07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 1, 2009

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்

வாழ்க்கைச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். நாமும் ஓடிக்கொண்டே இருப்போம், அது தான் வாழ்க்கை. பயணங்கள் முடிவதில்லை. ஒவ்வொரு பயணத்திலும் ஒரு தேடலுடன் செல்கிறோம். அந்தப் பயணத்தின் தேடல் நமக்குப் பயன் தரவேண்டும் என்பது எனது விருப்பம்.

தொடர்ந்து ஒரு வார காலமாக உங்களையெல்லாம் சோதித்திருக்கிறேன் இந்த சோதிபாரதி. எத்தனை சோதனைகளை நான் கொடுத்தாலும் அதனையெல்லாம், பொறுத்துக்கொண்டு எனது பதிவுகளையும் படித்து நல்ல பல கருத்துக்களை எடுத்தியம்பிய நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லி பிரிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் நன்றி சொல்லி அன்னியப்படவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நாமெல்லாம் வலையாகப் பின்னப்பட்ட வலை உறவுகள்! நமக்குள் இணைப்பு என்பது எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்த ஒரு வார கால வலைச்சர ஆசிரியப் பணியில் இடுகைகள் எழுத வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சீனா ஐயா மற்றும் எனது குடும்பத்தாரின் புரிந்துணர்வு நினைவு கூறத்தக்கது. நான் பயணப்படும் நேரம் வந்துவிட்டது , அதனால் பயண அனுபவங்களை உள்ளடக்கிய சில இடுகைகளைக் கொண்ட வலைபூக்களையும் இன்றைய வலைச்சரத்தில் தொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

அறிமுகம்

ஏ.ஜீவன், வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டவர், பயண அனுபவங்களை தன் மனதுக்குள் பூட்டி வைக்கவில்லை. தனது அமெரிக்க, கனடா பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை அவரது வலைப்பூவில் சுவை பட பகிர்ந்திருக்கிறார். நாமும் படித்து அறிந்து கொள்ளலாமே. புதிதாகச் செல்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

கால்கரி சிவா, கனடாவின் நயாகரா-டொராண்டோ பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை படங்களுடன் அழகாக விளக்குகிறார். நாமும் அங்கெல்லாம் சென்று வந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. நிறைய பயனுள்ள பதிவுகள் செய்திருக்கிறார். அவரின் மற்ற பதிவுகளையும் படித்துப் பயன் பெறுவோமே!

ஒரு புகை வண்டிப் பயணத்தைக் கூட ரம்மியமாக்கி ரசித்திருக்கிறார் திருசெல்வராஜ் அவர்கள். ஈரோட்டுப் பயணத்தை இலகுவாக எடுத்தியம்பியிருக்கிறார். அழகாகச் செல்கிறது இவரது கட்டுரை. அவரது விரிவெளித் தடங்கள் கூட பயணங்கள் முடிவதில்லை என்று சொல்கின்றன. நாமும் பயணிப்போம் பயன் பெற!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பொங்கல் விழாவிற்காக தனது பாட்டி வீட்டிற்கு பயணித்து அங்கு ஏற்பட்ட அனுபவங்களை அழகாகப் பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீமதி தனது கரையோர கனவுகள் வலைப்பூவில். நானே நானா?? யாரோ தானா?? என்கிற வகையில் அவருக்கு ஆச்சர்யமூட்டிய அனுபவங்களுடன் அளவளாவுகிறார். அழகான வலைப் பக்கத்தில் பயணிக்கிறார்!

ஒரு பதிவர் சந்திப்பையே கவித்துவத்துடன் சொல்லி, அங்கு பார்த்த இயற்கை காட்சிகளையும் அதில் உள்ளிருத்தி, பதிவர் சந்திப்பு அனுபவங்களை, பயணக் கட்டுரையாக்காமல் கவிதையாக்கி வைத்திருக்கிறார் ஒற்றை மானாக வெயிலான். அழகாக வந்திருக்கிறது அந்த பதிவர் சந்திப்பு மற்றும் அவரது இடுகைகளும்.

மலையாள நாடு, கேரளாவுக்குப் போக விருப்பாதவர்கள் யாரும் இருப்பார்களா? அப்படித்தான் திரு விழியன் அவர்கள் தனது கேரள பயண அனுபவங்களை அழகாக சுவை பட கட்டுரையாக வடித்திருக்கிறார், விழியன் பக்கம் என்னும் வலைப்பூவில். நீங்களும் அந்த பயண அனுபவத்தைப் பெறலாமே! சிறுகதைகள், கவிதைகள் கூட எழுதி இருக்கிறார்.

இந்தியாவில் ஒரு பெண் நள்ளிரவில் என்று தனித்து வெளியே சென்றுவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப முடிகிறதோ அன்று தான் இந்தியா சுதந்திரம்(விடுதலை) அடையும் நாள் என்று சொன்னார்கள். ஒரு பெண் தனித்து பயணிக்கும் போது அவளுக்கு ஏற்படும் அனுபவங்கள், ஒரு ஆணுக்கு ஏற்படுவதில்லை என்பதை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிற அவல நிலையில் தான் இன்னும் இருக்கிறோம். அதை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் நிவேதா தனது ரேகுப்தி வலைப்பூவில்! உடலியல், பாலினம் மற்றும் உளவியல் ரீதியான அலசலான கட்டுரையைக் கொடுத்திருக்கிறார், பெண்ணும்பயணியுமாயிருத்தல்!


இத்துடன் எனது சத்திய சோதனைகளை(சத்தியமா சோதனைதான் என்று பொருள்) முடித்துக்கொண்டு, பயணம் செய்யத் தயாராகிவிட்டேன். உங்களை எனது அத்திவெட்டி அலசலில் சந்திக்கிறேன்.

அன்பன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!
வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்


23 comments:

  1. வாழ்த்துகளும்

    நன்றிகளும்.

    ReplyDelete
  2. மிகச்சிறப்பான முறையில் வலைச்சர பணியாற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி!

    ReplyDelete
  3. ஆம் பயணங்கள் முடிவதேயில்லை

    உங்கள் பதிவுகளில் சந்திபோம்.

    ReplyDelete
  4. ////நிஜமா நல்லவன் said...

    மிகச்சிறப்பான முறையில் வலைச்சர பணியாற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி!////

    repeateyyyyyy

    ReplyDelete
  5. சிறப்பாக 1 வாரம் உங்கள் ஆசிரியர் பணியை செய்துள்ளீர்கள்

    பாராட்டுகள்...

    ReplyDelete
  6. அன்பின் ஜோதி பாரதி - மிகச் சிறப்பான முறையில், வித்தியாசமாக, ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றியது மன நிறைவினைத் தருகிறது. பல பணிகளுக்கு இடையே வலைச்சரத்திற்காக - உழைத்தது பாராட்டுக்குரியது. நன்றி ஜோதி பாரதி - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  7. "பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்" -

    அத்திவெட்டியில் இதே வேகத்துடன் தொடரட்டும்,

    ஏழு இடுகைகள், வானவில்லின் நிறச் சிறப்பைப் போல் பல்வேறு சுவைகளுடன் எழுதி இருக்கிறீர்கள். பலபதிவர்களின் இடுகைகள் வெளிச்சப்பதிவரால் வெளிச்சமிடப்பட்டு இருக்கிறது.

    பாராட்டுகள் !

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஜோதி, தாங்கள் பணி செம்மையான விருந்தாக அமைந்தது

    ReplyDelete
  9. //ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லி பிரிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் நன்றி சொல்லி அன்னியப்படவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நாமெல்லாம் வலையாகப் பின்னப்பட்ட வலை உறவுகள்! நமக்குள் இணைப்பு என்பது எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
    //

    சரிதான், ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  10. இந்த ஒரு வாரமாக பதிவுகளை படிக்கவே நேரம் இல்லை ஜோதி, அதனால் உங்கள் வலைச்சர வாரத்தை தவற விட்டு விட்டேன். நேரம் கிடைக்கும்போது படித்துக்கொள்கிறேன்.. வாழ்த்துக்கள் & நன்றிகள்..

    ReplyDelete
  11. //நட்புடன் ஜமால் said...

    வாழ்த்துகளும்

    நன்றிகளும்.//

    அன்பின் ஜமால்,
    வாழ்த்துகளுக்கும், முதல் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. //நிஜமா நல்லவன் said...

    மிகச்சிறப்பான முறையில் வலைச்சர பணியாற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி!//

    நல்லவர்களின் வாழ்த்துகள்(ஆசீர்வாதம்) என்றும் எனக்குத் தேவை!
    நன்றி பாரதி!

    ReplyDelete
  13. //நட்புடன் ஜமால் said...

    ஆம் பயணங்கள் முடிவதேயில்லை

    உங்கள் பதிவுகளில் சந்திபோம்.//

    கண்டிப்பாக ஜமால்!

    ReplyDelete
  14. //T.V.Radhakrishnan said...

    ////நிஜமா நல்லவன் said...

    மிகச்சிறப்பான முறையில் வலைச்சர பணியாற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி!////

    repeateyyyyyy//

    வாழ்த்துகளுக்கு நன்றி டிவிஆர் ஐயா!

    ReplyDelete
  15. //’டொன்’ லீ said...

    சிறப்பாக 1 வாரம் உங்கள் ஆசிரியர் பணியை செய்துள்ளீர்கள்

    பாராட்டுகள்..//

    தொடர் ஆதரவிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி டொன் லீ!

    ReplyDelete
  16. // cheena (சீனா) said...

    அன்பின் ஜோதி பாரதி - மிகச் சிறப்பான முறையில், வித்தியாசமாக, ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றியது மன நிறைவினைத் தருகிறது. பல பணிகளுக்கு இடையே வலைச்சரத்திற்காக - உழைத்தது பாராட்டுக்குரியது. நன்றி ஜோதி பாரதி - நல்வாழ்த்துகள்//

    தாங்கள் அளித்த வாய்ப்பு!
    தங்கள் அன்பு!!
    வாழ்த்துகள்!!!
    என்னைப் பங்களிக்க வைத்தது!
    உளங்கனிந்த நன்றி ஐயா!
    தங்கள் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. //கோவி.கண்ணன் said...

    "பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்" -

    அத்திவெட்டியில் இதே வேகத்துடன் தொடரட்டும்,

    ஏழு இடுகைகள், வானவில்லின் நிறச் சிறப்பைப் போல் பல்வேறு சுவைகளுடன் எழுதி இருக்கிறீர்கள். பலபதிவர்களின் இடுகைகள் வெளிச்சப்பதிவரால் வெளிச்சமிடப்பட்டு இருக்கிறது.

    பாராட்டுகள் !//

    தங்கள் தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி கோவியாரே!
    தங்களைப் போன்ற மூத்தப் பதிவர்கள் பாராட்டும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  18. //அபுஅஃப்ஸர் said...

    வாழ்த்துக்கள் ஜோதி, தாங்கள் பணி செம்மையான விருந்தாக அமைந்தது//

    அன்பின் அபு,
    தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி!
    தங்கள் வலைப்பக்கத்தில்,நேரம் கிடக்கும் போது உலவ வேண்டும் என்பது எனது விருப்பம்.

    ReplyDelete
  19. //வெண்பூ said...

    இந்த ஒரு வாரமாக பதிவுகளை படிக்கவே நேரம் இல்லை ஜோதி, அதனால் உங்கள் வலைச்சர வாரத்தை தவற விட்டு விட்டேன். நேரம் கிடைக்கும்போது படித்துக்கொள்கிறேன்.. வாழ்த்துக்கள் & நன்றிகள்..//

    வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி வெண்பூ!
    நேரம் கிடைக்கும்போது
    கண்டிப்பாக படியுங்கள்!

    ReplyDelete
  20. மிக்க நன்றி என்னுடைய பயணக்கட்டுரையினை சேர்த்தமைக்கு.

    நல்ல பணி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. Thanks for linking my ooooold post. Good writing Jothi, keep it up.

    Regards,

    Calgary Siva

    ReplyDelete
  22. அறிமுகத்திற்கு நன்றி அண்ணா :))

    ReplyDelete
  23. என் பயணக்கட்டுரையின் சுட்டியையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஜோதி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது