07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 14, 2009

ஒவ்வொன்றும் ஒரு விதம்

பூங்காவில் ஒரு கூடையோடு நடந்து பார்க்கும் செடிகளிலிருந்தெல்லாம் ஒரு பூ ப்றித்து வந்து தொடுக்கலாம் என்பது இன்றைய பணி.முதல் மலர்
http://kudukuduppai.blogspot.com/2009/02/blog-post_2443.html
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வகையான அனுபவம் மறக்க முடியாதது மறக்க நினைப்பது மனதில் நிற்காதது மறக்க நினைப்பது என்று பல வகையான நடை பெற்றிருக்கும் சிலருக்கு முதல் முதலாக கார் சவாரி ஒரு அன்பவம், சிலருக்குக் கார் வாங்கின அனுபவம்,சிலருக்கு அதைக்கட்டி மேய்ப்பதே ஒரு அனுப்[அவம் என்று அமைந்திருக்கும்
இங்கே குடுகுடுப்பையார்[எதைக் குடு குடு என்று கேட்கிறார் தெரியவில்லை அது தெரிந்தால் இதற்குள் யாராவது குடுத்திருப்பார்களே.]
இவர் அமெரிக்காவில் கார் ஓட்டப் படித்த அனுபவத்தை,மெதுவாய் ஸ்டார்ட் பண்ணி குலுங்காமல் கிளட்ச் போட்டு ரதம் போல் ஆக்சிலேட்டரை அழுத்தி எடுத்து விளக்கியிருக்கிறார்.
முடிவில்தான் அந்த பெண் யார் என்று தெரியாமல் சொல்லாமல் உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன் என்று முடித்திருக்கிறார்.அந்தப் பெண்மணி யார் என்னவானார் ....நீங்களே வாசித்துக்கொள்ளுங்கள்.இவர் பின்னால் 49 ரசிகர்கள் குடுகுடுப்பை ஓசையில் கவரப்பட்டு பின்தொடர்கின்றனர்.கலைக்கூடம் என்று ஒரு வலைப்பூ தொடங்கியிருக்கிறார்.இன்னும் குடி புகாத வீடாக இருக்கிறது .கிஹப்பிரவேசம் எப்பொழுது என்று சொல்லுங்கள்.
------------------
அடுத்தது நிலா எழுதும் கடுதாசி இது பதிவின் பெயர் .நிலாவும் அம்மாவும் பதிவாளர்[ஒரே நபர்தான்]
http://nila-n-i.blogspot.com/2009/02/blog-post.html
இவர் எவ்வளவு அகராதி பிடித்தவர் என்பதை நீங்களே பாருங்கள் நான் சொன்னால் போட்டுக்குடுத்தேன்னு சொவீங்க எனக்கு எதுக்கு வம்பு.
இவர் இருப்பது நியூயார்க் [டெக்னாலஜி] பொன்னாத்தா என்ற சண்டைக் கோழி இவருடைய இன்னொரு பதிவு.
இவர் பதிவில் ஹாஸ்ய நட்சத்திரம் அழகாக மினுக் மினுக்கிறது.மொக்கை கவுஜைகளூகுத் தொடர் பதிவு என்று கலக்கோ கலக்கென்று கலக்கியிருப்பார் .கட்டாயம் ஒரு தபா போய்ப் பாத்துக்கினு வா மாம்மே!!!!சாரி சாரி ஒரு முறை போய் பார்த்துவிட்டு வாருங்கள் மக்களே!
--------------------------
http://aadav.blogspot.com/2009/03/blog-post_08.html
ஆதவா பிளாக் இது குழந்தை ஓவியம் என்றிருக்கிறதே என்று ஆவலுடன் சென்றால் ரஷ்யாகாரியுடன் காதல் என்ற மொக்கை உட்கார்ந்திருக்கிறது இதுதான் குழந்தையின் படமா என்று எண்ணிய படியே வாசிக்கத் தொடன்கினேன் [ஒருவேளை ரஷ்யாகாரியைக் காதலித்து,அவளையே கல்யாணமும் செய்து பிறக்கும் குழந்தையை ஓவியமாகத் தீட்டுவாரோ என்னவோ....குழந்தைக்குப் பெயரையும் நானே சொல்லிவைக்கிறேன் ரஷ்யா+இந்தியா =இஷ்யா.சூப்பர் நேம்]யாஹூ சேட்டிங் கில் தொடங்கிய வார்த்தை பறிமாற்றல்கள்..கதையின் தொடக்கம்
கதையை வாசிக்க வாசிக்க அதன் அருமை புரிந்தது.இன்று இளைய சமுதாயத்து ஜனங்கள் அறிய வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது.நீங்களும் சென்று பாருங்கள் .உங்களுக்குத் தேவையில்லையென்றாலும் யாருக்காவது சொல்லி வைக்கலாம்.

21 comments:

  1. வாழ்த்துக்கள்... நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  2. ஆஹா.ஞானசேகரன் என்று வரவேற்கிறேன் உங்கள் முதல் வருகையை.
    தாமரையோடு வந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்.....

    ReplyDelete
  4. குடுகுடுப்பையும், ஆதவாவும் முன்னமே தெரியும். நிலா எழுதும் கடிதாசியத்தான் படிக்க முடியல... வெறும் ... தான் தெரியுது. ஏன்?

    ReplyDelete
  5. குடந்தை அன்புமணி
    நான் இப்பொழுது செக் பண்ணினேனே .அழகா அகராதி வருகிறதே.
    நான் நினைக்கிறேன் நீங்கள் அகராதி பிடிக்காதவர் என்று நின்னைக்கிறேன் ச.ம..த்...து

    ReplyDelete
  6. இவங்களை எனக்கும் தெரியுமுன்னு சொல்லிக்க சந்தோஷமாயிருக்கு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நண்பர் ஆதவாவை பற்றிய கருத்துக்கள் அருமை.

    ReplyDelete
  8. எனது கணிணியில் தெரியவில்லை. அதற்காக பதிவை படிக்காமல் இருக்கமுடியுமா? அதான் அந்தப்பகுதியை அப்படியே காப்பி செய்து, நமது வலைச்சரத்தில் இருக்கும் டைப்பிங் பலகையில் பேஸ்ட் செய்து படித்தேன். என்னைப் போல சிலரின் கணிணியிலும் தெரியாமல் இருக்கலாம் என்பதால் அந்தபதிவை பார்வைக்கு வைக்கிறேன்.

    அம்மா ஊர் பக்கம் திமிர் புடிச்சவங்கள தான் அகராதி புடிச்சவன்னு சொல்லுவாங்க....அப்படின்னா நான் திமிர் புடிச்சவலான்னு கேக்குறேங்களா ?..எனக்கு என்னமோ அப்டி எல்லாம் இல்லன்னு தான் தோனுது...
    ஆனா பார்த்திங்கன்னா எனக்குன்னு ஒரு அகராதி இருக்கு...அது நிறைய பேருக்கு புரிய மாட்டேங்குது..
    எல்லாரும் கூகிள், விக்கி-ன்னு நான் சொல்ற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தேடி போறிங்களாம்...அம்மா ஒரே வியாக்யானம்.. அதுனால சரி நிலா அகராதி ஒன்னு போடலாமேன்னு வந்தேன்...

    அம்மா- அம்மா { சும்மா முதல்ல அம்மா-நு ஆரம்பிக்கலாமேன்னு தான் ..ஹி ஹி }
    காக்கா - காக்கா
    ன்னி - தண்ணி
    புக்கா - புடிச்சா [ கண் மூடிட்டு திறக்கும் பொது புடிச்சா சொல்றது ]
    பவ்பவ் - நாய் குட்டி
    சீஸ் - சீசர் [ நாய் குட்டி ]
    நெஙா - வேணாம்
    னாணம் - வேணாம்
    ரோரோ - தாலாட்டு
    அய்ஸ் - அய்ஷ்வர்யா
    சியா -அய்ஷ்வர்யா
    தியா-திவ்யா
    அகா -அக்கா
    ன்னா-அண்ணா
    மாமா-மாமா [ அட உங்க ஊர்ர்லேயும் இப்டி தான் சொல்லுவீங்களா ]
    ஆபிஸ் - ஆஃப்பிஸ
    ஆப்பி -ஆப்பிள்
    மம்மம் -சாப்பாடு
    அம்மி - யம்மி - Yummy
    தஷ்நி - தர்ஷினி
    கேயட் = கேர்ரட்
    அக் - டக் [ Duck]
    தக்ளி - தக்காளி
    முங்க்கா - முருங்கைக்காய
    ஆமி -சாமி
    அய்யப்பா -ஐயப்பா
    மாயம்மா -மாரியம்மா
    டொண்டாய்ன் டொண்டாய்ன் - ஆடி ஆடி நடக்கும் போது வீட்ல சொல்றது
    பந்தியா பந்தியா -பயந்தியா பயந்தியா
    வ்வ்வா - வா
    ஸ் ஸ் -. இரண்டு பேர் கை பிடித்து சுற்றி சுற்றி விளையாடும் விளையாட்டு
    வன், தீ - ஒன், டூ , த்ரி
    சா , பூ, தி - சாட் , பூட், தி
    ஈய - இல்லை
    அட்டிங் - அட நல்ல இருக்கே...
    வாவ்வ்வ்வ்வ்- Wow
    ன்னு - புண்
    உம்ம்மா - Kiss
    நியா - நிலா
    நாயான் - நான் தான்
    பிஸ் - பிஷ்
    பாவு - பால் [குடிக்குற பால்]
    பா - பால் பந்து
    இத்தி - இட்லி
    த்தொசை -தோசை
    சாக்கி - சாக்லேட்
    பாட்டி - பாட்டி


    நியா நியா வா வா - நிலா நிலா ஓடி வா



    பா பா ஷிப் - பா பா பிளாக் ஷீப்



    அம்மா அம்மா வா வா - அம்மா இங்கே வா வா


    கடைசியா என்னோட டைப்பிஸ்ட் சொன்னது : "அடியே வாயாடி இருந்தாலும் ஒன்னேகால் வயசுக்கு நீ ரொம்ப ஓவரா பேசுற...அவ்ளோ தான் நான் சொல்வேன்..."

    சரி அத்தை மாமா, இனிமேலாவது அம்மா கிட்ட போயி வியாக்யானம் சொல்ல மாட்டிங்கன்னு நம்புறேன்.ஒரு வேலை நான் சொல்றது புரியலன்னா நான் சின்ன புள்ளைன்னு கூச்சப்படாம என் கிட்ட கேளுங்க...
    ஆசை கிச்சாக்களுடன் [ அகராதில விட்டு போச்சு....கிச்சா - முத்தம் ]
    உங்கள் நிலா

    ReplyDelete
  9. குடந்தை அன்புமணி நிஜமா நீங்க ரொம்ப நல்லவர்.யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நிலா எழுதும் கடிதத்தை எல்லோரும் படித்து மகிழப் பகிர்ந்து கொண்டீர்களே.நன்றி அன்புமணி.

    ReplyDelete
  10. //goma said...
    குடந்தை அன்புமணி நிஜமா நீங்க ரொம்ப நல்லவர்.யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நிலா எழுதும் கடிதத்தை எல்லோரும் படித்து மகிழப் பகிர்ந்து கொண்டீர்களே.நன்றி அன்புமணி.//


    'நிஜமா நல்லவர்' கோபித்துக் கொள்ளப் போகிறார்...

    ReplyDelete
  11. குடந்தைஅன்புமணி said...
    //goma said...
    குடந்தை அன்புமணி நிஜமா நீங்க ரொம்ப நல்லவர்.யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நிலா எழுதும் கடிதத்தை எல்லோரும் படித்து மகிழப் பகிர்ந்து கொண்டீர்களே.நன்றி அன்புமணி.//
    //

    'நிஜமா நல்லவர்' கோபித்துக் கொள்ளப் போகிறார்...
    //
    அட்ராசாக்கை...அட்ராசக்கை...அப்படி போட்டு தாக்குங்க.

    ReplyDelete
  12. goma said...
    குடந்தை அன்புமணி நிஜமா நீங்க ரொம்ப நல்லவர்.யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நிலா எழுதும் கடிதத்தை எல்லோரும் படித்து மகிழப் பகிர்ந்து கொண்டீர்களே.நன்றி அன்புமணி.
    //
    கோமா அக்காவுடன் என் பாராட்டுக்களும் நண்பா.
    உண்மையிலே நல்ல விஷயம் தான் நண்பா. பல கம்ப்யூட்டரில் சிக்கல்கள் பல இருக்கிறது. ஒரே இடத்தில் வாசிக்க காப்பி பேஸ்ட் செய்வது நலமே. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. நிலாவும் அம்மாவுக்கும்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. குடுகுடுப்பையார்[எதைக் குடு குடு என்று கேட்கிறார் தெரியவில்லை அது தெரிந்தால் இதற்குள் யாராவது குடுத்திருப்பார்களே.]
    இவர் அமெரிக்காவில் கார் ஓட்டப் படித்த அனுபவத்தை,மெதுவாய் ஸ்டார்ட் பண்ணி குலுங்காமல் கிளட்ச் போட்டு ரதம் போல் ஆக்சிலேட்டரை அழுத்தி எடுத்து விளக்கியிருக்கிறார்.
    முடிவில்தான் அந்த பெண் யார் என்று தெரியாமல் சொல்லாமல் உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன் என்று முடித்திருக்கிறார்.அந்தப் பெண்மணி யார் என்னவானார் ....நீங்களே வாசித்துக்கொள்ளுங்கள்.
    //
    அருமை. குடுகுடுப்பையார் பின்னிவிட்டார். தொடரட்டும் அவரது பணி(பதிவுகள்)

    ReplyDelete
  15. கூல்ஸ்கார்த்தி நீங்கள் ரியலி கூல்
    நன்றி

    ReplyDelete
  16. //உண்மையிலே நல்ல விஷயம் தான் நண்பா. பல கம்ப்யூட்டரில் சிக்கல்கள் பல இருக்கிறது. ஒரே இடத்தில் வாசிக்க காப்பி பேஸ்ட் செய்வது நலமே. பாராட்டுக்கள்.//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ஆஹா......இங்க நம்மளை பற்றி ரம்யா போட்டப்பவே யாருமே நம்ம பக்கம் எட்டிப் பார்க்கலியே...இனிமே யாரு நம்மள கண்டுக்க போறாங்கன்னு கொஞ்ச நாள் வலைச்சரம் பக்கம் வராம இருந்தேன்.....சரி வார இறுதில விட்ட கதை தொட்ட கதைய புடிக்கலாம்னு வந்தா....இங்க ஒஆடுறது எல்லாம் நம்ம கதை...

    நன்றி கோமா..
    நன்றி கோமா அத்தை
    நன்றி கு.மணி மாமா....என் அகராதி புரிஞ்சதா
    நன்றி க.ஆனந்த்

    ReplyDelete
  18. மேகம் மறைத்திருந்த நிலா ,இன்று பலரும் காணும் மகிழ்சியில் சிரிப்பது அறிய சந்தோஷம் .
    மேலும் ஒரு கிலோமீட்டர் டையமீட்டர் கூடிய அழகுடன் பூரிப்பது கண்டு நானும் மகிழ்சியடைகிறேன்[நிலாவுக்கு ஒரு கி.மீ.என்பது ஜுஜுபி நமக்கு அவ்வளவுதானே சொல்ல முடியும்]

    நிறைய எழுதுங்கள் வாசிக்க என்னோடு பல பதிவாளர்களும் காத்திருப்போம்]

    ReplyDelete
  19. நன்றி கோமா..
    நன்றி கோமா அத்தை
    நன்றி கு.மணி மாமா....என் அகராதி புரிஞ்சதா
    நன்றி க.ஆனந்த்
    அருமையாகப் புரிந்ததது ,நிலா

    ReplyDelete
  20. நன்றி கோமதி.

    கலைக்கூடம் விரைவில் என் மகளின் பதிவுகளோடு.

    ReplyDelete
  21. அனைவரின் வருகைக்கும் நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது