07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 9, 2009

வணக்கம் தெரிவிக்கிறேன்

அன்பு வலைப் பூ தோழிகளே தோழர்களே!வணக்கம்

இந்த வாரம் முழுவதும் நான் உங்களை மகிழ்விக்க,சிந்திக்க வைக்க, சிரிக்க வைக்க இருக்கிறேன்.
[அடடே !அதற்குள் ஆரத்தி தட்டுடன் நாலைந்து தோழர்களும் தோழிகளும் நிற்கிறார்களே !நன்றி நன்றி]
சென்ற வாரம், நட்புடன் சீனா அவர்கள் ,ஒரு இனிய பதவி ஒன்றை ஏற்க சம்மதமா ,என்று கேட்டு என் ஜீ மெயில் பெட்டியில் கடிதம் ஒன்று போட்டிருந்தார்.
உடனே வலைச்சரத்திற்குள் நுழைந்தேன். கண்ணி கண்ணியாய் சென்று அத்தனை மலர்களையும் முகர்ந்து ஸ்பரிசித்து ,சரம் தொடுக்கப் பட்டிருந்த விதம் கண்டேன்.
கண்டு தெளிந்த பின் பதில் அனுப்பினேன் .ஏற்றுக் கொள்கிறேன் என்று.
மகளிர் தினத்தன்று ,இந்த மங்கைக்கு , ’வலைச்சர ஆசிரியர்’ பதவி என்ற மகுடத்தை, எனக்கு சூட்டுவதாக, அறிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு மகளிர் தினம்,என் தினமாயிற்று.
இன்று,காலை10 மணியிலிருந்து, நான் உங்களோடு ,என் ஒரு வாரப் பயணத்தைத் தொடங்குகிறேன் .
எங்காவது இடறி விழுந்தால் கை கொடுங்கள்.
தடுமாறினால் தாங்கி நில்லுங்கள்.
இயன்றவரை இரண்டுக்குமே இடம் தராமல் கவனமாக நடை போடுவேன் .
அன்புடன்
நட்புடன்
கோமா [அடுத்து வருவது,என்னைப் பற்றி...]

20 comments:

 1. வாழ்த்துக்கள்!

  //அடுத்து வருவது,என்னைப் பற்றி...//

  காத்திருக்கிறோம் ஆவலுடன்!

  ReplyDelete
 2. எழுதிக் கொண்டிருக்கிறேன் கவனமுடன்

  ReplyDelete
 3. வாழ்த்துகள்

  மகளீர் தின வாழ்த்துகளும்.

  ReplyDelete
 4. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் கோமா...

  மகளிர்தின வாழ்த்துக்களும்...

  ReplyDelete
 6. உங்கள் வலைப்பூவை இது வரை படித்ததில்லை. ஆவலுடன் உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்

  ReplyDelete
 7. வெயிலான்
  வருகைக்கு நன்றி .தங்கள் வாழ்த்துக்கள் வீணாகாமல் பணி ஆற்றுவேன்.

  ReplyDelete
 8. கோமா அவர்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன். முதல்நாள் வாழ்த்துகள்!
  மகளிர்தின வாழ்த்தகளும்!

  ReplyDelete
 9. நைஜீரியா இராகவன் உங்கள் ஆவல் கண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.ஆனால் உங்கள் ஆர்வத்துக்கு ஏற்றார்போல் அவல் தருவேனா ...போகப் போகத் தெரியும் இந்த வலைப்பூவின் வாசம் புரியும்

  ReplyDelete
 10. மகளிர்தின வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 11. மணி அதுவும் அன்பு மணி அடித்து விட்டது நல்ல சகுனம்.
  வருகைக்கு நன்றி
  மகளிர்தின வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 13. வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துகள்!!!

  மகளீர் தின வாழ்த்துகளும்!!!

  ReplyDelete
 14. //அடுத்து வருவது,என்னைப் பற்றி...//


  காத்துக் கொண்டிருக்கின்றோம் உங்களை அறிய !!

  ReplyDelete
 15. உங்கள் வலைப்பூவை இது வரை படித்ததில்லை. இனிமேல் படிக்கின்றேன் !!!

  ReplyDelete
 16. வருக வருக சகோதரி - தமிழமுதம் தருக தருக

  ReplyDelete
 17. கொஞ்சம் லேட் தான்....மகளிர் தினத்துக்கும் வலைச் சர ஆசிரியர் பொறுப்பிற்கும் வாழ்த்துக்கள்
  அன்புடன் அருணா
  "முந்தைய கமென்டில் கொஞ்சம் எழுத்துப் பிழை
  அதனால் அழித்துவிட்டேன்...."

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது