyDelete
 94. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

  ReplyDelete
 95. //சதங்கா (Sathanga) said...

  நம்ம சமையல்கட்டையும் அறிமுகம் செய்து, மற்றவர்களின் சமையல் பதிவுகளையும் அறிமுகம் செய்தது அருமை. அருமை.

  பசி வயிற்றை கிள்ள ஆரம்பிச்சிருச்சு )//

  அன்பின் சதங்கா,
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
  உங்கள் வலைப்பக்கத்தில், சமையல் பக்கத்தின் மீது எனக்கு எப்பவுமே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.

  ReplyDelete
 96. //நட்புடன் ஜமால் said...

  \ சதங்கா (Sathanga) said...

  நம்ம சமையல்கட்டையும் அறிமுகம் செய்து, மற்றவர்களின் சமையல் பதிவுகளையும் அறிமுகம் செய்தது அருமை. அருமை.

  பசி வயிற்றை கிள்ள ஆரம்பிச்சிருச்சு :)))\\

  உங்களுக்குமா//

  நாம எல்லாம் சாப்பாட்டுல கெட்டி!

  ReplyDelete
 97. //newspaanai said...

  தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.//

  வருகைக்கு நன்றி ஐயா!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது